Wednesday, December 31, 2008

நடிகர் இரா. ஸ்ரீ. கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் பிறந்த ஊர் இராமநாதபுரம். தந்தைக்கு வேலை மாற்றத்தால் பிறந்து பல மாதங்களில் பக்கத்தில் உள்ள பரமக்குடிக்கு சென்றார். அங்கிருந்து சென்னை, களத்தூர் கண்ண்ம்மா,அப்புறம் உங்களுக்கு தெரியும் அவர் சினிமா உலகம் மற்றும் தனிப்பட்ட வாழக்கை. ஆனா என்ன காரணமோ தெரியவில்லை, இவர் பிறந்த ஊர் பரமக்குடி என்றுதான் நிறைய நேரங்களில் தவறுதலாகச் சொல்லப்படுகிறது. அதை கமலஹாசனே சரி செய்வதில்லை.

இங்கே இரா-> இராமநாதபுரம்

ஸ்ரீ-> ஸ்ரீனிவாசன் அய்யங்கார்

கமலஹாசன் ஒரு பார்ப்பனராகப் பிறந்தாலும், சமீபகாலம்வரை (அவரின் தசாவதாரம் வெளிவருமுன்னர் வரை) இவர் நாத்தீகர்கள் பலராலும் அரவணைக்கப்பட்டுத்தான் வந்தார், வரப்படுகிறார். தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று தைரியமாக சொன்னவர் இவர். இந்துக்களில் பொதுவாக 99.9% பார்ப்பனர்கள் மத, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். பல பார்ப்பனர்கள்தான் இந்து மதப்பாதுகாவலர்களாக இருக்கும் இந்த உலகத்தில் கமலஹாசன் போல ஒரு பகுத்தறிவுவாதி அக்ரஹாரத்திலிருந்து வந்ததைப் பார்த்ததும் திராவிட கழகத்தை சேர்ந்த பல நாத்தீகர்கள், கமலஹாசனை தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டார்கள். திராவிட பாரம்பரீகம் இவரை நவீனகால பாரதி என்றுகூட மிகைப்படுத்தி அழைத்தனர்.

ஆனால், சமீபத்திய தசாவதாரம் படம், பலவிதமான கேள்விகளை கொண்டுவந்து விட்டது. சினிமாவில் ஒரு நாத்தீகர், ஆத்தீகராக ஒரு வேடத்தில் நடித்தால் என்ன? இது ஃபிக்ஷன் தானே? என்று பல நாத்தீகர்களும் மற்றும் கமலஹாசன் விசிறிகளும் வாதிடத்தான் செய்கிரார்கள். இருந்தாலும் பல ஆத்தீகர்கள் இந்தப் படத்தைப்பார்த்து கமலஹாசன் நம் வழிக்கு வந்துவிட்டார் என்று பெருமிதம் கொள்வதுதான் பிரச்சினை.


இந்து மதத்தை தன் தாயைவிட மேலாக மதிக்கும் பார்ப்பனர்கள் பலரை கமலஹாசன் நடித்த "நம்பி ராஜன்" என்கிற மதவெறி பிடித்த ஒரு வெறியன் பாத்திரம், சந்தோஷப்படுத்தி இருக்கிறதென்பதை புத்தியுள்ள பகத்தறிவுவாதிகள் காணலாம். மொத்தத்தில், நாத்தீகள்களும், ஆத்தீகர்களும் அவரவர் கண்ணோட்டத்தில் கமலஹாசனை தன் "இனமாக" பார்த்ததால், தசாவதாரம் பெரிய வெற்றியை தழுவியது.

ஆத்தீகர்களுக்க்கும் இந்து மத வெறியர்களுக்கும், கமலஹாசன் ஆத்தீகப்பாதையில் வருவதுபோல் தோன்றினாலும், அவர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தங்கள் மனதுக்குள் ரசித்துக்கொண்டார்கள்.


