Saturday, November 1, 2014

மேதாவி ஜெயமோகன் தளத்தில் ஒரு சி னி மா விளம்பரம்!

நித்யானந்தாவுக்கு சாரு விளம்பரம் செய்து அவர் தலையில் அவரே  மண் அள்ளிப்போட்டுக் கொண்டது, பிறகு சாரு தன் தளத்தில் நித்யா பற்றி கட்டுரை என்று எழுதிய அந்த "பொய் மூட்டைகளை" வைரஸ் வந்து தின்றுவிட்டுப் போனது. அதற்கப்புறம் அக்கட்டுரைகளை சாரு, வைரசோட மல்லுக்கட்டி, "வேணும்னே" வைரஸிடம் தோற்று அந்தப் பொய்க்கட்டுரைகளை "ரெக்கவர்" பண்ண முடியாமல் போனது. கடைசியில் வைரஸால் அவைகள் அழிக்கப்பட்டதாக சாரு "கணக்குக் காட்டியது" எல்லாம் எல்லாருக்கும் தெரியும்.

அவர் புளுகும்போதே சாரு தளத்தில் உள்ள நந்தி சில்க்ஸ் கமெர்ஷியல் போல இதுவும் ஒரு நித்யானந்தா கமர்ஷியல்தான் என்பதைப் பலர் புரிந்துகொண்டாலும்,  நித்யா படுக்கையறை ரகசியங்கள் எல்லாம் "மீடியாவால்" அம்பலப் படுத்திய பிறகே  அந்த வைரஸ் வந்து "கவனமாக" அந்தக்கட்டுரைகளை முழுமையாக சாப்பிட்டுவிட்டுப் போனது. இதெல்லாம் பழைய கதை.

இப்போ புதுக்கதைக்கு வருவோம்..

இலக்கிய மேதாவி ஜெயமோகன்  ஒரு சினிமா கமர்ஷியல் கொடுக்கிறார்! யாருக்கு? இன்னுமொரு மேதைக்கு! அதான் இந்த சினிமா மேதை கமலஹாசன் நடிக்கும் "பாபநாசம்" என்கிற படத்துக்கு. மலையாளப் பட "ரீமேக்"க்கான இப்படத்திற்கு  "கட்டுரை வடிவில்" ஒரு கமர்ஷியல் கொடுக்கிறார்.

இந்தக் "கமர்ஷியல் கட்டுரை"யில் இவர் சினிமா கலைஞர்களைப்பற்றி சிலாகித்து  புகழோ புகழோனு புகழ்ந்து (புளுகித்) தள்ளியுள்ளதைப் பார்த்தால்..தன் தேவைக்காக, யாரை வேணா தூக்கி வச்சு காவடி ஆடும் மகா மட்டமான ஒரு ஆள் இந்த இலக்கிய மேதை என்று தெளிவுபடுகிறது.




ஜெமோ - காஷ்மீர்


இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் இலக்கிய மேதாவி ஜெயமோஹந்தான் இதை எழுதினதா? இல்லைனா யாரோ இவர் "சகா" எழுதியதை  இங்கே வெட்டி ஒட்டி வச்சிருக்காரா? னு அதை வாசித்துவிட்டு நான் குழம்பிக் கொண்டிருக்கும் போது வினவு தளத்தில் இதை விமர்சிச்சு ஒரு பதிவு வந்துள்ளது.

அதுக்கப்புறம்தான் இந்த முழு உளறலுக்கு ம் சொந்தக்காரன் மேதாவி ஜெயமோவன் தான்னு இந்த மரமண்டைக்குப்புரிஞ்சது. உளறலில் ஒரு பகுதி, கீழே!!
ஆனால் டீக்கடைக் கிசுகிசுப்பேச்சாளர் முதல் வணிகசினிமாவை கரைத்துக்குடித்து அலசும் அறிவுஜீவி வரை எவருக்கும் தமிழ்சினிமாவைப்பற்றி அனேகமாக ஒன்றுமே தெரியாது! (இந்த எழவும் இந்தாளுக்கு மட்டும்தான்  தெரியும்!)

