Thursday, March 19, 2009

கஞ்சாவையும் சாராயம், சிகரெட் போல் "லீகல்" ஆக்குங்க!

அமெரிக்கா ஒரு மாதிரியான தேசம். என்ன அப்படி வித்தியாசம்? நாய் விற்ற காசு குரைக்காது! என்பதை நம்புபவர்கள். உலகத்தில் அதிகமான அளவு போர்னோக்ராஃபி தயாரிப்பது அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில்தான். பாவப்பணம்னு சொல்றீங்களா? அரசாங்கம் அனுமதித்தால் அது பாவம் இல்லை!

அப்படியா? அப்போ கடவுள்? பைபில்? கடவுள் எங்களை மன்னித்துவிடுவார்! In God we trust! எங்களுக்கு பாவம் செய்ய துணையா இருப்பார்! இல்லை இல்லை! கடவுள் எப்போவும் எங்களுக்கு மட்டும்தான் துணையிருப்பார்! என்பது போல நம்பிக்கை உள்ள முட்டாள்கள் அமெரிக்கர்கள்!

இப்போ என்ன சொல்ல வர்ரீங்க?

கலிஃபோர்னியாவில் கஞ்சாவை லீகல் ஆக விற்கலாமா என்று யோசிக்கிறார்களாம்.

கஞ்சா உடல் நலத்திற்கு தீங்கானதாச்சே? உங்க மூளையை பாதிக்கலாமே?

அப்படியா? அப்போ குடிக்காதீர்கள் என்பார்கள்!

அதெப்படி உடல் நலத்திற்கு தீங்கானதை சட்டவிரோதமில்லாமல் விக்கலாம்? என்று கேட்டால், அதற்கும் பதில் உண்டு!

சிகரெட், அல்கஹால் எல்லாம் என்ன உடல் நலத்திற்கு நல்லதா? அதை விற்கிறோம்! ஒருகாலத்தில் அல்கஹால் விற்பது சட்டவிரோதம் என்று வைத்திருந்தோம், இப்போ அதை தளர்த்தவில்லையா? அது மாதிரித்தானே கஞ்சாவும் என்பார்கள்!

சட்டவிரோதமாக இல்லாமல் விற்றால், அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் வரும் என்று யோசிக்கிறார்களாம். என்னவோ போங்கப்பா! அஹோரி சாமியார்கள் எல்லாம் அமெரிக்கா போகவேண்டியதுதான்!

6 comments:

மணிகண்டன் said...

எங்க ஊர்ல லீகல் தான் ! ஆனா இன்னும் அகோரி சாமியார் யாரும் வரல. ஆனா, நிச்சயமா californiala legalize பண்ணமாட்டாங்க. இங்கயே மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

வருண் said...

***மணிகண்டன் said...
எங்க ஊர்ல லீகல் தான் !***

கனடாவிலேயா இருக்கீங்க நீங்க? இல்லை ஐரோப்பாவா? :)

***ஆனா இன்னும் அகோரி சாமியார் யாரும் வரல.***

இந்தப்பின்னூட்டத்தை வாசிச்சுட்டு உங்க ஊருக்கு வந்திருவாங்க, கவலைப்படாதீங்க! :-))))

**ஆனா, நிச்சயமா californiala legalize பண்ணமாட்டாங்க. இங்கயே மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

19 March, 2009 1:33 PM***

பார்க்கலாம். சீரியஸா ஒரு டிபேட் போய்க்கிட்டு இருக்குனு நெனைக்கிறேன். பார்ப்போம் :-)

☀நான் ஆதவன்☀ said...

அஹோரிங்க மேல அப்படி என்னங்க வெறுப்பு??? என்னமோ அவுங்க மட்டும் கஞ்சா அடிக்கிற மாதிரி....

வருண் said...

சாமியே இருக்கா என்னனு தெரியலை.

அப்படியிருக்கும்போது இந்த காவிச்சட்டை சாமியார்கள் தொந்தரவு தாங்க முடியலை. எந்த நாட்டிலேயும் இந்தச் சாமியார்கள் கெடையாது நம்ம நாட்டைத்தவிர. இதுல அஹோரினா, மனிதனை சாப்பிடுவார்களாம்! கஞ்சா அடிப்பார்களாம்.

இவர்களை ஏன் மதிக்கனும்? ஒரு காரணம் சொல்லுங்க! :-)

ராமலக்ஷ்மி said...

//அது மாதிரித்தானே கஞ்சாவும் என்பார்கள்!//

சொன்னாலும் சொல்லுவார்கள்:(!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
//அது மாதிரித்தானே கஞ்சாவும் என்பார்கள்!//

சொன்னாலும் சொல்லுவார்கள்:(!

27 March, 2009 8:57 AM ***

வாங்க ராமலக்ஷ்மி! :-)

நேற்றுக்கூட சி என் என் ல இது சம்மந்தம்மா ஒரு டிபேட் போய்க் கொண்டிருந்ததுங்க!

நான் சொன்னது மிகை இல்லை. எதுவும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்ப்போம்ங்க!