Friday, July 29, 2016

மேற்கிலிருந்து இன்னொரு கோணத்தில் அப்பா!

தந்தை பெரியார் சொன்னது இது. உன் தாய் தந்தையர் உன்னைவிட படிப்பிலும், அனுபவத்திலும், உலக அறிவிலும் குறைவான அறிவு, அனுபவம் பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் சொல்லுவதை நீ கேட்க வேண்டாம். பகுத்தறிந்து நீயே ஒரு சரியான தீர்வை கண்டுபிடி!

அமெரிக்கா வந்து அடிமையாக வாழ்வது ஒண்ணும் பெருமைக்குரிய விசயம் அல்ல! வடிகட்டிய சுயநலம் என்றுகூட அடித்துச் சொல்லுவேன். அதில் சம்பாரிக்கும் டாலர்கள் பெரிதல்ல! நம் வாழ்க்கையை நம் வருமானத் திற்கேற்ப திருத்தி அமைத்துக் கொள்கிறோம். டாலரில் சம்பாரித்து டாலரில் செலவழிப்பதால் அம்மாவிடம் என் சம்பளத்தைக் கூட சொல்வதில்லை. ஏன் என்றால், நான் எவ்வளவு செவழிக்கிறேன் என்று சொன்னால் அம்மாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, வருத்தப் படுவாங்க- மகன் ஊதாரி ஆகிவிட்டான் என்று.

பணம், டாலர் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

பிறந்த ஊரிலேயே வாழ்ந்து சாவதுக்கும், பிறந்த கலாச்சாரத்தை விட்டு வந்து மற்றொரு நாட்டில் குடியேறி அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து அதிசயப்பட்டு,பிறகு புரிந்துகொண்டு, அதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து  வாழ்ந்து நீ சாவதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம்  ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். இப்போதாவது புரிந்து கொள்! கொள்வாயா?

டீன் ஏஜில் சரி என்று தோன்றுவது 10 வருடங்கள் சென்றவுடன் நகைக்கத்தக்கதாகத் தெரியும். அதேபோல் வாழ்க்கை அனுபவம் அதிகமாக ஆக ஆக பழைய வாழக்கை கேலிக்குரியதாகவும் தோணும். உன்னைப் பார்த்து நீயே சிரிப்பதுதான் வாழ்க்கை. உலகைப் புரிந்துகொண்டவர்களுக்கு.

 அதேபோல்தான் ஒரு கலாச்சாரத்தில் பிறந்து இன்னொரு கலாச்சாரத்தை அறிந்து அலசி ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகு பிறந்த கலாச்சாரப் பெருமை பேசுவது குறையும். ஏன் என்றால் நீ வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் மாறுகிறது. உன் அனுபவத்தால் உன் அறிவு விசாலமடைகிறது. நீ கலச்சார பெருமையை ஓரமாக வைத்துவிட்டு உண்மையை உணறுகிறாய். உன்னை சரிப்படுத்திக் கொள்கிறாய். உன்னை மட்டும்தான். உன் அனுபவம் இல்லாத உலகைத் திருத்த முயலாதே! பழம் பெருமை பேசுவதையும், தன் அம்மாதான், தன் தமிழ் மொழிதான், தான் பிறந்த கலாச்சாரம்தான் உலகில் உயர்ந்தது என்று தற்குறிபோல் பேசுவதை நிறுத்துகிறாய். ஆமாம் நீ மாறுகிறாய். உன் அனுபவம் உன்னை மாற்றுகிறது.

அப்பா திரைப்படம் பற்றி எல்லாரும் சிலாஹிக்கிறாங்க. கட்டாயம் பார்க்கணும் என்கிறார்கள்.

நிற்க. ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு வகை. உன் அப்பா, என் அப்பா, சினிமாவில்பார்க்கும், செயற்கையாக உருவாக்கப்பட்ட அப்பா (சமுத்திரக் கனி அப்பா). அவரவருக்கு அவர் அவர் அப்பா உயர்வு.

