Friday, April 17, 2009
ஜெயலலிதாவின் ஆபாச அரசியல் நடனம்!
ராஜிவ் காந்தி மரணத்தில் “சோல் பெனிஃபிஸியரி” (sole beneficiary) ஜெயலலிதாதான். ஈழப்பிரச்சினையை அரசியலாக்கி ஈழத்தமிழர்வாழ்வைப்பற்றி கவலையே படாமல் இரக்கமில்லாமல் அரசியல் செய்து முதல்வரானது இதே ஜெயலலிதா.
· இது எப்படி ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் ஈழ அபிமானிகளுக்கும் மறக்கும்?
· இன்று ஜெயலலிதா ஈழத்தமிழருக்காக போ ராடுவதும் அரசியல்தான்.
சரி ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி! யாரைவேணா விற்று பதவியைப்பிடிக்க தயங்க மாட்டார் என்று மரமண்டை தமிழர்களுக்கு புரியாதா?
****Jayalalitha, however, made her stand clear that her party would never support the armed struggle of the LTTE, because of its murky track record involving the killing of Rajiv Gandhi on Tamil Nadu soil.****
கருணாநிதி சொத்து சேர்ப்பது, பண அரசியல் செய்வது, சட்டம் ஒழுங்கை சரியாக பாதுகாக்காதது, ஈழப்பிரச்சினையில் காங்கிரஸை எதிர்த்து போராடாதது எல்லாம் உண்மைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் ஈழத்தமிழர் நலனைப்பற்றி ஜெயலலிதாவும், ஈழத்தமிழர்கள் படுகொலை நடக்கும்போதும் நேற்றுவரை காங்கிரஸ் ஆட்சியில் பதவி அனுபவித்த அன்புமணி ராமதாஸும் ஈழத்தமிழர்களுக்காக போராடப்போகிறார்கள் என்று நம்பும் தமிழர்கள் இருந்தால், தமிழர்கள்தான் முட்டாள்களில் #1 என்பேன் நான்.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையை பயன்படுத்தும் ஜெயலலிதாவின் அரசியல் யுக்தி, ஜெயலலிதாவின் ஒரு அசிங்கமான ஆபாச அரசியல் நடனம்!
Labels:
அரசியல்,
தேர்தல் 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
யாரைத்தான் நம்புவதோ! தேர்தல் முன் மக்கள்...
ஈழத்தமிழர்கள் பிரச்சினையை பயன்படுத்தும் ஜெயலலிதாவின் அரசியல் யுக்தி, ஜெயலலிதாவின் ஒரு அசிங்கமான ஆபாச அரசியல் நடனம்! //
நாம் நீண்ட விவாதங்களின் மூலம் சொல்ல நினைத்ததை ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டீர்கள் திரு.வருண், அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
படித்த வலைப்பதிவர்களே இப்படி இருக்கும் போது சாமான்யனை பற்றி சொல்ல தேவை இல்லை
ஸாரி, ஸாரி!
இது திமுக செயற்குழுவா?
நான் தெரியமல் வந்திட்டேன், ஸாரி!
//புதிய கோணங்கி ! said...
ஸாரி, ஸாரி!
இது திமுக செயற்குழுவா?
நான் தெரியமல் வந்திட்டேன், ஸாரி!
//
கருத்தை பார்க்காமல் அதை சொல்பவர்களை பார்க்கும் உங்கள் மனப்பக்குவம் வியக்க வைக்கிறது
***ஆ.ஞானசேகரன் said...
யாரைத்தான் நம்புவதோ! தேர்தல் முன் மக்கள்...
17 April, 2009 7:20 PM***
நம்ம அரசியல் படுமட்டமாயிருச்சுங்க!:(
***மதிபாலா said...
ஈழத்தமிழர்கள் பிரச்சினையை பயன்படுத்தும் ஜெயலலிதாவின் அரசியல் யுக்தி, ஜெயலலிதாவின் ஒரு அசிங்கமான ஆபாச அரசியல் நடனம்! //
நாம் நீண்ட விவாதங்களின் மூலம் சொல்ல நினைத்ததை ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டீர்கள் திரு.வருண், அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
17 April, 2009 8:07 PM**
ஈழத்தமிழர் கண்ணீரில் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் அடைய நினைப்பது
வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று.
மற்ற பிரச்சினைகளைப்பற்றி பேசட்டுமே? அரசியல் பண்ண விசயமா இல்லை?
***புதிய கோணங்கி ! said...
ஸாரி, ஸாரி!
இது திமுக செயற்குழுவா?
நான் தெரியமல் வந்திட்டேன், ஸாரி!
17 April, 2009 9:05 PM***
நான் செயற்குழுவும் இல்லை பொதுக்குழுவும் இல்லை.
ஈழமக்கள் கண்ணீரை துடைக்குமளவுக்கு இவர் மனமோ கரமோ சுத்தமாக இல்லை என்று நான் நம்புகிறேன்.
வாங்க உடன்பிறப்பு! :-)))
//தமிழர்கள்தான் முட்டாள்களில் #1 என்பேன் நான்.//
இதில் என்ன சந்தேகம்? ஆனால் ராமதாஸ ஜெயலலிதாவோடு பிரபாகரனையும் சேர்த்து கொள்ளுங்கள்.
http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F
Well said, Varun.
***Chandran said...
//தமிழர்கள்தான் முட்டாள்களில் #1 என்பேன் நான்.//
இதில் என்ன சந்தேகம்? ஆனால் ராமதாஸ ஜெயலலிதாவோடு பிரபாகரனையும் சேர்த்து கொள்ளுங்கள்.
http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F
18 April, 2009 8:01 AM ***
உங்க கருத்துக்கு நன்றி, சந்திரன்.
நாம் இங்கே தேர்தல் 2009 பற்றி பேசுவதால் பிரபாகரனைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
நீங்க கொடுத்த யு-ட்யூப் லிங்க் பார்த்தேன். ஏதோ சிங்களத்தளம் இதை வெளியிட்டதாக தோனுது. அதனால் என்ன? அதனால் கொஞசம் இதை ஆராச்சி செய்து பகுத்தறிந்த பிறகுதான் என்னால் எதுவும் சொல்ல முடியும்! :-)
***Kasi Arumugam said...
Well said, Varun.
18 April, 2009 9:08 AM***
நன்றிங்க, திரு. காசி ஆறுமுகம்! :-)
Post a Comment