Showing posts with label படைப்புகள். Show all posts
Showing posts with label படைப்புகள். Show all posts

Thursday, May 15, 2014

விஞ்ஞானிகள் புனிதமானவர்களா?!

அறிவியல் எனறால் உண்மைகளின் பிறப்பிடம். அறிவியலில் ஆராய்ச்சி செய்றவன் எல்லாம் புனிதத்தொழில் பண்ணுகிறான் என்கிற மிகத்தவறான கண்ணோட்டம் விஞ்ஞானிகளை தூரத்தில் இருந்து பார்க்கும் பலருக்கும் உண்டு. ஆனால் விஞ்ஞானியும் கேவலம் சாதாதரண மனுஷ்ந்தான். பண ஆசை, புகழ் ஆசை, நோபல் பரிசு ஆசை உள்ளவர்கள் பலர் உண்டு. இதுக்காக சில கீழ்தரமான வேலைகள் செய்கிற விஞஞானிகளும் பலர் உண்டு. இதில் பலர் தப்பித்துக்கொள்வதும் உண்டு. ஒரு சிலர் மாட்டிக்கொள்வதும் உண்டு!

* இந்தா ஒரு கதை ஹிந்துல வந்திருக்கு. இவர், இண்டோ- அமெரிக்க "Chandrayaan" ப்ராஜஎக்ட்ல வேலை பார்த்தவராம். பெயர் Dr. Nozette. எஃப் பி ஐ இவரை அரெஸ்ட் பண்ணி இருக்கு! என்ன பண்ணினார்னா, ஒரு இஸ்ரேலி கம்பெணியிடம் பெரிய தொகை ( $2,25,000) பேரம் பேசி இருக்காரோ வாங்கினாரோ னு குற்றச்சாட்டு. இப்போ பிடிச்சுட்டாங்க!

http://www.hindu.com/2009/10/21/stories/2009102161571300.htm


* ராமன் ரிசேர்ச் இண்ஸ்ட்டிடூட்டில் முன்பு வேலை பார்த்த ஒரு விஞ்ஞானி, (பெயர் சொல்ல முடியாது) ஒரு ஸ்பெக்ட்ரோ ஃபோட்டோ மீட்டர் வாங்காமலே, வாங்கியதாக கணக்கு காட்டி அந்தப் பணத்தை அப்படியே அடித்துவிட்டார். கடைசியில் இதை கண்டுபிடித்தவுடன் அவர் அந்த இண்ஸ்டிடூட்டைவிட்டு மரியாதையாக வெளியேறும் நிலைமை 9நம்ம ஊரில் இதுபோல் பெருந்தலைகளை காப்பாத்தி விடுவார்கள்) வந்தது. இந்த விசயம் ரொம்ப வெளியே வரவில்லை.

* நம்ம மேதை சி வி ராமனே, பங்களூரில் ஐ ஐ எஸ் சியில் இருக்கும்போது, ஆராய்ச்சிக்காக வாங்கிய ஒரு சில வைரங்களுக்கு சரியான கணக்கு காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டினால், அங்கே இருந்து வெளியே வந்து, ராமன் ரிசேர்ச் இண்ஸ்டிடூட் ஆரம்பித்த பழங்கதையும் உண்டு.

* பல வருடங்கள் முன்னால், ஒஹையோ ஸ்டேட் யுனிவேர்ஸிட்டி யில் வேலை பார்த்த ஒரு பெரிய விஞ்ஞானி, "லியோ பக்கட்" என்கிறவர், யு டி ஆஸ்டினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான ஸ்டீவ் மார்ட்டினுடைய ரிசேர்ச் ப்ரப்போஸலில் உள்ள ஐடியாக்களை திருடியதற்காக, சேர்மேனாக இருந்த அவரை அந்த கம்மிட்டியில் இருந்து விலக்கினார்கள், அமெரிக்கன் கெமிகல் சொசைட்டி!

* ஹார்வேர்ட் யுனிவேர்சிட்டியில் நோபல் பரிசு வென்ற இ ஜே கோரே யின் பல ஆய்வுக்குறிப்புகளில் "ரிப்ரொடியுசபிலிட்டி பிரச்சனை" உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பல உண்டு!

* நம்ம ராமர் பிள்ளை பெரிய சயண்டிஸ்ட் இல்லை தான்! அவரும் ஹர்பல் பெட்ரோல் தயாரிச்சதா புருடா விட்டார்! இந்த ஆர்ட்டிகிலை உலகத்த்ரம் வாய்ந்த  "நேச்சர்" ல பிரசுரிச்சு இந்தியர்கள் மானம் போனதும் இன்னும் மறக்க முடியவில்லை!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!

என்கிற கண்ணதாசன் வரிகளில் உண்மை எப்போதுமே உண்டு!

ஒரு சாதாரண ஜானிட்டராக இருந்து தன் வேலையை அழகா அர்த்தமாக செய்து வாழ்பவர்களும் உண்டு. ஊரும் பேரும் புகழும் பெரிய விஞ்ஞானியாகி, பேருக்காகவும் புகழுக்காகவும் கீழ்த்தரமான வேலைகள் செய்து மாட்டிக்கொள்ளாமல் போனவர்களும் உண்டு!

ஒருவன் தரத்துக்கும் அவன் அந்தஸ்துக்கும், ஏன் அறிவுக்கும்,  சம்மந்தம் இல்லை என்பதை எத்தனை பேரு புரிந்து வைத்துள்ளாகள்??


இதுவும் மீள்பதிவே!

Wednesday, May 14, 2014

காயத்ரியின் பகல்கனவு! (ஸ்ட்ரிக்ட்லி வயதுவந்தவர்களுக்கு மட்டும்!)

காயத்ரிக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம்  ஆகிறது. வருடங்கள் போனதே தெரியலை. இப்போ எல்லாம் ஹரி அவளை சரியாக் "கண்டுகொள்வதே" இல்லை.

"ஆமா, நல்லா டி வி பாருங்க, ஸ்போர்ட்ஸ் பாருங்க, "எல்லாம்" பாருங்க! என்னையும் கொஞ்சம் கண்டுக்கிறதுதானே?" னு மனதுக்குள்ளே புலம்பிக்கொண்டு கவர்ச்சியா மினி ஸ்கேர்ட் டுடன், ஒரு ரிவீலிங்கா டாப்ஸும் போட்டுக்கொண்டு வந்து டி வி பார்த்துக் கொண்டிருந்த கணவன் ஹரி அருகில் அமர்ந்தாள் காயத்ரி.

"ஏன்டி இந்த வயசுல இப்படி அலையிற?" ங்கிறமாதிரி ஏதோ வினோதமாக அவளைப் பார்த்தான் ஹரி. பக்கத்தில் உக்காந்ததால் பேருக்கு அவள் கன்னத்தில் ஒரு முத்தம். அதைக் கொடுக்காமல் இருந்தாலே பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு. இந்த ஊரில் உள்ள அமரிக்கர்கள் மனைவியிடம் ஃபோன் பேசிட்டு மறக்காமல் "ஐ லவ் யு" சொல்லிட்டு வைக்கிற மாதிரி இருந்தது அவளுக்கு.

இந்தியாவில் இருக்கும்போது நல்லாத்தானே இருந்தாரு, ஒரே ரொமாண்டிக்கா! அமெரிக்கா வந்து ஒரு நாலு வருஷம்தான் ஆகுது. அதிலிருந்து வேலை அதிகம், பையனா பார்த்துக்கனும்னு போனதுனாலேயே என்னவோ தெரியல, ஒண்ணும் பெருசா ரொமான்ஸே இல்லை. ஒரே ஒரு பையன்தான், அவனும் இப்போ வீட்டில் இல்லை, ஸ்கூல்ல ஏதோ கேம்ப்க்கு போயிட்டான். அவன் திரும்பி வீட்டுக்கு வர நாலு நாள் ஆகும். இப்போதைக்கு ப்ரைவஸிக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை, நெறையாவே இருக்கு. ஆனால் இவர்மட்டும் ஏன் இப்படி ஜடமா இருக்கிறார்? ஒருவேளை  இவருக்கு டெஸ்டாஸ்டீரோன் லெவெல் கொறைஞ்சிருச்சா? என்னனு தெரியலை. இல்லைனா இந்தியாவிலே மாதிரி இவருக்கு ஆளும் பேருமா கூட்டமா இருந்தாத்தான் இவருக்கு மூடு வருமா? இதையெல்லாம் அவரிடம் வெளிப்படையாக் கேட்டு டிஸ்கஸ் பண்றதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது. அவளா அவரைப் புரிஞ்சுக்கனும்! இந்த நாலு நாள்ல இவரை ஏதாவது ஒரு வழி பண்ணியே ஆகனும்னு ஒரு முடிவுக்கு வந்தாள்.

"நான் இந்த அவ்ட்ஃபிட்ல செக்ஸியா இருக்கேனா?" என்று கடைசியில் அவளே அடக்கமுடியாமல் கேட்டுவிட்டாள். அப்படிச் சொல்லி அவன் அருகில் நல்லா உரசுராப்பில உக்காந்து கணவனை செட்யூஸ் பண்ண ட்ரை பண்ணினாள், காயத்ரி. ஹரிக்கு என்னமோ அந்த அரைகுறை ட்ரெஸ்ல அவளைப்பார்த்து ஒண்ணும் உணர்ச்சியெல்லாம் பொங்கி வரலை, ஆனால் அவள் தேவையை புரிந்துகொண்டு, ஏதோ கடமையைச் செய்வதுபோல போனது அன்று இரவு.

காயத்ரிக்கு கடமைக்காக காதலோ, காமமோ சுத்தமாக பிடிக்காது. வாரம் ஒருமுறையானாலும், ஏன் மாதம் ஒரு முறையானாலும் பரவாயில்லை, ஆனால் ஹரி அவகிட்ட வந்து நல்லா வழியனும், அவளையும் அவள் அழகையும் அப்படி இப்படி அனுபவிச்சு பார்த்து ரசிக்கனும், அவன் பார்க்கும் பார்வையிலே அவளுக்கு உடம்பில் நெறைய கெமிக்கல் ரியாக்ஷன் நடக்கனும். அப்புறம் அவளை திடீர்னு கட்டி அணைச்சு அவ இடுப்பில், உதட்டில், மார்பில், கழுத்தில் எல்லா எடத்துலயும் கிஸ் பண்ணி அவளை அவன் மெய் மறக்க வைத்து, ஒரு சின்ன ஆர்கஸம் அவளுக்கு வருமளவுக்கு முத்தம் கொடுத்து அவ மூடை ஏத்தி அவளை ரெடியாக்கனும்! அது மாதிரி அன்புதான் காய்த்ரிக்கு வேணும். அதுதான் அவளுக்குப் பிடிக்கும். அதெல்லாம் அமெரிக்கா வந்தபிறகு நடந்தமாதிரியே இல்லை. இப்போ அந்த ஆசையெல்லாம் அவளுடைய பகல்கனவு மாதிரி ஆயிடுத்து. அவள் கனவை நனவாக்காமல் ஏதோ இதுவும் ஒரு வேலை போல் அவன் செய்வதால் ஹரிமேலே எரிச்சலும் கோபமுமாத்தான் வந்தது அவளுக்கு.

அடுத்தநாள் ஃப்ரெண்ஸ்ட்ட லேடீஸ் நைட் அவுட் ல இதைப்பத்தி பட்டும் படாமலும் நாசூக்காக பேசினாள். "நீ ஒண்ணும் கவலைப்படாதே! இங்கேயும் அதே கதைதான்" என்று சிரித்தாள்கள் தோழிகலெல்லாம். அப்போத்தான் புரிந்தது, வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போலனு. அவ்ளோதானா? காதல், காம வாழ்க்கை எல்லாம் அதுக்குள்ள முடிஞ்சதுபோல என்று ஒரே கவலை அவளுக்கு. ஆனால், அவள் தன்னைத்தானே அவள் பாத்ரூமில் கண்ணாடியில் பார்க்கும்போது இன்னும் அழகா எடுப்பா, கவர்ச்சியாத்தான் இருந்தாள். அதை உறுதிப்படுத்துவதுபோல வொர்க்ல, ஷாப்பிங் போகயிலே எல்லாம் நெறையவே அட்டன்ஷன் கெடச்சது, காயத்ரிக்கு. நேத்துக்கூட ஒரு கடையில் உள்ள செக் அவுட்ல உள்ள டெல்லர் அவளை அப்படி ஒரு பார்வை பார்த்தான். தேவையே இல்லாமல் அவளிடம் வழிஞ்சான். காயத்ரிக்கு எரிச்சல்தான் வரும் கண்டவனும் தன்னை அளவுக்கதிகமா பார்க்கிறது, தன்னுடன் தேவையே பேசுவது இதெல்லாம். கல்யாணம் ஆனவள்னு இதுகளிடம் சொல்ல "ரிங்"கா போட்டுக்கொண்டு அலையமுடியும்? என்று தனக்குள்ளே திட்டிக்கொள்வாள்.

