மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதனென்று புரிந்துவிடும்
ஊர் சுமந்துபோகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும்!
என்பது ஒரு திரைப்படப்பாடலில் வரும் கண்ணதாசன் வரிகள் (இருவர் உள்ளம்). தன்னை மிருகமாக நினைக்கும் மனைவியிடம் தானும் மனிதந்தான் என்றும், அதை நீயும் நான் இறந்தபிறகு உணர்வாய் என்று ஒருவன் அழுதுகொண்டே சொல்லும் சூழல் அது.
மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!
ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!
இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.
நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!
* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.
* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.
* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.
* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.
மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!
25 comments:
கூடிய சீக்கிரம் பதிவுலகில் முக்கியமான இன்னொரு "இறப்பு" நிகழப் போகிறது என்று என் மனம் சொல்கிறது
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
பிறவாமை என்ற தலைப்பில் மரணம் பற்றி எனக்கு தெரிந்தவைகளை எழுதத் தொடங்கினேன் பாதியில் அப்படியே இருக்கிறது. முடிந்தால் முடித்து பதிவிடுகிறேன்.
//லதானந்த் said...
கூடிய சீக்கிரம் பதிவுலகில் முக்கியமான இன்னொரு "இறப்பு" நிகழப் போகிறது என்று என் மனம் சொல்கிறது
//
லதானந்த் அங்கிள் எப்போது லதானந்தா சுவாமிகள் ஆனார் ?
சுவாமி தங்கள் ஆஸ்ரமத்தில் ஆண் பக்தர்களுக்கு இடம் உண்டா ?
:)
***லதானந்த் said...
கூடிய சீக்கிரம் பதிவுலகில் முக்கியமான இன்னொரு "இறப்பு" நிகழப் போகிறது என்று என் மனம் சொல்கிறது***
அப்படியெல்லாம் சொல்லாதீங்க லதானந்த் சித்தர்!
நாம் எல்லோருமே நீடூழி வாழ்வோம்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!
****கோவி.கண்ணன் said...
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
பிறவாமை என்ற தலைப்பில் மரணம் பற்றி எனக்கு தெரிந்தவைகளை எழுதத் தொடங்கினேன் பாதியில் அப்படியே இருக்கிறது. முடிந்தால் முடித்து பதிவிடுகிறேன்.***
வாங்க கண்ணன்!
மரணம் பற்றி நிறையப் பேசனும். உங்கள் எழுத்தை விரைவில் முடித்துப்பதிவு செய்யுங்கள். நான் படிக்க ஆவலா இருக்கேன் :)
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி!
//நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான்.// அட, எவ்வளவு நாள் எப்படி எனக்கு தோணவில்லை. new denomination has given me a new dimension. thanks for the new counter - got to retire to life earlier ;)
எங்கிருந்து வந்தோம் என்று தெரிந்தால் தானே எங்கு போவோம், எப்படி ஆவோம் என்று தெரிவதற்கு. எப்படி ஆவோம் என்று தெரியும் வரை என்ன பண்ணுவோம் என்று தெரிய போவதில்லை. வாழ்வே ஒரு குமிழி தானோ? சரி, மொக்கை போதும்.
வாழ்க்கையை ஆராய்வதை விட, அனுபவிப்பது சுகமானது. அனுபவிங்க!
****Sundar said...
வாழ்க்கையை ஆராய்வதை விட, அனுபவிப்பது சுகமானது. அனுபவிங்க! ****
சுந்தர், உண்மைதான், அனுபவிக்கத்தான் செய்யனும். ;-)
வாழ்க்கையில் நிறையவே ந்ல்விசயங்கள் இருக்கு. எதுக்கு இறப்பைப்பற்றி பேசனும்? அம்மா, அப்பாவெல்லாம் இதைப்பற்றி பேசவேவிடமாட்டாங்க! நான் ஹெல்த்தியா இருக்கும்போதுதான் என்னால் இதையெல்லாம் யோசிக்க முடியுது. உடல்நலம் குறைந்து இருந்தால்/இருக்கும்போது என்னால் இதையெல்லாம் யோசிக்கமுடியுமானு தெரியலை.
30,000 நாட்கள் ரொம்ப குறைவாத்தான் எனக்கு தோன்றியது! ந்னறி, சுந்தர்.
நெறயப் பேர் படிச்சிருக்கலாம், ஆனாலும் க்யூட்டா அதே சமயம் கொஞ்சம் எரிச்சலாகவும் இருந்தது இதை படிச்சப்போது. என்னன்னா, தான் இறந்தப் பிறகு தனக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் எப்படி ரியாக்ட் செய்வாங்கன்னு தெரிஞ்சிக்க, கண்ணதாசன் அவர்களே, தன் நெருங்கிய நண்பர்களுக்கு போன் போட்டு தானே தான் இறந்ததாக சொல்லி, அவர்களின் ரியாக்ஷனை பார்த்து ரசிச்சிட்டு, பரவாயில்லை நான் நினைச்ச மாதிரித்தான் இருக்கு என சிரித்தாராம்.
நான் இப்போதுதான் கேள்விப் படுறேன், ராப்.
அவர் செய்தது நிறையவே எரிச்சலைத்தான் எனக்குத் தருகிறது.
