* அசோக மித்ரன் னு ஒரு பழைய காலத்து எழுத்தாளர், தனக்குப் பிடித்த நவீன எழுத்தாளர் என்று நம்ம "ஜெயமோகனை"ச் சொல்லியிருக்கிறார்.
* உடனே எழுத எதுவும் சரக்கில்லாத சாரு. "சாகப் போற நேரத்திலே சங்கரா"னு அவரைப்பற்றி கட்டுரை மேலே கட்டுரையா எழுதி, தன் பின் நவீன எழுத்தைப் புரிந்துகொள்ளுமளவுக்கு அசோக மித்ரனுக்கு போதுமான அளவுக்கு அறிவு கெடையாதுனு ஒரே ஒப்பாரி!
இதோ சாருவின் காமெடி! வாசிச்சு சிரிங்கப்பா!
தற்கால தமிழ்ப் படைப்புலகத்தில் உங்களைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளராக யாரைக் குறிப்பிடுவீர்கள்?
“ஜெயமோகன். இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் இவர்தான். சில விஷயங்களில் இவரது ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை. இவருக்கு முன்னால் ஆய்வு என்கிற விஷயத்தில் இவரைப் போன்ற தேர்ச்சியை கொண்டிருந்தவர் க.நா.சுப்பிரமணியன்தான்.
இதுதவிர ஜெயமோகன் படைப்புகளில் சில இடங்கள் மிகவும் அபாரமாக இருக்கின்றன. அவரது குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று படித்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. இந்தத் தலைமுறையில் சிறந்த எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய எல்லாத் தகுதியும் ஜெயமோகனிடம் இருக்கிறது.”
அசோகமித்திரனின் மேற்கண்ட அபிப்பிராயம் பற்றி என்னுடைய கடுமையான கண்டனத்தை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
”இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தான்” என்று சொல்வதற்கு அசோகமித்திரனுக்கு எல்லா உரிமையும் உண்டு. நகுலனும் இந்தத் தலைமுறையில் என்னைக் கவர்ந்த தமிழ்க் கவிஞர் அழகிய சிங்கர் என்று சொல்லி இருக்கிறார். சுஜாதாவும் எனக்குப் பிடித்த கவிஞர் பழமலய் என்று சொல்லி இருக்கிறார். முட்டாளாக வாழ்வதற்கும் உளறுவதற்கும் சராசரித் தமிழனுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதா? நாங்களும் சராசரிகள் மாதிரி உளறுவோம் என்று தமிழ் எழுத்தாளர்களும் அவ்வப்போது கிளம்புவார்கள். அதை நாம் கண்டு கொள்ளக் கூடாது.
ஆனால் அசோகமித்திரனின் அடுத்தடுத்த அபிப்பிராயங்கள் தான் படு விஷமத்தனமாக இருக்கின்றன. ”சில விஷயங்களில் இவரது ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை… இந்தத் தலைமுறையில் சிறந்த எழுத்தாளர் என்று சொல்லக் கூடிய எல்லாத் தகுதியும் ஜெயமோகனிடம் இருக்கிறது” என்றும் விஷத்தைக் கக்கியிருக்கிறார் அ.மி. இது வெறுமனே ஜெயமோகனைப் பற்றிய அபிப்பிராயம் இல்லை. மற்றவர்கள் பற்றிய அபிப்பிராயமும் கூட. ஜெ.வின் ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை என்றால் நாங்களெல்லாம் என்ன இத்தனை காலமாக புடுங்கிக் கொண்டிருக்கிறோமா? இப்படிச் சொல்வது அயோக்கியத்தனம். கயவாளித்தனம். ஏனென்றால், அ.மி. வேறு யாருடைய எழுத்தையும் படித்தது இல்லை. உதாரணமாக, ராஸ லீலா என்ற என்னுடைய நாவலை அவர் படித்திருக்க மாட்டார். ஏனென்றால், நான் அவருடைய வீட்டைத் தேடிக் கொண்டு போய் ராஸ லீலாவைக் கொடுத்து அவருக்கு சொம்பு தூக்கவில்லை.
