Friday, February 20, 2009

சுப்பிரமணியபுரம் vs நான் கடவுள்

ஒரு விசயம் சொல்றேன் கேட்டுக்கோங்க! என்னனா, நீங்க எதுலயுமே பெரிய ஆளா ஆகம, பிரபலமாகாம இருப்பது நல்லது. ஒருவர் பிரபலமானதும் அவருக்கு திமிர் அதிகமாவது ஒருபுறமிருக்கட்டும், அவரிடம் இருந்து மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாயிடும். இந்த எதிர்பார்ப்பு அதிகமானதும் வாசகர்கள் ரசிகர்கள் விமர்சகர்களை திருப்திப்படுத்துவது ரொம்பக் கடினம்.

சினிமா உலகில் இதை கண்கூடாகப் பார்க்கலாம். இயக்குனர் மணிரத்னத்தின் மெளனராகம், நாயகன் போன்ற படங்கள் அவர் பிரபலமாகுமுன்பு வந்தன. அதுக்கு முன்னாலே வந்த இதயக்கோயில், பகல் நிலவெல்லாம் இவர் இயக்கியதுதான். அவைகளை யாரும் பெருசாக்கூட பேசலை. கோவைத்தம்பியின் இதயக்கோயில் பார்த்துட்டு, ஆர். சுந்தர்ராஜன் (இவர்தான் கோவைத்தம்பி படமெல்லாம் வரிசையாக எடுத்தார்) படங்கள் அளவுக்கு இல்லை என்று சொன்னார்களாம்! ஆனால் மெளனராகம், நாயகனுக்கு அப்புறம் மணிரத்னம் எங்கோ போயிட்டார். அக்னிநட்சத்திரம், தளபதி போன்றவைகள் கமெர்ஷியல்லா பெரிய ஹிட் ஆச்சு.

அதுபோல்தான் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, அவர் யாருனே தமிழ் சினிமாவுக்கு தெரியாதபோது வந்த படம். அவருடைய 5 வது படம் நிழல்கள்தான் தோல்வியைத்தழுவியது.

பாலாவின் சேது, அதேபோல்தான் சசியின் சுப்பிரமணியபுரமும் போன்றவையும், அதில் உள்ள குறைகளை ஒதுக்கி பாராட்டப்பட்டன. இப்படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு பெயரும் புகழும் வாங்கி தந்தன.

ஆனா ஒருவர் பிரபலமானவுடன் மக்கள் எதிர்பார்ப்பு அளவுக்கு மிஞ்சிவிடும். மணிரத்னம் இன்னைக்கு தமிழ்ப்படம் தைரியமாக எடுக்க முடியலை. அவரால் தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. அதனால் ஹிந்திக்கு ஓடிவிட்டார்! சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ப்படங்கள் எதுவுமே க்ரிடிக்க்லாகவோ கமர்ஷியலாகவோ வெற்றியடையவில்லை.

இப்போ பிரபலமாகிவிட்ட பாலாவின் நான் கடவுளுக்கு சசியின் சுப்பிரமணியபுரத்திற்கு கெடச்ச வரவேற்பு கிடைக்கவில்லை! மாயாவி சொன்னதுபோல சுப்பிரமணியபுரம் ஒரு ப்ளாக் பஸ்ட்டர். இந்தப்படமும் செட்டிங்ஸ் எல்லாம் போடாமல் பாலாவின் ஸ்டயிலில் எடுக்கப்பட்டது. ஆனால் திரைக்கதையில் சாதாரண மனிதர்களைப்பற்றி மட்டுமே சுற்றி இருந்தது கதை. அவர்கள் உணர்ச்சிகள் எல்லாம் ரொம்ப புரியும்படி இயற்கையாக இருந்தது. சினிமாத்தனம் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சசி ஒரு "அந்நியனையோ" அல்லது "அகோரியையோ" காட்டப்படவில்லை!