ஃப்ரெண்டு ஒருத்தி ஏதோ ஐடியா கொடுதாள்னு ஒருமாதிரி விக்டோரியா சீக்ரட்ஸ் போயி, புதுசா ஒரு ஸ்பெஷல் பேண்டிஸ் ஒரு பேரை வாங்கி வந்திருந்தாள் காயத்ரி. அன்று சனிக்கிழமை, கீழே பேஸ்மெண்ட்ல லாண்ட்ரி போடும்போது அரைகுறையா ஒரு சின்ன ஸ்கேர்ட் மட்டும் போட்டுக்கொண்டு உள்ளே அந்த புது பேண்டிஸை போட்டு இருந்தாள். வேணும்னே பழைய க்ளோத்ஸை ட்ராப் பன்ணிட்டு எடுப்பதுபோல் உட்கார்ந்தாள். அவளுக்கு உதவ எதிர்புறமாக உட்கார்ந்து துணிகளை எடுத்த ஹரி, அவளையும், அவள் உள் ஆடையையும் நல்லாவே கவனித்தான்.

"என்ன காய்த்ரி பேண்டிஸ் கிழிஞ்சி இருக்கு? நல்லது எதுவும் இல்லையா? இதிலேகூட சிக்கனமா? நாளைக்கு போய் ஒரு டசன் எடுத்துண்டு வரலாம்" என்றான் விபரம் புரியாமல்.

"உங்களை என்ன பண்றது?", னு நினைத்துக் கொண்டாள் மனசுக்குள்ளேயே. "இது புது பேண்டிஸ்தான்யா மக்கு" னு ஹரியிடம் விளக்கம் சொல்ல அவளுக்கு இஷ்டமில்லை.

அடுத்த நாள் எரிச்சலும் கோபமுமா இருந்தாள். வாஷிங் மெஷினில் ஏதோ கோளாறுன்னு அவள் போட்டுக்க ஒண்ணும் மாட்டாமல் ஷூட்கேஸ்ல தேடி ஒரு பழைய சேலையையும், அதுக்கு மேட்சிங் ப்ளவ்ஸையும் மாட்டிக்கொண்டு இருந்தாள். நல்லவேளை ப்ளவ்ஸ் சைஸ் இன்னும் அவளுக்கு ஃபிட் ஆவதுபோல சரியா இருந்தது. அமெரிக்கா வந்ததிலிருந்து மாடர்ன் ட்ரெஸ்தான் இப்போலாம் காயத்ரிக்குப் பிடிக்கும். சேலையெல்லாம் இந்தியாவிலே கட்டியதுதான். அந்த சேலையை உடம்பெல்லாம் மாட்டிக்கொண்டு திரியிறது சுத்தமா பிடிக்காது, காயத்ரிக்கு.

டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்ல உக்காந்து முக்கியமான ப்ராஜக்ட் ஒண்ணுல சீரியஸா வேலை செய்துகொண்டிருந்த ஹரிட்ட அவசரமாக காஃபியை கொண்டுவந்து கொடுத்தாள்.

"என்ன காலையிலே வேற அவுட்ஃபிட் போட்டிருந்த, திடீர்னு சேலையில் இருக்க?" னு விசாரித்தான் ஹரி.

"ஆமா, புது வாஷிங் மெஷின் வாங்கனும் போல. இது அவ்வளவுதான். கரெக்ட்டா என் ட்ரெஸ் எல்லாத்தையும் போடும்போது மெஷின் போயிடுத்து. வாரண்ட்டி இருக்குனு கால் பண்ணினால் சர்விஸ்க்கு ஆட்கள் நாளைக்குத்தான் வருவார்களாம்! அதான் இந்த சேலையை உடம்புமுழுவதும் சுத்திக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு" என்றாள் எரிச்சலாக.

"இங்கே வா உன்னிடம் முக்கியமான ஒண்ணு கேக்கனும்" னு அவளை கையைப்பிடிச்சு பக்கத்தில் இழுத்தான் ஹரி.

"அடுப்புல பால் இருக்கு, விடுங்க" என்று ஓடிப்போயி அடுப்பில் இருந்ததை கவனித்தாள். அவளுக்கு இன்னும் புரியலை.

"ஹேய் காயத்ரி! இழுத்துப்போத்தினால்தான்டி நீ பயங்கர செக்ஸியா இருக்க !" னு அவள் காதருகில் முனுமுனுத்தான். அவள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து பின்னால் இருந்து கட்டி அணைத்தான். அவள் கழுத்தில் அவன் இதழ்கள் பதிந்தது. என்றும் போலில்லாமல் வித்தியாசமாக அவனுடைய முத்தங்கள் சத்தமாகவும் அவள் உடம்பில் ஏதோ செய்வதுபோல இருந்தது. அவன் கைகள் அவள் உடம்பில் தெரிந்த எல்லா "கேப்" களிலும் ஊர்ந்தது, பிறகு கைகளை அவன் உதடுகளும் ஃபாளோ பண்ணின. காய்த்ரி ஸ்ட்வை ஆஃப் பண்ணினாள் . ஸ்டவ்வில் உள்ள நெருப்பு அணைந்தது, ஆனால் அவன் கொடுக்கும் முத்தத்தால் அவள் உடல் கொதித்தது, பொங்கியது. அதன்பிறகு அவள் எதுவும் பெருசா பேசவில்லை. இன்று என்னவோ புதுமாதிரியாக அவளுக்கு வழங்கும் அன்புடன் அவன் அவளை ஹீரோயினாக வைத்து ஒரு கதையும் சேர்த்துச் சொன்னான். ரொம்ப ரொம்ப மோசமான கதை அது. ஆனால், அதுதான் அவளை எளிதாக அவனுக்கு முன்னால் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது . எவ்வளவு நாளாச்சு இப்படி இவர் "அன்பா" இருந்து!

ஷவரில் குளித்துக்கொண்டிருக்கும்போது இன்பத்தில் ஆழ்த்திய ஹரியை நினைத்தாள், "யாரையும் கேட்டால், இவர் ஒர் பக்கா ஜெண்டில்மேன் னு சொல்வாங்க. இவர் வண்டவாளம் எல்லாம் எனக்குத்தானே தெரியும்? வர வர ரொம்ப ரொம்ப மோசம் இவர்" என்று எண்ணி வெட்கப்பட்டாள். அங்கே பாத்ரூம் ஓரத்தில் இவ்வளவுக்கும் காரணமான, தன் கனவை நனவாக்கிய அந்த பழைய புடவையைப் பார்த்து தனக்குள் சிரித்தாள்.

குளித்துவிட்டு வெளியே வந்தவள், அப்போது பாத்ரூமில் நுழைந்த ஹரியிடம் , "ப்ராஜெக்ட் டெட் லைன், நாளைக்குனு சொன்னீங்க! ரெண்டு மணி நேரம் வேஸ்டாயிடுச்சே? பாவம் நீங்க!" என்றாள் கிண்டலாக.

"நீதான் சதி பண்ணிட்டடி! ஏன் எனக்கு ப்ரமோஷன் கெடைக்கிறது பிடிக்கலையா? உன்னைவிட ரொம்ப அதிக சாலரி வாங்கிடுவேன்னு இப்படி செக்ஸியா சேலையைக் கட்டி வந்து கவுத்தீட்டயேடி" என்று அவள் பின்புறம் தட்டிவிட்டு அவள் கன்னத்தில் லேசா முத்தமிட்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு "அரைகுறை" காயத்ரியைவிட, உடம்பெல்லாம் மறைத்து சேலையில் இருக்கும் "பத்தினி" காயத்ரிதான் கவர்ச்சியாக இருக்கிறாள் என்பது இப்போதாவது தெளிவாகப் புரிந்ததே. "நல்ல வேளை வாஷிங் மெஷின் "ரிப்பேர்" ஆச்சு" னு தனக்குள் சொல்லி சிரித்துக்கொண்டாள். ஒருவழியாக அவள் பகல்கனவு நனவானது. 
 *********************

இது ஒரு மீள்பதிவே!

காயத்ரியின் பகல்கனவு! (18 + ONLY)

Sunday, May 11, 2014

என்னை ஏன் பிளாக் பண்ணின? நீ என்ன பெரிய இவனா?

"இவன் ஒரு மெ ண் டலு! எதுவும் உருப்படியா எழுதமாட்டான்! இவன்லாம் எதுக்கு எழுதுறான்னே தெரியலை! ஒரு மட்டு மரியாதை தெரியாது! இவனால தமிழர்களுக்கு எல்லாம் தலைக்குனிவுதான்" என்ற எண்ணுத்துடந்தான் தற்போது இருந்தார் அந்தப் பெரியமனிதர். ஆனால், அவனுடைய பதிவை அவர் தொடர்பவர். மொதல்ல ஏதோ சுமாரா எழுதுறமாரி இருந்ததுனு தெரியாமல் தொடர்ந்தார். கொஞ்சநாள் ஆன அப்புறம்தான் அவன் தரம் தெரிந்தது! அவன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறினதும், "எதுக்கு இந்த சனியன் பிடிச்சவன் பதிவை எல்லாம் பின் தொடரணும்?"னு தெரியலை என்று மனதுக்குள்ளேயே புழுங்கினாலும், அவர் பெரிய மனிதன் என்பதால் திடீர்னு தொடர்வதை நிறுத்தினால் அநாகரிகமாக இருக்குமே என்று என்ன செய்வதென்றே தெரியவில்லை!

திடீர்னு ஒரு நாள் பாத்தால், அவன் பதிவை அவர் தொடர்பவராக இல்லை! "எப்படியோ ஆண்டவனாப் பார்த்து ஒரு நல்லது செஞ்சிருக்கான், சனியன் தொலைந்தது!" னு போயிருக்கலாம்தான். இருந்தாலும் அவருக்கு ஒரே மனக்குழப்பம்.. "எப்படி இது நடந்தது?"  என்று யோசனையுடன் தூங்கிப் போயிட்டார்.

இரவில், கனவில் வந்தார், பகவான்.

ஏதோ சண்டை நடப்பதுபோல் இருந்தது. பகவான் யாரோடையோ வாக்குவாதம் பண்ணிக்கொண்டு இருந்தார்..யாருனு பார்த்தால்.."அந்த அயோக்கியன் தான்". பகவானையே எதிர்த்து எதோ சொல்லிக்கிட்டு இருந்தான்..அவர்கள் வாக்குவாதம் அரைகுறையாகதான் கேட்டது இருந்தாலும் புரிந்தது.

"நீயே ஒரு தரங்கெட்டவன் உனக்கு இவ்வளவு திமிரா?" என்றார் பகவான்.

"யோவ்! உன் பக்தனுகளுக்குத்தான் அறிவு இல்லை! உனக்குமா? என் பதிவை பெரிய மனிதர்கள் நல்லவர்கள் எல்லாம் வாசிக்கலைனாத்தான் அவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். தெரியாமல் வந்து வாசிச்சுட்டா பரவாயில்லை! "தொடர்ந்து" வாசிப்பது அவர்களுக்கு சித்ரவதை! இந்தப் பெரிய மனிதர்கள் எல்லாம் நிம்மதியா வாழட்டுமேனு என்று அவர்களுக்கு என் மேல் உள்ள மரியாதை தெரிந்து, அவர்களை "பிளாக்" பண்ணி ஒரு நல்லது செய்தால், வந்து அதற்கு நன்றி சொல்லாமல் ஒளறிக்கிட்டு?" என்று பகவானையே எதிர்த்துப் பேசினான் அந்த நாதாரி.

"எனக்கா அறிவு இல்லை? நான் யாரு தெரியுமா?" பகவானே டென்ஷனாகிவிட்டார்.

"நீ மனிதர்கள் உணர்வுகள் புரியாத மரமண்டைனு எனக்குத் தெரியும். ஓடிப் போயிடு! உன் பொய் பக்தகோடிகள் காத்திருக்கா உனக்கு கால் அமுக்கி விட! போவியா?"னு கத்தினான் மெண்டலு.

"எனக்கா அறிவு இல்லை?..எனக்கா அறிவு இல்லை? எனக்கா அறிவு இல்லை?..எனக்கா அறிவு இல்லை? எனக்கா அறிவு இல்லை?..எனக்கா அறிவு இல்லை?" என்று பகவான் அழுவது கேட்டு .....அவசரமாக கனவு கலைந்து எழுந்தார் அந்தப் பெரிய மனிதர்.

உடனே ஆண்லைன் போயிப் பார்த்தால், இவர் அந்தத் தளத்திருந்து "ஃபாலோவர் லிஸ்ட்"ல இருந்து  அந்த மெண்டலால் அகற்றப் பட்டுத்தான் (பிளாக் செய்யப்பட்டு) இருந்தார். உண்மை தெளிவானது. அதான் இந்தக் கனவு போல?

இருந்தாலும் அவருக்கு இன்னும் ஒரே குழப்பம். "நான் அவமானப் படுத்தப்பட்டு இருக்கேனா? இல்லைனா என்னை உயர்வாகக் கருதி அவன் தன்னையே இறக்கிக்கொண்டானா?" என்று குழம்பினார். வெள்ளிக்கிழமை பகவானுக்கு பெரிய பூஜை நடத்தி, உண்மை என்னனு அவரிடம் கேட்டால் சொல்லிறமாட்டாரா என்ன? னு மறுபடியும் தூங்க முயன்றார் அவர்.

