Monday, April 20, 2009

சத்யராஜ்க்கு “ஹீரோ ரோல்” அஸ்தமித்துவிட்டதா?!



நடிகர் சத்யராஜ் சமீபத்தில் * பெரியார், * ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவருடைய நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. அப்படி இருந்தும் அதன்பிறகு அவர் தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடித்து எதுவும் படம் வருவதுபோல் தெரியலை.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்து வில்லனாக நடித்து ஹீரோவாக வெற்றி வாகை சூடியவர் சத்யராஜ். இவர் ஒரு தலைசிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் பெற்றவர். அதன்பிறகு ஹீரோவாக ஆகி, ஹீரோவாகவும் நிறையப்படங்களில் நடித்து புகழ் உச்சியை அடைந்தார்.

அதென்னவோ தெரியலை, தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு திடீர்னு “ஹீரோ கரீயர்” முடிஞ்சிடும். அப்படி நெறைய நடிகர்களுக்கு முடிந்து உள்ளது. உதாரணம்: மோகன், கார்த்திக், அரவிந்த்சாமி மற்றும் பலர். இப்போது சத்யராஜ் படமே ரொம்ப நாள் வராததைப்பார்த்தால், அவர் தமிழ் சினிமா கதாநாயகனாக இனிமேல் நடிக்கமாட்டார் போல் தோனுது.

இப்போது சத்யராஜ் ஒரு மலையாளப்படத்தில் நடிக்கப்போவதாக பேசப்படுகிறது. நிச்சயம் இவருடைய திறமைக்கு தமிழ்ப்படங்களில் நிறைய வில்லன் ரோல்களில் நடிக்கச்சொல்லி போட்டிப் போட்டுக்கொண்டு கொடுப்பார்கள். ஆனால் இவருடைய “பெரிய ஈகோ” வால் இவர் அமரர் செய்சங்கர் போல் வில்லனாக இன்னொரு இன்னிங்ஸ்ல நடிக்க மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

புரட்சித்தமிழன் சத்யராஜ் நடிக்கப்போகும் மலையாளப்படத்தின் பெயர், Trigger ராம்! :-)))

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல ஜெய்சங்கர் இளம்வயதில் ஹீரோ ஆகி சீக்கிரமாகவே வில்லன் ஆகிவிட்டார்.

சத்யராஜ் ரொம்ப நாள் சைடுல வந்து பின்னர் வில்லன் ஆகி, வில்லன் ஆன கூடிய சீக்கிரத்தில் ஹீரோ ஆகிவிட்டார்,

அவரது ஆரம்ப கால கதாநாயகன் படமான வாத்தியார் வீட்டுப் பிள்ளை அவரது நூறாவது படம்.

இன்ன்றைய வில்லன்களின் வாழ்க்கை இரண்டு மூன்று படங்களே...

ஆனால் சத்யராஜுக்கு எப்படியாவது நாயகனாகவே இரண்டு மூன்று படங்களாவது வந்து விடுகின்றன...

அவரது லொல்லுக்க்கு அளவே கிடையாது


ஜெய்சங்கரோடு தொடர்புடைய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்களேன்

வருண் said...

வாங்க சுரேஷ்!

வில்லனா நடித்தால் அதுவும் 3-4 வருடத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது, உண்மைதான்.

ஆனால், ஹீரோவாக நடித்து சம்பாரிக்காமல் இருப்பது அதைவிட மோசம்.

கார்த்திக்லாம் ஒரு 100 படம்போல நடித்து இருப்பார். மோகனும் அப்படித்தான்.

ஆனால் எத்தனை தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுத்தாங்கனு தெரியலை. இப்போ கையில் எதுவும் மிஞ்சியதா தெரியலை.

நீங்க கொடுத்த ஜெய்சங்கர் பதிவைப்பார்த்து கருத்தை சொல்றேன், சுரேஷ் :-)