Monday, August 25, 2008

காதல் கல்வெட்டு-10

வருண், நேராக தன் காரில் ஏறி வீட்டை நோக்கி போகும்போது கயலைப்பற்றி யோசித்துக்கொண்டே போனான். அவனுக்கு கயலின் கோபம் புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது. ஒன்று மட்டும் தெரிந்தது, இரண்டு மூன்று சந்திப்பிலேயே கயலுக்கு அவனிடம் எந்தவிதமான பயமோ, தயக்கமோ இல்லை. தன் மனதில் தோன்றியதை அப்படியே வெளிப்படையாக அவனிடம் சொல்லிவிடுகிறாள். வருணைப்பொறுத்தவரையில் அவளை கஷ்டப்படுத்த நிச்சயம் இந்த ஆலோசனை அவன் கொடுக்கவில்லை. அவனுக்கு உண்மையிலேயே தோன்றியதைத்தான் சொன்னான். வருணுக்கு ஒரு சிலரைத்தான் பிடிக்கும். பிடித்துவிட்டால் அவர்கள் நலம்விரும்பியாகி விடுவான். கயல், தவறான யாரிடமும் மாட்டிக்கக்கூடாது என்று நினைத்தான் அவன். கயல், இவனிடம் எதையுமே மறைப்பதில்லை. ஆனால், வருண், அவளிடம் அப்படியொன்றும் திறந்த புத்தகமாக இல்லை என்று அவனுக்குத்தெரியும். மேலும் கயல், ரொம்ப "நோஸி" டைப் கிடையாது. தேவையில்லாத கேள்விகள் கேட்கமாட்டாள். இது அவளுடைய இயற்கையான குணம். ஜோக் என்ற பெயரில் மற்றவர்களை புண்படுத்துவது போல் ஒருபோதும் அவள் பேசி இன்னும் அவன் பார்க்கவில்லை. எவ்வளவுதான் யோசித்தாலும் அவனால் அவளிடம் எந்த குறையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. இன்றுவரை தான்தான் ரொம்ப நேர்மையானவன் என்று கிணற்றுத்தவளையாக வாழ்ந்தது போல் தோன்றியது. கயலிடம் பழகியபிறகு, அவனுடைய பார்வையில், கயல், அவனைவிட எல்லா வகையிலும் ஒரு படி மேலேயே இருப்பதுபோல் தோன்றியது. She really challenged him without her knowledge.

வீடு வந்ததும், காரை பார்க் பண்ணிவிட்டு அப்பார்ட்மெண்ட் உள்ளே சென்றான். வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஃபோன் மணி அடித்தது. ரிசீவரை எடுத்தான். இன்னொரு முனையில் அவன் அமெரிக்க நண்பன் ஸ்டீவன்!

"What's up, Steven?"

"Hey! There is a change of plan. I am going out for dinner in the evening and I don't know what time I will come back. Can we talk some other time?"

"Sure, Steven!"

"BTW, How did it go with Kayal?"

"It went on fine but I think I sort of made her upset by suggesting something stupid. I enjoy being around her and talking to her. Found a sensible girl who challenges me, Steven"

"Jeez, you like her THAT MUCH?!"

"Yes, I do! I dont see why not? She is beautiful, honest and very intelligent and speaks thamizh and of course has a nice "you know what"

" I never heard you complimenting any girl like that"

"She is exceptional I suppose"

"Talk to you later. bye"

"Bye!"

வருண், ஒரு கேன்சர் "ரிசேர்ச் காண்ஃபரன்ஸ்" போய்விட்டு ஒரு வாரம் சென்றுதான் வந்தான். வந்ததும் நிறைய வேலைகள், அடுத்த ஒரு வாரமும் வேலை வேலை என்று போய்விட்டது. கயலிடம் கால் பண்ணி பேசனும்போல இருந்தது, சும்மா, "எப்படி இருக்கிறாள்" என்று குசலம் விசாரிக்கலாம் என்று நினைத்தான். ஆனால் அவளைக் கூப்பிட ஏதோ தயக்கமாக இருந்தது. அப்பொழுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது இன்றுவரை அவளை அவனாக ஃபோனில் கூப்பிட்டதில்லை என்று. இப்படியே வாரங்கள், மாதங்கள் கடந்தன. அவன் கயலை அதற்குப்பிறகு கூப்பிடவோ பார்க்கவோ இல்லை.

