Saturday, March 21, 2009

நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்!

சும்மா வெள்ளித்திரையில் வர வேண்டியது, 4 சண்டை, 4 டுயட் ஒரு குத்துப்பாட்டு, 4 பன்ச் டயலாக், கொஞ்சம் ஜொள்ளு என்று படத்துக்குப்படம் பிழைப்பை ஓட்டுகிறார் நடிகர் விஜய். சக நடிகர்கள், அஜீத், விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒரு சில படங்களாவது வித்தியாசமாக செய்கிறார்கள். ஆனால் விஜய்?? ஒரு முயற்சிகூட செய்வதில்லை! சூர்யாவுடன் சேர்ந்து நடித்த ஃப்ரெண்ஸ் படத்தில் இவரைவிட இணெக்ஸ்ப்பீயன்ஸ்ட் சூர்யா நல்லா செய்துட்டு போயிட்டார்.

இதுல இவருடைய அப்பா, சந்திரசேகராவுக்கு இவரை வருங்கால முதல்வராக்கனும்னு ஒரு பேராசை! திரு. சந்திரசேகரா! முதல்ல உங்க மகருக்கு நடிக்கவும் தெரியும்னு 4 படம் பண்ண சொல்லாமல், என்ன கொடுமை இது, சந்திரசேகரா?

அஜீத், வரலாறு மற்றும் வாலி போன்ற படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளார்!

சூர்யா, பேரழகன், நந்தா, பிதாமகன், மாயாவி போன் ற படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளார்.

விக்ரம், பிதாமகன், காசி, அந்நியன் என்று பல படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளார்.

சிலம்பரசன் மற்றும் தனுஷ்கூட ஒரு சில வித்தியாசமான ரோல்களில் நடித்துள்ளார்கள்.

ரஜினி மற்றும் எம் ஜி ஆர் கூட நல்ல படங்களில் நடித்து தன் நடிப்புத்திறமையையும் காட்டியுள்ளார்கள். நடிகர் விஜய்போல சும்மா ஒரே மாதிரி ஹீரோ ரோல் வைத்து பிழைப்பு ஓட்டவில்லை.

விஜய் மட்டும் வித்தியாசமாக நடிக்க ஒரு சிறுமுயற்சிகூட எடுக்காமல் இருப்பது அவருடைய வருங்காலத்திற்கு நல்லதல்ல! கமல் ஆடாத டாண்ஸா? இப்படியே டாண்ஸாடியே இன்னைக்கு பொழை ப்பு ஓட்டலாம். ஆனால் எத்தனை நாளைக்கு?? ஒரு நல்ல நடிகராக தொ டர்ந்து பல ஆண்டுகள் நிலைக்க வேண்டுமென்றால் இதெல்லாம் மட்டும் உதவப்போவதில்லை.

விஜய்! நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாகவும் நடிக்க முயற்சி செய்யவில்லை என்றால், உங்கள் எதிர்காலம் இருட்டிக்கும் என்று தோன்றுகிறது. கொஞ்சமாவது வித்தியாசமான ரோலில் நடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால், உங்களை யாரும் காப்பாற்ற முடியாது!

25 comments:

துளசி கோபால் said...

என்னங்க வருண் இப்படிப் போட்டுத் தாக்கிட்டீங்க!!!!!

முதலமைச்சரா ஆகறதுக்கும் நடிப்புக்கும் என்ன சம்பந்தம்?

ஓஹோ....புரிஞ்சுபோச்சு. நீங்க அப்படிச் சொல்லவர்றீங்கதானே:-)))))

வருண் said...

***துளசி கோபால் said...
என்னங்க வருண் இப்படிப் போட்டுத் தாக்கிட்டீங்க!!!!!***

வாங்க டீச்சர்!:-)

ஆமா, எனக்கே ஒரு பக்கம் கஷ்டமாத்தான் இருக்கு :-(

***முதலமைச்சரா ஆகறதுக்கும் நடிப்புக்கும் என்ன சம்பந்தம்?***

அதானே? உண்மைதான் ரெண்டுக்கும் சம்மந்தம் இல்லை. இப்போ எதுக்கு இந்த மாதிரி பொலிடிக்கல் மோட்டிவேஷனுக்கு அவசரம் இல்லை அவசியம், டீச்சர்?

***ஓஹோ....புரிஞ்சுபோச்சு. நீங்க அப்படிச் சொல்லவர்றீங்கதானே:-)))))

21 March, 2009 2:43 PM***

இல்லை டீச்சர், இப்போ இவர் சின்னப் பையனாத்தானே இருக்கிறார்?

ஒரு 10 - 20 வருடம் கடந்த பிறகு அந்த மாதிரி ஏதாவது ட்ரை பண்ணலாம், இல்லையா?

இப்போ கொஞ்சம் வித்தியாசமா நடிக்க முயற்சிக்கவாவது செய்யலாம் னு ஒரு வருத்தம் அவ்ளோதான். :-)

சரண் said...

