ஆனாலும் நம்ம <வினவு"> வுடைய ஆதங்கம், மலையாளிகளை காப்பாத்துவதுடன் தமிழர்களை ஜெயராமுக்கு ஒரு படி மேலேயே கேவலப்படுத்தியுள்ளது போல இருக்கு. அது தமிழனின் தலையெழுத்து! தன்னைத்தானே திட்டிக்குவான் மற்றவர்களையும் திட்டவிட்டு வேடிக்கையும் பார்ப்பான்! அவன்தான் தமிழன்!
சினிமாவிலும், கதைகளிலும் கேலி பண்ணுவது வேறு! ஒரு நேர்முக ஒளிபரப்பில் செய்வது வேறு என்பதைத் தெளிவாக வினவு வேறுபடுத்தவில்லை! தமிழ் நடிகர் மலையாளிகளை இழிவுபடுத்தி பேசிய நேர்முக ஒளிபரப்பை மட்டும் வினவு மேற்கோள் காட்டியிருக்கலாம்.
சரி, விமர்சனத்துக்கு வருவோம்!
தமிழ்நாட்டு பெண்களை இழிவுபடுத்தி பேசிவிட்டதாக இங்கே பலரும் பல பிரச்சினைகளை கிளப்பிக்கொண்டிருக்கும்போது, நம்ம பச்சைத் தமிழன் சத்யராஜ் நடித்த முதல் மலையாளப்படம், ஆகதன், கேரளாவில் வெளிவந்துள்ளது.
ஆகதன், மலையாளப்பட உலகில் ஒரு பெரிய பட்ஜெட் படமாம். இயக்குனர் கமல் இயக்கத்தில், சத்யராஜ் ஒரு ஆர்மி ஆஃபீஸராக ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதில் கதாநாயகன் திலீப் என்கிற மலையாள நடிகர்.
இந்தப்படத்தில் நம்ம சத்யராஜ் நடிப்பு பிரம்மாதமாக இருப்பதாக விமர்சகர்கள் புகழ்ந்துள்ளார்கள். ஆனால் சத்யராஜ்க்கு டப்பிங் குரல் கொடுக்கப்பட்டு-ள்ளதாம். பொதுவாத் தமிழனுக்குத்தான் மலையாளம் சுட்டுப்போட்டாலும் வராதே!
கீழே ஒரு விமர்சனத்துக்கு தொடுப்பு கொடுத்திருக்கேன்!
zonekerala : Aagathan review (English)
13 comments:
வருண் அய்யா, வினவு,கேள்விக்குறி,கலகம்,நான் மணி,விளக்குமாறு போன்ற நக்சல் தீவிரவாதிகளிடம் பலமுறை கேட்டும் ஒரு கேள்விக்கு மட்டும் விடை சொல்ல மறுத்து விடுகிறார்கள்.உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. வினவு யாரிடம் வேலை செய்து பணம் சம்பாதித்து பிழைப்பை நடத்துகிறார்? 1)அரை முதலாளித்துவ நிறுவனத்திலா? 2)தரகு முதலாளியிடமா? 3)நிலப் பிரபுவிடமா? 4)அன்றாடும் கஞ்சிக்கே வழியில்லாத எம் மக்களிடமிருந்து சந்தா வசூல் செய்தா? 5)மாவோவின் வாரிசுகளான சின கம்யூனிஸ்ட் கட்சியினர் போடும் சில்லறையை வைத்தா? ஒரே ம்ர்மமாக இருக்கிறது. பாலா
பாலா!
***வினவு யாரிடம் வேலை செய்து பணம் சம்பாதித்து பிழைப்பை நடத்துகிறார்? 1)அரை முதலாளித்துவ நிறுவனத்திலா? 2)தரகு முதலாளியிடமா? 3)நிலப் பிரபுவிடமா? 4)அன்றாடும் கஞ்சிக்கே வழியில்லாத எம் மக்களிடமிருந்து சந்தா வசூல் செய்தா? 5)மாவோவின் வாரிசுகளான சின கம்யூனிஸ்ட் கட்சியினர் போடும் சில்லறையை வைத்தா? ஒரே ம்ர்மமாக இருக்கிறது. பாலா***
வினவு ஒரு ஆள் போல தெரியவில்லை! அதில் பல விமர்சகர்கள் (எதிர்மரையான கருத்துக்கள் உள்ளவர்கள்) இருப்பதுபோல தோனுது. இந்தக்குழுவில் திமுக, அதிமுக, தமிழ்விரோதி, கம்யூனிஸ்ட்போன்ர அணிகளுக்கு அபிமானிகளும் சில மலையாளிகளும் அடங்கும். இந்த ஆர்ட்டிக்கிளை ஒரு மலையாளி எழுதி இருக்கலாம்.