பல மாதங்களுக்குப்பிறகு ஒரு நாள் இரவு, ஜென்னிஃபருடன் ஃபோனில் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஜென்னி,

"How is your Tamil friend?" என்று கேட்டாள்.

"You mean Kayal?"

"Yeah, How is she?"

"I have not talked with her for months, Jenny! May be I should call her sometime" என்று சொல்லிவிட்டு, கயலைப்பற்றி நினைத்துக்கொண்டே இரவு படுக்கையில் படுத்தான், வருண். கனவில் கயல் வந்து தூங்கவிடாமல் தொந்தரவு செய்தாள்.

வருண் நூலகத்தில் ஒரு புத்தகத்தை செக்கவுட் பண்ண லைனில் நிற்கும்போது, அவனுக்கு முன்னால் கயல் நின்று ஒரு புத்தகம் செக்கவுட் பண்ணிக்கொண்டு இருந்தாள். செக் அவுட் பண்ணிவிட்டு அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு அவள் திரும்பும்போது வருண் பின்னால் லைனில் நிற்பதை நன்கு கவனித்தும் அவனிடம் ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை. மேலும் அவனை கவனித்தவுடன் வேகமாக நூலகத்துக்கு வெளியே நடந்தாள், கயல். இவனிடம் இருந்து அவள் விலகி ஓடுவதுபோல் இருந்தது. வருண், லைனிலிருந்து வெளியில் வந்து தான் எடுத்துப்போக வந்த புத்தகத்தை அங்கேயே ஒரு டேபிலில் போட்டு விட்டு, வேகமாக அவளை தொடர்ந்து வெளியே போனான்.

கயல், வெளியில் வந்தவுடன் பார்க்கிங் லாட்டில் உள்ள அவள் காரை நோக்கிப்போனாள். வருண் வேகமாக பின்னால் சென்று,

"கயல்!" என்று சற்றே சத்தமாக கூப்பிட்டான்.

அவள், வருணை நோக்கி ஒரு வினாடி திரும்பினாள், பிறகு கவனிக்காத மாதிரி காருக்கு சென்று அவள் கார் கதவைத் திறந்து காரில் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்தாள். கதவை அடைக்கவில்லை! பேசாமல் அமர்ந்து இருந்தாள்.

வருண், அவள் காருக்கு அருகில் சென்று மூடாமல் இருந்த அவள் கார் டோருக்கும் அவளுக்கும் இடையில் போய் நின்றான்.


வருண், அவள் முகத்தை நோக்கிக்குனிந்து, "என்ன கயல் ஏன் இப்படி ஒரு ஹாய் கூட சொல்லாமல் போகிறாய்?" என்றான் கனிவுடன்.

"நீங்க யாருனே தெரியலை எனக்கு" என்றாள் கயல், அவன் முகத்தைப் பார்க்காமல். அவள் குரலில், இன்னதென்றே புரியாத உணர்வுக்கலவைகள்!

அவள் கன்னத்தை தன் வலது கரத்தால் பிடித்து அவள் முகத்தை தன்னை நோக்கித் திருப்பினான், வருண். "நிஜம்மா என்னைத் தெரியவில்லை, கயல்?" என்றான் அழுத்தமான குரலில் அவள் கண்களைப்பார்த்து. அவள் கண்கள் கலங்கி இருந்தன

அடுத்த வினாடி, அவள் அழகான உதடுகளில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான், வருண்.

கண் விழித்தான் வருண்!!!

கடிகாரத்தில் நேரம் பார்த்தான். அதிகாலை 1 மணி! எழுந்துபோய் தண்ணீர் ஒரு தம்ளரில் பிடித்துக்குடித்துவிட்டு மறுபடி படுக்கையில் படுத்தான். "ஏன் கயல் பற்றி இப்படியெல்லாம் கனவு வருகிறது?" என்று யோசித்தான். இது வெறும் உடல் கவர்ச்சி மட்டும் தானா இல்லை அதையும் மீறி?