தமிழ் சினிமாவுலகம் உண்மையில் சிரித்துக்கொண்டே இருக்கிறது என எப்போதும் நினைப்பேன். தமிழ் அரசியலை, பண்பாட்டை, அறிவுஜீவிகளை தமிழ் சினிமா உலகம் பகடிசெய்துகொண்டே இருக்கிறது. வணிக சினிமாவை மிகமிக அதிகமாக கிண்டல்செய்வது சினிமாக்காரர்கள்தான். 
அப்படி பேசப்பட்ட சில பகடிகள் சினிமாவுக்குள்ளும் வந்துள்ளன. எப்படியும் ஒருலட்சம் நகைச்சுவைகளாவது இருக்கும். நாட்கணக்கில் ஒவ்வொரு நிமிடமும் சிரித்தால் தீராது. சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு உயர்ந்த இலக்கிய ரசனை உண்டு, நல்ல சினிமா தெரியும். ஆனால் தமிழ் ரசனையின் ஒரு சரியான சராசரியை தொடுவதே அவர்களுடைய சவால். அதற்காகவே முயல்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியை இடைவெளியில்லாமல் பகடி செய்துகொண்டும் இருப்பார்கள்.
கட்டுரை கமர்ஷியல் புரிந்ததா?

ஆனால் ஒன்னு, என்ன எழவைப்பத்தி எழுதினாலும் அதில் தான் ஒரு "மேதை" என்பதுபோல்தான் எழுதும்  இந்தாளு. சினிமாவைப்பத்தி இவர் "சிலாகித்து உளறித் தள்ளுவது" பிறந்ததிலிருந்து சினிமாக்காரனா இருந்த சிவாஜி அல்லது எம் ஜி ஆர் கூட செய்ய முடியாது. சினிமா கலைஞர்கள் பத்தி இயக்குனர் சிகரமோ, அல்லது இலக்கிய திலகமோகூட  கூச்சமே இல்லாமல்  இப்படி   பொய்யும் பிரகடமுமா பீத்து பீத்துனு பீத்தி இருக்க மாட்டாங்க.

சினிமா என்பது ஒரு சொர்க்க பூமி என்றால்..சினிமா கலைஞர்கள் எல்லாருமே, எல்லா நிமிடங்களும் ஜாலியாக இருக்கிறார்கள் என்றால்..ஷோபா, படாப்பட் ஜெயலட்சுமி, லக்ஷ்மி ஸ்ரீ, சில்க் ஸ்மிதா என்று இவ்வளவு பேர் ஏன் தற்கொலை பண்ணி சாகிறாங்க? இந்தாளு சினிமா கலைஞர்கள்னு பிதற்றுவது முழுக்க முழுக்க "கீழ்த் தரமான ஆம்பளைகளை" மட்டுமேவா?

சினிமாவையும் சினிமாக் கலைஞர்களையும் உயர்தரமாக்கி எழுதுகிறேன் என்று இவ்வளவு கேவலமாக ஏன் இந்தாளு புளுகிறான்னு தெரியலை. அருவருப்பா இருக்கு இந்த ஆளை நெனச்சா!

ஒருவரை அநாகரிகமாக, கடுமையாக இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி விமர்சித்தால் அப்படி விமர்சிப்பவரைப் பார்த்தால் அருவருப்பாத்தான் இருக்கும். அதேபோல் ஒரு விசயத்தை, தமிழ் சினிமா கலைஞர்களை தன் தேவைக்காக இப்படி புகழோ புகழ்னு கூச்சமே இல்லாமல் புகழ்ந்து தள்ளியிருக்கான் இந்தாளு. இதுவும்  அருவருக்கத் தக்கவே இருக்கு!


8 comments:

Yarlpavanan said...

