Thursday, April 30, 2009
"பன்றி காய்ச்சல்" (Swine flu) பீதி!
பொதுவாக சாதாரண காய்ச்சல் (influenza aka flu) ஒரு வைரல் இன்ஃபெக்ஷன். நம்முடைய உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி, கிருமிகளுடன் சண்டை போட்டு ஜெயிக்கனும். Antibiotics எல்லாம் இதுபோல் வைரல் இன்ஃபெக்ஷனுக்கு உதவாது. இருந்தாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், எச் ஐ வி உள்ளவர்கள் இதில் செத்துக்கொண்டுதான் இருக்காங்க.
இன்ஃப்ளுவென்ஸா (ஃப்ளூ) விற்கு தடுப்பு ஊசி கொண்டு வந்துவிட்டார்கள். அதனால் ஒவ்வொரு வருடமும் ஃப்ளூ சீசன் வரும்போது, அமெரிக்கா போன்ற நாடுகளில் வயதானவர்கள் இந்த தடுப்பு ஊசி போட்டுக்கொள்கிறார்கள். இதனால் சரியான எதிர்ப்பு சக்தி இல்லாத ஒரு சிலரும் ஃப்ளூ வந்து உயிர் பிழைத்துவிடுகிறார்கள்.
இந்தியாவில் நான் வாழும்போது காய்ச்சலுக்கெல்லாம் தடுப்பு ஊசி போட்டதில்லை. ஆனால் இன்று எப்படி என்று தெரியவில்லை. 99.99% நம்முடைய எதிர்ப்பு சக்தி போராடி இந்த வைரஸை வென்றுவிடும். வெகு சிலர் சாவார்கள்.
இப்போ இந்த "பன்றி காய்ச்சல்" (swine flu) என்கிற இந்த இன்னொரு வகை ஃப்ளூ மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்கா வந்து இருக்கிறது. 24 மணி நேரம் செய்திசொல்லும் சில சேனல்கள் இதைப்பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கார்கள். இன்ஃப்ளுவென்ஸாவை நம் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி எப்படி சண்டைபோட்டு வெற்றியடைகிறதோ, அதே போல் இதையும் சண்டை போட்டு வெற்றியடையனும். ஏனென்றால், இது, மலேரியா, டைஃபாயிடு போன்ற பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் அல்ல. வைரல் இன்ஃபெக்ஷந்தான். இதில் சாவது உடம்பில் எதிர்ப்பு சக்தியில்லாதவர்கள் மட்டும்தான்.
இன்றைய தேதிக்கு இதற்கு தடுப்பு ஊசி தயாராக இல்லை என்பதாலும் மெக்ஸிக்கோவில், 20-50 வயதில் உள்ளவர்கள் பலர் இந்த காய்ச்சலால் இறந்துவிட்டதாலும் அமெரிக்காவில் கொஞ்சம் குழம்பிப்போய் இருக்காங்க. அதனால் அமெரிக்காவில் இந்த காய்ச்சல் வந்தவர்கள் மற்றவர்களுக்கு இது பரவாமல் இருக்க கட்டாயம் லீவ் எடுத்து வீட்டிலேயே இருக்கச் சொல்லுகிறார்கள்.
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
முன்னர் பறவைக் காய்ச்சல். இப்போது ப்ன்றிக் காய்ச்சல். இதுவும் பீதியைக் கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறது.
***ராமலக்ஷ்மி said...
முன்னர் பறவைக் காய்ச்சல். இப்போது ப்ன்றிக் காய்ச்சல். இதுவும் பீதியைக் கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறது***
ஆமாங்க,ராமலக்ஷ்மி, பறவைக்காய்ச்சல் போலவே இதுவும் வெறும் பீதியுடன் முடிந்துவிட்டால் நல்லதுதான். :-)))பார்க்கலாம்!
Post a Comment