-முற்றும்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு- இது பழமொழி!

நீங்க ஆறடி ஒதுங்கினால், நான் 100 அடி உங்களிடம்  இருந்து ஒதுங்குவேன், கவலையை விடுங்கள் பெரியவரே! :-) - இது வருண் மொழி!
************************

இன்றைய பொன்மொழி: 

உலகம் மிகப் பெரியதாம். இதில் தோன்றி மறையும் நாம், நமக்கு மட்டுமே முக்கியமான்வர்கள். இதில் இந்த "நமக்கு" ஒண்ணும் பெரிய எண் இல்லை!

கொஞ்சம் உலக கடிகாரத்தையும் கவனிக்கவும்!  நீங்களும்  இதில் ஒரு "ஒண்ணு"! அவ்ளோதான்.


Wednesday, May 7, 2014

அழகான பொண்ணு நான்!

ஐந்து வருடப்படிப்பு முடிந்துவிட்டது! அமெரிக்கா போவதற்கு விசாவும் வாங்கியாச்சு! எல்லோருக்கும் நாளை ஒரு பார்ட்டி கொடுத்துவிட்டு பறக்க வேண்டியதுதான் இந்த நாட்டைவிட்டு. இப்படி யோசித்துக்கொண்டே தன் முகத்தை தன் அறையில் இருந்த நிலைக்கண்ணாடியில் பார்த்தாள் சகுந்தலா.

அவளுக்கு தன் முதல் வருடம் இந்த ஐ ஐ டி யில் வந்து சேர்ந்த ஞாபகம் வந்தது. அன்று இவள்தான் புது வரவுகளில் பேரழகி! இவளை வேடிக்கை பார்க்கதாத மாணவர்களோ, இளம் மற்றும் வயதான பேராசிரியர்களோ இல்லை. நீதாண்டி இந்த வருட #1 என்று அவள் தோழிகள் தன் பாய்ஃப்ரெண்ஸிடம் இருந்து கேட்டு வந்து சொன்னார்கள். அவளுக்கு தன் அழகினால் பெருமிதமும் கொஞ்சம் திமிரும்கூட இருந்ததென்றே சொல்லவேண்டும். அடுத்த வருடம் இன்னொரு புது வரவுக்கு அந்தப்பேரழகிப்பட்டம் போய்விட்டது. இவளுடைய ரசிகர்கள் எல்லாம் புதுவரவின் ரசிகர்களாகி விட்டார்கள்! இருந்தாலும் இவளுடைய “லாயல் விசிறிகள்” இரண்டாவது வருடத்திலும் இருக்கத்தான் செய்தார்கள். அப்போதெல்லாம் சகுந்தலா தன் முகத்தை அவளே பார்த்து ரசித்துக்கொள்வாள். கண்னாடி முன் பலமணி நேரம் நின்று தன்னை அழகு பார்ப்பாள். “அழகான பொண்ணு நான், அதற்கேற்றகண்ணுதான்” என்கிற ஆதிகாலத்துப்பாடல் அவளையே நினைத்து எழுதியது போல தோனும் அவளுக்கு. அதெல்லாம் ஒரு காலம்! அந்தக் காலம்!

இன்று? கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தில் இருக்கும் அந்த தழும்புகளைப் பார்த்தாள் சகுந்தலா. இப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் அவள் நிற்கும் நேரம் மிக மிகக் குறைவு! அவளுக்குப் பார்த்து பார்த்து பழகிவிட்டது. ஆனால் புதிதாக அவளைப் பார்ப்பவர்கள்தான் ஒரு பரிதாபப்பார்வை பார்த்து அவளை கஷ்டப்படுத்துவார்கள். அவள் முகத்தில் உள்ள தழும்புகளை ஞாபகப்படுத்தி, அவள் முகம் விஹாரமாக இருப்பதை அவளுக்கு ஞாபகப்படுத்தி அவளை அழவைப்பார்கள்! தன் மேல் அனுதாபம்தான் படுகிறார்கள் என்று அவளுக்குப்புரிந்தாலும் அவளுக்கு அந்தப் பரிதாபப்பார்வை பிடிக்காது!

இவள் 3 ம் வருடம் படிக்கும்போது அந்த எக்ஸ்பரிமெண்ட் பண்ணும்போதுதான் அந்த விபத்து நடந்தது. “லிக்விட் அம்மோனியா” வை ஒரு கண்ணாடிக்குடுவையில் எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய வேலை செய்யும் “ஹூட்” ல வைக்கும்போது, இவள் அந்த “மெட்டல் ஸ்டாண்ட்” ல் சரியாக அந்தக்குடுவையை “க்ளாம்ப்” பண்ணாததால், அது நழுவி, கிழே உள்ள இரும்புப்பகுதியில் பட்டு உடைந்து, அம்மோனியா அவள் மேல் தெறித்தது! தெறித்து அவள் முகத்திலும் உடலிலும்கூட பட்டது. நல்லவேளை “சேஃப்டி கண்ணாடி” போட்டிருந்ததால் கண்கள் மட்டும் தப்பியது! ஆனால் அவள் முகம் மற்றும் உடலெல்லாம் பட்டுவிட்டது. உடலெல்லாம் எரிந்தது! எப்படிக் கதறினாள்!

அந்த வலியெல்லாம் சில வாரங்களில் போய்விட்டது. ஆனால் அதனால் ஏற்பட்ட இந்த வடுக்கள்? அதுபோல் ஒரு பயங்கர விபத்து இதுவரை அந்த ஆய்வகத்தில் எந்தப் பெண்ணுக்குமே, ஏன் ஆண்களுக்குக்கூட நடந்ததில்லையாம். அன்றிலிருந்துதான் அவளுக்கு “அழகான பொண்ணு நான்” பாட்டை கேட்டாலே பிடிக்காமல் போனது. தத்துவப்பாடல்கள் எல்லாம் பிடிக்க ஆரம்பித்தது, அதில் உள்ள அர்த்தங்கள் எல்லாம புரிய ஆரம்பித்தது. அழகு நிரந்தரமானதில்லை என்பதை அறிந்து கொள்ள இவ்வளவு பயங்கரமான பாடமா அவள் கற்க வேண்டும்? பிறவியிலேயே அழகில்லாமல் பிறந்தால்கூட பரவாயில்லை. என்னைப்போல் பாதியில் எல்லாவற்றையும் இழப்பதுதான் மிகவும் பரிதாபம் என்று நினைப்பாள் சகுந்தலா.

“எல்லாம் இறைவன் செயல்” என்று சிலர் பேசும்போது எரிச்சலாக வரும் அவளுக்கு. யார் இந்த இறைவன்? மனிதர்களின் வாழ்க்கையில் விளையாட இவருக்கு யார் அனுமதி கொடுத்தது? இறைவன் ஒரு கொடூரப்புத்தி உள்ளவன் போலும்! இல்லையென்றால் என் முகத்தை ஏன் இப்படி சிதைக்க வேண்டும்? உலகத்தில் யார் எதை சாதித்தாலும் அது இந்த இறைவன் சாதனையாம்! யார் எப்படி பாதிக்கப்பட்டாலும் அது அவர் விளையாட்டாம்! இல்லை இல்லை அது அவர்கள் முன்பு செய்த பாவத்தின் விளைவாம்! வேடிக்கையான மனிதர்கள்!

“நான் இந்தப்பிறவியில் யாருக்கு என்ன தப்பு செய்தேன்?” என்று கேட்டால். அது என்னுடைய “கர்மா” வாம்! நான் இந்தப்பிறவியில் அனுபவிப்பது, போன பிறவியில் செய்த பாவமாம்! சரி அப்படியே பார்த்தாலும் “என்னுடைய முதல் பிறவியில் யாருடைய “கர்மா” வால் நன்மை தீமை அனுபவிக்கிறேன்?” என்பதை யாராவது சொல்ல முடியுமா? “கர்மா” என்பதே அர்த்தமில்லாமல் போய்விடும் இப்படி எல்லாம் யோசித்தால்! பக்திமான்களிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அவர்களுக்கு பதில் சொல்லத் தெரிந்த கேள்விதான் கேட்கனும்! இல்லை என்றால் என் கேள்வி விதண்டாவாதமாகிவிடும்! மேலும் இப்படியெல்லாம் கேட்டால் கடவுளுக்குப் பிடிக்காது! எனக்கும்தான் இப்படி ஒரு விபத்து நடந்தது பிடிக்கவில்லை! எனக்குப்பிடித்ததை செய்யாத கடவுளுக்கு நான் ஏன் அவருக்கு பிடித்ததெல்லாம் செய்யனும்?

“உனக்கு ஃபோன் கால், சகுந்தலா!” என்றாள் தோழி.

ஹாஸ்டலில் உள்ள “லேண்ட் லைன்” க்கு போய் ரிசீவரை எடுத்தாள்.

“விசா கிடைத்துவிட்டதா, சகுந்தலா! கண்க்ராட்ஸ்” என்றான் அவள் நண்பன் குமார் இன்னொரு அமெரிக்க முனையிலிருந்து!

“ஆமா, குமார்! நாளைக்கு ஒரு பார்ட்டி கொடுத்துவிட்டு, திருச்சிக்குபோய் எல்லோரிடமும் பை சொல்லிவிட்டு பறந்து வரவேண்டியதுதான் உங்களிடம் என்றாள் மகிழ்ச்சியுடன்!

“சரி, ஃப்ளைட் ஸ்கெட்யுள் எனக்கு இ-மெயில் பண்ணு! உன்னை விஷ் பண்னத்தான் கூப்பிட்டேன், பை” என்றான் குமார்.

“பை, குமார்!” என்று சொல்லிவிட்டு ஹேங் அப் பண்ணினாள்.

இவள் #1 அழகியாக இருக்கும்போது இவளை சட்டை செய்யாத குமார், அந்த விபத்துக்குப்பிறகு, இவள் மேல் எவ்வளவு அன்பு! என்ன பரிவு! மனிதர்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்! இவர்களை வணங்கலாம், ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குவதற்கு என்று நினைத்துக்கொண்டு இரவு உணவுக்காக ஹாஸ்டலில் இருந்து மெஸ் க்கு புறப்பட்டு சென்றாள், சகுந்தலா!

Friday, March 28, 2014

பாவிகளே! ஏசு உங்கள் பாவத்தை கழுவுவார்!

காலையில் அவன் பொண்ணு வித்யா மல்லிகைப்பூ பறிக்கிறேன் என்று வெளியே போனவள், கேவிக் கேவி அழுதுகொண்டே வந்தாள். அந்தக் குளவிக் கூட்டிலிருந்து வந்த குளவியிடம் கொட்டு வாங்கிக்கொண்டு வந்து வலி தாங்க முடியவில்லனு ஏங்கி ஏங்கி அழுதாள். அவள் அழுகையை அவனால தாங்க முடியவில்லை! கொளவிக்கு என்ன தெரியும் இவள் சிறுமி, தனக்கு தீங்கெதுவும் செய்யப் போவதில்லை என்று?

பகலில் அந்தக் கொளவியிடம் வம்பு வைத்துக் கொள்ளாமல்,  இரவு ஆனபிறகு வீட்டுமுன் இருந்த இரண்டு சிறு துளைகளையும் சிமெண்ட் வைத்து அடைத்தான், ராமன்.  "இனிமேல் இந்த கொளவிச்சனியன் என் குழந்தையை கொட்டாது" என்கிற நிம்மதி அவனுக்கு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இப்படி அதன் கூட்டை அடைத்துவிட்டால்.. அந்த துளைகளுக்குள்ளே கொளவியின் குழந்தை குட்டிகள் எல்லாம் வெளியே வரமுடியாமல் குடும்பத்துடன் பசியில் வாடிச் சாகுமோ? என்ற மறு எண்ணம் ஒன்று அவன் உள் நெஞ்சில் அவனைக் கொட்டியது. அவனுக்கு வேறு வழி தெரியவில்லை! "நீ வேற எங்காவது போய் கூடு கட்டி வாழ்ந்துக்கோ!"னு சொன்னால் அதென்ன போகவா போகுது? ஆறறிவு உள்ள மனுஷனுக்கே கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் படித்துப் படித்துச் சொன்னாலும், கேட்காமல் முரண்டு பிடித்து செருப்படி வாங்கிக் கட்டிக்கிறான். பாவம் கொளவி, அதுக்கென்ன தெரியும்?

"வாழு! வாழ விடு!" என்றெல்லாம் மனிதர்களுக்குள் தத்துவம் பேசிக்கிறோம். ஆனால் விலங்குகளையும், பறவைகளையும், பூச்சிகளையும், துன்புறுத்தி, எமாற்றி, கொன்று, தின்றுதான் மனிதனால் வாழமுடிகிறது. தன் இனத்தைத் தவிர யாரை நிம்மதியாக வாழவிட்டான் மனிதன்? "வாழு! வாழவிடு!"னு எதற்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கணும்? மனிதனைவிட அடிமுட்டாள் எவனுமே இல்லை! என்னவோ கடவுள்ங்கிறவன் இவனுக்காகத்தான் இருக்கமாரி ஒரு எண்ணத்துடன் வாழ்ந்து, கடவுளைக் கட்டி அழுது சாகிறான்.