சிறந்த இலக்கிய விளக்கம்
தொடருங்கள்

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

ஜெயமோகன் எந்திரகதியாக (ஓர் ஆண்டுக்கு10,15என்று) எழுதிக் குவிக்கும் புத்தகங்கள்தான் தமிழின் ஆகச்சிறந்த சிந்தனைக் கருவூலங்கள் என்பது போல நினைக்கும் தமிழ்நாட்டு அறிவுஜீவிகளை என்ன சொல்ல? நல்ல வேளை பாலாவின் “நான் கடவுள்” படம் வெற்றிபெறவில்லை. இல்லனா இவரது உளறல் இன்னும் ஊதிப்பெருகி நாட்டை நாறவைத்திருக்கும். இந்த பாலாவையும் சாருவையும் நாம்தான் பெரிய எழுத்தாளர் போல எடுத்து விமர்சிக்கிறோம்..மலையாள எழுத்தாளர்கள் கண்டுகொள்வதிலலை என்று இவர்களுக்கு வருத்தமாமே? தேவையான அலசலுக்கு நன்றி வருண்

Amudhavan said...

ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் ஒருவருக்கொருவர் பேசிவைத்துக்கொண்டு 'நான் உன்னைத் தாக்குவதுபோல் தாக்குகிறேன். நீ என்னைத் தாக்குவதுபோல் தாக்கு' என்ற பாணியில் ஒருவருக்கொருவர் அவ்வப்போது போலித்தனமாய் மோதிக்கொள்வதைப் பார்க்கும்போது சலிப்பாக இருக்கும். இவர்களின் நோக்கம் என்னவென்றால் இவர்கள் இருவரும்தான் தமிழின் 'இன்றைய எழுத்தாளர்கள்'. இவர்களை மீறி இன்னொருவர் கிடையாது என்பதை இந்தப் 'போட்டியின்' மூலம் நிறுவிக் கொள்வது என்பதுதான் இவர்களின் hidden agenda.இந்தப் பாணியிலேயேதான் இருவரின் எழுத்துக்களும் இருக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்னால் எம்ஜிஆரையும் சிவாஜியையும் மிகமிகக் கேவலமாக எழுதிவிட்டுப் பிறகு 'தவறுக்கு வருந்திய' ஜெயமோகன் இப்போது எதற்காக, எந்தக் கண்ணோட்டத்தில் சினிமாக் கொண்டாட்டத்தைப் பற்றியும் கமலஹாசனின் சிறப்பு பற்றியும் எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.

வருண் said...

****Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த இலக்கிய விளக்கம்
தொடருங்கள்****

சிவாஜி கணேசன், எம் ஜி ராமச்சந்திரன் போன்ற கலைஞர்களை இந்தாளைவிட எவனும் இழிவு படுத்தியது இல்லை!

இன்னைக்கு ஒரு மலையாளப் படத்தை "ரீ மேக்" பண்ணுவதால் பழசை எல்லாம மறந்துவிட்டு வெக்கமே இல்லாமல் சினிமாக் கலைஞர்களை தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறாரு, இந்த "இலக்கிய மேதாவி"!

வருண் said...

****ஜெயமோகன் எந்திரகதியாக (ஓர் ஆண்டுக்கு10,15என்று) எழுதிக் குவிக்கும் புத்தகங்கள்தான் தமிழின் ஆகச்சிறந்த சிந்தனைக் கருவூலங்கள் என்பது போல நினைக்கும் தமிழ்நாட்டு அறிவுஜீவிகளை என்ன சொல்ல? ***

எந்த ஒரு படைப்பையும், அதில் சொல்லப்பட்ட நாலு வரிகளை கோடிட்டுக்காட்டி, "இதுபோல் சிந்தனைகள் உலகில் எவனும் சிந்திக்கவில்லை" "இலக்கியம்னா இதுதான்"னு யாரு வேணா எழுதலாம்!

ஒருமுறை, தஞ்சை பிராம்ணர்கள் பற்றி எழுதும்போது, மாமியாரை "அத்தை" என்று விழிப்பதுபோல் இவர் எழுத, பொதுவாக அத்தையை "அம்மா" என்றுதான் தஞ்சை பிராமணர்கள் விளிப்பதுண்டு என்று சரி செய்யப்பட்டார் இன்னொரு பிராமன்ப் பெண்ணால்.. இதுபோல் ஆயிரம் பிழைகளைப் பார்க்கலாம் இவர் எழுத்தில்..ஆனால் மற்றவர்களை இந்தாளு விமர்சிப்பதைப் பார்த்தால் தான் என்னவோ உலகமகா மேதாவி என்பதுபோல் ஒரு அகந்தை ஒவ்வொரு வரியிலும் தெரியும்!

