Wednesday, April 29, 2009
விஜய்காந்தின் புதியபடம் மரியாதை ஒர் பழைய குப்பையாம்!
இந்த விக்கிரமன் நம்ம விசய்காந்த கீரோவா வச்சு ஒரு படம் எடுத்து விட்டு இருக்கார்.
படம் பேர் என்னா அண்ணத்தேனு கேட்டா, மரியாதை னு சொன்னாங்க!!
படம் எப்படி இருக்குனு கேட்டா படம் பெரிய குப்பைனு சொல்றாங்க!
அதென்னவோ தெரியலை, நம்ம கருப்பு எம் மு சியார் அரசியலில் நுழைந்தபிறகு, சினிமாவில் அவர் உப்பு விக்கப்போனா மழை பெய்யுது. மாவு வாங்கப்போனா காத்தடிக்குது.
பாரதிராஜா சிவாஜியை வைத்து எடுத்து "முதல் மரியாதை" ஒரு அழகான காவியமாக வந்தது. முதல் மரியாதை வரும்போது ஏறக்குறைய சிவாஜி இருந்த ஷேப்பிலேயே இருக்கும் கேப்பிட்டனை வச்சு அதுபோல் ஒரு காவித்தை கொடுக்க போறார் விக்கிரமன் என்று எல்லோரும் ஏங்கிக்கொண்டு இருந்தார்கள்,
ஆனா என்ன செய்வது இந்த "முதல்" இல்லாத "மரியாதை" ஒரு பழைய குப்பையாகிவிட்டதாக சொல்றாங்க.
* இந்தப்படம் பிஹைண்ட் வுட்ஸ்ல முதல் வாரத்திலேயே நாலாவது இடத்தை பெற்றுள்ளது. பெரிய சாதனைதான்!
* Sify க்காரனுக சொல்றாங்க, விக்ரமன் இன்னும் 70 லேயே இருக்கார்னு!
கேப்பிட்டனு! உங்களுக்கெல்லாம் இப்போ எதுக்கு இந்த "மரியாதை"?
"மரியாதை" எடுத்து மரியாதையை கெடுத்துக்கிட்டாரு நம்ம கேப்பிட்டனு! தயவு செய்து இதோட நிறுத்திக்கவும்!
Labels:
திரைப்படம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இதுல தேர்தல் நேரத்துல படம் வந்த ஓட்டை அள்ளிவிடலாம் என்று நப்பாசை வேறு
விக்ரமன் தொலைகாட்சி சீரியல் இயக்கப் போகலாம்.
முதல் மூன்று படங்கள் ஓகே, அதன் பிறகு அழுகாச்சி சென்டிமெண்ட் ஏகப்பட்ட பழைய சரக்குகளை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவை பின்னுக்கு இழுப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார்.
சில படைபபாளிகள் தவிர்த்து மற்ற இயக்குனர்கள் அனைவருமே 25 - 35 வயதுக்குள் எதாவது ஹிட் படம் கொடுத்தால் உண்டு, அதன் பிறகு எல்லாம் பழைய சிந்தனையாக இருக்கும்.
புதுமை என்கிற பெயரில் பார்த்திபனும் ஒரு சொதப்பல் பார்டி.
35 வயதிற்கும் மேல் இயக்குனர்கள் அவர்களுடைய பழைய சிந்தனையைத்தான் திரும்ப திரும்ப எடுப்பாங்க, அதுக்கும் மேல வராது.
ரிலாக்ஸ் பாஸ்
***புலிகேசி said...
இதுல தேர்தல் நேரத்துல படம் வந்த ஓட்டை அள்ளிவிடலாம் என்று நப்பாசை வேறு
29 April, 2009 7:10 PM***
சினிமாலயே முதல்வராகி தீர்த்துக்க வேண்டியதுதான் இவர் ஆசையை எல்லாம்! :-)
***கோவி.கண்ணன் said...
விக்ரமன் தொலைகாட்சி சீரியல் இயக்கப் போகலாம்.
முதல் மூன்று படங்கள் ஓகே, அதன் பிறகு அழுகாச்சி சென்டிமெண்ட் ஏகப்பட்ட பழைய சரக்குகளை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவை பின்னுக்கு இழுப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார்.
சில படைபபாளிகள் தவிர்த்து மற்ற இயக்குனர்கள் அனைவருமே 25 - 35 வயதுக்குள் எதாவது ஹிட் படம் கொடுத்தால் உண்டு, அதன் பிறகு எல்லாம் பழைய சிந்தனையாக இருக்கும்.
புதுமை என்கிற பெயரில் பார்த்திபனும் ஒரு சொதப்பல் பார்டி.
35 வயதிற்கும் மேல் இயக்குனர்கள் அவர்களுடைய பழைய சிந்தனையைத்தான் திரும்ப திரும்ப எடுப்பாங்க, அதுக்கும் மேல வராது.
29 April, 2009 7:56 PM***
அமீர், பாலா எல்லாம் எவ்வளவோ மேல். விக்கிரமன் இன்னும் பீம்சிங் காலத்திலேயே இருக்கார் பாவம் :-)))
***SUREஷ் said...
ரிலாக்ஸ் பாஸ்
30 April, 2009 1:52 AM***
சும்மா ஒரு மொக்கைப்பதிவுதானே? ஜாலியா எடுத்துக்கோங்க, பாஸ்! :-)))
மீரா ஜாஸ்மினுக்காக கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம் :)
***சென்ஷி said...
மீரா ஜாஸ்மினுக்காக கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம் :)
30 April, 2009 9:09 AM***
அப்படியா?! சரிங்க! :-)))
வருண், உங்களை யாரோ நல்லா ஏமாத்தி இருக்காங்க. அருமையான படம். இப்ப தான் பார்த்தேன். மிஸ் பண்ணாதீங்க.
***மணிகண்டன் said...
வருண், உங்களை யாரோ நல்லா ஏமாத்தி இருக்காங்க. அருமையான படம். இப்ப தான் பார்த்தேன். மிஸ் பண்ணாதீங்க.***
அப்படியா மணிகண்டன்?! :-O
Post a Comment