Saturday, April 4, 2009

வை கோ விற்கு நாலுமே தேறாத தொகுதிகள்!


என்றைக்கு வை கோ அவர்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தாரோ அன்னைக்கே பிடிச்சது சனியன் இந்த “பெரிய மனிதருக்கு”! இப்போ அவர் மதிமுக இருக்கும் நிலையில் "மறுமலர்ச்சி" அடைமொழியை பெறுவதைவிட "மடிந்தமலர்ச்சி" அடைமொழிதான் பொருந்தும். ஜெயலலிதாவை வளர்த்துவிட்டது யாரு? நெடுஞ்சிழியன், காளிமுத்து, ஆர் எம் வீரப்பன் போன்றவர்கள்! எல்லாரும் மறத்தமிழர்கள்! அவர்களுக்கும் வை கோ வுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எனக்கென்னவோ ஒண்ணும் பெருசா தெரியலை!

ஜெயலலிதா எப்போதுமே ஈழத்தமிழர்களுக்கு எதிரிதான் என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இந்த பிரச்சினை பொறுத்தவரையில் வை கோ வும் ஜெயலலிதாவும் தண்ணீரும் எண்ணையும் போல்தான்! ஒன்றாக கலப்பது கடினம்-அவர்கள் ஈழத்தமிழர், தனி ஈழம் கொள்கையில்!

இப்போ விஜய்காந்துவும் வை கோபால்சாமியின் ஜாதியை சேர்ந்தவர் (இருவரும் நாயக்கர்கள்?)என்பதால் ஓரளவுக்கு வை கோ வின் ஜாதி ஓட்டு பிரிந்துவிட்டது. அதனால் இன்றைய நிலைமைக்கு வை கோ விற்கு ஜாதி ஓட்டு பலமும் இல்லை! கொள்கை பலம் என்றும் பெருசா ஒண்ணுமே இல்லை! வை கோ கடித்தாலும் விசம் ஏறாத ஒரு “தண்ணிப் பாம்பு” தான் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் நிலைமைக்கு! என்பதை புரிந்து கொண்டார் அன்னையார்!

வன்னியர்கள் அளவுக்கு இவர் ஜாதியான நாயக்கர்கள் ஓட்டுக்கள், கனிசமாக ஒரு சில ஏரியாவில் மட்டும் கிடையாது. அவர்கள் பரவலாக எல்லா இடங்களிலும் இருக்காங்க. அதனால் இவருக்கு ராமதாஸைவிட ஜாதி பலம் மிக மிக கொஞ்சம்!

இன்றைய அரசியலில் வை கோ விடம் எதுவும் பெரிய கொள்கையோ, பெரிய மாஸோ, பெரிய தனித்துவமோ, பணமோ, எதுவுமே இல்லை என்று தெரிந்தவுடன், "அன்னையார்" வை கோ விடம் பேசுகிற பேரமிதுதான். "உங்களுக்கு எதுவும் பெரிதாக செய்ய முடியாது! கொடுக்கிறதை வாங்கி கொண்டு போங்க!" என்று சொல்லாமல் சொல்லுகிறார் அன்னையார். இதுதான் இன்றைய "மடிந்தமலர்ச்சி" தி மு க தலைவர் பரிதாப நிலை.

* அ தி மு க அணியில் இருந்து வெளியில் வந்தால் அசிங்கம்! ரொம்ப காலம் கடந்தும்விட்டது. எங்கே போறது?

* சரி, தனித்து போட்டியில் நின்றால், ஒரு பயலும் ஓட்டுப்போட மாட்டான்.

* சரி, ஐந்து வேணாம், அன்னையார் பெரியமனதுடன் கொடுக்கும் நாலையாவது வாங்கிக்குவோம் என்றால், அம்மா கொடுக்கிற நாலும், “தயாநிதி மாறன் தொகுதி”, “மு க அழகிரி தொகுதி” போன்றவைகள்! இதை வாங்குவதற்கு சும்மாவே போயிடலாம் “பெரிய மனது” தன்மையை காட்டி!

என்ன பண்ணுவார் பாவம் இந்த கோபால்சாமி? :(

5 comments:

பிரசன்னா இராசன் said...

வை. கோ என்று பொடா பழியை மறந்து அம்மாவோட சேர்ந்தாரோ, அன்னைக்கே தமிழ்நாட்டு மக்கள் அவர் ஒரு பெரிய பொய். கோனு முடிவு பண்ணிட்டாங்க. இனிமே அவரு பேசாம பம்பரத்த சுத்திகிட்டு கிடக்கலாம்...

வருண் said...

***பிரசன்னா இராசன் said...
வை. கோ என்று பொடா பழியை மறந்து அம்மாவோட சேர்ந்தாரோ, அன்னைக்கே தமிழ்நாட்டு மக்கள் அவர் ஒரு பெரிய பொய். கோனு முடிவு பண்ணிட்டாங்க. இனிமே அவரு பேசாம பம்பரத்த சுத்திகிட்டு கிடக்கலாம்...***

நீங்க சொல்றது உண்மைதான் ப்ரசன்னா இராசன்.

என்ன சொல்றது? That is a fatal error he made! Lost his respect and what not! :-(

டவுசர் பாண்டி. said...

//இப்போ விஜய்காந்துவும் வை கோபால்சாமியின் ஜாதியை சேர்ந்தவர் (இருவரும் நாயக்கர்கள்?)என்பதால்//


அண்ணாத்தே , இவுரு வேற அவுரு வேற, தான் நம்ப விஜிகாந்த்து, தெலுங்கு கார மன்சன்பா , செரி, அத்த வுடு , நா மின்ன எழ்தன, பதிவ பாரு தலீவா, நம்ப ஊட்டாண்ட வா
வைகோ கதிய கல்வெட்டு பண்ணி வைக்கலாம் .

வருண் said...

திரு. பாண்டி,

ரெண்டு பேரும் தாய்மொழியாக "மட்டமான தெலு(ங்)கு பேசும் நாயக்கர்கள்தான்.

உங்க வீட்டுப்பக்கம் நேரம் கிடைக்கும்போது வருகிறேன் :-)

Kovilpatti Anandhan said...

It shows the bad attitude of Varun... What do you mean by Mattamana telugu...

I think he has some psycological problem.

Nobody should downgrade other community's identity...