ஒரு சிலருக்கு அவர்கள் அப்பாவையே பிடிக்காது, சம்பாரிக்காத அப்பா, குடிகார அப்பா,பொறுக்கி அப்பானு பல அப்பாக்களும் உண்டு.

படத்தில் காட்டப்படும் அப்பாவைவிட உன் அப்பா  சிறந்தவராக இருந்தால்? படத்தை ஆஹா ஓஹோனு சிலாகிக்க மாட்டியா? இல்லைனா ஊர் உலகுக்குக்காக நடிப்பியா? அனேகமாக நடிப்பாய். இல்லைனா உன்னை விதண்டாவாதம் பேசுபவன் என்று கூறுமே இவ்வுலகம். நீதான் கோழையாச்சே? ஆமா எதற்கு வம்பு. பூமியைத், தட்டை என்று நம்பிய காலத்தில் உருண்டை என்று நீ  உணர்ந்தால் வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் இல்லையா? நிம்மதியாக வாழ ஆசைப்பட்டால். உலகம் உன்னை "சரியாக"ப் புரிந்து கொள்ள அதுதானே தீர்வு?

அமெரிக்கக் கலாச்சாரத்தில் முக்கியமாக ஏழைகள் கலாச்சாரத்தில் அப்பா என்பவன் முக்கியமானவன் இல்லை. 90% குழந்தைகள் அம்மாவுடந்தான் வாழ்கின்றன.அம்மாதான் அவர்களை வளர்க்கிறாள், அடிக்கிறாள், அவனுக்காக அழுகிறாள். அப்பா என்பவன் ஒரு பொறுப்பில்லாத வனாகத்தான் இருக்கிறான் இவர்கள் வாழ்க்கை முறையில். அப்பா திரைப்படம் எல்லாம் உண்மைக்கு புறம்பான ஒன்று அவர்களைப் பொருத்தவரையில்.

ஆடு மாடு கோழியை எல்லாம் கொன்று தின்கிறோம் நாம். வாழத்துடிக்கும் புற்களைக்க்கூட களை என்று வெட்டி எறிகிறோம். நம் வசதிக்காக! ஆமா அதுவும் ஓர் உயிர்தானே? களை என்கிற தாவரமும், ஃபோட்டோ சின்ந்தசிஸ் செய்து உலகைத் தூய்மைப்படுத்தினாலும், அதை வெட்டி எறிகிறாய்தானே? அவைகளும் வாழ ஆசைப்படத்தானே செய்யும்? உனக்கென்று ஒரு நியாயம். நீயே ஒரு கடவுளை உருவாக்கி உன்னை நீயே ஏமாற்றி வாழ்கிறாய். விலங்குகள், தாவரங்கள் எல்லாம் உனக்காகத்தான் வாழ்கின்றன என்று நீயே பித்துப் பிடித்து உளறுகிறாய்? இல்லையா?

"அப்பா" வை ஒரு தேவையில்லாத, எனக்கு உபயோகப்படாத ஒரு ஃபிக்‌ஷன். இதில் கற்றுக்கொள்ளவோ, அல்லது இதனால் என் வாழக்கைக்கு எந்த பிரையோசனமோ இல்லை என்று ஒருவர் சொன்னால்.. உடனே அவனைப் பிதற்றுகிறான் என்று வழக்கம்போல் முத்திரை குத்துவதைவிட்டு விட்டு  புரிந்து கொள்ள முயலு.  உனக்கு எல்லாம் தெரியாது!  நீ கற்றது கைமண் அளவேனு இப்போது நீயே  உன்னிடம் சொல்லிக்கொள்ள வேண்டிய தருணம் இது. அந்தப் பழமொழியைச் சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் நேரமல்ல இது.

10 comments:

G.M Balasubramaniam said...

அப்பாவை அறிந்து கொள்ளும்போது ஒரு இண்ட்ராஸ்பெக்‌ஷனா?

ஆரூர் பாஸ்கர் said...

வருண், நிறைய விசயங்களில் உங்களுடன் முரண்பட்டாலும். இந்த வரி யோசிக்க வைத்தது.

//முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம் ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். //

'பரிவை' சே.குமார் said...

திரையில் காட்டப்படும் அப்பாவை விட நம் அப்பா உயர்ந்தவர்தான்...
ஆனால் திரையில் தொட துணியாத கல்வி வியாபாரத்தை பேசும் அப்பா எனக்குப் பிடித்திருந்தது....

தங்கள் பகிர்வு அருமை.

வருண் said...

***G.M Balasubramaniam said...

அப்பாவை அறிந்து கொள்ளும்போது ஒரு இண்ட்ராஸ்பெக்‌ஷனா?***

அடிக்கடி என்னை அதிசயப்பட வைக்கிறீங்க சார்! :)

வருண் said...


****ஆரூர் பாஸ்கர் said...

வருண், நிறைய விசயங்களில் உங்களுடன் முரண்பட்டாலும். இந்த வரி யோசிக்க வைத்தது.

//முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம் ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். //****

வாங்க பாஸ்கர். ஒரு சில கோணங்களில் ஒரு சிலர் யோசிப்பதே கிடையாதுங்க..சொந்த ஊரில் சொந்த நாட்டில் குப்பை கொட்டுபவன் எல்லாம் பெரிய தேசத் தியாகியும் இல்லை. நாடு விட்டு நாடு போனவன் எல்லாம் தேசத் துரோகியும் இல்லை!

வருண் said...

***பரிவை சே.குமார் said...

திரையில் காட்டப்படும் அப்பாவை விட நம் அப்பா உயர்ந்தவர்தான்...
ஆனால் திரையில் தொட துணியாத கல்வி வியாபாரத்தை பேசும் அப்பா எனக்குப் பிடித்திருந்தது....

தங்கள் பகிர்வு அருமை.***

படத்தை ஆஹா ஓஹோனு சொல்லி புகழ்ந்துட்டு, தன் குழந்தைகள் படிப்புனு வரும்போது இதற்கு எதிர்மாறாக நடந்து கொள்வதுதான் "நம்ம மக்கள்" இயல்பு னு உங்களுக்கு நான் சொல்லித்தர வேன்டியதில்லை, குமார்.

உண்மையிலே இதைப்பார்த்து 10, 100 பேரு திருந்தினால் சரிதான். திருந்துவார்களா? என்பதே கேள்வி!

Thulasidharan V Thillaiakathu said...

வருண் அப்பா படத்தின் கரு பொதுவாக எந்த இயக்குநரும் எடுத்துக் கொள்ளத் தயங்கும் ஒன்று. அதை சமுத்ரகனி எடுத்து இயக்கியதற்குப் பாராட்டலாம். எல்லோருக்கும் அவரவர் அப்ப உயர்வு இல்லை தாழ்வு ..இதில் நம் அப்பாவைப் பொருத்திப் பார்ப்பதை விட ஒரு அப்பா இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஒரு பார்வை. நம்ம ஊர் கல்வி முறை எப்படி உள்ளது என்பதைச் சொல்லும் படம்...இதைப் பார்த்துத் திருந்துவது என்பது...வருண் அது எந்தப் படத்தைப் பார்த்தும் திருந்தப் போவதில்லை...ஜஸ்ட் லைக் தட் ஒரு 2, 2.30 மணி நேரப்படம் என்று அந்தச் சமயத்தில் சிலாகித்துவிட்டு அப்புறம் அதை மறந்து விட்டு....டேய் அதெல்லாஅம் படத்துக்கு ஒத்துவரும் ப்ராக்க்டிக்கலா ஒத்துவராது" என்று புறம்தள்ளிவிட்டுச் செல்பவர்கள்தான் மக்கள். இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும். அவரது சாட்டை படமும் பிடித்திருந்தது இதுவும்...

Kasthuri Rengan said...

வணக்கம் வருண்..

எப்போதும் போல ஒரு பதிவு...
இது வருண் முத்திரை

இது வருண் கருத்து

வருண் அளவிற்கு படிக்காத,
வருண் அளவிற்கு வாசிப்பை அறியாத பெருவாரி மக்களுக்கு
இந்த திரைப்படம் ஒரு கண்திறப்பு அனுபவம்தான்..

