Wednesday, June 12, 2013

க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி 2- அறிவியல் பகுதி-7

க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி ஒண்ணைப் பற்றிப் பார்த்தோம். இப்போ ரெண்டாவது பகுதியைப் பார்ப்போம்.

ஒண்ணு தெரிந்துகொள்ளுங்கள்! க்ரிஃபித் இதுபோல் ஒரு ஆராய்ச்சி செய்யும்போது, ப்ரோட்டீன் என்கிற மூலக்கூறுதான் மரபுகுணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கிறது என்று பரவலாக விஞ்ஞானிகளால் நம்பப்பட்டது. மேலும் டி என் எ வின் கட்டமைப்பு, வடிவமைப்பு, அதாவது டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பு அறிவியளாலன் யாருக்கும்  தெரியாது. வாட்சன் மற்றும் க்ரிக், டி என் எ டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பை கண்டுபிடிக்கும் முன்னால நடந்த ஆராய்ச்சி, விளக்கம் இது!

நான் இங்கே பேசுவது அறிவிலாளன் உலகைப் பற்றி! ஒரு வேளை எல்லாம் தெரிந்த மேதாவி ஜெயமோஹன் மாதிரி பண்டாரங்களுக்கு, குறி சொல்றவனுக்கு, நம்ம ஊரு பூசாரிகளுக்கு, அப்புறம் ஆன்மீகவாதிகளுக்கு, பகவத்கீதை படிக்கிறவாளுக்கு, அந்தக்காலத்து க்ரியேஷனிஸ்ட்களுக்கு, பரிணாமத்தை இஷ்டத்துக்கு விமர்சிக்கும் அரைவேக்காடு களுக்கெல்லாம் டி என் எ பற்றி அப்போவே தெரிந்து இருக்கலாம்.

 நான் இங்கே பேசுவது, "எனக்கு எதுவுமே சரியாகப் புரியவில்லை. நான் புரிந்துகொள்ளணும்"னு எண்ணுகிற சாதாரண அறிவியளாலன் பற்றி! நாலெழுத்துப் பிழை இல்லாமல் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டவுடன், "தாந்தான் பெரிய மேதை! எனக்கு எல்லாம் தெரியும்" என்று பிரபஞ்சம் பற்றி வியாக்யாணம் பேசிப் பிதற்றும் பண்டாரங்கள் பற்றி அல்ல!  

******************************

அடுத்து க்ரிஃபித் என்ன செய்தார் என்றால்..

எக்ஸ்பெரிமெண்ட் 3:

நிம்மோனியா உருவாக்கும் பாக்டீரியாக்களை நாம் உயர் வெப்பநிலைக்கு கொண்டு சென்று அவைகளை கொன்றுவிடலாம். அதன் காரணமாகவே நாம் உணவுகள் பலவற்றையும் வேகவைத்து சாப்பிடுறோம் னுகூட சொல்லலாம்.

அந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினை (smooth strain) ஆட்டோக்லேவ் ல போட்டு பெப்பப்படுத்தி கொன்றுவிட்டார், கிரிஃபித்.

அப்படி இறந்த அந்த பாக்டீரியாவை, ஒரு எலிக்கு ஊசியின்மூலம் இன்ஞெக்ட் செய்து  கொடுத்தார், க்ரிஃபித்.

கீழே உள்ள படத்தில் இடது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க! அவர் எதிர்பார்த்தது போலவே


எலி உயிருடன் இருக்கு!


அந்த  அந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினை வெப்பத்தால் கொன்று அதை எலிக்கு கொடுத்ததால், அந்த  பாக்டிரியா ஏற்கனவே செத்துவிட்டதால், அதால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல், எலி உயிருடன் இருக்கிறது!


அவர் எதிர்பார்த்தது போலவே, அந்த ஹார்ம்ஃபுள் பாக்டீரியா, ஏற்கனவே வெப்பத்தால்  இறந்துபோய் விட்டதால், எலி உயிருடன் இருந்தது.


*********************************

எக்ஸ்பெரிமெண்ட் 4:

அதுக்கப்புறம் இன்னொரு எக்ஸ்பெரிமெண்ட் செய்கிறார், க்ரிஃபித்.

இதை ஏன் செய்றார்னு பலருக்குப் புரியாது, விளங்காது. ஆனால் அறிவியலாளன் எதையாவது இதுபோல் செய்வதால்தான் அவனால் இன்று இந்த அளவுக்கு அறிவியலில் முன்னேற்றமடைய முடிந்தது!