சிமெண்ட் வைத்து அடைத்துவிட்டு வீட்டின் உள் நுழையப் போகும்போது பக்கத்துவீட்டில் வாழும் ஜேம்ஸ், காரிலிருந்து இறங்கி  ராமனுக்கு  ஹாய் சொல்லிவிட்டு அவருடைய வீட்டிற்குள் அவர் கேர்ள் ஃப்ரண்டுடன் நுழைந்தார். அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயதுபோல் இருக்கலாம். ஜேம்ஸ்க்கு வயது அறுபத்து ரெண்டு. பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அவர் வயதை ஒத்த மனைவியை சமீபத்தில்தான் டைவோர்ஸ் செய்திருந்தார், ஜேம்ஸ். என்ன பிரச்சினையோ எவனுக்குத் தெரியும்? அவர் மாஜி மனைவி வேறு வீட்டில் வாழ்கிறார் இப்போது.  தன் புது கேர்ள் ஃப்ரண்டுடன் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார் ஜேம்ஸ். இதிலென்ன தப்பு? எனக்கு "காமம்" தேவைப்படுகிறது, அதற்கானதை நான் செய்வேன் என்ற வெள்ளைக்காரர்களின் வெளிப்படையான தத்துவம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனால் ஜேம்ஸ் வளர்க்கும் இரண்டு ஆண் நாய்களுக்கும் அவர் கவனமாக காயடித்து விட்டார்!  அவைகள் பருவ வயதையடையும் போதே! அதில்தான் நியாயம் எங்கே இருக்கிறது என்று விளங்கவில்லை, அவனுக்கு!

மதுரை டவுன்ஹால் ரோட்டிலிருந்து ரயில் நிலையம் செல்லும் வழியில் ஒரு சில கிருஸ்தவ மத போதகர்கள், "பாவிகளே!" னு கூச்சல்போட்டு எல்லாரையும் கத்தும்போது ஹிந்துவான ராமனுக்கு எரிச்சல்தான் வந்திருக்கு. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அவனால் இன்று யோசிக்கும்போது உணர முடிந்தது.


இதுவும் ஒரு மீள்பதிவுதான்!

Thursday, March 27, 2014

ஆன்மீகம் என்பது மனநோயாளிக்கு தேவையானது!

நம்ம ஜோதிஜி அவர்கள் ஆன்மீகம் என்பதென்ன? னு ஒரு பதிவு போட்டு இருக்காரு. கடவுள்னா என்ன? அப்படினு நம்ம கேட்டோம்னு வச்சுக்கோங்க. நீ யாரு? பகவானைப் பத்தி நிந்திக்க? நாந்தான் கடவுளுக்கு சொந்தம். நாந்தான் டெய்லி அவரை பாடி ஆடி சந்தோஷ்ப்படுத்துறேன். நீ என்னடா அபிஷ்ட்டு பகவானைப் பத்தி பேசுறது?  நீதான் நாத்திகனாச்சே? நோக்கென்ன எங்க பகவான் மேலே அக்கறை? இப்படிப் பல பண்டாரங்கள் கால் காலுனு கத்துறதைப் பார்க்கலாம்.

பகுத்தறிவுனா என்னனு தெரியுமாடாப் பண்டாரம்?

எதையும் ஆராய்வது! கடவுளையும் உன்னைமாரி கபோதிகளையும்தான்!  நீ ஏன் இப்படிப் பண்டாரமா அலையிற??என்பதையும்தான். புரியுதாடா பண்டாரம்?

சரி ஆன்மீகத்துக்கு வருவோம். ஆன்மீகம்னா என்னனு ஆரம்பிச்சு அதில் சில பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு பதில் சொல்லச் சொல்லிட்டு அவரும் பதில் சொல்ல முயல்கிறார் நம்ம ஜோதிஜி. இவர் ஒரு சுமாரான ஆத்திகர்னு நெனைக்கிறேன். :)

கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்றது கஷ்டம். ஏன் கஷ்டம்? ஏன்னா நீங்க மரமண்டை பண்டாரங்களுக்கு பதில் சொல்றீங்க. 

பண்டாரங்களுக்கு யோசிக்கத் தெரியாது. பண்டாரங்களுக்குப் புரியலைனா, புரியலைனு சொல்லக்கூடத் தெரியாது. "உனக்கு புரியுறாப்பிலே சொல்லத்தெரியலை" னு சொல்லுங்க பண்டாரங்கள்!

பண்டாரத்துட்ட விவரிப்போம்..

இனிப்புனா என்ன?

அது "சுகர்" கலந்தது?

சுகர்னா?

அது ஒரு கார்போஹைட்ரேட்!

கார்போ ஹைட்ரேட்னா?

கார்பன் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் கலந்ந்த ஒரு வேதிப்பொருள்.

என்ன வேதிப்பொருளா?

எல்லாமே வேதிப்பொருள்தான் முண்டம்!! நீயும்தான்! அதில் நெறையா ஹைட்ராக்ஸில் க்ரூப் இருக்கும் அதனால தண்ணீரில் எளிதில் கரையும்.

ஆக, ஒரு பண்டாரத்திடம் ஒரு சாதாரண  சர்க்கரையை இப்படி புரியாதமாரி  பதில் சொல்லீட்டே போகலாம். பண்டாரத்துக்கு அப்படி  இதெல்லாம் புரியும்?

கொஞ்சம் புரியிறாப்பிலே சொல்லுய்யா?

சரி இந்தா இதுதான் சுகர்! பார்த்து ரசி!








இப்போ புரிஞ்சிருச்சா?  பேசாமல் போவியா?

இப்போ ரொம்பவே புரியாது பண்டாரத்துக்கு..

ஆத்திகப் பண்டாரம்! நீ ரொம்ப மண்டாயிருக்க! இங்கே வா! இந்தா இருக்கு பாரு. திருப்பதி லட்டு,  இதை டேஸ்ட் பண்ணிப்பாருனு கொடுத்தால்..


பண்டாரத்துக்கு லட்டு


பண்டாரம் அதை திண்ணுபுட்டு

இப்போ புரியுது.அட  இதுதானா? னு சொல்லும.

இப்படி சில சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் கடினமானதாக பண்டாரங்களுக்குப் புரியாத மாதிரி உண்மையான பதில் சொல்லலாம்.

ஆனால் நமக்கு சுகர் என்பது, இனிப்பு என்பது என்னனு எல்லாருக்கும் தெரியும்!  ஒவ்வொருவருடைய புரிதலும் வேற வேற லெவல் சரியா?

இப்போ ஆன்மீகம்னா என்ன?

இதையும் அப்படி எளிதாக விளக்கிச் சொல்லிவிட முடியாது. ஏன்? ஏன் என்றால் இது மனிதமனம் சம்மந்த்தப்பட்டது. மனிதமனம் விசித்திரமான ஒண்ணு. பண்டாரத்தின் மண்டையில் இருப்பது வேறமாரி வேலை செய்யும், பகுத்தறிபவன் மூளை/மனது வேறமாரி வேலை செய்யும். ஆன்மீகத்தை பண்டாரத்துக்கு இதுதான்னு லட்டுவைக் காட்டிவிட்டதுபோல காட்டிவிட முடியாது.

சரியா?

சரி பதில் சொல்லப் பார்ப்போம். ஆன்மீகம்னா பெருசா ஒண்ணுமில்லைங்க. இப்போ நம்ம வாழ்நாளில் முதல் நாளில் இருந்து கடைசிநாள் வரை (சாகிறவரைக்கும்) , செத்த பிறகு இவ்வுலகம்னு யோசிக்கும்போது. யோசிக்கும்போது? அதுக்கப்புறம் நமக்கப்புறம் என்ன ஆகும்  இவ்வுலகம்னு யோசிக்கும்போது..யோசிக்கும்போது?

அப்படி உக்காந்து யோசித்தால் இன்னைக்கு சின்னவிசயத்துகெல்லாம் அடிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம வாழ்க்கையில் வெறுமைதான் தெரியும்.

பகவானை வாழ்க்கையில் சேர்த்துட்டா "முழுமை" அடைந்துவிடும்னு சொல்றது பண்டாரங்களின் பச்சைப் பொய்! 

அப்புறம் ஏன் பகவானை விட்டுப்புட்டு ஆன்மீகக்கடலில் மூழ்கிறான் பண்டாரம்???

இப்போ மறுபடியும் யோசனிகளுக்குப் போவோம்..

பணக்காரன் பரதேசியாவது! தகுதியே இல்லாதவன் எல்லாம் மேன்மேலும் மேலே போறது! காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை..

இதுபோல் நிகழ்வுகளை எல்லாம் நம்ம பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ முயலவது.

இப்போ இதையெல்லாம் யோசிச்ச நம்ம பண்டாரம், ஆன்மீகப் பாதையில் காலெடுத்து வைப்பான்.. 

எப்போ??

ஒண்ணு கவனிங்க, இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை. குறைகள் இல்லாதாவர், வாழ்க்கையில் இன்னும் பெருந்தோல்வி அடையாதவர்கள் ஆன்மீகத்துக்கு போறதில்லை..ஏன்? அயோக்கியத்தனம் செய்ய செய்யத்தான் ஆன்மீகத் தேடல் அதிகமாகும். இவன் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலை, எவனைப்பார்த்தும் வயிறு எரியலை, எல்லாரும் நல்லா வாழட்டும் நெனச்சால் இவனுக்கு எதுக்கு ஆன்மீகம் அல்லது பகவான்?

யாரு ஆன்மீகத்துக்குப் போறா? வாழ்க்கையில் தன்னுடைய "கண்ட்ரோலை" இழப்பவர்கள்.

என்ன? பகவான் பகவான்னு கோயிலுக்கு அலையலாம்- நெறையாப் பேரு குடும்பப் பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறது கோயில்தான்.

அப்புறம் எவ்ளோ நேரம்தான் கோயில்லபோயி பகவானை கட்டி அழறது? அதுவும் போரடிச்சு சுயதேடல், ஆன்மீகம்னு தியானம் அது இதுனு இறங்கிடுறது.

மறுபடியும் ஆன்மீகம்னா என்னனு சொல்லலையே..

இருடா பண்டாரம்!

ஆக ஆன்மீகமென்பது யாதெனில், உங்கள் மன வியாதிக்கு நீங்களே மருத்துவராகி, உங்கள் மூளையை நீங்களே ஒரு நிதானத்துக்குக் கொண்டு வருவது. அதை எப்படி செய்வது? சிந்திக்காமல் இருப்பது மூளைக்கு நல்லதுனு நெனைக்கிறேன். அதான் தியானம் பண்ணுனு ஆன்மீகவாதி யெல்லாம் சொல்லிக்கிட்டு அலையுதுகள். மூளையை சிந்திக்கவிடாமல் தவிர்ப்பது எல்லாம் உதவுது. ஆக ஆன்மீகம் என்பது உன் மனவியாதிக்கு நீயே ஒரு மருத்துவம் பெற்று க்கொள்வது- மூளையை சிந்திக்கவிடாமல் தடுத்து. புரியுதா?

கொஞ்சம் இரு! ஆன்மீகவாதியிலும் ஒரு ஸ்பெக்ட்ரம் (பலவகைகள்) இருக்குனு நெனைக்கிறேன். அதாவது ஆன்மீகம்னு சொல்லிட்டு அலையிற எல்லாப் பண்டாரமும் ஒண்ணு கெடையாது.  புத்தர்போல எல்லாம் எல்லாரும் ஆகமுடியாது. காந்திமாதிரி அரைகுறை ஆன்மீகவாதியாகி வாழ்ந்து சாகிறவந்தான் அதிகம்.

 அப்புறம்.. இதுபோல் ஆன்மீகம்னா என்ன?  கடவுள்னா என்ன?  கற்புனா என்னனு எல்லாம் யோசிக்க மூளை ஒழுங்கா வேலைசெய்தால் போதும். அதற்கு நீ ஒரு ஆத்திகப்பண்டாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்போலாம் ஆத்திகப் பண்டாரங்கள்தான் ஆன்மீகம்னு வந்துட்டா முந்திரிக் கொட்டை மாரி எதையாவது நாத்திகனை திட்டிக்கிட்டு ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..பகவான் பேரைக் கெடுத்துக்கிட்டு..

இந்தப் பண்டாரங்கள் என்ன ஒளறுச்சுனு அதுகளுக்கே புரியாது. அதுக பகவானுகளுக்கும்தான்!

Wednesday, January 1, 2014

2013 முடிந்து 2014 ஆரம்பம்!

2013 ல பதிவுலகில் பதிவர் டோண்டு ராகவனையும், பதிவர் பட்டாபட்டியையும் இழந்து இருக்கிறோம்! எனக்கு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களில் எவ்வளவு கருத்து ஒற்றுமை இருந்தது, அவர்களை எனக்கு எவ்ளோ பிடித்தது என்பது முக்கியம் அல்ல! இரண்டு தமிழ்ப் பதிவர்கள் மறைந்துவிட்டார்கள். இருவருமே தங்கள் கருத்துக்களில் நம்பிக்கை வைத்து கருத்துக்களை தைரியமாக முன்வைத்தார்கள். தமிழ் வலையுலகில் அவர்களை நாம் இழந்தது மாபெரும் இழப்புதான் என்பதை யாரும் மறுக்க முடியாது!

