Friday, August 1, 2014

கவிதை எழுதப்போயி காமெடியனானேன்!

 



கவிதைப் போட்டி நடைபெறப் போகிறதாம்
கவிதை எழுத முயலலாமென்றால்
தமிழ்  இலக்கணம் தெரியாது
தமிழ் இலக்கியமும் படிக்கவில்லை
 எப்படியும் வென்றே ஆகவேண்டுமென்று 
கவிதை என்று மடக்கி மடக்கி
கவி நான் எழுதியது நாலு வரிகள்
அதில் நான் காணாத எழுத்துப் பிழைகளோ நாற்பது
கவிதைப்போட்டியில் வெல்ல வாய்ப்பில்லை
என் காமெடியை மெச்சி ஆறுதல் பரிசெதுவும் தந்தாலேயொழிய!

ஆக்கம்:   கவிதை எழுத முயன்ற காமெடியன் வருண்! 

6 comments:

saamaaniyan said...

இதுவே ஆறுதல் பரிசுக்கு தேறிடும் நண்பரே !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
வருண்..

கத்தியை தீட்டத்தீட்டத்தான் கூர்மையாகும் என்பது போல.. சரியோ பிழையோ. முதலில்போட்டியில் பங்குபெறவேண்டும்..
நிச்சயம் எழுதுங்கள் நல்ல எழுச்சியுள்ள கவிதை பிறக்கும்.

என்பக்கம் வாருங்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சாமானியன் சொன்ன மாதிரி இதையே கொஞ்சம் மாத்தி எழுதினா கவிதையா மாற வாய்ப்பு உண்டு.
காமெடியாகவும் கவிதை எழுதலாம்.

Avargal Unmaigal said...

யாரப்பா இந்த கவிதையை ஆறுதல் பரிசுக்கான கவிதை என்று சொல்லுவது.? அப்படின்னா முதமல் இரண்டாம் மூன்றாம் பரிசுக்குரிய கவிதைகளை ஏற்கனவே தேர்ந்து எடுத்து வைத்துவிட்டுதானா இந்த போட்டி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறீர்கள்? என்ன இந்த போட்டியும் விஜய் டிவி அவார்ட்ஸ் மாதிரிதானா என்ன?

போட்டி அறிவித்ததும் முதலில் களம் இறங்கியது எங்கள் பாஸ்தான்... இது வரை வேறு எந்த கவிதையும் வராத நிலையில் இதுதான் முதல் பரிசுக்கான கவிதை.

கும்மாச்சி said...

அவர்கள் உண்மை கருத்தை நான் வழிமொழிகிறேன்.

வருண் said...

@ saam, ரூபன், முரளி, தல ம த அண்ட் கும்மாச்சி!

வருகைக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி :)