Wednesday, February 3, 2010

அஜீத்தின் அசலும் அன்புமணியின் கோரிக்கையும்!


"என்னண்ணே! நம்ம அன்புமணி, அஜீத்தை புகைபிடிக்கிற சீன் எல்லாம் எடுக்கச்சொல்லி கேட்டிருக்கார்போல?"

"எனக்கென்ன தோனுதுனா, அன்புமணி இதைவச்சு மனதாற நல்லது செய்ய நெனச்சாலும் இது அவர் சுயநலத்துக்காக செய்கிற அரசியல் நாடகம் என்றுதான் மக்கள் எடுத்துக்குவாங்கனு தோனுது!"

"ரஜினி வெண்திரையில் புகை பிடிப்பதை நிறுத்தியதும் சிவாஜி ஃபிலிம்ஸ் படமான சந்திரமுகியிலிருந்துதான் அண்ணே. இப்போ மறுபடியும் அஜீத் புகைபிடிக்கும் படமும் சிவாஜி ஃபிலிம்ஸ் படம்தான்!"

"இல்லையே அஜீத் இதற்கு முன்பும் சில படங்களில் புகைபிடித்தார்னு நினைக்கிறேன். வரலாறுல புகைபிடிச்சார் இல்லையா?"

"அப்படியாண்ணே?"

"ரஜினி இவர் சொன்னதைக்கேட்டு புகைபிடிப்பதை நிறுத்தி விமர்சனத்தை தவிர்த்தார். சந்திரமுகி பயங்கர வெற்றியடைந்ததால் அதைத்தவிர்த்தும் வெற்றியடைந்தார் என்ற பேரு வந்தது. ஆனால் எல்லாராலையும் அது மாதிரி புகைபிடிக்கும் சீன்களை தவிர்க்க முடியாது பாரு!"

"இப்போ அஜீத் அந்த அன்புமணி இ-மெயிலுக்கு என்னண்ணே பதில் எழுதுவார் ?"

"அனேகமா ஜன்க் மெயில்ல தள்ளிவிட்டு பேசாமல் இருப்பார். இல்லைனா படத்திற்கு இது (புகைபிடிப்பது) முக்கியம்னு ஜஸ்டிஃபை பண்ணலாம்!'

"எப்படிண்ணே புகைபிடிப்பதை நியாயப்படுத்த முடியும்?"

"எதையும் நியாயப்படுத்தலாம்ப்பா!"

"எப்படினு சொல்லுங்கண்ணே?"

"சப்போஸ் அசல் ல இந்த அஜீத் ஒரு ஆண்ட்டி ஹீரோ மாதிரினு வச்சுக்கோ. சப்போஸ் இந்த அஜீத் பாத்திரம் கடைசியில் நுரையீரலில் கேன்சர் வந்து சாகிறாப்பில படத்தில் முடியுதுனு வச்சுக்கோவேன்.."

"அப்படி வச்சா?"

"அன்புமணியின் இந்த முயற்சி முட்டாள்தனமானதுனு ஆயிடும்!"

"அண்ணே புதுசா இப்படியெல்லாம் கற்பனை பண்ணி ரீல் விடுறீங்களே!"

"நீதானே எப்படி நியாயப்படுத்த முடியும்னு கேட்ட? ஏன் முடியாதுனு ஒரு ஹைப்பாத்திட்டிக்கல் சிச்சுவேஷன் உருவாக்கி சொன்னேன்."

"அன்புமணி வாய்ஸ்க்கு என்ன விளைவுண்ணே ஏற்படும்?'

"சட்டப்படி இதை ஒண்ணும் செய்ய முடியாது. சென்சாரும் எதுவும் செய்ய முடியாது. அன்புமணி ராமதாஸ் மக்களுக்காக உருகிறார்னு எல்லாம் யாரும் நம்பமாட்டாங்கனு தோனுது!"

"நீங்க சொல்றதைப்பார்த்தா அஜீத் படத்துக்கு கொஞ்சம் பேரை ஏற்றிவிட்ட மாதிரித்தான் முடியும்போல இருக்கு!'

"அப்படித்தான் எனக்குத் தோனுதுப்பா!"

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

"அப்படித்தான் எனக்குத் தோனுதுப்பா!"

settaikkaran said...

ஆவேசமா அறிக்கை வுட்ட புண்ணியவானுங்கெல்லாம் இப்போ ஈ-மெயிலு, கொசுமெயிலுன்னு அனுப்புறதப் பார்த்தாப் பாவமாயிருக்கு. கொஞ்சம் அனுதாபம் காட்டலாமண்ணே! மக்கள் மறந்திரக்கூடாதுல்லா...?

vijayan said...

நல்லதை யார் சொன்னாலும் ஏற்று கொள்ளலாம் .பொதுவாக தமிழ் ஜாதி சினிமாவில் வருவதை உண்மை என்று நம்பும் ஜாதி.இதில் படித்தவன் படிக்காதவன் என்ற வித்தியாசம் இல்லை.அன்புமணி சொல்வதை கேட்பதில் தவறு இல்லை.விஜயன்.

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...

"அப்படித்தான் எனக்குத் தோனுதுப்பா!"
3 February 2010 6:17 PM ****

தல, அதெல்லாம் முடியாது னு சொல்லீட்டாங்க, தயாரிப்பாளர்கள்!

வருண் said...

***Blogger சேட்டைக்காரன் said...

ஆவேசமா அறிக்கை வுட்ட புண்ணியவானுங்கெல்லாம் இப்போ ஈ-மெயிலு, கொசுமெயிலுன்னு அனுப்புறதப் பார்த்தாப் பாவமாயிருக்கு. கொஞ்சம் அனுதாபம் காட்டலாமண்ணே! மக்கள் மறந்திரக்கூடாதுல்லா...?

3 February 2010 7:24 PM***

அரசியல் பண்றதுக்கு வேற ஏதாவது புதுசா வேணும். இதெல்லாம் பழைய சரக்கு! யாரும் வாங்க மாட்டாங்க!

இருந்தாலும் அன்புமணினு ஒருத்தன் இன்னும் இருக்கேன் னு இப்படி சொல்லிக்கலாம் இல்லையா? :)

வருண் said...

*** Vijayan said...

நல்லதை யார் சொன்னாலும் ஏற்று கொள்ளலாம் .பொதுவாக தமிழ் ஜாதி சினிமாவில் வருவதை உண்மை என்று நம்பும் ஜாதி.இதில் படித்தவன் படிக்காதவன் என்ற வித்தியாசம் இல்லை.அன்புமணி சொல்வதை கேட்பதில் தவறு இல்லை.விஜயன்.***

நெருப்புனா சுடும், அதுபோல சிகரெட் குடித்தால் கேன்சர் வரும்னு இப்போ எல்லாருக்கும் தெரியும்ங்க. இல்லையா?

பகிர்தலுக்கு நன்றி, விஜயன்.