"பைத்தியக்காரன்" என்கிற ஒரு பதிவுலகத்தை சேர்ந்த ஒருவர், தசாவதாரத்தில் உள்ள பாத்திரங்களில் இருக்கும் மதவெறியை கண்டு, கோபமடைந்து கமலஹாசன் தன் பார்ப்பன புத்தியை காட்டிவிட்டார் என்று வசைமொழிகளில் விமர்சனம் எழுதினார்.


எழுத்தாளர் சாரு நிவேதிதா பொதுவாக கமலஹாசனை மதிக்கும் இவர், இந்தப்படத்திற்கு ஒரு நெகட்டிவ்க்ரிடிசிஸம் எழுதினார்.

அதே சமயத்தில், எழுத்தாளர் ஜெயமோஹன் இந்தப்படத்தை ஆஹாஓஹோ என்று புகழ்ந்து எழுதினார்.

பல நாத்தீகர்களுக்கு கமலஹாசனுடைய இன்றைய மனநிலை சந்தேகமாகவே உள்ளது. தசாவதாரம் பார்த்து குழம்பிப்போய் உள்ளார்கள் இவர்கள். ஆனால், வெளியில் இதை தெளிவாக சொல்லுவதில்லை.

கமலஹாசன் நாத்தீகராகவே சாகும்வரை இருக்கப்போகிறாரா? இல்லை ஆத்தீகராக மாறப்போகிறாரா அல்லது மாறிக்கொண்டு இருக்கிறாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

அவர் என்னவா இருந்தால் உனக்கென்ன என்கிறீர்களா?

அவர் ஆத்தீகப்பாதையில் போனால், என்னைப்போல் ஆட்களுக்கு அவர் கேலிக்கூத்தாக தோனுவார். அதான்.

26 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கண்ணதாசனை பாருங்கள். அவர் அடித்த பல்டிகளையும் பாருங்கள்.


உண்மையான பகுத்தறிவுவாதி அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார்.

கமல் ஆத்திகர் ஆனாலும், அவர் நாத்திகராய் சொன்ன கருத்துக்களுக்கு வலிமையும் உயிரும் இருப்பதை உணருவார். அவருக்கு கமல் என்றுமே கேலிக் கூத்தாக தோன்ற மாட்டார்.

வாசகன் said...

கமலகாசன் ஒரு நல்ல வியாபாரி,அவ்வளவுதான்.

எதற்கு மார்க்கெட் இருக்கிறதோ அதை அவர் பற்றிக் கொள்வார்,அவ்வளவுதான்.

ஒருவேளை கழகக் கட்சிகள் இல்லாமல் பாஜக போன்ற கட்சிகள் ஆட்சியில் இருந்தால் அவர் ஒரு வைஷ்ணவ திலகமாக இருப்பார்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கமலகாசன் ஒரு நல்ல வியாபாரி,//


வியாபாரி என்ற வாதத்தை நீங்கள் நல்ல விதத்தில் பயன் படுத்தவில்லை என்று நினைக்கிறேன். காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி மாற்றீவிற்றாலும் தரமான பொருட்களை விற்பவர் என்றுமே நல்லவர்தான். அவரிடம் பொருள் வாங்குபவர்கள் அவருக்கு என்றுமே விசுவாசமாகவே இருப்பார்கள்..

வருண் said...

Happy New Year, Suresh!

***உண்மையான பகுத்தறிவுவாதி அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார்.***

இதுக்கு என்ன அர்த்தம்?

கமல் ரொம்ப "ஸ்டபோர்ன்", இஷ்டத்துக்கு சரி சரி என்று அட்ஜஸ்ட் செய்து போகிறவரல்லவே.

இன்னொருவருக்காக "நம்பி ராஜன்" போன்ற ஒரு மத வெறியனை உலகுக்கு தந்து எல்லா மதவாதிகளையும் சந்தோஷ்ப்படுத்தனுமா?

வருண் said...