இதற்கிடையில், கயல், இந்த சில மாதங்களில் வேரொருவரை டேட் பண்ணிக்கொண்டிருந்தாள். அவரும், ஒரு தமிழர்தான், இவளுடன் வேலை பார்ப்பவர். இவள் கம்பெணியில் வேறொரு டிப்பார்ட்மெண்டில் இருப்பதால் அவரை இவள் பார்த்ததில்லை. இவளை எப்படியோ விசாரித்து தெரிந்துகொண்டு திடீர்னு ஒரு நாள், ஒரு ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்டில் லன்ச் சாப்பிடும்போது தன்னை அறிமுகம் செய்துகொண்டார். பெயர், ராமகிருஷ்ணன், மதுரையை சேர்ந்தவர் என்றும் இங்குதான் வேலை செய்வதாகவும். ஹாண்ட்சம் ஆகவே இருந்தார். மிகவும் நாகரீகமாக கவனமாகவே பழகினார் என்றே சொல்ல வேண்டும். முதலில் ஒரு லன்ச் டேட்டுக்கு அழைத்தார். வேலையில் இருந்து அப்படியே போய் வந்தாள் கயல். பிறகு தொடர்ந்து அவருடன் இரண்டு மூன்று டேட்ஸ் தொடர்ந்து போய் வந்தாள். அவர் அடுத்த கட்டத்துக்கு போவதற்காக இவள் குடும்பத்தைப்பற்றியெல்லாம் விசாரித்தார்.

அன்று ராமுடன் ஒரு ஹாலிவுட் படம் பார்க்க போயிருந்தாள். வீடு வந்த பிறகு அவரைப்பற்றி அசைபோட்டுக்கொண்டே படுத்திருந்தாள் கயல். ராமை அவள் காதலிக்கிறாளா என்று அவளையே கேட்டுக்கொண்டாள். அதற்கு பதில் இல்லை என்றுதான் வந்தது. ஒவ்வொரு சமயம், அவருடன் இருக்கும்போது, வருண் இப்போ இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பாள். அவளுக்கு அந்த மாதிரி நினைவு வரும்போது ரொம்பவே கில்ட்டியாக இருக்கும்! ஏன் இப்படி ராமோட இருக்கும்போதும் வருண் ஞாபகம் வருகிறது? மறுபடியும் முன்பு ராம்ஜியுடன் இருக்கும்போது தோன்றிய அதே நினைவுகள், என்ன இது இனிமேல் நான் யாரையும் டேட் பண்ணக்கூடாதோ? என்று குழம்பினாள். சரி, நான்தான் இந்த வருணையே நினைத்து உருகுகிறேன். ஆனால் அவர்? அவரை சந்தித்து எத்தனை நாளாச்சு? ஒரு கால் பண்ணி உயிரோடு இருக்கிறேனா என்று கேட்டால், குறைந்தா போய்விடுவார்? இந்த முறை கூப்பிடவேண்டியது நிச்சயம் அவருடைய டேர்ன் தான். அவர்தான் என்னைக்கூப்பிட்டு பேசி இருக்கனும் என்று பிடிவாதமாக நம்பினாள்.

அப்பொழுது அவள் செல்பேசி அலறியது!

"ஹாய், நான் வருண் பேசுறேன். என்னை நினைவிருக்கா கயல்?"

"எப்படி இருக்கீங்க, வருண்?"

"நல்லா இருக்க்கேன் கயல். நீங்க?"

"என் மேல் எதுவும் கோபமா, வருண்?"

"சே சே ஏன் கயல் இப்படியெல்லாம் சொல்றீங்க"?

"இல்லை, உயிரோட இருக்கிறேனானு பார்க்க இப்போவாவது மனது வந்ததே" அவள் குரலில் கோபம் தெறித்தது!

"இல்லை, கயல், நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். உன்னை கடைசியா பார்த்த பிறகு ஒரு காண்ஃபரன்ஸ் போய்ட்டு வந்தேன். அப்படியே வேலை வேலைனு நேரம் போயிடுத்து. ஒரு சேலஞ்சிங் ப்ராபிளத்தில் வொர்க் பண்ணிக்கொண்டு இருந்தேன்"

"அப்படியா? எப்படி திடீர்னு என் ஞாபகம் வந்தது?"