இப்படி வருடா வருடம் சில பதிவர்களையும், ஒரு சிலர் உறவினர்களையும் ( நண்பர், காதலர், மனைவி, கணவன், மகன், மகள், அண்ணா, தங்கை, அப்பா அல்லது அம்மா என்று ) யாரையாவது ஒரு சிலர் இழந்து தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். இன்று அவர்கள், நாளை நாம்  அவர்கள் நிலையில் இருக்கத்தான் போகிறோம். அப்படி உறவினரை  இழந்து நிற்பவர்களையும், அவர்கள் நண்பர்கள், உறவினர்கள்  போன வருடம் "ஹாப்பி நியு இயர்" "இந்தாண்டு உங்களுக்கு எல்லாமே நல்லதாக அமையட்டும்" என்றுதான் வாழ்த்தினோம். நீங்க எப்படி மனதாற வாழ்த்தினாலும்  இறப்பு, இழப்பு, தோல்வி எல்லாம் வருடா வருடம் எல்லாருக்கும் நடக்கத்தான் போகுது. எதுக்கு இதெல்லாம்? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,  எல்லாம் நல்லபடியாக இந்தாண்டு உங்களுக்கு அமையட்டும்,  மண்ணாங்கட்டினு அர்த்தமில்லாத வாழ்த்துக்கள்!

இந்த வருடம் இனிமையாகப் போயிருந்தால் அடுத்த வருடம் சோகமாகப் போக வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்தைவிட நல்ல வருடமாக அமையாது என்பதே உண்மை. அடுத்த வருடம் சோகமாகப் போனால் அதற்கடுத்த வருடம் அந்த அளவுக்கு சோகமாக இல்லாமல் பரவாயில்லாமல்த்தான் போகும். கீழே போனால் மேலேதான வரணும்? நம்ம ஸ்டாக் மார்க்கட் மாதிரி. ஒவ்வொரு வருடமும் இழப்புகள், நண்பனா நம்பியவனிடம் கற்கிற பாடங்கள், கோ வொர்க்கர்களின் சுயநலம் பற்றி அறிதல்,  இப்படி புதுப் புது வடிவில் முன்னால் கற்ற பாடங்களே ஏதாவது மறுபடியும் வேறொரு உருவில் வந்துகொண்டேதான் இருக்கு. ஒரு சில நல்லவைகள்,  கெட்டது எல்லாமே ஒவ்வொரு ஆண்டும் நடக்கத்தான் செய்யுது. என்ன புது வருடம் ஆரம்பிச்சா கவனமா 2014 னு மட்டும் மாற்றி எழுதணும் அவ்ளோதான். எல்லா எழவும் அதேமாரித்தான் போகப்போகுது.

வாழ்க்கை என்பதே நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்வதுதான் போலும். வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் அதுதான் உண்மை. அறியாமையில் வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என்கிற கூற்றுதான் எப்படிப் பார்த்தாலும் உண்மையாகத் தோன்றுகிறது.

என்னை பொறுத்தவரையில் வாழ்க்கையில் "போர்" அடிக்காமல் வாழக் கற்றுக்கொண்டு வருகிறேன். Personally, I get busy with my life. In that way I get tired because of hard-work and sleep well. I dont have enough time to finish what I want to do most of the time. Because of that, the time passes faster than you would imagine. That means a week goes like a day. A year goes like a month. Time flies. That's how I always feel.

நான் ஹெல்த்தியாக நல்ல மனநிலையில் உள்ளதால் என்னால் இதுபோல் பாஸிட்டிவாக எழுத முடிகிறதென்பதையும் மறுக்கவில்லை. உண்மை என்னவென்றால் நேற்று உங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பனோ நண்பியோ நாளை இருக்கப் போவதில்லை. போன வருடம் உயிருக்கு உயிரா இருந்தவங்க ரெண்டு வருடத்தில் சம்மந்தமே இல்லாத ஆட்களாக பிரிந்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் குப்பைக்கு சமமாகிவிடுவீர்கள்.  These days I don't respect anybody who disrespects me. I usually forgive their ignorance and respect them for what they are. But not any more! I feel it is mere foolishness to appreciate anybody who looks down on you and who thinks you are a "trash". It is a very big world. "Just move on and ignore such people" is what I tell myself. Never forget I am the most important person to myself whether I say it explicitly or not, it is a fact. :)

I am seeing how people are treating even their own parents when they get older. They were like King and Queen when they brought them up. They had control over everything. Once they get older, they are treated like "you don't want to know how" by their own children! That's what life is all about. Unless you are "meaningless God" you wont be treated same way as time passes. நேற்று தேவையான நீங்கள் இன்னைக்கு அதே நபருக்கு குப்பைதான். உங்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக குப்பைனு சொல்லாமல் உங்களை கோவில் என்பார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

மனிதன் மாறக்கூடியவன். சுயநலமானவன். அவனவன் தேவைகளுக்கேற்ப வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான். யாரையும்-அது யாராயிருந்தாலும் சரி, உங்களைத் தவிர- நம்பி ஏமாறாதீர்கள்.  
உங்களுக்கு என்ன முக்கியம் என்றால் உங்கள் மனநிலை. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களோட இருந்து போராடப்போவது நீங்கள் மட்டும்தான். அதற்கு உங்கள் தன்னம்பிக்கைதான் முக்கியமானது. உங்களை மட்டும் நீங்கள் நம்புங்கள்.  ரொம்பவும் சாதாரணமான மக்கள் நிறைந்த உலகம்தான் இது. அந்த மக்களில் உங்க எல்லா உறவுகளும் அடங்கும்! அப்படி இல்லை, உங்க உறவுகள் உலகிலே உயர்ந்தவர்கள்னு சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி சந்தோஷமாக வாழலாம்தான்.  ஆனால் எதை இழந்தாலும், யாரை இழந்தாலும், நம் வாழ்க்கையை அதற்கேற்ப  மாற்றியமைத்து வாழக் கற்றுக்க வேண்டும். அதற்கேற்ற மனநிலையை நீங்க பெறவேண்டுமென்றால் உங்களைத்தவிர யாரும் எப்படி வேணா மாறுவார்கள் என்கிற உண்மையை உணர வேண்டும். அந்த உண்மையை உணர்ந்து வாழும் கலையை நீங்க கற்றுக்கொண்டால் சாகிற வரைக்கும் உங்களுக்கு வெற்றிதான். மற்றவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புதான் உங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தரும்.

உங்க தகுதி என்னவாயிருந்தாலும், நீங்க என்ன சம்பாரித்தாலும், உங்களை ஊர் உலகம் எப்படியெல்லாம் விமர்சிச்சாலும் நீங்க வாழ்ந்து காட்டணும்னா அது உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்றுதான் உங்களுக்குப் பிரதானமானது. இது மிகப்பெரிய உலகம். ஒரு நண்பன் போனால் இன்னொருவன். ஒரு காதலி போனால் இன்னொருத்தி! ஒரு வேலை போனால் இன்னொன்னு, பணம் போனால், நாளைக்கு சம்பாரிக்கலாம், இல்லைனா தகுதிக்கேற்ப ஏழையா வாழக் கற்றுக்கலாம்.

நல்ல ஹெப்த்தியானவங்க அநியாயமாக சாவதையும் நம் கண் முன்னால்  பார்க்கத்தான் செய்றோம். பெரிய பணக்காரன் தெருவுக்கு வர்ரதையும் பார்க்கிறோம். இன்னைக்கு சூப்பர் ஸ்டாராக உள்ள ஒரு விளையாட்டு வீரன் சில வருடங்களில் சாதாரணவனாவதையும் பார்க்கிறோம். இதையெல்லாம் பார்த்தும் நாம் வாழக் னு கற்றுக்கொள்ளனும்.  எந்த ஒரு சூழலிலும். பழசை நினைத்து அழுது, பொலம்பி எதுவும் ஆகப்போவதில்லை.

சொல்ல மறந்துட்டேனே, இறைவன்னு ஒருவர் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்னு உங்களை நீங்க ஏமாற்றிக்கலாம்! :)  ஆனால் நீங்கள் இழக்கும்  உயிரையோ, உறவையோ அவர் திருப்பி கொண்டு வந்து கொடுக்கப் போவதில்லை! Again, you can brainwash yourself thinking that "God did a bad thing to me to teach me a lesson or whatever". இங்கேயும் கடவுள் என்கிற ஒரு கற்பனைப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு உங்க மனசை நீங்க திடப்படுத்த்க்கிறீங்க அவ்ளோதான் என்னைப் பொருத்தவரையில். :)

கலைஞர் டி வி துணைச்சேனல், சிரிப்பொலி சேனல் னு ஒண்ணு இருக்குல அதுல ஒரு சில அக்காக்கள்,  இல்லைனா எங்கேயோ பிடிச்சுட்டு வந்த மாரி இருக்க அண்ணாக்கள் எல்லாம் நேரலையில் வருவாங்க. சரி, வந்தா, உங்க பேரென்ன, எங்கேயிருந்து பேசுறீங்க, ஜோக் சொல்லுங்கனு ஏதாவது கேட்டால் பரவாயில்லை. தொலைபேசியில் அவங்களிடம்  பேசுபவர்களிடம் ரொம்ப அக்கறையா குசலம் விசாரிப்பாங்க. "எப்படி இருக்கீங்க?" "எப்படி படிக்கிறீங்க?" "எத்னையாவது ராங்க் வாங்குறீங்க?" "வேலை எல்லாம் எப்படிப் போகுது?" னு ஒரு கேள்வியை கேட்டு, அவர்கள் பதிலுக்கேத்தாற்போல அக்கறையா ஒரு பதிலையும் சொல்வதைப் பார்த்தால் சிரிக்கிறதா அழுகிறதானு தெரியலை. அவர்கள் ஏன் அங்கே வர்ராங்க? அது அவர்கள் தொழில்! இவர்கள் தன் வாழ்வில் அன்றாடம்  பார்த்துப் பழகும் அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், ஏழைகள், தேவை உள்ளவர்கள் யாரைப்ப்பற்றியும் இதுபோல் விசாரிப்பார்களா? அவர்கள் நலன் கருதி  கவலைப்படுவார்களா? இல்லை யாருக்கும்  உதவுவார்களா? என்பது சந்தேகமே! விலைமாது செக்ஸை அவள்  கஸ்டமரிடம் எஞ்ஞாய் பண்ணுவாளா?  அது அவளுக்குத் தொழில்! நிச்சயம் காமம் அங்கே ப்ளெஷர் கெடையாது. அதேபோல்தான் இவர்கள் அக்கறைகளும்! சும்மா தொழில்! வயித்துப் பொழைப்பு!

புத்தாண்டுனா என்ன விசேஷம்? லைசண்ஸ் டு ட்ரிங்க் னு சொல்லலாம்.  காலம் மாறிப் போயிடுச்சு. நம்ம ஊரில் இப்போலாம் பெண்கள் மட்டும் புகை பிடிப்பது, தண்ணியடிப்பது இல்லை. மற்றபடி ஆண்கள் எல்லாருக்கும் புத்தாண்டுனா குடிக்கணும். புத்தாண்டுக்கு குடிக்கக்கூடாதுனு சொல்லீட்டா அது "ஹாப்பி" நியு இயராக ஒருபோதும் இருக்காது. வெள்ளைக்காரந்தான் இதெல்லாம் ஆரம்பிச்சு வச்சது. இது அவனோட புத்தாண்டுதானே? நாடுவிட்டு நாடு போயி அடுத்தவன்  நாட்டைக்கவர்ந்து, கொள்ளையடிச்சு பொழைப்பை ஓட்டுறவன்ந்தான் இதுமாரி ஹாப்பி நியு இயர்னு வாழ்த்தவும், குடிக்கவும்  கத்துக் கொடுத்துட்டுப் போயிருக்காணுக. வருட ஆரம்பத்தையே போதையில்தான் ஆரம்பிக்கிறார்கள். BTW, I did not consume alcohol on the "new year eve-to-new year" time. :-) ஊருக்கு மட்டும் உபதேசம் இல்லை! ஊரில் வாழும் எனக்கும்தான். :)

Friday, May 31, 2013

தினகரனில் சுஜாதா பற்றி அவதூறு வருகிறதா?!

ஜெயமோஹன் தளத்தில் வெளியாகியுள்ள   கடிதம்தான் கீழே உள்ள சுஜாதா பற்றி பேசப்படும் ஒரு கட்டுரை! ஒரு தீவிர சுஜாதா ரசிகர், சுஜாதா மேல் அவதூறு வரப்போகிறது என்றும் வரும் ஞாயிறு அன்று தினகரன் பதிவில் அவரை இழிவு படுத்தும் கட்டுரை இடம் பெறப்போகிறது என்கிற கவலையுடன் ஜெயமோஹன் தளத்தில் பகிர்ந்து கொண்டது இந்தக்கடிதம்.

இதை அங்கேயிருந்து வெட்டி ஒட்டி இருக்கிறேன். இதற்கு ஜெயமோஹன், அவர் பாணியிலே பதில் சொல்லியிருக்கிறார். அவர் பதிலை நீங்க வாசிக்கணும்னா, நீங்க அவர் தளத்திற்குப் போக  சுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா? "இங்கே சொடுக்கவும்!