***வாசகன் said...
கமலகாசன் ஒரு நல்ல வியாபாரி,அவ்வளவுதான்.

எதற்கு மார்க்கெட் இருக்கிறதோ அதை அவர் பற்றிக் கொள்வார்,அவ்வளவுதான்.

ஒருவேளை கழகக் கட்சிகள் இல்லாமல் பாஜக போன்ற கட்சிகள் ஆட்சியில் இருந்தால் அவர் ஒரு வைஷ்ணவ திலகமாக இருப்பார்.

31 December, 2008 11:37 PM***

வாங்க வாசகன் சார்!

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நீங்க சொல்வது ஒருவகையில் உண்மைதான். But, I have never seen a worst fanatic like Nambi in recent years.

Trust me, though it is a movie, a character of such made so many FANATICS happy which made me UNHAPPY.

KH is not just a businessman. He is a dirty businessman here :( as he justifies fanatism, and that too being an atheist! :(

வருண் said...

***SUREஷ் said...
//கமலகாசன் ஒரு நல்ல வியாபாரி,//


வியாபாரி என்ற வாதத்தை நீங்கள் நல்ல விதத்தில் பயன் படுத்தவில்லை என்று நினைக்கிறேன். காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி மாற்றீவிற்றாலும் தரமான பொருட்களை விற்பவர் என்றுமே நல்லவர்தான். அவரிடம் பொருள் வாங்குபவர்கள் அவருக்கு என்றுமே விசுவாசமாகவே இருப்பார்கள்..

1 January, 2009 12:54 AM***

அவர் அந்த மாதிரி "நல்ல" வியாபாரிகளை சொல்லவில்லை. லாபத்திற்காக கொள்கையையும் வியாபாரம் செய்கிற வியாபாரி என்கிறார் னு நெனைக்கிறேன்

Sridhar V said...

//நடிகர் இரா. ஸ்ரீ. கமலஹாசன்! //

அவர் பிறந்த ஊர் பரமக்குடிதான். ‘இரா’ என்று அவர் இனிஷியல் குறிக்கப்பட்டிருந்தால் (எனக்குத் தெரியாது), அது இராமநாதபுரத்தை அல்ல, அவர் அன்னை இராஜலஷ்மியைத்தான் குறிக்கும்.

வருண் said...

Sridhar NarayaNan!

I can bet you million dollar on this, Kh was born in "Ramnad Palace"! Only very few Kh fans know that fact!

---------------

Wish you a very Happy New Year!

சூனிய விகடன் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

சைட் ஹீரோ!

புத்தாண்டு வாழ்த்துக்கள்! :-)

உங்க பின்னூட்டத்திற்கு நன்றி!

என்.இனியவன் said...

பகுத்தறிவு வாதமும் நாத்திகவாதமும் ஒன்று என பலரும் குழம்புவதும், அடுத்தவர்களைக் குழப்புவதும்
வேடிக்ககை. ஆத்திகத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் பகுத்தறிவுவாதியாக இருக்கிறார்கள் என்றால்
நாத்திகவாதியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


என்னை பொறுத்தவரையில் கமல் எப்பொழுதும் மூட நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு தான்.
கமல் ஆத்திகம் கதைத்திருந்தால் தமிழ் நாட்டினர் அவரை (ஒரு சிறந்த நடிகராக இருந்த போதும்)
இப்போது ஏற்றுக்கொண்ட அளவிற்கு ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்க‌ள்.

நாத்திக வாதிகளின் (பகுத்தறிவு ??) நாயகனாக காட்டிக்கொள்ளும் பெரியார் பட நாயகன்
சத்தியராஜ் மகன் சிபி கல்யாணம் கூட ஆத்திக முறைப்படி தாலி கட்டி தான் நடைபெற்றது
என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவரோ பெண் வீட்டாரின் விருப்பத்திற்கு தடை
சொல்ல விருப்பமில்லை என்று சொன்னார். அவரின் வீட்டிலேயே இப்படி இருக்கும் போது
ஊருக்கு உபதேசம் என்பது வேடிக்கை. பகுத்தறிவாளிகள் அதை கண்டும் காணாதது போல்
விட்டுவிட்டார்கள்.