ஆனால் பாலாவிடன் நான் கடவுள் ஒரு 3 வருடம் "மாஞ்சி மாஞ்சி" எடுக்கப்பட்ட படம். இது பாலாவின் 4 வது படம். இதனால் பாலாவிடம் எதிர்பார்ப்பு ரொம்ப ரொம்ப அதிகமானது. அது ஒரு பெரிய பிரச்சினை இந்தப்படத்துக்கு. என்னைப்பொறுத்தவரையில் இன்னொரு காரணம் என்னவென்றால் ஒரு சாமியாரை பெரிய ஹீரோவாக காட்டியது. சுப்பிரமணியபுரத்தில் வருகிற அனைத்துமே இயற்கையில் நடப்பது. அதில் எந்தவிதாமான செயற்கைத்தனமும் இல்லை. ஆனா, இங்கே ஒரு அகோரி சாமியார் வந்து காப்பாத்துறார். இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்கிற இயற்கையான ஒண்ணு இல்லை. வீட்டுக்கு நடுவில் உக்காந்து கஞ்சா கசக்கினால், பெத்த மகனே என்றாலும் செருப்பால அடிவிழும். பாசம், அன்பு என்றால் என்னனே தெரியாத ஒரு ஆளை பெத்த அம்மா பார்த்து உருகுவதெல்லாம் சும்மா சினிமாத்தனம். அதுபோக சாமியார்னாலே பொதுவாக என்னைப்போல மக்களுக்கு மற்றும் நம்ம திராவிட பாரம்பரிகத்தில் இருந்து வருபவர்களுக்கு பிடிக்காது.

சாமியார் என்றாலே ஏமாற்றுக்காரகள் என்று நம்புகிறது நம் தமிழ் மண்ணில் வாழும் மறத்தமிழர்கள்.

நம்ம தந்தை பெரியார் அகோரி சாமியார் ஹீரோவைப் பார்த்தா என்ன பண்ணுவார்?

பாராட்டுவாரா?

கெட்டவார்த்தை சொல்லி திட்டுவாரு!

பாலாவையும் சேர்த்து திட்டுவாரு! இல்லைனு சொல்ல யாருக்காவது தில்லு இருக்கா?


இப்படி இருக்கும் நம் தமிழ் மண்ணில், மறத்தமிழர்கள் வாழும் சூழலில் ஒரு காசியில் வளர்ந்த தமிழ் சரியாகப் பேசத்தெரியாத ஒரு சாமியார் (அதுவும் கஞ்சா குடித்து மூளையை எரித்த சாமியார்) வந்து இல்லாத உணர்ச்சிகளை காட்டி காப்பாத்துவதுபோல் இருப்பது தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு வட இந்திய சாமியார் வந்து நம்ம தமிழர்களுக்கு புத்திபுகட்டுவது போல இருக்கு. நவீன காலத்து ராமாயணமானு தோனுது. அதுலதான் நம்ம தமிழர்களை இவ்வளவு கேவலமா காட்டுவார்கள்.

சுப்பிரமணியபுரம் ஒரு ப்ளாக் பஸ்ட்டர்! காரணம் அதில் வந்த ஹீரொ ஒரு சாதாரண தமிழ் சண்டியர். நான் கடவுள் அதுபோல் ஒரு ப்ளாக் பஸ்ட்டராக முடியவில்லை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காதுனு நினைக்கிறேன்!

பின்குறிப்பு: நான் கடவுளை பிடிச்சு ரொம்பவே தொங்கியாச்சு, இதை விட்டு தொலையலாம்னு இருந்த என்னை தூண்டிவிட்டு இந்தப் பதிவை எழுத வைத்த பெருமை, திரு. மாயாவி மற்றும் திரு. மணிகண்டனைச் சேரும்

8 comments:

mayavi said...

Hi Varun,

really a good blog. as u said Bala has set up his own expectations and he is struggling to fulfill his expectations.

like u exactly said, manirathnam is struggling to fulfill tamil audiences expectations. the problem is not with our directors alone. James Cameroon who took Titanic is yet take a movie after that, when asked why he has not taken a movie after more than 12 yrs .. he said i am afraid as media and ppl will expect another Titanci which i can never give...
Naan Kaduval is a OK movie but the probelm is Bala's behaviour during the movie production chnaging 4 heroines ... chnaging 2 heroes.. 3yrs of production... and after all these u dont expect a Naan Kaduval. Hope he can do a better picture silently.

மணிகண்டன் said...

நான் ரெண்டு படமும் பாக்கல. அதுனால இதுல ரொம்ப கமெண்ட் பண்ண விருப்பம் இல்ல. (ஒரேவொரு அப்படியாவ தவிர)

***
அன்பு என்றால் என்னனே தெரியாத ஒரு ஆளை பெத்த அம்மா பார்த்து உருகுவதெல்லாம் சும்மா சினிமாத்தனம்.
***
அப்படியா ?

வருண் said...

***mayavi said...
Hi Varun,

really a good blog. as u said Bala has set up his own expectations and he is struggling to fulfill his expectations.

like u exactly said, manirathnam is struggling to fulfill tamil audiences expectations. the problem is not with our directors alone. James Cameroon who took Titanic is yet take a movie after that, when asked why he has not taken a movie after more than 12 yrs .. he said i am afraid as media and ppl will expect another Titanci which i can never give...
Naan Kaduval is a OK movie but the probelm is Bala's behaviour during the movie production chnaging 4 heroines ... chnaging 2 heroes.. 3yrs of production... and after all these u dont expect a Naan Kaduval. Hope he can do a better picture silently.

21 February, 2009 1:34 AM ***

I agree with every word of your response! Thanks, mayavi! :-)

வருண் said...

****மணிகண்டன் said...
நான் ரெண்டு படமும் பாக்கல. அதுனால இதுல ரொம்ப கமெண்ட் பண்ண விருப்பம் இல்ல. (ஒரேவொரு அப்படியாவ தவிர)

***
அன்பு என்றால் என்னனே தெரியாத ஒரு ஆளை பெத்த அம்மா பார்த்து உருகுவதெல்லாம் சும்மா சினிமாத்தனம்.
***
அப்படியா ?

21 February, 2009 4:17 AM****

In dalapathy, the mother will dump her son and cry everyday. It will be shown in the movie from beginning that she cries. Even after that surya's (rajni) meeting with his mom and that sentiments did not make a great impact. Here, it hardly made any. Anyway, that is my opinion!

ஸ்ரீதர்கண்ணன் said...

(அதுவும் கஞ்சா குடித்து மூளையை எரித்த சாமியார்)

என்ன வருண் உங்களை அந்த கஞ்சா ரொம்ப பாதிச்சு இருக்கும் போல :))))))

வருண் said...

**ஸ்ரீதர்கண்ணன் said...
(அதுவும் கஞ்சா குடித்து மூளையை எரித்த சாமியார்)

என்ன வருண் உங்களை அந்த கஞ்சா ரொம்ப பாதிச்சு இருக்கும் போல :))))))

21 February, 2009 11:38 AM**


ரஜினிகாந்த் சினிமாவில் ஹீரோவா வந்து சிகரெட் குடித்தால் தப்புனு குதிக்கிறோம்! ஆனா நம்ம ஊர் பாலா படத்தில், அம்மாவை கஞ்சா வாங்கி வர்ச்சொல்லி, அப்பாவை கஞ்சாவை கசக்கி பீடியில் போடச்சொல்லிக் குடிச்சா (அதுவும் ”கடவுள்”) நம்ம அதை தப்புனு சொல்ல மாட்டோம்!

அதுதான் நம்ம தமிழர்களின் தனிப்பட்ட குணம்!


Cigarette has "nicotine" while mirjuvana (ganja) has
"Tetrahydrocannabinol (THC) as the main active compound!

In tamizhians perspective, the former is harmful to health but the latter is good for health as it is smoked in a movie which was produced by great Bala!

ஸ்ரீதர்கண்ணன் said...

வருண் நான் இன்னும் படம் பார்க்கவில்லை அதனால் அந்த காட்சியின் தாக்கத்தை உணர முடியவில்லை.. ரிலாக்ஸ் ப்ளீஸ் :)

வருண் said...

ஸ்ரீதர்கண்ணன்!

இல்லைங்க, நான் பொதுவாகத்தான் எழுதினேன். நீங்க கேட்டதுக்கப் புறம்தான் எனக்கு ஏன் அந்த சீன் அவ்வளவு பிடிக்கலைனு புரிந்தது.:-) அதான் எல்லாத்தையும் எழுதினேன்.

Otherwise,I am cool, கண்ணன்! :)

படம் பாருங்க கண்ணன்! எனக்கு பிடிக்கலைனா உங்களுக்கு ப்டிக்கக்கூடாதுனெல்லாம் ஒண்ணும் இல்லையே :-)