அதை விடுத்து கொஞ்சம் இந்த சுஜாதா ரசிகரின், பிரச்சினையை நாம் கவனமாகப் பார்ப்போம்.


அன்புள்ள ஜெயமோகன் சார்,

வணக்கம்..
திருச்சியில் தங்களை சந்தித்த பின் இப்போது தான் பேசுகிறேன்.. நலமா?
சமீபமாக எழுத்தாளன் தமிழ் சமூகத்தில் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான் என்பது குறித்து பல்வேறு கருத்து மோதல்கள் இணையம் எங்கும் தெறிக்கின்றன.. உங்கள் கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.. பல மனிதர்கள் அறிஞர்களை அல்லது ஏதேனும் ஒரு துறை வல்லுனரை சந்திக்கும் வேளையில் தங்களுக்கு தெரிந்த அச்சு பிச்சு தகவல்களை அவர்களுக்கு சொல்லிகொடுத்து விட்டு நகரவே முயல்கின்றனர்.. உண்மை..
சிறிது நாட்களுக்கு முன் சுஜாதா குறித்த பதிவுகளும், பதில்களும் அளித்திருந்தீர்கள்.. சுஜாதா தீவிர இலக்கியம் படைப்பதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் அதை முயலவில்லை என்றீர்கள். சுஜாதாவின் எழுத்து காலம் தாண்டி நிற்குமா என்பது குறித்து நான் பேச போவதில்லை..
அவரது வாசகனாக சொல்கிறேன்.. சுஜாதா ஒரு கதாநாயகன் போல் எல்லோர் மனதிலும் இருந்தார்.. இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. எழுத்தாளர் என்றவுடன் பலரும் அறிந்த மிக சில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்..
வெகுஜனம் விரும்பும் படைப்பை நோக்கியே தன்னை திருப்பிக்கொண்டவர். அவர் படைத்த சினிமாக்களில் கூட அந்த பட இயக்குனரை தாண்டி சுஜாதா டச் இருப்பதை நாம் உணரலாம்.

அத்தகைய ஆளுமையை பற்றி அவர் மனைவி அளித்த பேட்டி இந்த வாரம் வெளியாக உள்ளது..

’அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்… அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்… அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்… ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க… அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்…’’
———–
‘’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு… சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது… சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை…
———-
‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்…’’

இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். தமிழகமே அந்த எழுத்தாளரின் நடைக்கு இன்றும் மயங்கியிருக்கிறது. அப்படிப்பட்டவரின் இன்னொரு முகத்தை முதல் முறையாக பதிவு செய்திருக்கிறார் அவர் மனைவி.
சுஜாதா குடும்பத்தின் நெருங்கிய நண்பர் விசாரித்ததில், திருமதி சுஜாதா “ஆப் தி ரெகார்ட்” பேசியதை எல்லாம் பேட்டி என்று எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது.. “எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்” என்று கூறியுள்ளார்..

இதோ அந்த நண்பர் திருமதி சுஜாதாவிடம் கேட்டவை..
https://www.facebook.com/losangelesram/posts/10201180569656870
வரும் ஞாயிறன்று இந்த பேட்டி தினகரனில் வெளியாகிறது..
இது என்ன? ஒரு எழுத்தாளர்.. அதுவும் இறந்து ஐந்து ஆண்டு ஆனா பின் நொந்து பொய் கிடக்கும் அவர் மனைவியிடம் பேட்டி எடுத்து மக்கள் அவர் என கருதி வைத்துள்ள பிம்பத்தை உடைக்க ஏன் இந்த ஆசை? உங்கள் பதிவொன்றில் சுஜாதா மரணத்தை எதிர்கொண்ட விதம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.. அதை படித்து விட்டு தூங்க முயன்றும், முடியவில்லை,.. அவரது தீவிர ரசிகன், வாசகன் என்ற முறையில் நான் வைக்கும் விண்ணப்பம் இது.. சுஜாதா என்னும் ஆளுமை வரும் ஞாயிறன்று நொறுங்க போவதை நினைத்தால் மனம் கனக்கிறது..
இலக்கியவாதியோ இல்லையோ.. சுஜாதா ஒரு தலைமுறை நாயகன் அல்லவா? அவருக்கு இப்படி நம் கண் முன் ஒரு அவமானம் நிகழ வேண்டுமா? இதை சக எழுத்தாளர்கள் தடுக்க முடியுமா? சங்கங்கள் இதை கவனிக்குமா?
- ஸ்ரீகாந்த்

சுஜாதாவின் பரம விசிறி, ஸ்ரீகாந்த், உண்மையிலேயே ரொம்ப கவலையோட இதை எழுதி இருக்கிறார் இந்தக் கடிதத்தை. சுஜாதாவின் விசிறிகள் பலர் இதைப் படித்துவிட்டு இவரைப்போலவே அழுது ஒப்பாரி வைக்கப்போறாங்க என்பதென்னவோ உண்மைதான்.

* சரி, இதில் எதுவும் ஷாக்கிங்கா உங்களுக்கு இருக்கா?

ஆமாவா? நம்ம மக்களிடம் இதுதான் பெரிய பிரச்சினை. தனிப்பட்ட வாழ்க்கையில் சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு சாதாரண குறைகள் நிறைந்த மனிதந்தான். அவர் எழுத்தை வைத்து அவர் கொடுத்த பேட்டிகளை வைத்து அவர் "கடவுளுக்கு" சமம் என்பதுபோல் ஒருவர் நினைத்திருந்தால் அது யார் குற்றம்?

சுஜாதாவின் குற்றமா? இல்லை அவர் ரசிகர்களின் குற்றமா?

சுஜாதா பற்றி நான் பலவாறு எழுதி இருக்கேன். அதை எல்லாம் தோண்டி எடுக்க முடியவில்லை. இருந்தாலும் எழுதிய ஒரு சிலவற்றை இங்கே தர்ரேன். இதில் சுஜாதாவின் ரசிகர்களின் பின்னூட்டங்களை நீங்க கவனிக்கணும்!

 கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!

சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா!

எனக்கு இந்த கடிதம்  படித்து எந்த ஆச்சர்யமும் இல்லை! சுஜாதாவை எப்போவுமே நான்  குறைகளும் நிறைந்த ஒரு சாதாரண ஆம்பளையாகத்தான் பார்த்ததுண்டு! அவர் ஒரு "எம் சி பி" என்பதை உணர்ந்து நான் பலமுறை பச்சையாக சொல்லியுள்ளேன். அவர் போய் சேர்ந்துவிட்டதால அவரை கடவுளா வணங்கணும்னு நான் நம்பவில்லை! அவர் மேலே அப்படி எதுவும் கண்ணா பிண்ணானு மரியாதை வைக்காததால எதுவும் ஆச்சர்யப்படும்படி ஒன்றுமே இல்லை!

எனக்கு என்ன ஆச்சர்யம்னா.. எப்படி அவர் மனைவி இதுபோல் ஒரு பேட்டி கொடுக்க ஒத்துக்கிட்டார் (it does not matter off the record or on the record!)  என்பதே!

Friday, March 1, 2013

சுஜாதாவை சமன் செய்த இன்றைய ஆண்லைன் விக்கிபீடியா!

எச்சரிக்கை! அமரர் சுஜாதாவை வணங்கும் பக்தர்கள் இந்தப் பதிவை வாசிக்காமல் தவிர்ப்பது நல்லது! நன்றி!

பாமர தமிழ் வாசகர்கள், ஏன் எதற்கு எப்படி? ல  சுஜாதாவிடம் அறிவியல் சம்மந்தமான கேள்விகள் கேட்பார்கள். இது ஒரு நேரடி கேள்வி பதில் நேரம் கிடையாது. அதாவது கேள்வி கேட்டதற்கும் பதில் சொல்வதற்கும் இடையே உள்ள காலம் எவ்ளோனா.. நாட்கள், வாரங்கள் ஏன் மாதங்களாகக் கூட இருக்கலாம்.

சுஜாதாவிடம் கேள்வி கேட்பதையே பெரிய க்ரிடிட்டாக நினைக்கும் பாமர வாசகன் ஒருவன் கேட்ட கேள்வியை நம்ம சுஜாதா எடுத்துட்டுப் போயி விக்கிப்பீடியா இல்லனா ஏதாவது ஒரு நல்ல சோர்ஸ்ல போயி பதிலைதேடி எடுத்து அதை தமிழாக்கம் செய்து நமக்குக் கொடுப்பாரு (சிறிது நக்கலும் கிண்டலும் சேர்த்து). "ஐயா எனக்கு இந்தக் கேள்விக்கு பதில் தெரியலை"னு இவர் எந்தக் கேள்வியையும் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆக க்ரிடிட் எல்லாம் பதிலைத் தேடி எடுத்து வரும் சுஜாதாவுக்குத்தான் போகும். ஏன் என்றால் பொதுவாக அவர் பதில் சொல்ல உதவிய சோர்ஸை எல்லாம் நம்ம பாமரனுகளுக்கு தெளிவாக சொல்வதில்லை. "நான் கேள்விப்பட்ட வரைக்கும்," இல்லைனா "நான் அறிந்தவரைக்கும்"  என்ற  சொற்கோர்வைகள்  அவர் தேடிப் படித்த "சோர்ஸை" குறிக்கும் என்பது பாமரனுக்குப் புரியாது. ஒரு வேளை புரியுமோ? இப்படித்தான் நம்ம ஊர்ல பொதுவாக பல மேதைகள் (சுஜாதா, மதன் போன்ற) உருவாக்கப் படுறாங்க.

இந்த அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு டெக்னாலஜி பத்தி நம்ம மேதாவிக்கெல்லாம் மேதை கமலஹாசன் விட்ட பந்தா இருக்கே! என்னவோ இவரே "இண்வெண்ட்" செய்த உலகமகா டெக்னாலஜி அது என்பதுபோல! கடைசியில் சொன்னதுபோல அதை வெளிவிடவும் இல்லை!

சுஜாதாபோல் மேதைகள்,  தான் செய்யும் தொழிலில் (மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு) பி இ எல் ல ஏதாவது விஞ்ஞான "ப்ரேக் த்ரு" செய்து நோபல் பரிசு இல்லை ஏதாவது பெரிய பேட்டண்ட் எதுவும் செய்தாங்களானு பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது. பாமரனுக்கு மேதையா இருப்பதில்தான் இவர்களுக்கு பெருமை! என்ன நாலு படத்துக்கு சினிமா வசனம் வேணா எழுதி சாதிச்சு இருப்பாங்க! ஆனால் பாமரனைப் பொறுத்தவரையில் அவன் விஞ்ஞானக் கேள்விக்கு பதில் தேடி எடுத்து வந்து சொன்ன சுஜாதாதான் மேதை. விஞ்ஞானத்தில் 24 மணி நேரமும் செலவழிக்கும் ஒரு அறிவியல் ஆய்வாளன் எல்லாம் யாருனே தெரியாது. இதுதான் உலகம்!

நேற்று முந்தினம் சுஜாதா மறைந்த தினமாம். அஞ்சலி எல்லாம் செலுத்தினார்கள்! நம்மூர்ல உள்ள "பிரப்பலப் பதிவர்கள்" எல்லாருமே ஒட்டு மொத்தமான சுஜாதா ஜால்ராதான். அது மட்டுமல்ல கமலஹாசன் ஜால்ராவாவும் இருப்பாங்க. ஏன் என்றால் "பப்ளிசிட்டி" விரும்பும் இந்த மேதைகளும் ஒரு மாதிரி "பிரப்பலப் பாரமரன்கள்" தான். இவர்களுக்குப் அறிவியல் , அறிவியலை எப்படிப் புரிந்து கொள்ளணும், பொது அறிவு, பகுத்தறிதல்  இதெல்லாம் ரொம்ப கம்மினுகூட  சொல்லலாம்.  ஆனால் "கவர்ச்சி எழுத்தழகு", "சினிமா ஞானம்" "அடல்ட் ஜோக் ஞானம்" எல்லாம் அதிகம் இருக்கலாம்தான். அதனால் நம்ம வாசக பாமரர்கள் சுஜாதாவை புகழ்வது  போலவே இந்த "பிரப்பல மேதைகளும்" சாண்ஸ் கெடைக்கிற போதெல்லாம் சுஜாதாவை வானளவுக்குப் புகழுவாங்க.

* தமிழ் இலக்கியத்தில் சுஜாதா எதையும் பெருசா சாதிக்கவில்லை. தமிழ் இலக்கியத்தை பொறுத்தவரை சாகித்ய அகாதமி விருதுகூட பெறாத ஒரு இலக்கியவாதிதான் சுஜாதா. 

* காதல் என்பது ஜஸ்ட் செக்ஸ்/ஹார்மோண்ஸ் என்று புரிந்துகொண்டவர் சுஜாதா. 

