Wednesday, April 8, 2009

Unforgiven(A)-மன்னிப்பே கிடையாது! (2)

போலிஸ் செரீஃப் லிட்டில் பில் வருவார்! மழை இடி மேலும் அது ஒரு இரவு நேரம்! லிட்டில் பில் வந்தவுடன் அந்த ஸ்ட்ராபரி என்கிற விலைமாது அவர்களை இப்படி செய்த கொடுமைக்காக தூக்கில் போட வேண்டும் என்று கேட்டுக்கொள்வாள்.

"இவர்களை தூக்கில் போடுங்க லிட்டில் பில்!" என்பாள் ஸ்ட்ராபெர்ரி

ஆனால் லிட்டில் பில் க்கு விலைமாது மேலெல்லாம் பெரிய மரியாதை இல்லை. அவர் நம்பிக்கை என்னனா "No whore is gold"! இவள் இப்படி பேசுவதே பிடிக்காது அவருக்கு. அவரோட டெப்டி ஒருவரை போய் "சவுக்கு" எடுத்து வர சொல்லுவார். அதாவது, இவர்களுக்கு தண்டனை சவுக்கால் இவர்களை அடிப்பது. இவர்களை சவுக்கால் அடித்து தண்டித்தால் போதும் என்று முடிவு செய்து, இவர்களை தண்டிக்க ஒரு சவுக்கால் அடிக்க ஆயத்தமாவான்.

அப்பொழுது, பாதிக்கப்பட்ட அந்த விலைமாது (டெலிலா) வின் ஓனர் "ஸ்கின்னி" சொல்லுவான். நான் காசு கொடுத்து அவளை வாங்கி வந்து இருக்கிறேன். இந்த நிலைமையில் அந்த விலைமாதிடம் யாரும் உறவுக்கு போக மாட்டார்கள். அதனால் என்னுடைய ப்ராப்பர்டி டேமேஜ் ஆனதற்கு லயபிலிட்டி வேணும். அவளிடம் இனிமேல் யாரும் போகமாட்டார்கள், அதனால் எனக்கு பணம் வேணும் என்பார்.

உடனே செரீஃப் சவுக்கடியை கைவிட்டு வேறு நீதி வழங்குவார். அதாவது குற்றவாளிகளுக்கு ஃபைன்!! அவர்கள் வைத்திருக்கும் குதிரைகள் மைக் 4 மற்றும் டேவி 2 கொண்டுவந்து ஸ்கின்னியிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர் வழங்கும் நீதி.

இப்போ நட்டமடையாதது ஸ்கின்னி என்கிற அந்த பிம்ப்-வியாபாரி! ஆனால் அந்த விலைமாதுவின் அழகு சிதைந்துவிட்டது. அதற்கு எந்த தண்டனையும் கொடுக்கவில்லை! இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு விலைமாது என்பதால் அவளை நாயைவிட கேவலமாக மதிப்பார் அந்த செரீஃப். ஆனால், ஸ்ட்ராபெர்ரி இந்த அநியாத்திற்கு பழி தீர்க்காமல் விடப்போவதில்லை என்று முடிவெடுத்து விடுவாள். விலைமாதுகள் அனைவரும் ஒன்று சேருவார்கள். ஸ்கின்னிக்கு தெரியாமல் எவ்வளவு பணம் சேர்த்து வைத்து இருக்கீங்கனு பேசுவார்கள். ஒரு $500 போல தேறும். ஆனால் இன்னும் சேர்த்து $1000 சேர்ந்தவுடன் அந்த இருவரையும் கொலை செய்கிறவர்களுக்கு $1000 பரிசு என்று நாடுமுழுவதும் பரப்ப முடிவு செய்வார்கள்.

செரீஃப் சொன்னது போல் அபராதமாக குற்றவாளிகள் இரண்டு பேரும் ஒரு 6 குதிரைகளை ஸ்கின்னியிடம் கொடுத்து, ஸ்கின்னியை சமாதானப்படுத்துகிறார்கள். அப்போது டேவி என்கிற அந்த சின்னப்பையன், தன்னுடைய நஷ்டயீடாக ஒரு அழகான குட்டி குதிரை ஒன்றை அந்த விலைமாதுக்கு கொடுக்க முற்படுவான். ஆனால் அவர்கள் அவனை அதற்கு அவனை கல்லால் அடித்தே துரத்திவிடுவார்கள். விலைமாதுகள் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அவர்களால் இவர்களை மன்னிக்கவே முடியாது! இவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதென்று! இவர்களை உயிரோடு பார்க்க இஷ்டப்படவில்லை!