"கமலும் தசாவதாரத்தில் கடவுள் இல்லை என்று தான் சொல்லவில்லை" என தெளிவாக (???)
கூறிவிட்டார். நாத்திகவாதிகளுக்கு கமலை இழக்க விருப்பம் இல்லை என்பது தான் உண்மை.

வருண் said...

****என்.இனியவன் said...
பகுத்தறிவு வாதமும் நாத்திகவாதமும் ஒன்று என பலரும் குழம்புவதும், அடுத்தவர்களைக் குழப்புவதும்
வேடிக்ககை. ஆத்திகத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் பகுத்தறிவுவாதியாக இருக்கிறார்கள் என்றால்
நாத்திகவாதியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.***

இங்கே குழப்புவது மற்றும்குழம்புவது நீங்கதான். கடவுளை பகுத்தறிந்தால் கடவுள் இல்லை என்றுதான் வரும்.

***கமல் ஆத்திகம் கதைத்திருந்தால் தமிழ் நாட்டினர் அவரை (ஒரு சிறந்த நடிகராக இருந்த போதும்)
இப்போது ஏற்றுக்கொண்ட அளவிற்கு ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்க‌ள்****

இதென்ன புதுக்கதை விடுறீங்க. ஆத்தீகராக இருந்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க அண்ணா?

வருண் said...

***நாத்திக வாதிகளின் (பகுத்தறிவு ??) நாயகனாக காட்டிக்கொள்ளும் பெரியார் பட நாயகன் சத்தியராஜ் மகன் சிபி கல்யாணம் கூட ஆத்திக முறைப்படி தாலி கட்டி தான் நடைபெற்றது என்பது பலருக்கும் தெரியும்.****

அப்படியா? தமிழ் முறைப்படி நடக்கலையா? என்ன கொடுமை சார் இது? :(

வருண் said...

***ஆனால் அவரோ பெண் வீட்டாரின் விருப்பத்திற்கு தடை
சொல்ல விருப்பமில்லை என்று சொன்னார். அவரின் வீட்டிலேயே இப்படி இருக்கும் போது
ஊருக்கு உபதேசம் என்பது வேடிக்கை. பகுத்தறிவாளிகள் அதை கண்டும் காணாதது போல் விட்டுவிட்டார்கள்.***

அப்போ சிபி, திருமதி சத்யராஜ் எல்லோரும் நாத்தீகர்களா?

வருண் said...

***கமலும் தசாவதாரத்தில் கடவுள் இல்லை என்று தான் சொல்லவில்லை" என தெளிவாக (???)
கூறிவிட்டார். நாத்திகவாதிகளுக்கு கமலை இழக்க விருப்பம் இல்லை என்பது தான் உண்மை.***

அப்போ கடவுள் இருக்கார்னு சொல்லாமல் சொல்லீட்டாரா?

பாவம் நாத்தீகவாதிகள். சத்யராஜ், கமல் போன்ற வெறும் மண் குதிரைகளை நம்பி "பகுத்தறிவுக்கடலில்" இறங்கினார்கள். குதிரையெல்லாம் கரைந்து விட்டதுகள் போதும். :(

butterfly Surya said...

இந்திய சினிமாவில் தன்னை எப்படியாவது நிலை நாட்ட கமல் செய்யும் அதீத முயற்சிகள் தான் அவரது திரைப்படங்கள். அது தத்தம் ஒவ்வொருவருக்கும் தேவையானது தான். அவர் நாத்திகர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆத்திகர் அல்ல.