" சொன்னால் அதுக்கும் உங்களுக்கு கோபம் வரும். அதை நேரில் பார்க்கும்போது சொல்றேனே, கயல்? இந்த சனிக்கிழமை ஈவெனிங் என் வீட்டுக்கு வர்றீங்களா? சும்மா டீ க்குத்தான்"

" மன்னிக்கவும் வருண்! நான் அன்று கோயிலுக்குப்போகனுமே. நீங்களும் வர்றீங்களா என்னுடன்?"

"ஐயோ! நான் சாமியெல்லாம் கும்பிடுவதில்லையே கயல்"

"நான் மட்டும் என்னவாம்? சாமியெல்லாம் கும்பிடுவதில்லை, வருண். ஆனால் அன்று அம்மாவின் பிறந்த நாள். சும்மா அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும். ஒரு மாதிரி பழகியாகிவிட்டது சிறுவயதில் இருந்து. அதனால் கோயிலுக்குப் போகனும் அம்மாவுக்காக!"

" சரி, நானும் கட்டாயம் வர்றேன் கயல்"

"அப்போ உங்களை வந்து பிக் அப் பண்ணிக்கவா ?"

"சரி அந்த ஸ்டார் பக்ஸ்லயே பிக் அப் பண்ணிக்கிறீங்களா?"

"இல்லை உங்க வீட்டுக்கே வர்றேனே. அட்ரஸ் சொல்லுங்க, வருண்."

"எழுதிக்கோங்க என்று அட்ரஸ் மற்றும் டைரக்ஷன்ஸ் சொன்னான்"

"ஷார்ப்பா 3:50 க்கு வர்றேன், வருண்"

"ஓ கே. பை கயல்!"

-தொடரும்

31 comments:

Anonymous said...

Me Parshtttttt!

Anonymous said...

I am the same anani person who said Parshttt.. Good to see the Kadhal Kalvettu back after a long time... Please, please, please finish this first before moving on with other topics... We want it in one flow :-)

Selva Kumar said...

//"சரி அந்த ஸ்டார் பக்ஸ்லயே பிக் அப் பண்ணிக்கிறீங்களா?"
//

ennum Starbucks ai vidalaya ??

manikandan said...

கடைசில கல்லு கிடைச்சிடுச்சு போல. நல்லா இருக்கு வருண்.

நீங்க வேற ஏதோ கல்ல தேடிகிட்டு இருகீங்கல்லோன்னு சந்தேகமா இருந்தது.

வருண் said...

அனானி அவர்களுக்கு,

இங்கே வருகை தந்ததற்கு நன்றி :)

வருண் said...

வாங்க வழிப்போக்கன்!

என்ன நீங்க அந்த காஃபி கடையை அப்படி சொல்லீட்டீங்க? அங்கேதான் நம்ம ஹீரோயினை மீட் பண்ணீயது சார்! :)

தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி, வழிப்போக்கன்!

வருண் said...

***அவனும் அவளும் said...

$ கடைசில கல்லு கிடைச்சிடுச்சு போல. நல்லா இருக்கு வருண்.

* நீங்க வேற ஏதோ கல்ல தேடிகிட்டு இருகீங்கல்லோன்னு சந்தேகமா இருந்தது.****

அவனும் அவளும்,

$ நன்றி. ஆனால், உங்களுக்கு இந்தக் காதல் கதவாசிக்கப்பிடித்து இருப்பது பெரிய அதிசயம்

* ஆமாம் கல்வெட்டு செதுக்கத்தான் கல் தேடினேன்!

manikandan said...

*****ஆனால், உங்களுக்கு இந்தக் காதல் கதவாசிக்கப்பிடித்து இருப்பது பெரிய அதிசயம்****

சரி. நன்றி.

குடுகுடுப்பை said...

உங்க கல்வெட்டுக்கு நிறைய மலை தேவைப்படும் போல இருக்கு. பாத்து கல்வெட்டுங்க இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க போறாங்க

வருண் said...

வாங்க குடு குடுப்பை!

இப்போ எல்லாம் வீடுகூட கல் இல்லாமல் கட்டுறாங்க. பேசாமல் நானும் ஏதாவது "வைனல் பாலிமெர்" ல எழுத வேண்டியதுதான் போல! LOL!