தான் சாதாரண விலைமாதுகள் எப்படி இதை செய்யமுடியும்? பணத்தால்தான் சாதிக்கலாம்! இவர்களை கொல்பவர்களுக்கு $1000 ரிவார்ட், என்கிற செய்தி ரகசியமாக பரப்புகிறார்கள். விலைமாதுக்களிடம் வரும் ஒரு சிலர்கள் அந்த செய்தியை டெக்ஸாஸ் வரை பரப்புகிறார்கள்.

இதுபோல் $1000 ரிவார்ட் விசயம் லிட்டில் பில்லுக்கு தெரிய வருகிறது. இருந்தும் விலைமாதுக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை! ஆனால் ஊரில் யாரும் துப்பாக்கி வைத்திருக்கக்கூடாது என்கிற சட்டம் கொண்டு வரப்படுகிறது! இதற்கிடையில் லிட்டில் பில் தன்னுடைய வீட்டில் கார்ப்பண்டர் வேலை செய்து ஓரளவு கட்டி முடிக்கிறார்.

முதலில் இந்த செய்தி ஒரு கன்ஃபைட்டர் அண்ட் கில்லர் இங்லிஷ் பாப் (English Bob )என்பவரை அடைகிறது. இவர் யாருனா நம்ம ரிச்சேர்ட் ஹாரிஸ் (Richard Harris).இவர் இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு கொலையாளி/கன்ஃபைட்டர். இவர் கணக்குக்கு நெறைய பேரை கொன்று இருக்கிறார். இவர் எதுக்கெடுத்தாலும் அமெரிக்கன் அரசியல் திட்டத்தை அதாவது ஜனாதிபதித்துவத்தை கேலி செய்து, ரொம்பவே பேசுவார். இது அமெரிக்கர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் இருந்தாலும் இவன் ஒரு கொலையாளி/கன் ஃபைட்டர் என்பதால் யாரும் ஒண்ணும் செய்யாமல் விட்டுவிடுவவர்கள். இப்போ இங்லிஷ் பாப் இந்த இரண்டு பேரையும் கொன்னுட்டு $1000 ரிவார்டை வாங்க பிக் விஷ்க்கிக்கு வருகிறார்.

An interesting part of this story is that, கொலையாளி English Bobக்கு ஒரு பயோக்ராஃபர்/எழுத்தாளர். அவர் பெயர், W.W. Beauchamp.அவர் "ட்யூக் ஆஃப் டெத்" என்கிற கதை இங்லிஷ் பாப் பின் "சாதனைகளை" வைத்து எழுதிக்கொண்டு இருப்பார். இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமே, ரொம்ப பயந்த சுபாவம்.

இந்த கதை எழுதுகிற பார்ட் இந்தக்கதையில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒண்ணு. இதுபோல் இதுவரை எந்தப்படத்திலும் ஒரு கேரக்டர் பார்த்ததில்லை. அதுமட்டுமல்ல, புகழுக்கு மனுஷன் எப்படி அடிமையாகிறான் என்பதை இந்த கேரக்டர் மூலம் அழகா க்ளிண்ட் சொல்லி இருப்பார். நடக்கப்போற இந்த கொலைகளை வேடிக்கை பார்க்கவும் அதைப்பற்றி எழுதவும் இந்த ஜேர்னலிஸ்ட் (writer) இங்லிஷ் பாப் வுடன் வருவார். இதிலென்ன விசயம்னா இங்லிஷ் பாப் தன்னை பெரிய ஹீரோவாக்க நெறைய பொய் சொல்லி தன்னை மிகப்பெரிய ஒரு கதானாயகன் போல அந்த பயோக்ராஃபரிடம் சொல்லி இருப்பார். ஆனால் அவர் சொன்னதில் பாதி பொய் என்று தெரியாது.

