Thursday, June 6, 2013

அறிவியல்! டி என் எ, ப்ரோட்டீன் -பகுதி 4

இதுவரைக்கும் என்ன பார்த்து இருக்கோம்? என்ன எழவைப் பார்த்தோம்னு எனக்கென்ன தெரியும்? ஒரு மண்ணும் புரியலை? னு ஆனஸ்டா பதில் சொன்னாலும் பரவாயில்லை!

நானே சொல்லிடுறேன்..

* டி என் எ னா என்ன? அது எப்படி இருக்கும்? அதை பக்கத்தில் க்ளோசாப் போய் பார்த்தால் அதில் என்ன தெரியும்.

* சரி டி என் எ னா என்ன?

Deoxyribo nucleic acid.

* Deoxyribo னா? 

ரைபோஸ் என்கிற மூலக்கூறில் ஒரு ஆக்ஸிஜன் இருக்காது (குறைவா இருக்கும்)!

* ரைபோஸ்னா என்னனே தெரியாதே?

அது ஒரு கார்போஹைட்ரேட்!

* கார்போஹைட்ரேட் அப்படினா?

க்ளுக்கோஸ்னு சொல்லுவாளே அது தெரியுமா?

ஆமா! ஏதோ க்ளுக்கோஸ் ஏத்துறானு சொல்லுவாளே?

அதேதான் பிடிச்சுக்கோ!

* சர்க்கரை காபி டி ல எல்லாம் போட்டுக்குடிக்கிறோமே? அது தெரியுமா?

ஆமா.. அது என்ன க்ளுக்கோஸா?

சர்க்கரையில் க்ளுக்கோஸும் இருக்கு!

அப்போ வேறென்ன இருக்கு?

"ஃப்ரூக்டோஸ்"ம் இருக்கு!

"அதென்ன ஃப்ரூக்டோஸ்?"

உன் தலை! இப்படியே போனா எதையும் முழுமையாக சொல்லி முடிக்க எனக்கு வாழ்நாள் பத்தாது! இப்போ அதை விட்டுப்புட்டு ரைபோஸ்னா என்னணு தெரிஞ்சுக்குவோம்!

"சரி அதையாவது தெளிவாச் சொல்லு! என்ன அது?"

க்ளுக்கோஸ் மாரி ஒரு கார்போஹைட்ரேட்! ஆனால் க்ளுக்கோஸ்ல 6 கார்பன் 12 ஹைட்ரஜன், 6 ஆக்ஸிஜன்கள் இருக்கும். ரைபோஸ்ல 5 கார்பன், 10 ஹைட்ரஜன், 5 ஆக்ஸிஜன் இருக்கும்.

அப்போ, க்ளுக்கோஸும், ரைபோஸும் வேற மாரி இருக்குமா?

கீழே பாரு!


ரைபோஸ்

Deoxyribose/டி-ஆக்ஸிரைபோஸ்
இப்போ ரைபோஸ்னா என்ன, டிஆக்ஸிரைபோஸ்னா என்னனு தெரிஞ்சி என்ன ஆகப்போது?சரி க்ளுக்கோஸ் எப்படி இருக்கும்?

சரி இந்தா இதுதான் க்ளுக்கோஸ்!க்ளுக்கோஸ்


சரி, இப்போ,

டி என் எ தான் "ஜெனட்டிக் கோட்" (மரபுக் குணம்? ) டை சந்ததிகளுக்கு கொண்டு செல்லுதுனு நெறையா ஆராய்ச்சிக்கு அப்புறம் கண்டு பிடிச்சு இருக்காங்க. அதற்கு முன்னால் எல்லாம் ரொம்ப காலமா  "க்ரோமோசோமில் உள்ள ப்ரோட்டின்" தான் "மரபு" சம்மந்தப்பட்ட னு நம்பிக்கொண்டு இருந்தார்கள்.

"மரபு சம்மந்தப்பட்ட குணம்னா" என்ன??

ரொம்ப கஷ்டப்படாதீங்க! 

எளிமையாக யோசிச்சுப் பாருங்க!

* ஒரு இந்தியன் ஏன் "இந்திய இனத்தில் உள்ளவன் போல மூக்கு, கண்கள், நிறம் போன்று உடலுறுப்புகள் பெற்றுப் பிறக்கிறான்?"

* அதாவது மங்கோலிய (சைனீஸ்) போலல்லாமல், வெள்ளைக்காரன் போலல்லாமல், ஒரு ஆப்பிரிக்க கருப்பர் இனத்தைப் போலல்லாமல், அவர்கள் தாய் தந்தையர்கள் போல ஒரு இன அடையாளங்களுடன் பிறக்கிறான். அது ஏன்?

இதுவும் மரபுதான்! அப்பா அம்மாவிடம் உள்ள "மரபு குணம்"தான் குழந்தைக்கு வரும்! அதான் அவர்களைப் போலவே இருக்கான்!

இப்போ புரியுதா? மரபு குணம் மரபுகுணம்னு ஏன் அடிச்சுக்கிட்டாணுக அறிவியலாளனுகள்??

அப்பா அம்மாவிடம் இருந்து எந்த மாலிக்யூலின்மூலம் ("ப்ரோட்டீன்" மூலமா இல்லைனா "டி என் எ" மூலமா இல்லைனா "ஆர் என் எ" மூலமா???) அவர்கள்  மரபுகுணம் பிள்ளைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதுனு கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏன் இருந்ததுனு புரியுதா?

பின்னால் வரும், இதற்கான ஆராய்ச்சி, எக்ஸ்பெரிமெண்ட், மற்றும் ரிசல்ட்ஸ் களை நீங்க புரிஞ்சுக்கணும்னா, டி என் எ மற்றும்  ப்ரோட்டின் னா என்ன? அவைகளுக்குள்ள என்ன என்ன வித்தியாசம் போன்றவையை புரிஞ்சுக்கிடணும் என்பதாலதான் அதை இங்கேயே தெளிவு படுத்த முயல்கிறேன்.

 டி என் எ வின் என்ன என்ன அணுக்கள் அல்லது தனிமங்கள் இருக்குனு தெரிந்து கொள்ளனும்னா அதை பிச்சு, பிச்சுப் போட்டு ஒவ்வொரு பகுதியாகப் பார்ப்பது நல்லது.

சரி, டிஆக்ஸிரைபோஸ்னா ஏதோ புரிஞ்ச மாரி இருக்கு.

அடுத்த பாதி nucleic acid  நியூக்லிக் ஆசிட்னு ஏன் சொல்றா?

அது செல் ல உள்ள (செல் ஃப்போன் இல்லை! ) நியூக்ளியஸ்ல உள்ள ஒரு அமிலம்/ஆசிட்!

அமிலமா? ஏன் அது அமிலம். டி என் எ மூலக்கூறின் முதுகெலும்பில் (in the backbone) நீங்க இந்த டிஆக்ஸி ரைபோஸ் தொடராக இருப்பதைப் பார்க்கலாம். அதேபோல் ஒரு ஃபாஸ்பேட் என்னும் க்ரூப்பும் இருக்கும். இந்த பாஸ்பேட் க்ரூப்தான் அமிலத்தன்மை உள்ளது. அதனால இதை அமிலம் என்கிறார்கள்.

டி என் எ முதுகெலும்பில் உள்ள அமிலத்தன்மையுள்ள ஃபாஸ்பேட் க்ரூப்


ஆமா, இந்த ஃபாஸ்பேட்டோ என்னவோ க்ரூப்? இது எங்கே டி என் எ ல இருந்துச்சு?

 சரி நம்ம டி என் எ  வை மறுபடியும் பக்கத்தில் போயிப்போயி பார்ப்போம்!
 

 இப்போ அந்த ஆரஞ்சு கலர்ல  ரெண்டு பக்கமும் இருக்கதுதான் "டிஆகஸி ரைபோஸ்" பகுதி. அப்புறம் அந்த ஆரஞ்சிக் கலர் டிஆக்ஸிரைபோஸை ஒன்றோடு ஒன்றாக இணைத்து இருப்பதுதான் அமிலத்தன்மை வாய்ந்த ஃபாஸ்பேட் க்ரூப் சரியா? மஞ்சளில் பாஸ்பரசை ஹைலைட் பண்னியிருக்காங்க தெரியுதா?

சரி, டிஆக்ஸி ரைபோஸ் இருக்கு.. ஃபாஸ்பேட் இருக்கு.. வேறென்ன இருக்கு டி என் எ ல?