விஜய் முதல்ல ‘நடிக்க' முயற்சி செய்யணும்.. அப்புறம் 'வித்தியாசமா' நடிக்கறதப் பத்தி யோசிக்கலாம்...

கிரி said...

விஜய்க்கு மார்ச் 2009 மாதம் முழுவதும் "சனி" உச்சத்தில் இருக்கிறார் போல :-))))

வருண் said...

***சூர்யா said...
விஜய் முதல்ல ‘நடிக்க' முயற்சி செய்யணும்.. அப்புறம் 'வித்தியாசமா' நடிக்கறதப் பத்தி யோசிக்கலாம்...

21 March, 2009 4:50 PM ***

வாங்க சூர்யா! :-)

ஆமா, திருப்பாச்சில "வெட்டுனாரு", கில்லில, "வெளையான்டாரு" குருவில "பறந்தாரு" வில்லுல "பாய்ந்தாரு" எந்தப்படத்தில் எப்போ நடிக்கப்போறதா உத்தேசம்னு தெரியலை! LOL!

என்னவோ போங்க! :-)

வருண் said...

***கிரி said...
விஜய்க்கு மார்ச் 2009 மாதம் முழுவதும் "சனி" உச்சத்தில் இருக்கிறார் போல :-))))

21 March, 2009 4:56 PM ***

வாங்க கிரி! :-)

ஆமா, நம்ம நண்பர் ஒருத்தரு விஜய் விசிறி, வெந்த புண்ணுல வேலப்பாச்சியதா சொல்லி கவலைப் பட்டுக்கொண்டு இருக்காரு.:-(

இந்த நேரத்தில் நான் வேற விஜய் யை நடிக்கனும்னு சொல்லி கஷ்டப்படுத்துறேன் :-)))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்க நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் படமெல்லாம் பார்த்திருக்கிறீர்களா.. இல்லையா, அந்த சின்னவயதில்கூட எவ்வளவு சமூகப் பொறுப்புடன் நடித்திருப்பார்

கருப்பன் (A) Sundar said...

ஏன்பா சீக்கிரமா போய் ஒரு நல்ல கண் டாக்டரை பாருப்பா... விஜய் வித்தியாசமான வேடங்கள்ள நடிக்கலைனு இப்படி பொசுக்குனு சொல்லிப்புட்ட!! முதல்ல ஒரு விசயத்தை தெரிஞ்சுக்கனும்... விஜய் நடிக்கிறதே வித்தியாசம் தான். அதுக்கு மேல வில்லுல ராணுவ வீரனா வித்தியாசமான வேஷம் கட்டலையா (மீசையை உற்று கவனிக்கவும்). பேக்கரியில (சீ... இதுக்குதான் லொல்லு சபா ஓவரா பாக்க கூடாதுன்குறது)மன்னிக்கனும் போக்கிரியில கிளைமாக்ஸ்ல போலீஸாக வேஷம் கட்டலையா (அட டிரஸ்ஸை நல்லா உத்துப்பாருங்கப்பா)... இதுக்கு மேல எங்க வருங்கால மொதல்வரை என்னய்யா வேஷங்கட்ட சொல்லுறீங்க????

வருண் said...

****SUREஷ் said...
நீங்க நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் படமெல்லாம் பார்த்திருக்கிறீர்களா.. இல்லையா, அந்த சின்னவயதில்கூட எவ்வளவு சமூகப் பொறுப்புடன் நடித்திருப்பார்

21 March, 2009 8:55 PM***

அப்படியா சுரேஷ்! நான் டிவிடி இல் பார்க்கிறேன். பார்த்துவிட்டு சொல்றேன். :-)

வருண் said...

***கருப்பன்/Karuppan said...
முதல்ல ஒரு விசயத்தை தெரிஞ்சுக்கனும்... விஜய் நடிக்கிறதே வித்தியாசம் தான்.***

அது சரி! :-)))

லோகு said...

ஊரறிந்த உண்மை..

மேலும் விஜய் பற்றிய பதிவுகளுக்கு muttalpaiyan.blogspot.com

வருண் said...

***லோகு said...
ஊரறிந்த உண்மை..

மேலும் விஜய் பற்றிய பதிவுகளுக்கு muttalpaiyan.blogspot.com

22 March, 2009 6:10 AM ***

ரொம்ப மட்டமா இருக்கு நீங்க சுட்டிக்காட்டியுள்ள காட்சிகள்!!!

இவர் அப்பா திரு. சந்திரசேகரா தான் இப்படியெல்லாம் “நல் வழி” காட்டியவரா?

என்னவோ போங்க! :-(

ராஜ நடராஜன் said...

இருக்குற ஆளுக இடிச்சது போதாதுன்னு இப்ப நீங்க வேறயா?

Rajes kannan said...

//சிலம்பரசன் மற்றும் தனுஷ்கூட ஒரு சில வித்தியாசமான ரோல்களில் நடித்துள்ளார்கள்//

அது என்ன ரோல்.

வருண் said...