இங்லிஷ் Bob, Big whiskey வந்தவுடன், இந்த விலைமாதுகள் ஒரே சந்தோஷமா இருப்பாங்க! ஆனால், வந்து கொஞ்ச நேர்த்திலேயே, "லிட்டில் பில்" டெபுட்டிகள் இங்லிஷ் பாபை அனுகி அவாரிடம் உள்ள துப்பாக்கிகளை கொடுக்க சொல்வார்கள் (அதுதான் சட்டம்). இங்லிஷ் பாப் கொடுக்காமல், ஏதோ கதை சொல்லிவிட்டு போயிடுவார். இன்னொரு விசயம் என்னனா, அங்கே இருக்கிற லிட்டில் பாப் டெபுட்டிஸ்ல யாருமே ரொம்ப திறமையானவர்களோ, தைரியமானவர்களோ கிடையாது. லிட்டில் பில் மட்டும்தான் பெரிய ஆளு. அதனால் டெபுட்டிகளால் இங்லிஷ் பாபை கட்டுப்படுத்த முடியாது. லிட்டில் பில்லிடம், அவர் டெப்புட்டிகள் இங்லிஷ் பாப் என்ற கொலைகாரன் வந்து இருக்கான் என்று அவரைப்பற்றி சொன்னதும் விசயத்தை கேட்டு லிட்டில் பில் வருவார். அப்போதுதான் இங்லிஷ் பாப் க்கும் லிட்டில் பில்லுக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.

இருவரும் ஒருவரை ஒருவர் மற்றவர் முன்னால் முறைப்படி அறிமுகப்படுத்திய பிறகு, இங்லிஷ் பா இடம் இன்றைய சட்டம் என்னனு சொல்லி, அவரிடம் துப்பாக்கிகளை கொடுக்க சொல்லி கேட்பார்- துப்பாக்கி முனையில், லிட்டில் பில். இங்லிஷ் பாப் தன்னிடம் உள்ள ஒரு துப்பாக்கி மட்டும் கொடுத்துவிட்டு நழுவப்பார்ப்பார். இந்த நேரத்தில் ஊரே இந்த காட்சியை வேடிக்கை பார்க்கும். ஆனால் லிட்டில் பில், இங்லிஷ் பாபை அத்துடன் விடாமல் மறைத்து வைத்திருக்கும் ஒரு சிறிய துப்பாக்கியையும் வாங்கிவிட்டு, இங்லிஷ் பாபை, கண், காது, மூக்கு தெரியாமல் அடி அடினு அடிச்சு சட்னி ஆக்குவார். பிறகு ஜெயிலில் போடுவார். இதுபோல அடித்தால்தான் ஒருவரும் இதுபோல் வரமாட்டார்கள் என்கிற எண்ணம், லிட்டில் பில்லுக்கு. இதை வேடிக்கை பார்த்த ஊர்மக்கள், மற்ரும் விலைமாதுக்கள் எல்லோருமே இனிமேல் எவனும் வரமாட்டான் அடி வாங்க என்று நினைப்பார்கள்.

இங்லிஷ் பாப் ஜெயில்ல இருக்கும்போது அவருக்கு கேட்பதுபோல இப்போ பயோக்ராஃபர், லிட்டில் பில்லுடன் பேசிக்கொண்டு இருப்பார். அப்போ அவர் எழுதிய கதையை படித்துவிட்டு அதில் சொன்ன பொய்களையெல்லாம் கேலி செய்து சிரிப்பார் லிட்டில் பில். இங்கே ரெண்டு மேட்டெர் டெவெலப் ஆகும். ஒண்ணு, அந்த பயோக்ராபருக்கும் லிட்டில் பில் இங்லிஷ் பாபைவிட பெரிய ஹீரோவாக தோனும். லிட்டில் பில்லுக்கும் தன்னுடைய புகழ் இது போல் ஒரு எழுத்தாளர்மூலம் பரவனும்னு ஆசை வரும். இருவரும் நல்ல நண்பர்களாகிவிடுவார்கள். இங்லிஷ் பாபை ஊரை (பிக் விஷ்கி) விட்டு வெளியே அனுப்பிவிட்டு. ட்யூக் ஆஃப் டெத் கதையில் லிட்டில் பில் ஹீரோ போல மாற்றியமைப்பார்.

நம்ம லெஜெண்டரி ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (வில்லியம் மன்னி) பற்றி அடுத்த பகுதியில்!

-தொடரும்

No comments: