2013 ல பதிவுலகில் பதிவர் டோண்டு ராகவனையும், பதிவர் பட்டாபட்டியையும்
இழந்து இருக்கிறோம்! எனக்கு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களில் எவ்வளவு
கருத்து ஒற்றுமை இருந்தது, அவர்களை எனக்கு எவ்ளோ பிடித்தது என்பது முக்கியம் அல்ல!
இரண்டு தமிழ்ப் பதிவர்கள் மறைந்துவிட்டார்கள். இருவருமே தங்கள் கருத்துக்களில் நம்பிக்கை வைத்து கருத்துக்களை தைரியமாக முன்வைத்தார்கள். தமிழ்
வலையுலகில் அவர்களை நாம் இழந்தது மாபெரும் இழப்புதான் என்பதை யாரும் மறுக்க முடியாது!
இப்படி வருடா வருடம் சில பதிவர்களையும், ஒரு சிலர் உறவினர்களையும் (
நண்பர், காதலர், மனைவி, கணவன், மகன், மகள், அண்ணா, தங்கை, அப்பா அல்லது அம்மா என்று ) யாரையாவது ஒரு சிலர் இழந்து தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். இன்று அவர்கள், நாளை நாம் அவர்கள் நிலையில் இருக்கத்தான் போகிறோம். அப்படி உறவினரை இழந்து நிற்பவர்களையும், அவர்கள் நண்பர்கள்,
உறவினர்கள் போன வருடம் "ஹாப்பி நியு இயர்" "இந்தாண்டு உங்களுக்கு எல்லாமே நல்லதாக அமையட்டும்" என்றுதான் வாழ்த்தினோம். நீங்க எப்படி மனதாற வாழ்த்தினாலும் இறப்பு,
இழப்பு, தோல்வி எல்லாம் வருடா வருடம் எல்லாருக்கும் நடக்கத்தான் போகுது.
எதுக்கு இதெல்லாம்? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், எல்லாம் நல்லபடியாக இந்தாண்டு உங்களுக்கு அமையட்டும், மண்ணாங்கட்டினு
அர்த்தமில்லாத வாழ்த்துக்கள்!
இந்த வருடம் இனிமையாகப் போயிருந்தால்
அடுத்த வருடம் சோகமாகப் போக வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு வருடமும் கடந்த
வருடத்தைவிட நல்ல வருடமாக அமையாது என்பதே உண்மை. அடுத்த வருடம் சோகமாகப்
போனால் அதற்கடுத்த வருடம் அந்த அளவுக்கு சோகமாக இல்லாமல்
பரவாயில்லாமல்த்தான் போகும். கீழே போனால் மேலேதான வரணும்? நம்ம ஸ்டாக்
மார்க்கட் மாதிரி. ஒவ்வொரு வருடமும் இழப்புகள், நண்பனா நம்பியவனிடம் கற்கிற
பாடங்கள், கோ வொர்க்கர்களின் சுயநலம் பற்றி அறிதல், இப்படி புதுப் புது வடிவில் முன்னால் கற்ற பாடங்களே ஏதாவது மறுபடியும் வேறொரு உருவில் வந்துகொண்டேதான் இருக்கு. ஒரு சில நல்லவைகள், கெட்டது எல்லாமே ஒவ்வொரு ஆண்டும் நடக்கத்தான்
செய்யுது. என்ன புது வருடம் ஆரம்பிச்சா கவனமா 2014 னு மட்டும் மாற்றி எழுதணும்
அவ்ளோதான். எல்லா எழவும் அதேமாரித்தான் போகப்போகுது.
வாழ்க்கை என்பதே நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்வதுதான் போலும். வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் அதுதான் உண்மை. அறியாமையில் வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என்கிற கூற்றுதான் எப்படிப் பார்த்தாலும் உண்மையாகத் தோன்றுகிறது.
என்னை பொறுத்தவரையில் வாழ்க்கையில் "போர்" அடிக்காமல் வாழக் கற்றுக்கொண்டு வருகிறேன். Personally, I get busy with my life. In that way I get tired because of hard-work and sleep well. I dont have enough time to finish what I want to do most of the time. Because of that, the time passes faster than you would imagine. That means a week goes like a day. A year goes like a month. Time flies. That's how I always feel.