***TAமிழன் said...
//சிலம்பரசன் மற்றும் தனுஷ்கூட ஒரு சில வித்தியாசமான ரோல்களில் நடித்துள்ளார்கள்//

அது என்ன ரோல்.***

புதுப்பேட்டையில் தனுஷ் ரோல் ஒரு ரியல் சிக் சைக்கோ ரோல். அதுபோல்தான் காதல் கொண்டேனில் வரும் ரோலும்.

அதேபோல், மன்மதனில் சிம்புவுடைய "காதல் வளர்த்தேன்" ரோல் ஒரு மாதிரியான ரோல்.

இதுமாதிரிகூட விஜய் முயன்றதில்லை!

வருண் said...

***ராஜ நடராஜன் said...
இருக்குற ஆளுக இடிச்சது போதாதுன்னு இப்ப நீங்க வேறயா?

22 March, 2009 7:10 AM**

வாங்க நடராஜன்!

என்னுடையது கன்ஸ்ட்ரக்டிவ் க்ரிடிசிஸமாக்கும்! விஜயை நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி :-)))

MyFriend said...

அட.. விஜய் வித்தியாசமா நடிச்சிருக்காரே.. ஒரு படத்துல ஆறு விரலுடன்... (அவருக்கு தெர்ரிஞ்ச வித்தியாசம் இது ஒன்னுதானே!) நடிப்புல வித்தியாசம் கேட்டா, இதுதான் வித்தியாசம்ன்னு சொல்லுறாரேப்பா..

வருண் said...

*** .:: மை ஃபிரண்ட் ::. said...
அட.. விஜய் வித்தியாசமா நடிச்சிருக்காரே.. ஒரு படத்துல ஆறு விரலுடன்... (அவருக்கு தெர்ரிஞ்ச வித்தியாசம் இது ஒன்னுதானே!) நடிப்புல வித்தியாசம் கேட்டா, இதுதான் வித்தியாசம்ன்னு சொல்லுறாரேப்பா..

22 March, 2009 6:11 PM***

:-))))))

மணிகண்டன் said...

நிறைய பின்னூட்டங்கள் சிரிப்பை வரவழிச்சது. அதுவும் நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், நடிக்கறதே வித்தியாசம் தான் - இது எல்லாம் சூப்பர்.

ஆனாலும் விழுந்து விழுந்து சிரிப்பு வரவழிச்ச பின்னூட்டம் இது தான்.

****
என்னுடையது கன்ஸ்ட்ரக்டிவ் க்ரிடிசிஸமாக்கும்!
****

வருண் said...

****மணிகண்டன் said...
நிறைய பின்னூட்டங்கள் சிரிப்பை வரவழிச்சது. அதுவும் நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், நடிக்கறதே வித்தியாசம் தான் - இது எல்லாம் சூப்பர்.

ஆனாலும் விழுந்து விழுந்து சிரிப்பு வரவழிச்ச பின்னூட்டம் இது தான்.

****
என்னுடையது கன்ஸ்ட்ரக்டிவ் க்ரிடிசிஸமாக்கும்!
****

24 March, 2009 3:16 AM***

வாங்க மணிகண்டன்!!

பயங்கரமா லந்த கொடுக்குறீங்க, :-))))

நம்ம கிரி ஒரு "சிரிப்பு காட்டுற" திரி போட்டிருக்கார். அங்கேயும் போய் பாருங்க! :-)))

பதி said...

// SUREஷ் said...
நீங்க நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் படமெல்லாம் பார்த்திருக்கிறீர்களா.. இல்லையா, அந்த சின்னவயதில்கூட எவ்வளவு சமூகப் பொறுப்புடன் நடித்திருப்பார்//

நல்ல வேளை... சங்கவி கூட நடிச்சு 'நெஞ்சு வலி'க்கு வைத்தியம் பார்க்கும் அதிரடிக் காட்சிகள் நிறைந்த படங்களை நீங்கள் குறிப்பிடவில்லை... :) கோயமுத்தூர் மாப்பிள்ளைன்னு நினைக்குறேன் !!!!!

கயல்விழி said...

விஜய் ஆரம்பத்தில் "பூவே உனக்காக" போன்ற நல்ல கதைகளில் நடித்துக்கொண்டு தான் இருந்தார், கில்லி வந்தவுடன் எல்லாமே பாழாகப்போனது :(

வருண் said...

***கயல்விழி said...
விஜய் ஆரம்பத்தில் "பூவே உனக்காக" போன்ற நல்ல கதைகளில் நடித்துக்கொண்டு தான் இருந்தார், கில்லி வந்தவுடன் எல்லாமே பாழாகப்போனது :( ***

இன்னும் காலம் கடக்கவில்லை, கயல். பார்க்கலாம் ஏதாவது மாற்றம் வருகிறதா என்று :-)

priyamudanprabu said...

ரசினியை தவிர யாரும் நல்ல நடிகர் இல்லை , அப்படித்தானே வருன்
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

priyamudanprabu said...

விஜய் தம்பின்னா , ரசினி தானுங்க அண்ணன்