ஆனால் இந்தத் தலைமுறையின் சிறந்த எழுத்தாளரோ ஒவ்வொரு முறை சென்னை வரும் போதும் அ.மி.யைப் பார்க்கிறார். ஜெயகாந்தனைத் தேடிப் போய் பார்க்கிறார். அந்த இசை அமைப்பாளரைத் தேடிப் போய்ப் பார்க்கிறார். அது மட்டும் அல்லாமல், தான் ஆசிரியராக இருந்த ஒரு பத்திரிகையில் (அது அளவில் குமுதத்தைப் போல் நான்கு மடங்கு அகலமும் நீளமும் கொண்டது) பளபளப்பான அட்டையில் (அந்தக் கால debonair ஐ ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்) அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், ஜெயகாந்தன் என்று இங்கே உள்ள இலக்கிய தெய்வங்களையெல்லாம் புகைப்படமாகப் போட்டு அவர்கள் தங்கள் வாழ்நாளில் கண்டிராத கௌரவத்தைக் கொடுத்தவர் ஜெ. அந்தப் பத்திரிகையை தலைமுறை எழுத்தாளரின் ஒருசில நண்பர்கள் மட்டுமே படித்தார்கள் என்ற விஷயமெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். வெறும் நடிகைகளின் அரைகுறை ஆடை படங்களையே பார்த்து வெறுத்துப் போயிருந்த அந்த எழுத்தாளர்களுக்குத் தங்களின் போட்டோவை இப்படி முறம் சைஸ் பத்திரிகையின் அட்டையில் பார்த்ததும் எப்படி இருந்திருக்கும்?
இப்படி ஒரே ஒரு எழுத்தாளரின் எழுத்தை மட்டுமே படித்து விட்டு அ.மி. அன்னார் தான் தலைமுறையின் சிறந்த எழுத்தாளர், அவர் அளவுக்கு ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை என்று சொல்வது கயவாளித்தனம் இல்லையா?
நான் எழுதிய எந்தப் புத்தகத்தை அ.மி. வாசித்திருக்கிறார்? உலக இசை பற்றி கலகம் காதல் இசை என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். அதில் Iannis Xenakis இன் பின்நவீனத்துவ இசை பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறேன். இப்போது ரஹ்மான் பாணிக்கு ஆதாரமாக இருக்கும் rai music பற்றியும் அதில் கட்டுரைகள் உண்டு. இதையெல்லாம் பற்றி அரிச்சுவடு அறிவாவது அ.மி.க்கு உண்டா? உலக சினிமா பற்றி ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். Bergman, Pasolini, Antonioni பற்றியெல்லாம் அ.மி. கேள்வியாவது பட்டிருப்பாரா? அந்தோனியோனி என்றதும் அ.மி.க்கு வேறு ஞாபகம் தான் வரும். ஏனென்றால், அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.