சினிமாவில் அவர் சாதித்து விட்டது ஏராளம். குப்பை படங்கள் வரை கொடுத்தாகிவிட்டது. அன்பே சிவம்,ஹேராம், குருதிபுனல், MMKH, பேசும் படம் போன்ற அற்புதத்தையும் கொடுத்தவர் அவரே.

எண்ணிலடங்கா வலைபதிவர்கள் பிடித்த திரைபபடங்களில் அன்பேசிவம் முதல் இடம் பெற்றுள்ள்ளதை பார்க்கலாம்.

Yes.He is a businessmen. But not unethical. He wants to prove and sutatin in this hard core competetion. He must do some compromise on that. Because huge, huge amount is invested in Tamil Cinema today.

இது காலத்தின் கட்டாயம். அதற்காக அந்த அற்புத கலை ரசிகரை கேவலமாக சித்தரிப்பது மிக வருத்தம் தான்.ஆனால் தமிழனுக்கே உரிய மிகச்சிறந்த பண்புகளில் ஒன்று Negativism. Charu is not a critic to comment about KH. He is also like சோ.. who commenting about indian politics for 30 years and nothing happen. இதுவும் ஒரு வகை பிழைப்புவாதம். எதுவும் செய்யாமல் சும்மா கேலியும் கமெண்ட் அடித்தே வாழ்க்கையை ஒட்டுவது.

ஆனால் அவர் அதெற்கெல்லாம் கவலை படுபவர் அல்ல கமல். He is a "Don't Care Master.

அதனால் தான் அவர் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

தான் சம்பாதித்த பணத்தை மீண்டும், மீண்டும் இங்கே தான் கொட்டுகிறார். கல்யாண மண்டபமோ, கல்லூரியோ கட்டி கொள்ளை அடிக்கவில்லை.

அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் தான் நேசிக்கும் சினிமா தான் எனக்க்கு எல்லாம்.

இரண்டு முறை திருமண வாழ்க்கையில் தோற்றேன் ஆனால் சினிமாவில் தோற்க மாட்டேன் என்கிறார்.

இரண்டு வருட கடுமையான உழைப்பில் உருவானது தசாவதாரம்.

அனைத்து சினிமா சம்பந்தபட்ட நடிகர்கள், நடிகைகள், டெக்னிஷியன்கள் பார்த்த்து பார்த்து பூரித்து போய் பாராட்டுவதை நானே நேரில் கண்டு வியந்து போனேன்.

தான் சமைத்த உணவு தனக்கே பிடிக்கவில்லையென்றால் மற்றவர்கள் எப்படி உண்ணுவார்கள் அது போல எனக்கு பிடித்த ரசனை மிகுந்த திரைபப்டங்களே மக்களுக்கு காட்டுகிறேன். நான் அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடைய மாட்டேன். எனது ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது என்கிறார்.


தசாவதாரம் அலை தமிழகத்தை மட்டுமே அடித்தது என்று நினைத்தால் அது இந்தியாவையே ஆட்டிப்பார்த்திருக்கிறது.

கூகுள் இந்தியாவில் 2008ல் அதிகம் தேடப்பட்டவைகளில் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் படங்களின் வரிசையில் தேடப்பட்டவைகளில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது தசாவதாரம். இந்தியா முழுதும் தமிழகத்தை திரும்பிப்பார்க்கச் செய்திருக்கின்றது தசாவதாரம் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி

முதல் பத்து இடங்களை பிடித்ததில் தசாவதாரம் மட்டுமே தமிழ் படம் மற்ற அனைத்தும் ஹிந்திப்படங்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஹிந்தி பேசும் தொகையை கணக்கில் எடுக்கும் போது தமிழ் படம் ஒன்று இந்த அளவுக்கு முன்னிலையில் தேடப்பட்டுள்ளது சாதாரணமான விடயம் இல்லை. அதுவும் இரண்டாவது நிலையில்.