முதல் காட்சியில் தயாளனின் மனைவி பாத்திரங்களை தூக்கிப் போட்டு உடைத்த பொழுது பின் இருக்கை தோழர் ஒருவர் கூறிய பின்னூட்டங்களை பகிர முடியாது இங்கே..

இந்த ஊருக்கு அவசியமான சினிமா இது..
ஆரோக்கியமான சினிமாவும் கூட மேலும் இது வெற்றிபெற்றும் இருக்கிறது என்பது தான் ஆறுதல்.

நன்றிகள் வருண் உங்கள் பார்வையை விவாதத்தை ரசித்தேன்.

வருண் said...

***Thulasidharan V Thillaiakathu said...

வருண் அப்பா படத்தின் கரு பொதுவாக எந்த இயக்குநரும் எடுத்துக் கொள்ளத் தயங்கும் ஒன்று. அதை சமுத்ரகனி எடுத்து இயக்கியதற்குப் பாராட்டலாம். எல்லோருக்கும் அவரவர் அப்ப உயர்வு இல்லை தாழ்வு ..இதில் நம் அப்பாவைப் பொருத்திப் பார்ப்பதை விட ஒரு அப்பா இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஒரு பார்வை. நம்ம ஊர் கல்வி முறை எப்படி உள்ளது என்பதைச் சொல்லும் படம்...இதைப் பார்த்துத் திருந்துவது என்பது...வருண் அது எந்தப் படத்தைப் பார்த்தும் திருந்தப் போவதில்லை...ஜஸ்ட் லைக் தட் ஒரு 2, 2.30 மணி நேரப்படம் என்று அந்தச் சமயத்தில் சிலாகித்துவிட்டு அப்புறம் அதை மறந்து விட்டு....டேய் அதெல்லாஅம் படத்துக்கு ஒத்துவரும் ப்ராக்க்டிக்கலா ஒத்துவராது" என்று புறம்தள்ளிவிட்டுச் செல்பவர்கள்தான் மக்கள். இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும். அவரது சாட்டை படமும் பிடித்திருந்தது இதுவும்...***

வாங்க துளசித்ரன்/கீதா அவர்களே!

இப்போதைய நம் ஊர் படிப்பு சூழல் எல்லாம் எனக்கு புரியாத அளவுக்கு இருக்கோ என்னவோ. :)

வருண் said...

*** Mathu S said...

வணக்கம் வருண்..

எப்போதும் போல ஒரு பதிவு...
இது வருண் முத்திரை

இது வருண் கருத்து

வருண் அளவிற்கு படிக்காத,
வருண் அளவிற்கு வாசிப்பை அறியாத பெருவாரி மக்களுக்கு
இந்த திரைப்படம் ஒரு கண்திறப்பு அனுபவம்தான்..

முதல் காட்சியில் தயாளனின் மனைவி பாத்திரங்களை தூக்கிப் போட்டு உடைத்த பொழுது பின் இருக்கை தோழர் ஒருவர் கூறிய பின்னூட்டங்களை பகிர முடியாது இங்கே..

இந்த ஊருக்கு அவசியமான சினிமா இது..
ஆரோக்கியமான சினிமாவும் கூட மேலும் இது வெற்றிபெற்றும் இருக்கிறது என்பது தான் ஆறுதல்.

நன்றிகள் வருண் உங்கள் பார்வையை விவாதத்தை ரசித்தேன்***

வாங்க மது!

***முதல் காட்சியில் தயாளனின் மனைவி பாத்திரங்களை தூக்கிப் போட்டு உடைத்த பொழுது***

IMHO, women are more scarier than men. "Crying, not carefully thinking about affordability and not being practical" always irritate me. I can guess exactly the wordings of that annoyed "guy" as I am from the same culture, Madhu. :)

நான் படிச்சது நகராட்சி பள்ளியில்தான் மது. :)