***நல்ல வேளை பாலாவின் “நான் கடவுள்” படம் வெற்றிபெறவில்லை. இல்லனா இவரது உளறல் இன்னும் ஊதிப்பெருகி நாட்டை நாறவைத்திருக்கும்.***

பாலாவையும் நான் கடவுளையும், ஜெயமோகனையும் தாறுமாறாக நான் விமர்சித்தவன் என்பதால் என் சிந்தனைகள் இவ்விடயத்தில் உங்கள் சிந்தனைகளை ஒத்தே இருக்கின்றது, நிலவன் சார்.:)

வருண் said...

*** Amudhavan said...

ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் ஒருவருக்கொருவர் பேசிவைத்துக்கொண்டு 'நான் உன்னைத் தாக்குவதுபோல் தாக்குகிறேன். நீ என்னைத் தாக்குவதுபோல் தாக்கு' என்ற பாணியில் ஒருவருக்கொருவர் அவ்வப்போது போலித்தனமாய் மோதிக்கொள்வதைப் பார்க்கும்போது சலிப்பாக இருக்கும். இவர்களின் நோக்கம் என்னவென்றால் இவர்கள் இருவரும்தான் தமிழின் 'இன்றைய எழுத்தாளர்கள்'. இவர்களை மீறி இன்னொருவர் கிடையாது என்பதை இந்தப் 'போட்டியின்' மூலம் நிறுவிக் கொள்வது என்பதுதான் இவர்களின் hidden agenda.இந்தப் பாணியிலேயேதான் இருவரின் எழுத்துக்களும் இருக்கின்றன.
சில வருடங்களுக்கு முன்னால் எம்ஜிஆரையும் சிவாஜியையும் மிகமிகக் கேவலமாக எழுதிவிட்டுப் பிறகு 'தவறுக்கு வருந்திய' ஜெயமோகன் இப்போது எதற்காக, எந்தக் கண்ணோட்டத்தில் சினிமாக் கொண்டாட்டத்தைப் பற்றியும் கமலஹாசனின் சிறப்பு பற்றியும் எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.***

வாங்க, அமுதவன் சார்!

திடீர்னு இவருக்கு சினிமாக் கலைஞர்களின் "உயர்தரம்" தெரிந்துவிட்டது!!!! சினிமாவில் பிறந்து வளர்ந்து வாழ்பவன்கூட இதுபோல் பல அசிங்கமான பகுதிகளை மறைத்துவிட்டு சினிமாக் கலைஞர்களின் ஒரு சில தருணங்களை மட்டும் மிகைப்படுத்தி "பொய்களை" மட்டுமே அள்ளிவிட மாட்டான்!

இலக்கிய மேதை இவரு சினிமாக் காரர்களோட நாலுநாள் சேர்ந்து கூத்தடிச்சவுடன் கழிவு நீர் என்று விமர்சிக்கப்பட்ட சினிமா உலகம் உடனே சந்தனம் கலந்த பன்னீராகிவிடும்!

நேரத்திற்கு ஒரு நிறம் மாறும் இவர்கள் எல்லாம் என்ன ஜென்மமோ ! நம்ம தலையெழுத்து இதையெல்லாம் வாசிக்கணும்னு!

'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறப்பான பகிர்வு...
எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று வாழும் இவர் போன்றோர் பணம் தின்னி கழுகுகள்...
முத்து நிலவன் ஐயாவின் கருத்து மிகச் சிறப்பு.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பரபரப்பு விளம்பரம் ஜெ.மோ வுக்கும் தேவைப்படுகிறது. மக்கள் ஞாபகம் வச்சுக்கிறதுக்கு எதையாவது சொல்லிகிட்டே இருக்கணும் . இல்லன்னா யாரு அவருன்னு கேக்க ஆரம்பிச்சுடுவாங்களே