இந்த மாதிரி நல்ல? அழகான? சப்ஜெக்டிவ்வான? பதிவுகளில் எப்படி பின்னூட்டமிடுவது என்று தெரியவில்லை. 'அருமை' என்று சொல்லிவைக்கிறேன். பல சமயங்களில் ஒன்றும் சொல்லாமல் போய்விடுகிறேன்.
***தாமிரா said...
இந்த மாதிரி நல்ல? அழகான? சப்ஜெக்டிவ்வான? பதிவுகளில் எப்படி பின்னூட்டமிடுவது என்று தெரியவில்லை. 'அருமை' என்று சொல்லிவைக்கிறேன். பல சமயங்களில் ஒன்றும் சொல்லாமல் போய்விடுகிறேன்.**
உங்கள் பின்னூட்டம் நல்லாயிருக்கு தாமிரா! :-)
நன்றி!
நீங்க எப்படியும் என்னோட பின்னூட்டத்தை அழிச்சிருவீங்க.
இருந்தாலும் சொல்றேன், நல்லா எழுதியிருக்கீங்க!
ஒரு நல்ல பதிவு வருண்..
// லதானந்த் said...
கூடிய சீக்கிரம் பதிவுலகில் முக்கியமான இன்னொரு "இறப்பு" நிகழப் போகிறது என்று என் மனம் சொல்கிறது//
லதானந்த் அங்கிள், ஏன் இப்படி பேசுகிறார்??
அது சரி!!!
நான் அப்படியெல்லாம் இல்லைங்க! ஒரு சில "கண்செர்வேடிவ்" மக்களை மனதில் கொண்டு அவர்களுக்காக நான் அந்தப்பதிவு செய்து இருந்தேன்.
நீங்கள் காமம் பற்றி நிறையப்பேசினால் அவர்கள் அஃபெண்ட் ஆகிவிடுவார்கள். இந்தப்பக்கமே வரமாட்டார்கள், என்கிற பயம் எனக்கு!
I am sorry I had to do it! :-(
Please do not mistake me!
***அது சரி said...
இருந்தாலும் சொல்றேன், நல்லா எழுதியிருக்கீங்க!***
ரொம்ப நன்றிங்க! :)
***Saravana Kumar MSK said...
ஒரு நல்ல பதிவு வருண்..
1 September, 2008 12:26 PM***
நன்றி, சரவணக்குமார்! :-)
***Saravana Kumar MSK said...
// லதானந்த் said...
கூடிய சீக்கிரம் பதிவுலகில் முக்கியமான இன்னொரு "இறப்பு" நிகழப் போகிறது என்று என் மனம் சொல்கிறது//
லதானந்த் அங்கிள், ஏன் இப்படி பேசுகிறார்??***
எனக்கு தெரியலைங்க. அவருக்கு வேலை உயர்வு கிடைத்துவிட்டதால், நேரம் அதிகம் கிட்டவில்லை என்கிறார்கள் ஒரு சிலர்!
வேலைதாங்க ரொம்ப முக்கியம். இதெல்லாம் இரண்டாவதுதானே?!
இறப்பு பின் அப்படி ,இப்படின்னு சொல்றீங்க எதுக்கும் மதக்காரர்கள் என்ன சொல்ராங்கன்னு கேட்டுக்கங்க
***குடுகுடுப்பை said...
இறப்பு பின் அப்படி ,இப்படின்னு சொல்றீங்க எதுக்கும் மதக்காரர்கள் என்ன சொல்ராங்கன்னு கேட்டுக்கங்க***
குடுகுடுப்பை!
வம்பிலே மாட்டி விட்டுவிடுவீர்கள் போல. LOL!
மதம் எல்லாம் நாம் உருவாக்கியது தானே, மனிதர்களை வழிப்படுத்த ?
என்ன ஆச்சு வருண் மற்றும் கயல்.
எதோ வேகம் கம்மி ஆனா போல தெரியுது. பதிவுகளும் குறைவு, பதிலும் குறைவு. வேலை அதிகமாக இருந்தால் சரி.
சீக்கிரம் மறுபடியும் "வேகம்" ஆய்டும்னு நினைக்கிறேன்.
வாங்க எஸ் கே & லதானந்த்!
கயல் ரொம்ப பிஸிங்க. அதனால் இந்தப்பக்கம் சுத்தமாக வருவதில்லை.
எனக்கும் எதுவும் உருப்படியா எழுத வரவில்லை! சும்மா போய் மற்றவர்கள் பதிவுகளுக்கு ஏதாவது பின்னூட்டமிட்டுக் கொண்டு இருக்கிறேன். அதுவும் ஜாலியாத்தான் இருக்கு!
ஆமாம், கூடிய சீக்கிரம் சில நல்ல பதிவுகள் வரும், லதானந்த் சித்தர்!
உங்கள் இருவருடைய அன்புக்கும் விசாரிப்புக்கும் நன்றி! :)
எஸ் கே: உங்களுக்கு விரைவில் இ-மெயில் அனுப்புகிறேன்!
நல்லா எழுதிருக்கீங்க!!!
ஏனோ ஒரு மாதிரியா இருக்கு
Post a Comment