Tuesday, April 7, 2009

Unforgiven (A)-மன்னிப்பே கிடையாது (1)!* எனக்குத்தெரிய oscar committee ஒரு "வெஸ்டர்ன் மூவி" க்கு ஆஸ்கர் (பெஸ்ட் பிக்ச்சர்) வழங்கியது இதுதான் முதல் தடவை!

* Clint Eastwood, ஆஸ்கரை (பெஸ்ட் இயக்குனர்) தட்டிக்கொண்டு போனதும் இதுவே முதல் தடவை!பொதுவாக க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வெஸ்டெர்ன் படங்கள்னா என்ன? சும்மா துப்பாக்கி சூடா இருக்கும். கடசியில் ஹீரோ மட்டும் தப்பிப்பார் என்று சொல்லி அதையெல்லாம் ஒரு படமாகவே விமர்சகர்கள் கருவதில்லை. ஆனால் இந்தப்படத்திற்கு பெஸ்ட் பிக்சர் ஆஸ்கர் கிடைத்தது!

அப்படி என்னப்பா இருக்கு இந்தப் படத்தில்?

என்னைக்கேட்டால் இந்தப்படத்தில் எல்லாமே இருக்கு. ரொம்ப வித்தியாசமான ஒரு வெஸ்டெர்ன் மூவிதான் அண்ஃபர்கிவென்!

கதை:

லேட் 18ம் நூற்றாண்டில் நடப்பதுபோல் எடுத்து இருப்பார்கள். Wyoming state-ல ஒரு சின்ன ஊர் Big Whiskey. அங்கே ஒரு சட்டத்தைக்காக்கும், அதே சமயத்தில் தான் வைத்ததுதான் சட்டம், நியாயம் என்று எண்ணும் ஒரு ஷெரீஃப் (Police head) இருக்கிறார். இவர் பெயர் Little Bill Daggett ! இவர்தான் நம்ம Gene Hackman!பிக் விஸ்கியில் இவர்தான் சட்டம்! இவர்தான் நீதிபதி! இவர்தான் எல்லாம் அங்கே! இவருக்கு கீழே 4-5 டெப்டி காவலர்கள். ஒரு காலத்தில் "லிட்டில் பில்" ஒரு பொறுக்கி, ரவுடி! கன் ஃைபட்டர்! ஆனா இன்று Little Bill சட்டப்பாதுகாவலன். தான் என்கிற அகந்தையிலும், தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையுடன் ராஜா போல் இருக்கிறார் அந்த சின்ன டவுனில். இவர் தனக்கு ஒரு வீடு தானே தச்சுவேலை (காப்பெண்டர்) வேலை பார்த்து கட்டிக்கொண்டு இருப்பார். கடைசிக்காலத்தில் ஓய்வு பெற்ற பிறகு அங்கே வாழ்வதாக திட்டம்.

"பிக் விஷ்கி" டவுன்ல "க்ரிலீஸ்" என்கிற ஒரு சலூன் நடத்தி வருகிறார் "ஸ்கின்னி" என்கிற ஒரு வியாபாரி. இவர் வியாபாரம், சாப்பாடு, மதுபானங்கள் மற்றும் விபச்சாரம். பாஸ்டனிலிருந்து 5-6விபச்சாரிகளை வாங்கி வந்து அவர்களை வைத்து அந்த ஊரில் பிஸினஸ் நடத்தி வருகிறார்.

இப்படி Big whiskey town அமைதியாக போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு நாள் நல்ல இடி, மின்னல், மழை பெய்து கொண்டு இருக்கும்போது அந்த சலூனில் ஒரு பெரிய பிரச்சினை வெடிக்கிறது.

"Quick Mike" மற்றும் Davey என்கிற இரண்டு ஃபார்ம் வொர்க்கர்ஸ் (Cowboys) அந்த விபச்சாரிகளிடம் பொழுதுபோக்க வந்திருப்பார்கள். Davey என்பவன் ஸ்ட்ராபெர்ரி என்கிற ஒரு பெண்ணுடன் இருப்பான். அதே நேரத்தில் அடுத்த அறையில் மைக் என்பவன், அங்கே உள்ள “டெலிலா” என்னும் இன்னொரு அழகான விபச்சாரியிடம் படுக்கப்போவான். அப்படிப் போகும்போது, அவள் மைக்கினுடைய “ஆணுறுப்பை” பார்த்ததும் ”என்ன இவ்வளவு சின்னதாக இருக்கு?” என்று அவளையே அறியாமல் நகைத்துவிடுவாள். இப்படி அவள் நகைத்தது ஒரு பெரிய விபரீதமாகிவிடும்!

Mike க்கு ஏற்கனவே உள்ள இண்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வெடித்து கேவலம் ஒரு வேசி, அவன் குறியைப்பார்த்து கேலிபண்ணி சிரித்துவிட்டாள் என்று பயங்கர கோபம் வந்துவிடும். அந்த கோபத்தில், அவன் மிருகமாகிவிடுவான்! அந்த விலைமாதுவை கையில் இருந்த கத்தியை வைத்து அவன் நண்பன் டேவியின் உதவியுடன் முகம், மார்பு, எல்லா இடங்களிலும் கத்தியால் கீறி, வெட்டி அவளை அகோரப்படுத்திவிடுவான். அப்படி வெட்டுவதற்கு உதவியது அவன் நண்பன் டேவி. அவன் ஒரு டீன் ஏஜ் பையன். ஏதோ தெரியாமல் மைக்குக்கு பயந்து கொண்டு அவளை நல்லா பிடித்துக்கொள்வான் மைக் அவளை கத்தியை வைத்து கீறுவதற்கு. நல்லா அவளை வெட்டி காயப்படுத்தி அவள் முக, உடலழகை சிதைத்த பிறகு அந்த விபச்சாரிகளின் ஓனர், ஸ்கின்னி, வந்து ஒரு துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி இவர்கள் இருவரையும் ஒரு கயிறு வைத்து கட்டிப்போடுவார்கள். போட்டுவிட்டு, நம்ம சட்டப்பாதுகாவலர் லிட்டில் பில்(செரீஃப்)டம் வந்து தண்டனை/நியாயம் வழங்க அவரை அழைத்து வரச் சொல்லச்சொல்லி தூதுவிடுவார்கள்.

மீதி அடுத்த பகுதியில்

-தொடரும்

2 comments:

Desperado said...

unforgiven = mannikka padaatha??

வருண் said...

வாங்க டெஸ்பெராடோ!

எனக்கு சரியான மொழிபெயர்ப்பு தெரியலைங்க.

Not forgiven னு சொல்லலாம்.

"மன்னிக்கப்படாத" என்றால் அது இன்னும் "தொக்கி நிக்குதே" ? :-)