பத்து பைசா செலவில்லாமல் முன் பின் தெரியாத சுமார் 10 - 15 பேர் படிக்கும் வலைப்பூக்காக இவ்வளவு சிரம்ப்படும் வலைப்பதிவினர் கோடிக்கணக்கான மக்க்ளை சென்றடைய பல கோடிகள் புரளும் சினிமா சென்றடையவும் தன்னை நிலைநாட்டவும் அவர் எவ்வளவு சிரமப்ட்டிருப்பார் என எண்ணி பார்க்க வேண்டும்.

வருண் said...

வாங்க வண்ணத்துப்பூச்சியார்!

***அவர் நாத்திகர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆத்திகர் அல்ல.***

சரி அவர் நாத்தீகர் இல்லைனு ஒத்துக்கொண்டதே மிகப்பெரிய முன்னேற்றம்தான்!

------------
மற்றபடி உங்கள் தசாவதாரத்தின், மற்றும் கமலஹாசனின் திறமையையும் பற்றி நீங்கள் விவரித்ததில் நான் எதுவும் எதிர்த்து சொல்வதாக இல்லை.

என்னுடைய வருத்தமெல்லாம், மதவாதிகளையும், மதவெறியர்களையும் தசாவதாரம் சந்தோஷப்படுதிவிட்டதே என்பத்தான்!

------------------

இன்னொரு விசயம், சினிமாவை சினிமாக எடுத்துக்கொள்ளனும் என்று சொல்லும் பலர், கமலஹாசன் தன்னை "உலகனாயகன்" என்று பறை சாற்றிக்கொள்வதையும், முதலில், "பகுத்தறிவுவாதி" தான் என்று சொல்வதையும் மட்டும் "சினிமா வாக" எடுக்காமல் கமல்ஹாசனே சொல்வதா எடுத்துக்கொள்வதுதான் பெரிய வேடிக்கை!

When it is a fiction, let the WHOLE MOVIE be fiction. But, People take some dialogues (from sone rationalist characters) as his personal opinion and some are not according to their convenience. That sounds ridiculous!

வால்பையன் said...

:)


மேலும் பல நடிகர்களை பற்றி எழுதி அவர்களையும் பெரியாளாக்க வேண்டும் என்பதே என் அவா!

வருண் said...

வாங்க வால்பையன்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


நான் ஒரு ரகசியம் சொல்றேன்...

உங்களுக்கு நம்ம கமல ரொம்ப பிடிக்குதுங்க! :) :) :)

வால்பையன் said...

//உங்களுக்கு நம்ம கமல ரொம்ப பிடிக்குதுங்க! :) :) :)//

அவுங்கவவுங்க தொழிலை ஒழுங்காக செய்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நான் அகிலாண்ட நாயகன் அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் மன்றத்தில் பொது செயலாளர் பதவியில் இருக்கிறேன்.

அவர் புகழை தவிர வேறு யார் புகழையும் இந்த வாய் பாடாது

:)

வருண் said...

***நான் அகிலாண்ட நாயகன் அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் மன்றத்தில் பொது செயலாளர் பதவியில் இருக்கிறேன்.***

அடிக்க வராதீங்க! எனக்கு இவர் பற்றி ஒண்ணுமே தெரியாது :(

வால்பையன் said...

//எனக்கு இவர் பற்றி ஒண்ணுமே தெரியாது :(//

இரவில் சூரியன் தெரியாமல் இருப்பது இயல்பே!

விடியட்டும் அவரது புகழ் பிரபஞ்சத்தை அடையும்!

வருண் said...

அவர் படம் "நாயகன்" பார்க்கனும் முதலில். பார்த்துவிட்டு சொல்றேன் :)

வால்பையன் said...

//அவர் படம் "நாயகன்" பார்க்கனும் முதலில். பார்த்துவிட்டு சொல்றேன் :) //

அதற்குள் அவரது அடுத்த படமான தளபதி வந்து விடும்.

மிகுந்த பொருட்செலவில் தற்பொழுது கும்பகோணத்தில் படபடிப்பு நடந்து வருகிறது.