ஒருமுறை என்னுடைய சிறுகதைத் தொகுதிக்கு அவரிடம் முன்னுரை கேட்ட போது ” எனக்கு இந்தக் கதைகள் புரியவில்லை” என்று எழுதிக் கொடுத்தவர் அ.மி. அவர் சொன்னது உண்மைதான். ஏனென்றால், அவருக்கு metafiction என்றால் என்னவென்று தெரியவில்லை. Non linear writing பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. அதனால் என் கதைகள் அவருக்குப் புரியவில்லை. அது மட்டுமல்லாமல் நவீன எழுத்தின் எந்தப் பாணி பற்றியும், நவீன எழுத்தின் புதிய போக்குகள் பற்றியும் அவர் எதுவும் அறியாதவர். அவர் ஒரு பழைய மனிதர். பழைய எழுத்தாளர். இந்தக் காலகட்டத்துக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாதவர் அவர். அவருடைய எழுத்தும் படிப்பும் காஃப்காவோடும் கம்யுவோடும் முடிந்து விட்டது. இப்படி இந்தக் கால கட்டத்தின் எழுத்துப் போக்கு, இந்தக் கால கட்டத்தின் வாழ்வியல் மற்றும் தத்துவ நெருக்கடிகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர் – அதையும் தன் வாயாலேயே “புரியவில்லை” என்று ஒப்புக் கொண்டவர் – மற்றவர்களிடம் ஆழம் இல்லை என்றால் இவர் எந்த ஆழத்தைச் சொல்கிறார்? சின்ன வயதில் கேட்ட “go deep Thiag” என்ற வார்த்தைகளின் ஆழமா? எந்த ஆழம் மிஸ்டர் அசோகமித்திரன்?ஆக, அசோக மித்ரன், ஜெயமோகனை உயர்த்தி சாருவை மதிக்கவில்லைனதும், அசோக மித்ரனுக்கு என்ன தெரியும், நாந்தான் பெரிய எழுத்தாளன், மேதை, அறிவாளினு வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்ள யாரால் முடியும்?
சாருவால் மட்டும்தான் இதெல்லாம் முடியும்!
தொடர்புள்ள பதிவுகள்:
சாரு இல்லாத எஸ் ரா வின் நூறு சிறந்த புத்தகங்கள்!
ஞாநி, மனுஷ்ய புத்திரனை அவமானப்படுத்திவிட்டாரா?!
சீரியஸா கேக்கிறேன்! சாருநிவேதிதா தமிழனில்லையா?
12 comments:
//உண்மையைச் சொல்லனும்னா//
அப்ப இன்மையும் பொய்யுந்தான் பெரும்பாலும் ஆளுது போல.... இஃகிஃகி... தளபதி... நோட் திஷ் பாயிண்ட்டு!!
***பழமைபேசி said...
//உண்மையைச் சொல்லனும்னா//
அப்ப இன்மையும் பொய்யுந்தான் பெரும்பாலும் ஆளுது போல.... இஃகிஃகி... தளபதி... நோட் திஷ் பாயிண்ட்டு!!***
உங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது?
"எல்லாம் பகவான் செயல்!" இதில் என் தவறு எதுவும் இல்லை! :)))
எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து எனது பதிவிற்கு நல்ல கருத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதற்கான பதிலை தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,
உங்களை நான் தொந்தரவு செய்வதாக நினைத்தால் மன்னிக்கவும்
http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html
நன்றி
அன்புடன்
மதுரைத்தமிழன்
தன்னைத்தானே பெருமையாய் பேசுதல் இழுக்கு அன்றோ
மதுரைத் தமிழன்: நாளைய இந்தியா பற்றியா?
இந்தியா வளர்ச்சியைப் பார்த்து பயந்து நாட்டைவிட்டு ஓடி வந்தவன் நான்.
நாளைய இந்தியா, பொல்லுஷன் மற்றும் ஜனத் தொகை, கலாச்சாரம் எல்லாத்தையும் நினைத்துப் பார்க்கவே பயப்படுபவன் நான்..
சரி, உங்க பதிவில் பின்னூட்டத்தில் என்ன எழுதலாம்னு யோசிக்கிறேன். உங்க அழைப்புக்கு நன்றி. :)
***கரந்தை ஜெயக்குமார் said...
தன்னைத்தானே பெருமையாய் பேசுதல் இழுக்கு அன்றோ?***
சாரு, ஜெயமோஹன் எல்லாம் ஒரு மாதிரியான ஆட்கள்ங்க.
எனக்கெல்லாம் என்னை எவனாவது திட்டினால்கூட ரசிக்க முடியும் ஆனால் புகழ்ந்தால் தாங்கவே முடியாது. ரொம்ப தர்ம சங்கடமாயிடும்.