MSK / Saravana said...

இந்த பகுதியும் நல்லாவே இருந்துது..
:)

கயல்விழி said...

வருண்,

இந்த கதையில் எல்லாம் "கயல் அவரை டேட் பண்ணினாள், இவரை டேட் பண்ணினாள்" என்று எழுதிவிட்டு உங்களை மட்டும் Mr.Nice guyயாக சித்தரிப்பது அநியாயம். கதையில் வருகிறாளே, ஜென்னி, அவளைப்பற்றிய முழு தகவல்களையும் எழுதுவீங்களா? மாட்டீங்களே :) ;) JK

வருண் said...

கயல்!!

நான் விழுந்து விழுந்து சிரிக்கிறேன்!

வருண் said...

***Saravana Kumar MSK said...
இந்த பகுதியும் நல்லாவே இருந்துது..
:)

26 August, 2008 12:24 PM***

நீங்கள் தொடர்ந்து வாசிப்பதற்கும், உங்கள் விமர்சனத்துக்கும் நன்றி, சரவணக்குமார்! ;-)

கயல்விழி said...

பார்த்து, அடிப்பட போகுது :)

வருண் said...

***கயல்விழி said...
வருண்,

இந்த கதையில் எல்லாம் "கயல் அவரை டேட் பண்ணினாள், இவரை டேட் பண்ணினாள்" என்று எழுதிவிட்டு உங்களை மட்டும் Mr.Nice guyயாக சித்தரிப்பது அநியாயம். கதையில் வருகிறாளே, ஜென்னி, அவளைப்பற்றிய முழு தகவல்களையும் எழுதுவீங்களா? மாட்டீங்களே :) ;) JK***

நான் மிஸ்டர் நைஸ் கையெல்லாம் இல்லனுதான் சொல்றேனே, கயல்.

டேட் பண்ணுவதெல்லாம் ஒண்ணும் பெரிய தப்பில்லை, கயல்.

உன்னுடைய கைண்ட் ஆஃப் டேட்டிங் பாராட்ட தக்கது.

வருண் பற்றி மோசமா எழுதனும், அவ்வளவுதானே?

செய்துட்டாப்போகுது? :-)

வருண் said...

***கயல்விழி said...
பார்த்து, அடிப்பட போகுது :)

26 August, 2008 1:50 PM **

நீதான் அதற்கும் லயபிலிட்டி கொடுக்கனும் தெரியுமில்லை? :)

ஜியா said...

enakku pazasellaam maranthu poyidichu.. avlavu naal aayidichaa?? athanaala ini neenga ellaa partum mudinjathukkappuramaathaan vaasikalaamnu irukken :)))

அது சரி said...

உங்க டைரிய அப்படியே போட்றீங்க போலருக்கு. முந்துன வெட்டையெல்லாம் இன்னும் படிக்கல. படிச்சுட்டு சொல்றேன்.

ஆனா, பாத்து செதுக்குங்கன்னா.

(பி.கு. கல்வெட்டுன்னு தங்கர்பச்சான் எழுதுன கதை தான் அழகின்னு படமா வந்துச்சு. உங்க கல்வெட்டு படமாவுதான்னு பாப்போம்)

வருண் said...

////ஜி said...
enakku pazasellaam maranthu poyidichu..////


ஜி:

வாங்க!

பழசெல்லாம் மறக்கக்கூடாது னு சொல்வாங்க! LOL JK :)

அதனாலென்ன, ஜி?

நீங்க ஞாபகம் வச்சிக்கலைனா ஒண்ணுமில்லை. நான்தான் மறந்துவிடக்கூடாது! LOL!

வருண் said...

அது சரி!

கல்வெட்டு = அழகி??

எனக்கு இப்போத்தான் தெரியும்! இன்று வரை தெரியாமல் இருந்தேன் :)

குடுகுடுப்பை said...

பேசாம காதல் பிளாக்கர்வெட்டு மாத்திருங்க

SK said...

இந்த பகுதில ஏதோ குறையர மாதிரி தோணுது. ஆனா என்னன்னு தெரியலை.

வாழ்த்துக்கள் தொடருங்கள்

வருண் said...

வாங்க எஸ் கே!

