Friday, August 16, 2013

காதலுடன் முடிந்துவிட்டது! மஹேஷ்காக!

"காதலுடன்" முடிந்துவிட்டது!

ஆறு மாதங்கள் கடந்த பிறகு!

“என்னடா ரமேஷ், நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா? உன் சந்தியாவுக்கு அரேஞ்சிடு மேரேஜ் யாரோ சாஃப்ட்வேர் இஞ்சினியரோட முடிந்துவிட்டதாம்! நீ அவளை கல்யாணம் பண்ணுவனு நெனச்சேன்?” என்றான் நண்பன் கணேசன்.

“ஆமாடா, எல்லாம் முடிந்துவிட்டது. அவள் எங்கிருந்தாலும் வாழ்க!”

“என்ன ஆச்சு?”

“தெரியலைடா. ஏனோ இது வொர்க் அவுட் ஆகல”

“உனக்கு வருத்தம் இல்லையா?”

“கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்ணுறது? லைஃப் கோஸ் ஆன்”

“கொஞ்சம் விபரமா சொல்லுடா, ரமேஷ், ப்ளீஸ்?”

“நானும் கூடத்தான் இருந்தேன் அன்னைக்கு நைட். அவளுக்கு ஜாலியா ஃபுட்பால் டீச் பண்ணிக்கொண்டு இருந்தேன். திடீர்னு அவங்க அம்மாவுக்கு மறுபடியும் உடம்புக்கு சரியில்லைனு ஒரு கால் வந்தது. உடனே மறுபடியும் லீவ் எடுத்துக்கொண்டு லாஸ் ஆஃப் பே ல மறுபடியும் இந்தியா போனாள் சந்தியா. அங்கே போனா, அவ அம்மா ரொம்ப சீரியஸாம். இவ கல்யாணத்தை உடனே நடத்தனும்! அவங்களுக்கு ஏதாவது ஆகுமுன்னே கல்யாணத்தைப் பார்க்கனும்னு அவங்க அம்மா சொன்னாங்களாம். யாரோ ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர் இந்தியா விசிட் பண்ணியவர் டெஸ்பரேட்டா இவளை கல்யாணம் பண்ணுவேன்னு வந்து நின்னாராம். இவ கண்டிஷன் எல்லாவற்றுக்கும் சரி என்று ஒத்துக்கொண்டாராம்”

“என்ன கண்டிஷன்?'

“ஏதோ “ப்ரிநப்” பாம். பெரிய கம்மிட்மெண்ட்ஸ் எதுவும் இல்லையாம். பிடிக்கலைனா எப்போ வேணா டைவோர்ஸ் வாங்கிக்கலாமாம். இவளும் சரினு சொல்லிட்டாளாம்”

“உன்னிடம் எதுவும் கேட்கலையா?'

“இல்லைடா அவமேலே எதுவும் தப்பில்லை! என்னிடம் கேட்டாள். அங்கே இருந்து கால் பண்ணி, நிலைமையைச் சொன்னாள். எனக்கென்னவோ எதுவும் தெளிவா பதில் சொல்ல முடியலை. சரி அவரையே கட்டிக்கோனு சொல்லிட்டேன்”

“ஏன்டா?”

“I loved her for sure but ரைட் ஃப்ரம் தி பிகன்னிங், எனக்கு ஏதோ ஒரு ஃபீலிங் இருந்ததுடா. I never felt like it will work out”

“என்னவோ போ!”

“என்ன பண்ணுறது? எங்க உறவு காதலுடன் முடிந்துவிட்டது டா"

“சோகம்டா”

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை!”


-முற்றும்

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 16

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 15

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 14

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -13

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -12

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -11

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -10

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 9

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் 8

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன்-7

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன்-6

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் - 5

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -4

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -3

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் - 2

 ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதலுடன் -1

5 comments:

Mahesh said...

mikka nandri anna!

16th part padicha piraku
next enna ayicho appadingkura oru curiosity irunthala thedi parthen. kidaikkala. na kettathum post paniyatharkku rompa nandri.

Mahesh said...

climax rompa shorta surikktinga but
final touch
super...

athutan unmai...
---
“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை!”

வருண் said...

நம்ம ஊர்ல சீரியல் மலிந்துபோய் இருக்கும் இந்தக்காலத்தில் காதல் கதை படிக்க எல்லாம் ஆள் கெடையாது. லேடீஸ் ஒரு சிலர் படிப்பாங்க. ஆனால் விமர்சனம் எதுவும் செய்யாமல் அடக்கி வாசிச்சுட்டுப் போயிடுவாங்க. :)

Mahesh said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

உண்மை வருண்...
தொடர்கதைகளை படிக்க அதிகம் ஆட்கள் விரும்புவதில்லை...