இடையில் கோணங்கி தனமாக தி.மு.க.விற்கு பிரச்சாரம் செய்ய திருமங்கலம் சென்று விட்டதால் சிறு தடங்கல்

வந்துததும் வரும்

எதுன்னு கேக்குறிங்களா
அட அதாங்க!!

வருண் said...

****வால்பையன் said...


இடையில் கோணங்கி தனமாக தி.மு.க.விற்கு பிரச்சாரம் செய்ய திருமங்கலம் சென்று விட்டதால் சிறு தடங்கல்

வந்துததும் வரும்

எதுன்னு கேக்குறிங்களா
அட அதாங்க!!

2 January, 2009 9:46 AM ****

நாசமாப் போச்சு போங்க! இது மாதிரி காரியம் செய்தவர்கள் வளர்றது ரொம்ப கஷ்டம் ங்க!

அது என்ன காரணமோ என்ன விதியோ, அதுவும் தி மு க விற்கு ஜால்ரா அடிக்கிற இளம் நடிகர்கள் எல்லாம் சீக்கிரம் மங்கிவிடுவார்கள்! :( :(

tekvijay said...

இந்த தாசவதாரத்தை இன்னும் நீங்கள் விடவில்லையா ?!?

1) நம்பி பாத்திரம் ஆத்திகர்களயும், மதவெரியர்களையும் திருப்திபடுத்த படைத்ததல்ல. கமல் அதில் நடித்ததும் அதற்காக அல்ல.

2) வருண் said... என்னுடைய வருத்தமெல்லாம், மதவாதிகளையும், மதவெறியர்களையும் தசாவதாரம் சந்தோஷப்படுதிவிட்டதே என்பத்தான்!

ஆத்திகர்கள் எல்லோரும் மத வெரியர்கள் இல்லை. அப்படி பார்த்தால் என் தாய் கூட மதவெறியர் தான்!!

3) கமல் Fletchஎர் ஆகவும் புஷ் ஆகவும் கோட தான் நடித்தார். எனவே அவர் அமெரிக்க அண்ணனையும் அவர்களின் கொள்கைகளயும் ஆதரிக்கிறார் என்று சொல்வீர்களா?? சிவாஜி கூட நவராத்திரியில் ஒரு திருடன் பாத்திரம் செய்தார். அதனால் அவர் திருட்டை ஆதரிக்கிராரா என்ன?? கோவிந்த் பாத்திரம் மட்டுமே கமல் நிஜ வாழ்க்கையில் உள்ள பாத்திரம். பாட்டி, பல்ராம், பொன்ர பாதிரஙகளை கோவிந்தே மதிக்காதது போன்ரு கதை அமைந்துள்ளது. இதில், பாட்டி பழுத்த பெருமாள் பக்தை.

4) //கமலஹாசன் நடித்த "நம்பி ராஜன்" என்கிற மதவெறி பிடித்த ஒரு வெறியன் பாத்திர //

இதுவும் தப்பு. நம்பி ஒரு விஷ்ணு வெரியன். அதனால் யாருக்கு என்ன ப்ரச்சனை? நான் கூட ஒரு கமல் வெரியன். என்னால் யாருக்கு என்ன நஷ்டம்??? அளவுக்கு அதிகமான ப்ரியத்தை தான் நான் வெறி என்ரு சொல்லுகிரேன். அப்படிபார்த்தால் என் பொண்டாட்டி மேல் கூட தான் நான் ரொம்பவும் காதலாக இருக்கின்றேன். எனவே நான் ஒரு பொண்டாட்டி வெறியன்கூட தான். இதனால் யாருக்கு என்ன நஷ்டம்?