* தத்துவம் பேசுவதெல்லாம் பொதுவாக பார்ப்பனர்களுக்கு கொஞ்சம் கஷ்டம். அவர்களுக்கு "சர்வைவல்" தான் ரொம்ப ரொம்ப முக்கியம்!
அதனால் "சுஜாதா தத்துவத்தையும்" ஒதுக்கி வைத்து விடலாம். 

* சரி, சுத்தமான விஞ்ஞானத்திலும் இல்லைனா தொழில்நுட்பத்திலும் எதுவும் பெருசா சாதிச்சாரா?னா  அதுவும் சாதிக்கவில்லை!

சரி தலைப்புக்கு வர்ரேன்..

ஏன் எதற்கு எப்படி? யில் அவர் ஆற்றிய அவருடைய அறிவியல் பங்களிப்பைப் பொறுத்தவரை சுஜாதாவின்  இழப்பை  இன்றைய இணையதள உலகம் எளிதாக சமன் செய்து விட்டது என்னும் கூற்று முற்றிலும் உண்மை. ஏன் எதற்கு எப்படி? என்கிற பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமல்லாமல் பலவிதமான அறிவியல் விசயங்களை எல்லாம் இன்று விக்கில மட்டுமன்றி பல நல்ல தளங்களில் அழகா சேகரிச்சு வச்சிருக்காங்க. அரைகுறை  ஆங்கிலத்தில் கூகில்ல இல்லைனா தமிழில்கூட டைப் அடிச்சா எல்லா பதிலும் கண் முன்னால் வந்து நிக்கும். நீங்க அள்ளிக்கலாம்!

அதனால சுஜாதா இல்லாமல் நாங்க அறிவீணர்களாயிட்டோம்னு ஒப்பாரி வைக்காமல், உங்க கேள்விக்கெல்லாம் உடனே பதில் சொல்லும் கூகிலையும், விக்கியையும் ஒழுங்கா பயன்படுத்த கத்துக்கோங்க! ஆமா, நீங்களும் மேதையாகலாம்!

Friday, January 18, 2013

படு மட்டமான கதை! வ்வ்வ்வே வாந்தி வருது!

"இது என்ன கதை? படு மட்டமா இருக்கு!"

"ஏன் இந்தக் கதைக்கு என்னடி?"

"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க?"

"சும்மா ஒரு கதை! அவ்ளோதான்!"

"சும்மா ஒரு 200 வரி எதையாவது லூசுத்தனமா பத்தி பத்தியா எழுதி ,அதை கதைனு நீங்க சொல்லிட்டா அது கதையாயிடுமா?"

"ஏன் ஆகாது? எல்லாரும் அப்படித்தானே எதையாவது கதைனு  எழுதுறாங்க?"

"அதுக்காக? இது மாதிரியா? நீங்க நல்ல கதை எல்லாம் தமிழ்ல படிக்கிறதே இல்லையா?"

" நானும் பல கதைகளைப் படிச்சுட்டு  "இது என்ன கதை? படு மட்டமா இருக்கு"னு தான் உன்னைமாரியே நெனைக்கிறேன். "

"ஹா ஹா ஹா! உங்களுக்கும் கதை  எழுதத் தெரியலை. அடுத்தவா எழுதுற நல்ல கதையையும் பாராட்டத் தெரியலை. ஆனா நெனப்பு மட்டும்.."

"இந்தா பாரு, வசந்தி!  நான் கதை எழுதுறேன்னு எவன் எழுதியதையும் தழுவி எழுதுறது இல்லை. ஏதாவது ஒரு கருத்தை சொல்லணும்னா அதை கதை வடிவுல சொல்றது அவ்ளோதான்."

"சரி அப்படியே இருக்கட்டும்! இந்தக் கதையில் வர்ர உங்க பவித்ராவைப் பத்தி என்ன சொல்ல வர்ரீங்க?'

"அப்படினா?"

"இல்லை அவளுக்கு எந்த ஆம்பளையையும் பிடிக்கலைனு சொல்றீங்க. சரியா?'

"ஆமா!"

"அப்போ அவளுக்கு காம உணர்ச்சிகளே, உணர்வுகளே கெடையாதா?"

"நீ என்ன கதை படிச்ச?  அவளுக்கு அழகான கவர்ச்சியான் பெண்களைப் பார்த்தால் ஒரு மாதிரி அட்ராக்சன் இருக்கிறப்பிலேதானே எழுதியிருக்கேன்?"

"அப்படினா?"

"அப்படினா பவித்ராவுக்குப் பெண்களைப் பிடிக்கிதுனு சொல்றேன். பெண்கள் மேலே ஒரு அட்ராக்சன்"

"அப்படினா?"

"அப்படினா, அப்படித்தான்!"

"இப்படியெல்லாம்.. பவித்ரா மாதிரி உண்மையிலேயே யாரும் இருப்பாங்களா என்ன?"

"மேலை நாடுகள்ல எல்லாம் இதையெல்லாம் சாதாரணமாக ஏத்துக்கிட்டாங்க! ஹை ஸ்கூல்லயே அவங்க செக்ஸுவல் ஓரியண்டேஷனை கண்டுபிடிச்சு, நான் "straight" நான்  "gay"னு தெளிவா சொல்லிடுறாங்க. அதை எல்லாரும் ஏத்துக்கவும் செய்றாங்க. நம்ம ஊர்லதான் இன்னும் இதை பெரிய தப்பாக்குறாங்க! ஒரு 30 வருடத்துக்கு அப்புறம் இவ்ங்களும் இதை  ஏத்துக்குவாங்க! இது மாரித்தான் எல்லா விசயத்திலும் நம்ம ஒரு 30 வருடம் பின் தங்கி இருக்கோம்!"

"சரி, இதை சொல்லுங்க! அது மாதிரி உணர்வுகள் இருக்கிற பெண்களுக்கு ஒருவேளை எஸ்ட்ரோஜனுக்கு பதிலா ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்டாஸ்டீரோன் சுரக்குமா?'

"அதுதான் இல்லை! இது ஹார்மோனல் பிரச்சினை இல்லைனு சொல்றாங்க!"

"சரி,  இந்தப் பவித்ரா இன்னொரு பெண்னோட சேர்ந்து வாழ்றானே வச்சுக்குவோம். இது என்ன வாழ்க்கை அவள் வாழ்றது? இதுல என்ன சந்தோசம்  கிடைக்கும்?"

"மொதல்ல சந்தோசமான வாழ்க்கைனா என்னனு சொல்லு!"

"யாராவது ஒரு நல்ல பார்ட்னரை தேர்ந்தெடுத்து, அவரைக் கல்யாணம் பண்ணி, குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்கி, அவங்க வளந்ததும் நம்ம நிம்மதியா வயதாகி சாகிறது."

"இதுதான் பலருக்கு சந்தோசமான வாழ்க்கை! இதுலயும் மாரிட்டல் ப்ராப்ளம்ஸ், செக்ஸுவல் ப்ராப்ளம்ஸ், இன்ஃபெடிலிட்டி, கணவன் ஏமாத்துவது, மனைவி கணவனை ஏமாத்துவது, மிட் லைஃப் க்ரைஸிஸ், அது இதுனு இருக்கத்தான் செய்யுது. சரி, எல்லாரும் இப்படித்தான் வாழணும்னு இல்லையே, வசந்தி!"

"அப்படினா?"

" நல்லா இருந்த ஒரு ஆளுக்கு 25 வயதில் திடீர்னு ஒரு நாள் கால்ப்பந்து ஆடும்போது "படாத இடத்தில்" பந்து அடித்து, அந்த இடத்தில் அடி பட்டதால, ஆண்மை இல்லாமல் போயிடுதுனு வச்சுக்குவோம்.."

"சரி"

"அவர் இனிமேல் இதுபோல் நீ சொன்ன ஒரு சாதாரண வாழக்கை வாழ  முடியாது"

"அதனால?"

"வாழ்க்கை பூரம் அவர் இந்த ஆக்ஸிடெண்டை நினைத்து, தான் இழந்ததை நினைத்து அழது அழுது புலம்பி வாழணுமா, அவரு? இதுதான் அவருக்கு வாழ்க்கையா? இல்லைனா, செக்ஸை மட்டும் விட்டுவிட்டு, விளையாட்டு அது இதுணு மற்றவைகளில் தன் மனதைச் செலுத்தி சந்தோஷமாக அவர் வாழ கத்துக்கணுமா?"

"இது ஒரு ஸ்பெஷல் கேஸ்"

"இந்த மாரி சில விபத்துகளால் பிறப்புறுப்பை பாதியில் இழக்கிறவங்களும் இந்த உலகில் வாழ்த்தான் செய்றாங்க. உடனே அவங்க எல்லாம் தற்கொலை பண்ணிட்டு செத்துடுறது இல்லை!"

"எதுக்கு அதுபோல் ஒருவரைப் பற்றி நீங்க இப்போ யோசிக்கணும்னு தெரியலை!"

"கோவிச்சுக்காதே! இப்போ நெறையப்பேருக்கு மார்புப் புற்றுநோய் வருதுணு சொல்றாங்க. கொஞ்சவயதிலே பல பெண்களுக்கு வருது. அவங்க அதை "ட்ரீட்" பண்ணிட்டு கேன்சர் சர்வைவராக  வாழத்தான் செய்றாங்க! ஏன் உனக்குக்கூட  ஒரு நாளைக்கு வரலாம்!'

"இப்போ எதுக்கு இதைப் பத்தி எல்லாம் சொல்லி என்னை மூட் அவ்ட் ஆக்குறீங்க?'

"இங்க பாரு! நீ சொல்றபடி. ஒரு சாதாரண வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை! அவர்களும், இந்த உலகில் நம்மோட வாழ்ந்துகொண்டுதான் இருக்காங்க! அவங்களுக்கும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் வந்து போயிட்டுத்தான் இருக்கு! சரியா?"

" "

"என்ன பேச்சையே காணோம்?"

"ப்ரெஸ்ட் கேன்சர் யாருக்குனாலும் வரலாமா?'

"அப்படித்தான் சொல்றாங்க"

"இல்லை அதுக்கப்புறம், சர்ஜரிக்கு அப்புறம்... வாழ்க்கை அவங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரே டிப்ரெஷனா இருக்காதா?"

"என்ன பண்ணுறது? வாழ்க்கையை வேறமாரிப் பார்த்து வாழ்க் கற்றுக்கணும். நெனச்சதும் சாகவா முடியும்?"

"ஆமாம். நெனச்ச நேரம் சாக முடியாது இல்ல? பல ரெஸ்பாண்ஸிபிலிட்டிகள் இருக்கும் நமக்கு இல்லை?"

"அதைத்தான் சொல்றேன். ஒருவரின்  வாழ்க்கை எப்ப வேணா எப்படி வேணா தலை கீழாக மாறலாம். ஒருவருக்கு திடீர்னு பல இழப்புகள் ஏற்படலாம்.. அதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பெண் "ஓரினச்சேர்க்கை"யில் ஆர்வம் உள்ளவளா அவள் தன்னை உணர்ந்து  அதற்கேற்றார்போல் அவர் வாழ்க்கையை அமைப்பது ஒண்ணும் பெரிய தப்பில்லை!'

"ஆக உங்க பவித்ரா  கதை உலகுக்கு ரொம்பத்தேவையான ஒண்ணுனு சொல்றீங்களா?'

"நான் அப்படி சொல்லவில்லை!"

"என்னதான் சொல்றீங்க?"

"அந்தக் கதையை நீ இவ்ளோ மட்டம் தட்ட வேண்டியதில்லை!"

"உங்க கதைனால "ரொம்ப நல்லாயிருக்கு"னு பொய் சொல்லணுமா நான்?"

"மக்கு! அது என் கதையே இல்லைடி! யாரோ  ஷாமளா னு ஒரு அம்மா "நெட்" ல எழுதிய கதை! நான் எழுதினமாரி, "காப்பி பேஸ்ட்" பண்ணி உன்னிடம் காட்டினேன்."

"ஆக இது உங்க கதையே இல்லை?"

" இப்போச் சொல்லு! கதை எப்படி இருந்தது?"

"உங்க கதை இல்லாதனால..இப்போ யோசிச்சுப் பார்த்தால் கொஞ்சம் அர்த்தமுள்ளதாகத்தான் இருக்கு!"


**********

Wednesday, January 16, 2013

ஜெயமோகனும் சாகித்ய அகாதமி விருதும்!

இந்த வருடம் சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் தானியல் சொல்வராஜ்க்கு வழங்கியுள்ளார்கள். "தோல்" என்ற இவர் எழுதிய நாவலுக்கு இந்த விருதைக் கொடுத்துள்ளார்கள். இதில், இவர் தோல் பதனிடுபவர்கள் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார். "பரவாயில்லையே, தேவையான ஒரு புதினம்தான். இதுபோல் வாழும் ஏழை மக்கள் வாழ்க்கையைப் பற்றி சிரத்தையுடன் எழுதியிருக்காரே" னுதான் என்னை மாரி ஆட்களுக்கு எல்லாம் தோன்றியது.

