Monday, March 16, 2009

வாழ்க்கையில் நடுக்கமா?

"அப்பா! எப்படி இருக்கு இந்த அவுட்ஃபிட்" என்றாள் அபர்னா, தன் அரைகுறை மழலைத் தமிழில்.

"யு லுக் பியூட்டிஃபுல், டியர்" என்றார் ராஜன்.

"தேங்க் யு டாட்" என்று புன்னகைத்தாள், அபர்னா.

அவளுக்கு 16 வயதாகிறது. ஹை ஸ்கூல் போய் வருகிறாள். இப்போது அவள் போட்டிருந்தது ஒரு சின்ன மினி ஸ்கர்ட். உதட்டில் லிப்ஸ்டிக், தலைமுடியை விரித்துப்போட்டு ஏதோ மாடல் போலிருந்தாள்! படிப்பது போக மற்ற நேரங்களில் அவள் நிலைக்கண்ணாடி முன்னால்தான் நின்றாள். அழகாக இருந்தாள் அபர்னா.

இதுபோல் இளம் பெண்கள் மேக்-அப் போடுவது, மினிஸ்கர்ட் போடுவதை எல்லாம் பார்த்து ஒரு காலத்தில் வெறுத்தவர் ராஜன். இவர் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது சேலைகட்டிய அல்லது சல்வார் அணியும் பெண்களை மட்டும்தான் நல்ல பெண்களாக மதித்தார். இதுபோல் மினிஸ்கர்ட் போட்டு, அரைகுறையாக வரும் பெண்களைப்பற்றி கேவலமாகப் பார்ப்பவர், பேசியவர் ராஜன். இப்போது அவர் மகள் அவர் எதை தவறு என்று பேசினாரோ வெறுத்தாரோ அதையே அதைவிட பலமடங்கு மோசமாக செய்கிறாள் என்று நினைத்துப் பார்த்தார். தன் மகள் என்பதலோ என்னவோ அப்படி ட்ரெஸ் பண்ணுவது மேக்-அப் போடுவது தவிர மகளிடம் அப்படி எதுவும் தவறான எண்ணங்கள் இருப்பதுபோல் தோன்றவில்லை அவருக்கு. ராஜன், படிப்புவிசயத்தில் #1 ஆக இருந்தவர். ஆனால் வாழ்க்கை பாடங்களில் ஒர் மக்காகவே வளர்ந்து வந்திருந்தார். அவருக்கு பாடங்களை சரியாக சொல்லிக் கொடுத்தது அவர் மனனவியும், மகளும்தான். அதுவும் இப்போத்தான் அதை ஒழுங்காகக் கற்றுக்கொண்டு வருகிறார்.

அபர்னாவிடம் அவர் மனதில் தோன்றியதை, "இதுபோல் உடல் தெரியும் ஸகர்ட் போடாதே! ஜீன்ஸ் போடு" என்று சொன்னால், அவளுக்கு கோபம் வரும்!

"Why?" "It is really hot outside, I cant wear Jeans today" என்பாள்.

அவளிடம் வாதாடி இவர் வெற்றி பெறுவதென்பது நடக்கிற காரியம் இல்லை. She can defend herself so well, always!

தன் கல்லூரியில் படிக்கும் பெண்களின் உடுப்புகளை வைத்து அவர்களை இவர் கீழ்த்தரமாக யோசித்ததுபோல பெண்கள் நினைப்பதில்லை என்பதை மகள் சொல்லிக்கொடுக்கும் பாடம் மூலம்தான் கற்றுக்கொண்டார், ராஜன்.

திடீரென்று, "Will you allow me to date American boys, dad?" என்றாள் அபர்னா.

"Why do you want to date?'

"Well, how will I find my life partner then? Please dont tell me to do arranged marriage. It does not make any sense to me, dad. No offense to you or mom"

"What if I say, you should date only Indians?"

"Indians think that they are great but they are not! They lack social skills and open mind. I dont think I can live with an Indian, dad. It wont just work for me"

"I am an Indian too, Aparna!"

"You are an exception, dad!" she smiled.

"Then why do you ask me if you dont want to listen what I say?"