5) மேலே சொன்ன வெறி அதிகமான அன்பினால் வருவது. ஆனால் சைவ மன்னன் குலோத்துஙன் (நெப்போலியன் பாத்திரம்) தான் வெறியன் பாத்திரம் என்று சொல்லவேண்டும். நம்பி, விஷ்ணுபக்தனாக வந்தாலும், அவர் எப்போதும் சைவத்தை மட்டம் தட்டி பேசவில்லை? ஆனால் குலோத்துஙனோ, பெருமாள் சிலையை கல் என்ரான். அதை கடலில் வீசினான். சைவத்துக்கு மாற மறுத்த நம்பியையும் கடலில் வீசி கொன்றான். இந்த வெறி தான் தவறு

6) க‌மல் நம்பியாக நடித்ததற்கு ஒரு காரணம் ராமானுஜர். அவர் கீழ்குல மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க போராடினார். அவர்களுக்கு பல நன்மையும் செய்தார்.எனவே அவர் ராமானுஜரை உதாரணியாகக்கொண்டு நம்பி பாத்திரம் படைத்தார்.

7. கடவுள் இருக்கிராரா இல்லையா ‍ கமல் குழப்புகிராரா??

குசேலன் வெற்றி இல்லை என்று நான் சொல்லவே இல்லை. வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

இங்கே நான் குசேலன் வெற்றி என்கிறேனா தோல்வி என்கிரேனா?

8. பெருமாள் கடலில் இருந்து மீள்வது ஆத்திகமா விஞ்ஞானமா?? இரண்டு பார்வைகளும் எடுத்துக்கொள்ளலாம். கமல் இதை விஞ்ஞான ரீதியில், பெருமாள் சிலை என்ற கல், டெக்டானிக் பலகைகளை அசைத்து அது 800 ஆண்டுககுக்குப்பின் சுனாமியினால் கல் வெளியாருகிரதென்று சொல்கிரார். ஆத்திக ரீதியில், இதை கர்மா என்று சொல்ல வருகிரார். இந்த கர்மா மூலமாக, 12 ஆம் நூற்றாண்டில் பிரிந்த நம்பி‍ கோதை 21 ஆம் நூற்றாண்டில் கோவிந்த் ஆண்டாள் ஆக சேருகின்றார்கள் என்பதாக காட்டி இருக்கிரார்.

இது ஒன்று மட்டும் compramஇசெ போல் தெரிந்தாலும், கமல், இரு தரப்ப்பினரும் அவரவர் இஷ்டம் போல் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்.

9. இருதரப்பினரும் செய்யும் உண்டு இல்லை என்ற வாதம், பெரும்பான்மைக்கு பகுத்தரிவு வரும் வரை தீரவே தீராது ‍என்று கோவிந்த் சொல்வதாக முடிகிரது படம். இங்கே யார் பெரும்பான்மை? ஆத்திகவாதிகள் தான்! அவர்களுக்கு பகுத்தரிவு இல்லை என்கிரார்.

சரி, பகுத்தரிவு என்று கமல் சொல்வது எதை? கடவுள் இல்லை என்பதையா?? நிச்ஷயம் இல்லை. அவர் சமீபகாலங்களில் சொல்வது இதைதான் ‍ மனிதன் இருக்கின்றான் என்பதை மறந்துவிட்டு கடவுள் உண்டு இல்லை என்ற வாததிற்குள் போக வேண்டிய அவசியமே இல்லை.

கோவிந்த் பாத்திரம், என்னதான் கடவுளை கிண்டலடிதாலும், சக மனிதர்களை நேசிக்கவும் அவர்களுக்கு உதவவும் தவறவில்லை என்பதையும் படம் முழுக்க பார்க்கலாம்.

பி.கு:‍ கமல் ஹாசனுக்கு நீங்கள் பட்டம் கொடுக்கலாம். ஏன் அவர் படைப்புகளை கேவலமாக திட்டக்கூட செய்யலாம். ஆனாம் அவருக்கு இனிஷியல் போட நீங்கள் யார்??

ps: I am the tamilan\தமிழன் who posted - in your dasavatharam post. This time, i am not posting as anonymous!