ஜெயமோஹனுக்கு உள்ள தான் என்கிற அகந்தை எல்லாம் பார்த்து அருவருப்புடன் வியந்து கொண்டே இருக்கிறேன்.
சாருவையாவது ஓரளவுக்கு சேர்த்துகலாம். இப்படி ஏதாவது காமெடியா எழுதுறாரு, போதையில் எழுதுறாரோ என்னவோனு விட்டுடலாம். ஆனால் ஜெயமோஹனை எல்லாம் என்ன செய்றது?
மேலும் அசோக மித்ரனுக்கு இது தேவையா என்னனு தெரியவில்லை?
போகிற போக்கில் யாராவது சாருவை விட ஜெமோ தான் சிறந்தவ்ர் என்று சொல்லி விட்டுச் சென்றால் சாரு இப்படி வசைமாறி பொழிந்திருபாரா தெரியவில்லை.. ஆனாலும் சாருவுக்கு ஏன் தான் இந்த வெட்டி வேலை , சுயதம்படம்.. பேசமல் தன் புனைவுகளில் கவனம் செலுத்தலாம்
Its me,sent a mail to charu about Ashoka Mithrans interview.in his ferocious reaction he condemned Vijay
TV.But every body knows that how many
times he gave a guest appearance in Neeya,Naana. He is telling that he is not reading any Tamil magazines.Let
him read once again his article in vikatan "NANUM VIKATANUM'.He proclaims that now he is English writer and Achieved internationally
after entering into English.Can charu tell me what makes the difference when he was achieving in Tamil then in English now ?As he was begging then in net and begging
now also.
tspsmurthy.
Charu was begging then and begging
now.So can any body tell me what makes the difference of writing in tamil then and writing in english
now
***சாய் பிரசாத் said...
போகிற போக்கில் யாராவது சாருவை விட ஜெமோ தான் சிறந்தவ்ர் என்று சொல்லி விட்டுச் சென்றால் சாரு இப்படி வசைமாறி பொழிந்திருபாரா தெரியவில்லை.. ஆனாலும் சாருவுக்கு ஏன் தான் இந்த வெட்டி வேலை , சுயதம்படம்.. பேசமல் தன் புனைவுகளில் கவனம் செலுத்தலாம்.****
ஆனா ஒண்ணு, அவரு புனைவுகள் நல்லா எழுதுறாரோ இல்லையோ, இந்த மாரி சுவாரஸ்யமாக ஒப்பாரி வைப்பதில் அவருக்கு இணை அவரே தான்! :)
***S.J.Murthy said...
Its me,sent a mail to charu about Ashoka Mithrans interview.in his ferocious reaction he condemned Vijay
TV.But every body knows that how many
times he gave a guest appearance in Neeya,Naana. He is telling that he is not reading any Tamil magazines.Let
him read once again his article in vikatan "NANUM VIKATANUM'.He proclaims that now he is English writer and Achieved internationally
after entering into English.Can charu tell me what makes the difference when he was achieving in Tamil then in English now ?As he was begging then in net and begging
now also.
tspsmurthy.***
Charu feels that A M's intention was NOT praising J M as a great writer, it is rather putting down Charu as a worthless writer! . I dont think Charu cares what AM thinks of him but he just loves writing such "oppaaris" once in a while.
Just laugh it off! :)
***S.J.Murthy said...
Charu was begging then and begging***
He never feels ashamed of asking for some money from his friends and fans PUBLICLY! Recently I saw a post asking his fans to send money. Why would anyone send him money, I dont understand.
**So can any body tell me what makes the difference of writing in tamil then and writing in english
now**
Charu lives in his world and he rates himself very highly. I think he believes that in the near future he will win a Nobel Prize for Literature. And that he will be the first Tamil writer to win one.
Dont worry, even after winning Nobel Prize for literature, he will still be begging for money! LOL
Post a Comment