"I dont know. It will make me happy if you understand and approve of it, dad"

"First concentrate in your studies! Finish your college, get a job, then you can do all these dating and stuff, Aparna"

"Are you kidding me, dad ? I cant wait that long! I would not ask your persmission then because I will be a major then. Anyway, I have to be going now. Love you dad" என்று வெளியே போனாள். அவள் தோழி ஒரு காரில் வந்து அவளை பிக் அப் பண்ணி சென்றாள்.

"பை" என்று சொல்லிவிட்டு மனைவியுடன் கோயிலுக்கு போக ரெடியானார் ராஜன். அவருக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இருந்ததில்லை. இந்த பாழாப்போன அமெரிக்காவில், தன்னால் தன் பெண்ணை சரியான வழியில் வளர்க்க முடியும் என்கிற நம்பிக்கையில்லை அவருக்கு இப்போது. அவள் வாழ்க்கை முழுவதும் அவள் கையில் மட்டும்தான் என்று தோன்றியது. இவரால் தலைகிழாக நின்னாலும் எதுவுமே செய்யமுடியாது! தன்னால் கட்டுப்படுத்தமுடியாத அவள் வாழ்க்கை மற்றும் அவளைப்பற்றி யோசிக்க வேண்டாம் என்று எண்ணிய அவர், மனைவியுடன் சேர்ந்து கோயிலுக்கு புறப்பட்டு போனார்.

தன் "ஐ பாட்" ல பழைய பாடல்களை எல்லாம் டவுன்லோட் செய்து வைத்திருந்தார். கார் புறப்பட்டு ஃப்ரீ வேயில் நுழைந்தவுடன், தன் ஐ பாடை ஆண் பண்ணினார், ராஜன்.

அந்த பழைய பாடல் கலக்ஷனிலிருந்து, "மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?" என்ற பி பி ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியது. அதில் ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ளதாக தோன்றியது ராஜனுக்கு.

6 comments:

அமர பாரதி said...

நிதர்ஸனக் கதை வருண். //Please dont tell me to do arranged marriage// அவர்களை இதை ARRANGED MARRIAGE என்று சொல்வதில்லை. FORECED MARRIAGE என்றே சொல்கிறார்கள்.

அமர பாரதி said...

Sorry. typo. FORECED should be read as FORCED.

வருண் said...

***அமர பாரதி said...
நிதர்ஸனக் கதை வருண். //Please dont tell me to do arranged marriage// அவர்களை இதை ARRANGED MARRIAGE என்று சொல்வதில்லை. FORCED MARRIAGE என்றே சொல்கிறார்கள்.***

வாங்க அமர பாரதி! :-)

உண்மையிலேயே அப்படித்தான் நினைக்கிறார்கள்.

உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

மணிகண்டன் said...

ரொம்ப நாள் கழிச்சி உங்க பதிவுல வரும் போஸ்ட் ஒண்ணு பிடிச்சி இருக்குங்க. நல்ல கதை வருண். அதுக்கு தான் நிறைய பேரு பொண்ணுக்கு 5 இல்லாட்டி 6 வயசுலயே நம்ப ஊருக்கு திரும்பி ஓடி வந்துடறாங்க.

வருண் said...

***மணிகண்டன் said...
ரொம்ப நாள் கழிச்சி உங்க பதிவுல வரும் போஸ்ட் ஒண்ணு பிடிச்சி இருக்குங்க. நல்ல கதை வருண். அதுக்கு தான் நிறைய பேரு பொண்ணுக்கு 5 இல்லாட்டி 6 வயசுலயே நம்ப ஊருக்கு திரும்பி ஓடி வந்துடறாங்க.

16 March, 2009 2:34 PM***

வாங்க மணிகண்டன்! :-)

நம்ம ஊர்லயும் நெறைய மாற்றங்கள் ஆகி இருக்கு இல்லையா மணிகண்டன்?

வருண் said...

***அமர பாரதி said...
Sorry. typo. FORECED should be read as FORCED.

16 March, 2009 1:43 PM***

என் பின்னூட்டத்தில் அதை சரி செய்துவிட்டேன், அமர பாரதி! :-)