தோல் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையை மையமாகக் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் தானியல் செல்வராசு எழுதியுள்ள தமிழ் புதினமாகும். தோல் பதனிடும் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், இதனால் தொழிலாளர் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் மற்றும் தங்கள் போராட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்று உரிமைகளை மீட்டதையும் இப்புதினம் விவரிக்கிறது. இவை அப்பகுதிவாழ் மக்களின் வழங்குமொழியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது. 117 கதைமாந்தரைக் கொண்டு 26 அத்தியாயங்களில் இந்த புதினம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் நீளத்தைக் கண்டு பலரும் பதிப்பிக்காதநிலையில் 2010ஆம் ஆண்டிலேயே இது நண்பரொருவரின் உதவியால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.[1] இந்த புதினத்திற்கு தமிழக அரசு சார்பில் 2011ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதும் 2012ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துள்ளன.
 எழுத்துலக அரசியல் பற்றி தெரியாதவன் நான். அதனால் நான் பார்க்கும் கோணம் மிகவும்  எளிமையானது. ஆனால், இந்த விருது பெற்றவர் தகுதி பற்றி இலக்கிய மேதாவி ஜெயமோவன் என்ன சொல்றார்னு நீங்களே வாசித்துப் பாருங்கள்!

******************************

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலந்தானே?
சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன் (நான் எதிர்பார்த்தது வேறாக இருந்தாலும்) முதலில் உங்கள் தளத்தில்தான் தேடினேன்…செல்வராஜ் யாரென்று அறியலாம் என்று. யார் எந்த விருது பெற்றாலும் முதல் வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்த முறை மௌனம் சாதித்து விட்டீர்கள். யார் அவர்?
அன்புடன்
இளம்பரிதி


அன்புள்ள இளம்பரிதி அவர்களுக்கு

டி செல்வராஜ் மூத்த முற்போக்கு எழுத்தாளர். இருபதாண்டுகளுக்கு முன் நான் வாசித்தவற்றில் அவரது மலரும் சருகும், தேநீர் போன்றவை அந்தவகை எழுத்துக்களுக்குள் நல்லவை என்ற எண்ணம் இருந்தது
இப்போது வாசிக்கையில் பாவமாக இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் கதைச்சுருக்கம் சொல்ல அதைக்கேட்டுப் பிள்ளைகள் எழுதிய கதைகள் போல. ஒரே மாதிரி சொற்றொடர்கள். ஒரே மாதிரி கதைப்போக்கு.
அவரது விருதுபெற்ற தோல் என்னும் நாவலை அவர் ஐம்பதுகளில் எழுதினார் என்ற எண்ணமே வந்தது. இலக்கியம் என்பதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
இச்சூழலில் நான் என்ன சொல்வது? தமிழிலக்கியத்தின் தலைவிதி. இந்த விருதுடன் அவர் எங்காவது ஓய்ந்தால்கூடத் தமிழுக்கு நல்லதுதான். இல்லாவிட்டால் விருதுக்காக மூன்று வருடங்களுக்கு ஒரு படைப்பு எனப் பிதுக்கி வெளியே தள்ளிக்கொண்டே இருப்பார். வயதும் ஆகிறது.
தமிழில் பொதுவாக விழுமியங்கள் அளவுகோல்கள் முக்கியமே இல்லை. நம்மவரா இல்லையா என்பதே எங்கும் செல்லுபடியாகிறது. எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரு பொது அளவுகோலை நாம் கையாள்வதில்லை. நமக்குத் தெரிந்த ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்கிறோம்.
சாகித்ய அக்காதமியில் விருதுபெற்றவர்கள் மேலும் விருதுகளைத் தீர்மானிப்பதில் முக்கியமான செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
சாகித்ய அக்காதமி ஆரம்பிக்கப்பட்டபோது ராஜாஜி அதில் செல்வாக்கை செலுத்தினார். அவருக்குப் பிரியமான பேராசிரியர்கள் உள்ளே சென்றார்கள். தங்களுக்கும் தங்களுக்கு உகந்தவர்களுக்கும் விருதுகளை அளித்துக்கொண்டார்கள். ஆரம்பத்தில் சாகித்ய அக்காதமி விருது பெரும்பாலும் பேராசிரியர்களுக்கே கிடைத்தது
பின்னர் பேராசிரியர்கள் அவர்களுக்குப்பிடித்த வணிக எழுத்தாளர்களை விருதுபெறச் செய்தார்கள். அகிலனும் நா.பார்த்தசாரதியும் அவ்வாறு விருது பெற்றார்கள். நா.பார்த்தசாரதி உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்டவர். சிறந்த இலக்கியவாதிகளை விருதுக்குள் கொண்டுவர உண்மையாகவே முயன்றார்.
அவ்வாறு அவர் விருதுபெற்றுத் தந்தவர்களில் தவறான தேர்வு என்பது வல்லிக்கண்ணன்தான். வல்லிக்கண்ணனின் வறுமையே நா.பார்த்தசாரதியை அம்முடிவை எடுக்கச்செய்தது என அவரே சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் வல்லிக்கண்ணன் சக இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கப்படக்கூடாதென்பதில் மிகத்தீவிரமாக இருந்தார். முற்போக்கு ஆசாமிகளை உள்ளே கொண்டுவருவதே அவரது குறி. அதற்காக அவர் வணிக எழுத்தாளர்களுடன் ஒத்துழைத்து அவர்கள் விருதுபெற வழிவகுத்தார். அவர்கள் இவருக்கு அவ்வப்போது விட்டுக்கொடுத்தார்கள்
விளைவாக அக்காதமியில் கொஞ்சம் கொஞ்சமாக முற்போக்கு கும்பல் உள்ளே புகுந்து இடம் பிடித்தது. விருதுகளை அவர்களுக்கே அளித்துக்கொள்ள ஒரு மாஃபியா மாதிரி செயல்படுகிறார்கள். சரிதான், புரட்சி நடத்தி மத்திய அரசைக் கைப்பற்ற முடியவில்லை. சாகித்ய அக்காதமியையாவது கைப்பற்றினோம் என்ற நிறைவு மிஞ்சட்டும்
ஜெ
*******************


சரி, மேலே உள்ள "ஜெயமோவன் பதிலை" வாசிச்சுட்டீங்களா? எத்தனை பேரு தலையை உருட்டுறாரு பாருங்க இந்தாளூ!!!

 * திரு செல்வராஜ்க்கு சாகித்ய அகாதமி பெறத் தகுதி இல்லையாம். ஏன் என்றால் அவருக்கு இலக்கியம் தெரியாதாம்! இன்னைக்கு இந்த விருதுவை பரிந்துரைக்க இருக்கும் குழுவில் உள்ளது ஒரு மாஃபியா முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமாம்!

* ஆக, போன வருடம் சாகித்ய அகாதமி விருது வாங்கிய சு வெங்கடேசனும் இதுபோல் முற்போக்கு மாஃபியா கும்பலை சேர்ந்தவர்தானா? அதனால்தான் "காவல் கோட்டம்" புதினமும் சாகித்ய அகாதமி விருது பெற்றது போலும்!

* அதற்கு முன்னால் விருந்து பெற்ற "நாஞ்சில் நாடன்" னும் இந்த மாஃபியா கும்பலை சேர்ந்தவரா? னு ஜெயமோவன் தான் சொல்லணும்!

ஆமா, எப்படி இந்த மாஃபியா கும்பல் இந்தக் குழுவை ஆக்கிரமிச்சாங்க???

இது சுத்தமான "ஜெயமோவன் தியரி" (ஆரம்பம்)

* சாகித்ய அகாதமி ஆரம்ப காலத்தில் ராஜாஜி, உள்ளே நுழைந்து, தமிழ் பேராசிரியர்களுக்கு மட்டுமே விருதை வாரிவழங்கிபுட்டாராம். அவங்களுக்கு இலக்கியம் தெரியுமா என்னனு தெரியலை!

* ஆக, ராஜாஜி ஊக்குவித்த அந்த பேராசியர்கள் எல்லாருக்கும் ஒரு மண்ணும் தெரியாதாம்! அந்த கூமுட்டைகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து, தகுதியே இல்லாத வணிக எழுத்தாளர்களுக்கு விருதை அள்ளி வழங்கிப்புடுச்சுகளாம். அதனாலதான் அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் புதினத்திற்கு க்கு சாகித்ய அகாதமி கொடுத்தார்களாம்! அகிலன் ஒரு சாதாரண வணிக எழுத்தாளராம்!!! பாரதீய ஞான பீடப் பரிசு பெற்றிருந்தாலும் அவருக்கும் இலக்கியம் தெரியாது போலும்! ஆக அகிலனுக்குக் கொடுத்ததும் தவறான ஒண்ணு.

* நா பார்த்தசாரதி ஓரளவுக்கு தகுதியுள்ளவராம்! ஆனால் அவருக்கும் அறிவு கெடையாதாம்! ஏழை பாழைனு இரக்கப்பட்டு தகுதியே இல்லாத வல்லிக்கண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருதை கொடுத்து எல்லாத்தையும் நாசம் பண்ணிப்புட்டு போயிட்டாராம், நா பா.

* வல்லிக்கண்ணன், வணிக எழுத்தாளர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இலக்கியம் தெரியாத முற்போக்கு மாஃபியாக்களை ஒவ்வொருவரா உள்ளே கொண்டு வந்து சேர்த்துவிட்டு அவரும் போயிட்டார் போல!

ஆக, இப்போ இருக்க முற்போக்கு மாஃபியா கும்பல்,  யாருக்கு இலக்கியம் தெரியாதோ அவங்களை தேடிப்பிடிச்சு தகுதியே இல்லாதவங்களுக்கு சாகித்ய அகாடமி விருதைக் கொடுத்துப் புடுறாங்களாம்!

ஜெயமோவன் தியரி இங்கே முடிவடைந்துவிட்டது!

உண்மையான  சாகித்ய அகாமி விருது பெற்வர்கள் லிஸ்ட் கீழே இருக்கு!



எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை, இந்தாளு ஜெயமோவனுக்கு என்னப்பா பிரச்சினை?? என்ன எழவைப் பத்தி பேசினாலும் இந்தாளு அதில் இறங்கி, அதில் புதைந்து கிடக்கும் விசயங்களை இவர் இஷ்டத்துக்கு ஜோடிச்சு அரசியல்தான் பேசுறாரு!

ராஜாஜி தமிழ் பேராசிரியர்களை ஊக்குவிச்சது தப்பு! தமிழ் பேராசிரியர்கள், நா பார்த்தசாரதி, அகிலன், ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது அடி முட்டாள்த்தனம்! அடுத்து நா பா, வல்லிக்கண்ணனுக்கு விருதை வழங்கியது உலகமகா குற்றம்!!! ஒரு சாதாரண transition னை என்னமாரி எல்லாம் குதற்கமா விவரிக்கிறாருனு பாருங்கப்பா!!!

-------------------------

இந்தாளு, ஜெயமோவன், இதே மாரித்தான் லீனா மணிமேகலை விவகாரத்தில் எஸ் வி ராஜதுரைக்கு அங்கேயிருந்து காசு வருது, இவனுக்கு இங்கே இருந்து காசு வருதுனு எதை எதையோ ஆதாரமில்லாமல் பொலம்பி. ஒளறித்தள்ளி  அதன் விளைவுகளை தொடர்ந்து அனுபவிச்சாரு ! அப்புறம் இவன் என்னை இப்படி திட்டிப்புட்டான் அது இதுனு ஒரே ஒப்பாரி மேல் ஒப்பாரி வச்சாரு!

இப்போ இன்னைக்கு இருக்க சாகித்ய அகாதமி குழுவை முற்போக்கு மாஃபியா கும்பல்னு சொல்லாமல் சொல்றாரு!!!

ஒருவேளை இந்தமாரி ஒப்பாரி வைத்தால்தான் அடுத்து இவருக்கு விருது ஏதாவது கொடுப்பாங்கணு பார்க்கிறாரோ? 

ஆக, இந்தாளு பொலம்பலை நிறுத்தணும்னா ஒரே வழிதான்!

தயவு செய்து இந்தாளுக்கு தமிழ்ல என்ன என்ன விருது கொடுக்க முடியுமோ, எல்லா விருதுகள்லயும் ஒண்ணு ஒண்ணு கொடுத்துத் தொலைங்கப்பா!  

ஆமா, சாகித்ய அகாடமில இருந்து பாரதிய ஞான பீட விருது வரைக்கும்! 

இல்லைனா, இந்தாளு எதை எடுத்தாலும் அதில் அரசியல்ப் பேசி வைக்கிற ஒப்பாரியை தாங்கவே முடியாது போல!

Thursday, June 14, 2012

திருடி பிழைப்பை ஓட்டும் தமிலர்கள்!

தமிழ்யூத்கஃபே.காம் னு ஒரு தளத்தில் என் பதிவு! அப்படியே என் பதிவை  காப்பி - பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆமா, தொடுப்புக் கொடுக்கவில்லை! என் தளப் பெயரோ அல்லது ஒரிஜினல்ப் பதிவை எழுதிய என் பெயரோ எங்கேயும் குறிப்பிடக் காணோம்!

அந்தத் தள நிர்வாகி இதை எழுதியது போல,  திருடி "போஸ்டெட் பை அட்மினிஸ்ட்ரேட்டர்" னு போட்டுக்கிறான், சாவுகிராக்கி!!

இம்முறையாவது வெல்வாரா உலகநாயகர்?