நான் ஹெல்த்தியாக நல்ல மனநிலையில் உள்ளதால் என்னால் இதுபோல் பாஸிட்டிவாக எழுத முடிகிறதென்பதையும் மறுக்கவில்லை. உண்மை என்னவென்றால் நேற்று உங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பனோ நண்பியோ நாளை இருக்கப் போவதில்லை. போன வருடம் உயிருக்கு உயிரா இருந்தவங்க ரெண்டு வருடத்தில் சம்மந்தமே இல்லாத ஆட்களாக பிரிந்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் குப்பைக்கு சமமாகிவிடுவீர்கள். These days I don't respect anybody who disrespects me. I usually forgive their ignorance and respect them for what they are. But not any more! I feel it is mere foolishness to appreciate anybody who looks down on you and who thinks you are a "trash". It is a very big world. "Just move on and ignore such people" is what I tell myself. Never forget I am the most important person to myself whether I say it explicitly or not, it is a fact. :)
I am seeing how people are treating even their own parents when they get older. They were like King and Queen when they brought them up. They had control over everything. Once they get older, they are treated like "you don't want to know how" by their own children! That's what life is all about. Unless you are "meaningless God" you wont be treated same way as time passes. நேற்று தேவையான நீங்கள் இன்னைக்கு அதே நபருக்கு குப்பைதான். உங்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக குப்பைனு சொல்லாமல் உங்களை கோவில் என்பார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
மனிதன் மாறக்கூடியவன். சுயநலமானவன். அவனவன் தேவைகளுக்கேற்ப வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான். யாரையும்-அது யாராயிருந்தாலும் சரி, உங்களைத் தவிர- நம்பி ஏமாறாதீர்கள்.
உங்களுக்கு என்ன முக்கியம் என்றால் உங்கள் மனநிலை. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களோட இருந்து போராடப்போவது நீங்கள் மட்டும்தான். அதற்கு உங்கள் தன்னம்பிக்கைதான் முக்கியமானது. உங்களை மட்டும் நீங்கள் நம்புங்கள். ரொம்பவும் சாதாரணமான மக்கள் நிறைந்த உலகம்தான் இது. அந்த மக்களில் உங்க எல்லா உறவுகளும் அடங்கும்! அப்படி இல்லை, உங்க உறவுகள் உலகிலே உயர்ந்தவர்கள்னு சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி சந்தோஷமாக வாழலாம்தான். ஆனால் எதை இழந்தாலும், யாரை இழந்தாலும், நம் வாழ்க்கையை அதற்கேற்ப மாற்றியமைத்து வாழக் கற்றுக்க வேண்டும். அதற்கேற்ற மனநிலையை நீங்க பெறவேண்டுமென்றால் உங்களைத்தவிர யாரும் எப்படி வேணா மாறுவார்கள் என்கிற உண்மையை உணர வேண்டும். அந்த உண்மையை உணர்ந்து வாழும் கலையை நீங்க கற்றுக்கொண்டால் சாகிற வரைக்கும் உங்களுக்கு வெற்றிதான். மற்றவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புதான் உங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தரும்.
உங்க தகுதி என்னவாயிருந்தாலும், நீங்க என்ன சம்பாரித்தாலும், உங்களை ஊர் உலகம் எப்படியெல்லாம் விமர்சிச்சாலும் நீங்க வாழ்ந்து காட்டணும்னா அது உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்றுதான் உங்களுக்குப் பிரதானமானது. இது மிகப்பெரிய உலகம். ஒரு நண்பன் போனால் இன்னொருவன். ஒரு காதலி போனால் இன்னொருத்தி! ஒரு வேலை போனால் இன்னொன்னு, பணம் போனால், நாளைக்கு சம்பாரிக்கலாம், இல்லைனா தகுதிக்கேற்ப ஏழையா வாழக் கற்றுக்கலாம்.
நல்ல ஹெப்த்தியானவங்க அநியாயமாக சாவதையும் நம் கண் முன்னால் பார்க்கத்தான் செய்றோம். பெரிய பணக்காரன் தெருவுக்கு வர்ரதையும் பார்க்கிறோம். இன்னைக்கு சூப்பர் ஸ்டாராக உள்ள ஒரு விளையாட்டு வீரன் சில வருடங்களில் சாதாரணவனாவதையும் பார்க்கிறோம். இதையெல்லாம் பார்த்தும் நாம் வாழக் னு கற்றுக்கொள்ளனும். எந்த ஒரு சூழலிலும். பழசை நினைத்து அழுது, பொலம்பி எதுவும் ஆகப்போவதில்லை.