ஸ்டீவனுடன் ஒரு பெரிய டிஸ்கசன் பண்ணுவதுபோல் முதலில் எழுதினேன். ஒரே ஆங்கிலமும், ஸ்பெஷல் சப்ஜெக்ட் மா ரொம்ப "லாங்" கா இருந்தது. நம்ம எடிட்டர் சொன்னார், அது ரொம்ப ஸ்பெஷல் சப்ஜெக்ட்டா இருக்கு, எனக்கு மட்டும்தான் புரியும் என்று. முடிந்தால் அதை மாற்றுங்கள் என்று சொன்னார். சரினு அந்தப் பார்ட் டை கட் பண்ணி அப்ப்டியே விட்டுவிட்டேன். அதை ஃபீல் பண்ணுறீங்களா என்னனு தெரியலை, எஸ் கே.

ஒரு வேளை **** வேர்ட்ஸ்லாம் இல்லாமல் இருக்கு போல இது. அதைத்தான் நீங்க மிஸ் பண்ணுறீங்களோ என்னவோ? LOL!

எனக்குத்தெரியவில்லை எஸ் கே என்னனு. உங்களுக்குத்தான் தெரியும்!

சரி அடுத்த கல்வெட்டில் உங்களை திருப்தி செய்றேன். :-)

வருண் said...

***குடுகுடுப்பை said...
பேசாம காதல் பிளாக்கர்வெட்டு மாத்திருங்க

27 August, 2008 8:23 AM***

நல்ல ஐடியா ங்க! ஆனால் காலம் கடந்துவிட்டது. என்ன செய்வது?

கல்லுக்குப்பஞ்சம்னா, ஏதாவது "சிந்தெடிக் ஸ்டோன்" பண்ண முடியுமானு பார்க்கிறேன்! ;-?

Sundar சுந்தர் said...

கனவு மூலம் கதை சொல்வது நல்லா இருக்கு. ம்ம் மேல சொல்லுங்க!

வருண் said...

*** Sundar said...
கனவு மூலம் கதை சொல்வது நல்லா இருக்கு. ம்ம் மேல சொல்லுங்க!***

உங்க காமெண்ட் அதைவிட நல்லாயிருக்கு, சுந்தர்! நன்றி! :-)

பூக்காதலன் said...

வருண் , நான் எப்பொழுதும் எந்த blog ஐயும் இப்படி படித்ததில்லை. முதல் முறையாக வேலையை மறந்து உங்கள் blog முழுவதும் படித்தேன். சாதரணமாக தோன்றும் விஷயத்தை கூட எவ்வளவு அழாகாக சொல்கிறீர்கள். ஒருவரின் காதல் என்றென்றும் நிலைத்திருக்க காதலர்கள் மிகவும் சிறந்த நண்பர்களாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.

சிறந்த நண்பியை பெற்ற உங்களுக்கும், சிறந்த நண்பரை பெற்ற கயலுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

வருண் said...

திரு ஹமீது!

உங்கள் வருகைக்கும், உங்கள் இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிங்க!

ஜோசப் பால்ராஜ் said...

தொடர்ந்து உங்கள் கல்வெட்டை கண்டுரசிக்கும் எனக்கு இந்த பகுதியை பார்க்க சற்றே தாமதமாயிடுச்சு. அருமையா செதுக்கியிருக்கீங்க.
கயல் சொன்னமாதிரி, வருணோட டேட்டிங் பத்தியும் சில குறிப்புகள் இடம்பெறவேண்டியது அவசியம். கயல் கருத்தை ஆமோதிக்கிறேன்.

சொந்தவாழ்வின் நிகழ்வை அழகா எழுதுறீங்க. இருவரும் இணைந்து இன்பமாய் வாழ இதயபூர்வமான வாழ்த்துக்கள். உண்மையான காதல் ஒரு வரம். அது எலோருக்கும் கிடைப்பதில்லை. பெற்றவர்கள் புண்ணியவான்கள். நீங்கள் இருவரும் புண்ணியவான்களாக இருக்க வாழ்த்துகிறேன்.

வருண் said...

நன்றி, திரு.பால்ராஜ். மேலும் தொடர்ந்து எழுதும்போது உங்கள் ஆலோசனையை மனதில்கொண்டு எழுதுறேன். :-)