அடினைன், குவானைன், தைமின், சைட்டோசைன் னு  நாலு bases  இருக்கு பாருங்க!

"Base" அப்படினா? காரத்தன்மை வாய்ந்தது? "ஃபேஸிக்" கா இருக்கும் (அமிலத்தனமைக்கு எதிர்ப்பதமா? )

அது ஏன் அடினைன் னும் தைமின்னும், ஏதோ ஒண்ணு சேர்வதுபோல இருக்கு? அதுதான் ஹைட்ரஜன் பாண்டிங்! 

அதே போல குவானைன்னுக்கும் சைட்டோசைன்னும்  இடையிலே ஹைட்ரஜன் பாண்டிங் இருக்கு பாருங்க!

அடினைனுக்கும் தைமின்க்கும் இடையே உள்ள ஹைட்ரஜன் பாண்டிங்


குவானைன்க்கும் சைட்டோசைன்க்கும் இடையே உள்ள ஹைட்ரஜன் பாண்டிங்

அது ஏன் இந்த ஹைட்ரஜென் பாண்டிங்கை பிடிச்சு தொங்குற வருண்?

சும்மா எல்லாம் நான் தொங்கவில்லை! முக்கியக்காரணம் இருக்கு! டி என் எ வில் ஹைட்ரஜன் பாண்டிங் இருக்கு பாருங்க! :)


DNA exist in Double helix unlike proteins.  (மேலே இடது பக்கம் உள்ளதப் பாருங்க ரெண்டு ரிப்பன் ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக்கிட்டு இருக்கு இல்ல? You could see there are two strands. டி என் எ எப்போவுமே ரெண்டு ரிப்பனாத்தான் ஒட்டிண்டு இருக்கும். These two strands are complementary (note the spelling! It is not complimentary like I spelt before) to each other. What does it mean??  அப்படினா?

அடுத்த பகுதியில் பார்ப்போம்!

சரியா?

-தொடரும்

தொடர்புள்ள பதிவுகள்!

6 comments:

கவியாழி கண்ணதாசன் said...

அந்த ஆர்.என் என்றால் புரியவில்லையே சற்று விளக்குங்களேன்

கரந்தை ஜெயக்குமார் said...

எளிய தமிழில் அழகு அறிவியல் வாழ்த்துக்கள்

வருண் said...

***கவியாழி கண்ணதாசன் said...

அந்த ஆர்.என் என்றால் புரியவில்லையே சற்று விளக்குங்களேன்**

கவிஞாழி அவர்களே! அதில் எழுத்துப்பிழை இருக்குங்க.. அது "ஆர் என் எ" என்று வந்து இருக்கணும். மன்னிக்கவும். :)

வருண் said...

***கரந்தை ஜெயக்குமார் said...

எளிய தமிழில் அழகு அறிவியல் வாழ்த்துக்கள்.***

நன்றிங்க, ஜெயக்குமார்! :)

கோவம் நல்லது said...

வணக்கம்...!!!

உங்க பக்கத்துல டி என் ஏ பத்தின பதிவு பார்த்தேன். எல்லாருக்கும் புரியும்படியான எளிய பதிவு.
நானும் கொஞ்சம் கொஞ்சம் இது பத்தி எழுதி இருக்கேன்.

http://www.uyirnutpam.blogspot.de/

நான் எழுதறதோட, என்னை மாதிரியே உயிரியல் அறிவியல் பத்தி எழுதற வேற யாரும் இருக்காங்களான்னு ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்.
உங்க வலைப்பக்கம் பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி.
நாம தொடர்புல இருப்போம்.
நன்றி.

வருண் said...

வாங்க "கோவம் நல்லது"!

உங்க ஃபோட்டோ சிந்தசிஸ் பதிவை இப்போத்தான் பார்த்தேன். :)

நல்ல முயற்சிங்க. வாழ்த்துக்கள்.

நான், சும்மா "ஜெனடிக்ஸ்" பத்தி கொஞ்சம் சொல்லலாம்னு என்னத்தையோ எழுத ஆரம்பிச்சேன். அது இப்போ இங்கே வந்து நிக்கிது. தொடர்ந்து எவ்ளோ எழுத முடியுதுனு பார்க்கலாம்!