சொல்ல மறந்துட்டேனே, இறைவன்னு ஒருவர் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்னு உங்களை நீங்க ஏமாற்றிக்கலாம்! :) ஆனால் நீங்கள் இழக்கும் உயிரையோ, உறவையோ அவர் திருப்பி கொண்டு வந்து கொடுக்கப் போவதில்லை! Again, you can brainwash yourself thinking that "God did a bad thing to me to teach me a lesson or whatever". இங்கேயும் கடவுள் என்கிற ஒரு கற்பனைப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு உங்க மனசை நீங்க திடப்படுத்த்க்கிறீங்க அவ்ளோதான் என்னைப் பொருத்தவரையில். :)
கலைஞர் டி வி
துணைச்சேனல், சிரிப்பொலி சேனல் னு ஒண்ணு இருக்குல அதுல ஒரு சில
அக்காக்கள், இல்லைனா எங்கேயோ பிடிச்சுட்டு வந்த மாரி இருக்க அண்ணாக்கள்
எல்லாம் நேரலையில் வருவாங்க. சரி, வந்தா, உங்க பேரென்ன, எங்கேயிருந்து பேசுறீங்க, ஜோக் சொல்லுங்கனு ஏதாவது கேட்டால் பரவாயில்லை. தொலைபேசியில் அவங்களிடம் பேசுபவர்களிடம் ரொம்ப அக்கறையா குசலம் விசாரிப்பாங்க. "எப்படி இருக்கீங்க?" "எப்படி
படிக்கிறீங்க?" "எத்னையாவது ராங்க் வாங்குறீங்க?" "வேலை எல்லாம் எப்படிப்
போகுது?" னு ஒரு கேள்வியை கேட்டு, அவர்கள் பதிலுக்கேத்தாற்போல அக்கறையா ஒரு
பதிலையும் சொல்வதைப் பார்த்தால் சிரிக்கிறதா அழுகிறதானு தெரியலை. அவர்கள் ஏன் அங்கே வர்ராங்க? அது அவர்கள் தொழில்! இவர்கள் தன் வாழ்வில் அன்றாடம் பார்த்துப் பழகும்
அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், ஏழைகள், தேவை உள்ளவர்கள்
யாரைப்ப்பற்றியும் இதுபோல் விசாரிப்பார்களா? அவர்கள் நலன் கருதி கவலைப்படுவார்களா? இல்லை யாருக்கும் உதவுவார்களா? என்பது
சந்தேகமே! விலைமாது செக்ஸை அவள் கஸ்டமரிடம் எஞ்ஞாய் பண்ணுவாளா? அது அவளுக்குத் தொழில்! நிச்சயம் காமம் அங்கே ப்ளெஷர் கெடையாது. அதேபோல்தான் இவர்கள்
அக்கறைகளும்! சும்மா தொழில்! வயித்துப் பொழைப்பு!
புத்தாண்டுனா என்ன விசேஷம்? லைசண்ஸ் டு ட்ரிங்க் னு சொல்லலாம். காலம் மாறிப் போயிடுச்சு. நம்ம ஊரில் இப்போலாம் பெண்கள் மட்டும் புகை பிடிப்பது, தண்ணியடிப்பது இல்லை. மற்றபடி ஆண்கள் எல்லாருக்கும் புத்தாண்டுனா குடிக்கணும். புத்தாண்டுக்கு குடிக்கக்கூடாதுனு சொல்லீட்டா அது "ஹாப்பி" நியு இயராக ஒருபோதும் இருக்காது. வெள்ளைக்காரந்தான்
இதெல்லாம் ஆரம்பிச்சு வச்சது. இது அவனோட புத்தாண்டுதானே? நாடுவிட்டு நாடு போயி அடுத்தவன்
நாட்டைக்கவர்ந்து, கொள்ளையடிச்சு பொழைப்பை ஓட்டுறவன்ந்தான் இதுமாரி ஹாப்பி நியு இயர்னு வாழ்த்தவும், குடிக்கவும் கத்துக் கொடுத்துட்டுப் போயிருக்காணுக. வருட
ஆரம்பத்தையே போதையில்தான் ஆரம்பிக்கிறார்கள். BTW, I did not consume alcohol on the "new year eve-to-new year" time. :-) ஊருக்கு மட்டும் உபதேசம் இல்லை! ஊரில் வாழும் எனக்கும்தான். :)
7 comments:
///எதை இழந்தாலும், யாரை இழந்தாலும், நம் வாழ்க்கையை அதற்கேற்ப மாற்றியமைத்து வாழக் கற்றுக்க வேண்டும். அதற்கேற்ற மனநிலையை நீங்க பெறவேண்டுமென்றால் உங்களைத்தவிர யாரும் எப்படி வேணா மாறுவார்கள் என்கிற உண்மையை உணர வேண்டும். அந்த உண்மையை உணர்ந்து வாழும் கலையை நீங்க கற்றுக்கொண்டால் சாகிற வரைக்கும் உங்களுக்கு வெற்றிதான்.///
நான் நினைப்பதை நீங்கள் அப்படியே மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கீங்க வருண். இந்த ஆண்டில் நான் படித்த பதிவுகளில் மிக சிறப்பானது இந்த பதிவுதான் உங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்......
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
உண்மை விளம்பி என்று பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளுங்கள் வருண் !எனக்கு உடன்பாடான கருத்துதான் உங்கள் கருத்து !
இந்த அளவுக்கு அற்புதமாக எழுதுவீங்கன்னு மனசுக்குள் வைத்து இருந்ததை இந்த பதிவு மூலம் நிரூபித்தமைக்கு நன்றி.
நல்ல பகிர்வு...
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருண். வாழ்க்கை பற்றிய உண்மையை ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.. நானும் மற்றவர்களிடத்தில் எந்த எதிர்பார்ப்பையும் வைத்து கொள்வதில்லை..அதனால் பெரிசா எதற்கும் வருந்துவதில்லை!
சிறப்பான பதிவு!
Happy New Year Varun
Post a Comment