அப்படி என்ன செய்றார், க்ரிஃபித்?

கரடுமுரடான, ஆனால் ஹார்ம்லெஸ் பாக்டீரியா யும் (உயிருடனும்), செத்துப்போன (வெப்பத்தால் கொன்று), அந்த ஹார்ம்ஃபுள்ளான், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினையும் சேர்த்து எலிக்கு கொடுக்கிறார்.

இப்போ என்ன எதிர்பார்ப்பீங்க?

* கரடு முரடான ஹார்மெல்ஸ் பாக்டீரியாவை நம்ம உடல் (எலியின் உடலில் உள்ள) எதிர்ப்பு சக்தி கொன்னுடும். 

* அழகான கவசமணிந்த ஹார்ம்புள் பாக்டீரியாவைத் தான் ஏற்கனவே வெப்பம் கொன்னுபுடுச்சே?

* இப்போ எலி உயிருடன்தான் இருக்கும் ??

க்ரிஃபித் என்ன நெனச்சாருனு எனக்குத் தெரியலை! நான் மேலே சொன்னதுபோல்தான் நெனைப்பேன். அதாவது, எலி நிச்சயம் உயிருடன் இருக்கும் என்று. ஆனால் நடந்தது வேற!

கீழே உள்ள படத்தில் வலது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க!

எலி செத்துருச்சு!!!இது எப்படிங்க சாத்தியம்??அறிவியல்ல என்ன செய்வாங்கனா.. ஒரு முறை அதுபோல் ஏதாவது ஏடாகூடமாக ரிசல்ட் வந்தால், மறுமுறை கவனமாக அதே எக்ஸ்பெரிமெண்ட்டை செய்வார்கள். அப்படி  பல முறை செய்தாலும் எலி சாகிறது என்பதை அறிந்தார் க்ரிஃபித்.

கிரிஃபித், ஆனஸ்டாக , தனக்கு வந்த ரிசல்ட்டை, அவர் எப்படி எக்ஸ்பெரிமெண்ட் செய்தார் என்பதையும் சொல்லி, எதையும்  மறைக்காமல் உலகுக்கு சொல்லி விட்டாரு (அறிவியல் ஆராய்ச்சி பத்திரிக்கைகள் மூலம்). (எனக்குத் தெரிய ஒரு சில மாணவர்கள் இதுபோல் ஏடாகூடமா ரிசல்ட் வந்தால் அதை மறைத்து விடுவார்கள்! :)).

அவர் என்ன சொன்னாருனா??

இந்த உயிருடன் உள்ள பாக்டீரியா எப்படியோ, செத்த பாக்டீரியாவுக்கு உயிர் வர வைத்துவிட்டது. ஹார்ம்ஃபுள் ஆன உயிரற்ற பாக்டீரியாவுக்கு உயிர் வந்ததால், அதுதான் எலியை கொன்னுடுச்சுனு!
 
இவருடைய இந்த ஆராய்ச்சிக்குறிப்பை, பெரிய பெரிய அறிவியல் மேதைகளெல்லாம், சாத்தியமில்லை என்பதுபோல்  பலவாறு விமர்சிச்சு, க்ரிஃபித் ஏதோ கவனக்குறைவாக எக்ஸ்பெரிமெண்ட் செய்துள்ளார்னுகூட என்றெல்லாம் சொல்லி  இருக்காங்க!

ஆனால் க்ரிஃபித் செய்த எக்ஸ்பரிமெண்ட்ல பிழை இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் அவர் ரிசல்ட் சரி என  நிரூபணம் ஆக பல ஆண்டுகள் ஆச்சு!

In English..

Griffith concluded that the type II-R (கரடு முரடான, ஹார்ம்லெஸ் பாக்டீரியா) had been "transformed" into the lethal III-S strain (அழகான, கவசம் போட்டு இருக்கும், ஹார்ம்ஃபுள் பாக்டீரியா) by a "transforming principle" that was somehow part of the dead III-S strain bacteria.


க்ரிஃபித்  எக்ஸ்பெரிமெண்ட் 4 விளைவை எப்படி நாம் இன்னைக்கு விளக்குவது? 

இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு, டி என் எ தான் மரபு குணத்தை குழந்தைகளுக்கு எடுத்துட்டுப் போகுதுனு தெரிந்த காலகட்டத்தில், க்ரிஃபித் எக்ஸ்பெரிமஎண்டில் உண்மையிலே என்ன நடநததுனு சொல்லு! அப்படினு நீங்க கேட்டால்..

* அந்த "கவசத்துடன் உள்ள ஹார்ம்புள் பாக்டீரியா" வெப்பத்தால் இறந்தது என்பது உண்மைதான்.

* அந்த "கரடு முரடான, ஹார்ம்லெஸ் பாக்டீரியாவை" எலியின் எதிர்ப்பு சக்தி கொன்னுடும் என்பது உண்மைதான்.

ஆனால்..

* கவசமணிந்த இறந்த பாக்டீரியா, இறந்தாலும் அதன் இறந்த செல்லில் உள்ள  டி என் எ (ஜீன்கள்) எல்லாம் இன்னும் அழியாமல் இருக்கு! சரியா?

* அதேபோல் கரடு முரடான "கவசம் அணியாத" பாக்டீரியா எல்லாம் எதிர்ப்பு சக்தியால் கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும். அந்த நேரத்தில், கரடுமுரடான பாக்டீரியா,  தன் சகோதரரான கவசமணிந்த பாக்டீரியாவின் "டி என் எ" வை, தன் டி என் எ போல பாவித்து, தன் செல்லுக்கு உள் எடுத்து, அதில் உள்ள "மரபு குணத்தை, ஜெனட்டிக் கோட்" டை வைத்து அந்த "கவசமணிந்த பாக்டீரியாவை"  தன் செல்லில் உருவாக்கி, அதன் சந்ததிகளை உருவாக்கி விடுகிறது! இப்போ செத்துப்போன பாக்டீரியாவின் "டி என் எ" மற்றும் ப்ரோட்டின்களைக் கொண்டு, உயிருடன் இருக்கும் சகோதர டி என் எ உதவியால், "கவசம் அணிந்த, எலியைக் கொல்லும் வலிமைமிக்க  பாக்டீரியாக்கள்" உருவாக்கப்படுகிறது. அந்த பாக்டீரியாக்கள், எலியின் செல்களை பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்து, எலியின் செல்களை கொன்று, பிறகு எலியையும் கொன்னுபுடுது! :)


-தொடரும்


தொடர்புடைய பதிவுகள்! 

2 comments:

கவியாழி கண்ணதாசன் said...

கிரிஃபித், ஆனஸ்டாக , தனக்கு வந்த ரிசல்ட்டை, அவர் எப்படி எக்ஸ்பெரிமெண்ட் செய்தார் என்பதையும் சொல்லி, எதையும் மறைக்காமல் உலகுக்கு சொல்லி விட்டாரு (//ஒ..டி.என்.ஏ.வை அளிக்க முடியாதோ?நல்ல ஆராய்ச்சி நல்ல பதிவு.வாழ்த்துக்கள் தொடருங்கள்

வருண் said...

வாங்க, கவிஞாழி!

இந்த எக்ஸ்பெரிமெண்ட்ல என்ன பிரச்சினைனா, சப்போஸ் அவர் அந்த பாக்டீரியாவை சரியாக கொல்லாமல் ஒண்ணு ரெண்டை உயிரோட விட்டுட்டாரனு வச்சுக்கோங்க. இவருடைய விளக்கம் தவறாகிவிடும்.

மற்றவர்கள், "இவர் சரியாக கொல்லாமல் விட்டு இருக்கலாம்" என்கிற மாதிரி சொல்லத்தான் செய்வார்கள்.

அதுக்கப்புறம், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை சொல்ற அளவுக்கு விஞ்ஞானம் அந்த காலகட்டத்தில் வளரவில்லை! அதனால் இதை மற்ற விஞ்ஞானிகளை ஏற்றுக் கொள்ளச் செய்வது கடினம்.

நம்ம ராமர் பிள்ளை, பெட்ரோல் உருவாக்கிய கதை மாரினு நெனச்சு இருப்பாங்க.

ஆனால் அவர் எக்ஸ்பெரிமெண்ட், மற்றும் விளக்கம் எல்லாம் பின்னால் விஞ்ஞானம் வளர்ந்த பிறகு சரி என்று நிரூபணம் ஆன பிறகுதான், மதிக்கப்பட்டது!