Monday, June 10, 2013

டி என் எ, ப்ரோட்டீன் ரெண்டுக்கும் அடிப்படை வித்தியாசம்! பகுதி 5

போன பதிவில் டி என் எ, டபுள் ஹெலிக்கல் அமைப்பில் இருக்கும்னு சொன்னேன்.  இதென்ன ஏதோ ஸ்பைரல் ஏணிப் படி மாரில இருக்குனு சொல்றீங்களா? அதைத்தான் டபுள் ஹெலிக்கல்னு சொல்றாங்க.

டி என் எ படம்1



டி என் எ படம் 2


எப்போவுமே இரண்டு "ஸ்ட்ரண்ட்" ஒண்ணா சேர்ந்து இருக்கும். அந்த ரெண்டு ஸ்ட்ராண்ட் களும் ஒண்ணுக்கு ஒண்ணு காம்ப்ளிமெண்டரியா உள்ள பேஸெஸ்  இருக்கும்னு பார்த்தோம்.

"complementary pair" அல்லது "complementary strands" அப்படினா என்ன? னு ஒரு கேள்வியை கேட்டாச்சு. அதுக்கு பதில்.

மேலே உள்ள டி என் எ ல (மேலே டாப்ல உள்ள முதல்ப் படம்) ரெண்டு ஸ்ட்ரண்ட் தெரியுதா?

மேலே பாருங்க! இடது பக்கத்தில் உள்ள ஒரு ஸ்ட்ரண்ட் ல ஒரு தைமின்  இருந்தால், வலது பக்கத்தில் உள்ள ஸ்ட்ரண்ட்ல அடினைன்  இருக்கும். அதேபோல் இடது பக்கத்தில் உள்ள ஒரு ஸ்ட்ரண்ட் ல ஒரு குவானைன்  இருந்தால், வலது பக்கத்தில் உள்ள ஸ்ட்ரண்ட்ல சைட்டோசின் இருக்கும்.

சப்போஸ் ஒரு டி என் எல இடதுபக்கவுள்ள ஸ்ட்ராண்ட்ல மேலிருந்து கீழே

1) குவானைன்

2) தைமின்

3)தைமின்

4) அடினைன்

5) தைமின்

6) அடினைன்

7) அடினைன்

8) சைட்டோசின்

9) சைட்டோ சின்

10) குவானைன்

11) தைமின்

12) குவானைன்

வரிசையில் 12 பேஸெஸ் (மேலேயிருந்து கீழாக) இப்படி இருக்குணு வச்சுக்குவோம் .

அப்போ வலது பக்கம் உள்ள ஸ்ட்ரண்ட்ல,  பேஸஸ் என்ன வரிசையில் இருக்கும்னு சொல்லிவிடலாம்.

எப்படி இருக்கும்?

1) சைட்டோசின்

2) அடினைன்

3)அடினைன்

4) தைமின்

5) அடினைன்

6) தைமின்

7) தைமின்

8) குவானைன்

9) குவானைன்

10) சைட்டோசின்

11) அடினைன்

12) சைட்டோசின்

என்கிற வரிசையில், மேலேயிருந்து கீழாக 12 பேஸெஸ், வலதுபக்கம் உள்ள ஸ்ட்ரண்ட் இந்த வரிசையில்தான் இருக்கும்!

அதெப்படி சொல்ற???

இது ரொம்ப சிம்பிள். இடது பக்கம் உள்ள ஒவ்வொரு அடினைன்க்கும், வலது பக்கம் ஒரு தைமின் இருக்கும். அதேபோல் இடதுபக்கம் உள்ள ஒவ்வொரு குவானைக்கும், வலதுபக்கம் ஒரு சைட்டோசின் இருக்கும். அப்படி இருப்பதால்தான் இந்த ஸ்ட்ரெண்ட் இரண்டையும் காம்ப்ளிமெண்டரி டு  ஈச் அதர்னு சொல்றாங்க!


இப்போ இடது பக்கம் எத்தனை அடினைன் இருக்கு?

3

வ்லது பக்கம் எத்தனை தைமின் இருக்கும்?

3


இப்போ இடது பக்கம் எத்தனை தைமின் இருக்கு?

4

வலதுபக்கம் எத்த்னை அடினைன் இருக்கும்?

