Monday, June 17, 2019

ஜெயமோகனும் சாதாரண மனுஷந்தான்!

மாவு, புளிச்சமாவுனு தெரிந்தவுடன் திருப்பிக் கொடுக்கப் போயிருக்கிறார். "தோசை மாவுனா புளிக்கத்தான் செய்யும்"னு விற்றவர் சொல்ல, கோபம் வந்து கதையில் ஹீரோக்கள் செய்வதுபோல் நீயே  வைத்துக்கொள்னு  "தூக்கி எறிந்து" இருக்கிறார். இது ஒரு மாதிரி அவமானப் படுத்தல்தான். அதனால் கோவம் அடைந்த அந்தம்மா (அழக்கூட செய்து இருக்கலாம்) புருசனிடம் சொல்ல, அந்தம்மா புருசன்  போயி ஜெயமோகனை அடித்து விட்டான். இது யாருக்கு வேணா நடக்கலாம்.

இப்போ, ஹாஸ்பிடல்ல போயி ட்ரீட்மெண்ட் எடுப்பதுபோல் பெட்ல அமர்ந்து இருக்கிறார். இங்கே ஜெயமோகன் கொஞ்சம் "அரசியல் செய்கிறார்". அதாவது கேஸை ஸ்ட்ராங் ஆக்க, ஹாஸ்பிட்டல்ல இருந்து ரத்த காயம் அடைந்துவிட்டேன்னு சொன்னால்த்தான் அடிச்சவனைப் பிடிச்சு உள்ள போடுவாங்க. காந்தீயம் பேசும் பெரிய மனுஷன் இவரு, பேசாமல் மன்னித்து விட்டுப் போயிருந்தால் இன்னும் பெரிய மனுஷன் கெத்துடன் வாழ்ந்து இருக்கலாம்..

பொதுவாக இதுபோல் புளிச்ச மாவுப் பிரச்சினை பலருக்கும் பழகிப் போனதாக இருக்கும். கடைக்காரன் மாவு புளிச்சிருச்சுனு எல்லா மாவையும் குப்பையில் போடுமளவுக்கு நல்ல மாவுக்கு அதிக விலை வைத்து விற்பதில்லை. அதனால் புளிச்ச மாவையும் எப்படியோ விற்றுவிடனும்னு முயல்கிறான். அவன் நிலைமை ஒரு கோணத்தில் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கு.

தோசை மாவு புளிச்சாத்தான் தோசை தோசையா இருக்கும். எவ்வளவு புளிக்கணும்னு அளவுகோல் எதுவும் இருக்கா?

ஜெயமோகன் இதுபோல் விளைவை எதிர்பார்க்காமல், இமோஷனலாகி நிதானம் இழந்ததாகத் தோணுகிறது.

என்னதான் பெரிய எழுத்தாளன் என்றாலும் நானும் சாதாரண மனுஷ்ந்தான் என்பதுபோல் ஜெயமோகன் தன்னை காட்டும் தருணம் இது.

அந்தம்மா காசைத் திருப்பிக் கொடுத்து இருக்கலாம்..
அந்த அம்மா திருப்பி கொடுக்கலை என்றவுடன் இவர் கொஞ்சம் நிதானமாக நடந்து இருக்கலாம். வரும் வழியில் குப்பையில் போட்டுவிட்டு வேற புளிக்காத மாவு வேற கடையில் வாங்கி இருக்கலாம்..

6 comments:

Senthilkumaran said...

ஜெமோவுக்கு அடி விழுந்தது கூட பெரிய விடயம் அல்ல ஆனால் மகளை தூக்குவேன் என்று வீடு வந்து சொன்னது கலக்கத்தை தந்திருக்கலாம்

G.M Balasubramaniam said...

ஒரு சாதாரண சம்பவம் ஊதிப்பெரிதாக்கப் படுகிறதா

வருண் said...

****Senthilkumaran said...

ஜெமோவுக்கு அடி விழுந்தது கூட பெரிய விடயம் அல்ல ஆனால் மகளை தூக்குவேன் என்று வீடு வந்து சொன்னது கலக்கத்தை தந்திருக்கலாம்****


ஜெயமோகன் மகளுக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன சம்மந்தம்? செல்வம் ஒரு ஈனத் தேவடியாள் மகன் மாதிரித்தான் தெரியுது. பிடிச்சு உள்ள போடனும் அந்தப் பொறுக்கி நாயை! இல்லைனா உள்ள வச்சு போட்டுத் தள்ளிடனும் இந்த மாதிரி நாய்கள!

வருண் said...

*** G.M Balasubramaniam said...

ஒரு சாதாரண சம்பவம் ஊதிப்பெரிதாக்கப் படுகிறதா ***

ஒரு சில நேரம் இப்படித்தான் ஆகிவிடுகிறது சார். நான் ஜெயமோகன் விசிறி எல்லாம் இல்லை. ஆனால் தனிமனிதனாகப் பார்க்கும்போது அவர் நிலைமை வருந்தத்தக்கவே இருக்கிறது.

நான் said...

//எவ்வளவு புளிக்கணும்னு அளவுகோள் எதுவும் இருக்கா?//

தெரியல. ஆனா, அதிகம் புளித்த மாவில்தான் பணியாரம் போடுவார்கள். ரொம்பச் சுவையாக இருக்கும்.

வருண் said...

*** 'பசி'பரமசிவம் said...

//எவ்வளவு புளிக்கணும்னு அளவுகோல் எதுவும் இருக்கா?//

தெரியல. ஆனா, அதிகம் புளித்த மாவில்தான் பணியாரம் போடுவார்கள். ரொம்பச் சுவையாக இருக்கும்.***

உண்மைதான் சார். மாவு புளிச்சாத்தான் நல்லாயிருக்கும். ஒரு சில குளிர் பிரதேசங்களில் ஈஸ்ட் எல்லாம் போட்டுப் புளிக்க வைப்பாங்க.

ஜெயமோகன் இதை தவிர்த்து இருக்கலாம்.