4

இடது பக்கம் எத்தனை சைட்டோ சின் இருக்கு?

2


வலது பக்கம் எத்தனை குவானைன் இருக்கும்?

2

இடது பக்கம் எத்தனை குவானைன் இருக்கு?

3

வலது பக்கம் எத்தனை சைட்டோ சின் இருக்கும்?

3

இப்போ ஒரு டி என் எ இருக்கு. இருக்கா? அதில் 100,000 "பேஸெஸ்" இருக்குனு வச்சுக்குவோம்.


அப்படினா?

இந்த டி என் எ ல மொத்தமா, அடினைன், குவானைன், தைமின், சைட்டோசின் (வலது பக்கம், இடதுபக்கம் உள்ளது) எல்லாத்தையும் கூட்டினால் அது 100, 000.


இப்போ, இடது பக்கம் உள்ள ஸ்ட்ரெண்ட்ல 25,000 அடினைன் இருக்குனு வச்சுக்கிட்டால், வலது பக்கம் உள்ள ஸ்ட்ரெண்ட்ல 25,000 தைமின் இருக்கும்.

இடது பக்கம் 10, 000 தைமின் இருந்தால், வலது பக்கம் 10,000 அடினைன் இருக்கும். ஆக மொத்தம் 35,000 அடினைனும், 35,000 தைமினும் இருக்கும்.

100,000 - 70,000 = 30,000 (குவானைன் + சைட்டோசின் எண்ணிக்கை)

புரியுதா?

இப்போ நம்ம எல்லாரும் டி என் எ வின் கட்டமைப்பை அழகாப் புரிந்து கொண்டோம். சரியா?

கேள்வி 1.

டி என் எ வில் எந்த எந்த தனிமங்கள் இருக்கு? எத்தனை தனிமங்கள் இருக்கு?

C, H, O, N, P. அதாவது, கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் என்கிற 5 தனிமங்கள் இருக்கு.

கேள்வி 2.

ப்ரோட்டின்களில் என்ன என்ன தனிமங்கள் இருக்கு? மொத்தம் எத்தனை தனிமங்கள் இருக்கு?

C, H, O, N, S. அதாவது, கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், சல்ஃபர் (கந்தகம்) என்கிற 5 தனிமங்கள் இருக்கு.

டி என் எக்கும் ப்ரோட்டினுக்கும்  அடிப்படையில் என்ன பெரிய வித்தியாசம்?

டி என் எ ல பாஸ்பரஸ் இருக்கு. அது ப்ரோட்டீன்களில் இல்லை!

டி என் எ ல சல்ஃபர் இல்லை. ஆனால்  ப்ரோட்டீன்ல சலஃபர் இருக்கு!

சரியா?

இதை எதுக்கு நீங்க தெரிஞ்சிக்கணும்னா.. பின்னால அந்த மரபு குணத்தை சந்ததிகளுக்கு டி என் எ எடுத்துப் போகுதா? இல்லை ப்ரோட்டீன் எடுத்துட்டுப் போகுதா?  னு உறுதியாகச் சொல்லுமளவுக்கு ஒரு "எக்ஸ்பெரிமெண்ட்" இருக்கு. அதை புரிஞ்சுக்கணும்னா இந்த அடிப்படை வித்தியாசம் நீங்க தெரிஞ்சுக்கணும். சரியா?

-தொடரும்.

தொடர்புள்ள பதிவுகள்:

 

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு .தொடருங்கள் தொடருகிறேன்

கவியாழி said...

மரபுக் குணங்கள் மாறாமல் இன்னுமே தொடர்வது எதனால் ? மாற்ற முடியுமா?
ஆனாலும் அருமையான படங்களும் விளக்கமும்.பாராட்டுக்கள்

Thozhirkalam Channel said...

பயன்தரும் நல்ல பகிர்வு... தொடருங்கள்....

தொழிற்களம் வாசியுங்கள்

Unknown said...

GOOD ONE...!!!
HATS OF TO YOU.
CONTINUE IT.

வருண் said...

திரு கரந்தை ஜெயக்குமார், திரு. கவிஞாழி கண்ணதாசன், தொழிற்களம் குழு மற்றும் கோவம் நல்லது, உங்கள் அனைவரது வருகைக்கும் வாசிப்பிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி. :)