ஆனால் நம்ம தமிழந்தான் இதை பரிந்துரைத்து மேலே கொண்டுவந்தது.
தமிழன்னா சும்மாவா??? :)))
Would love to talk to you some time. Reason?? Not so sure. Just an insatiable curiosity. Contact me @ pr19939@gmail.com if possible.
Thanks
திரு வருண்,
நன்றி...
இதே வினவிடம் இதேபோன்ற கருத்துக்களை கொண்ட மறுமொழிகளை அனுப்பினேன்.
படக்காமடியில் வருவதும், மீடியாவில் சொல்வதும் ஒன்றல்ல. ஜெயராமாவது மூன்று வார்த்தைகளில் தமிழர்களை கேவலப்படுத்தினார்.(மன்னிப்பும் கேட்டுவிட்டார்). ஆனால், வினவோ முன்னூறு வார்த்தைகளுக்கும் மேலாக எழுதி தமிழர்களை கேவலப்படுத்திவிட்டார். வினவுக்கு ஜெயராம் தேவலாம் என்ற மறுமொழியும் அவற்றில் ஒன்று.
ஒரு சிலவற்றைத்தவிர முக்கிய மறுமொழிகள் வழக்கம்போல வினவின் 'கருத்து அழித்தொழிப்பு ஜனநாயகத்தில்' காணாமல் போய்விட்டன. (அதாவது, மறுமொழிகளை உடன் வெளியிடாமல் மட்டுறுத்தி பிடித்து வைத்து இருந்து மெல்ல ரகசியமாய் வெளியிடுவது... எனவே, "இப்போது விவாதத்தில்" என்ற பகுதியில் என்னால் இடம் பெற முடியாது செய்து விவாதத்தில் பங்கு கொள்ள விடாமல் செய்வது...) இப்பல்லாம் என்னுடைய பல மறுமொழிகள் நெடுநேரமாகியும் அல்லது முற்றிலுமாக வருவதில்லை...
அவையெல்லாம் "(அவர்களுக்கு)ஒத்துவராததில்" கூட காணவில்லை. ஆனால், பதிவிற்கு துளியும் சம்பந்தமில்லாமல் என்னிடம் 'கேலி'க்குறி நடத்திய (அவர்களுக்கு ஒத்துவரும்)வெட்டி அக்கப்போர்களை எல்லாம் அக்கறையாய் விரைவாக வெளியிட்டு பூரித்தார்கள்.
அந்த தளம் எனக்கு நல்ல தமாசான டயம்பாஸ். நீங்க ஏதாவது சீரியஸா எழுதி அவங்களை கெடுத்திடாதீங்க சார்...
***Venkatesh S said...
Would love to talk to you some time. Reason?? Not so sure. Just an insatiable curiosity. Contact me @ pr19939@gmail.com if possible.
Thanks**
Thanks Venkatesh!
***ஜெயராமாவது மூன்று வார்த்தைகளில் தமிழர்களை கேவலப்படுத்தினார்.(மன்னிப்பும் கேட்டுவிட்டார்). ஆனால், வினவோ முன்னூறு வார்த்தைகளுக்கும் மேலாக எழுதி தமிழர்களை கேவலப்படுத்திவிட்டார்.***
உண்மைதான், வினவு வரம்புமீறி தமிழர்களை கேவலப்படுத்தியுள்ளார்கள்.
தன்னுடைய (வினவு) கேவலமான சிந்தனைகளை எல்லாம் கொட்டி தமிழன் சிந்தனை என்கிற ஒரு பிதற்றல்கள்தான் இந்த ஆர்ட்டிக்கிளின் சாராம்சம்!
உண்மையின் குனமே சுடுவதுதான்,,வினவின் வார்த்தையில் நிரைய உண்மை இருக்கிறது,,அவர் சொல்வதுபோல் இன்னும் கூட நம் தமிழ்ப்
படங்கள் கேரளச்சேச்சிகளை பருத்த முலை உடையவர்களாகவும் காமப்பேய்களாகவும்தான் காட்டிக்கொண்டிருக்கிறது,,இது நிச்சயமாய்
பேரிய கேவலமே!!!!
நண்பர்களே நான் வினவுக்கு பல முறை எதிர் கருத்து அனுப்பியுள்ளேன் மேலும் அவர்கள் கொள்கைக்கு முரணாகவும் பல முறைகள் பின்னுாட்டம் போட்டு அதை அவர்கள் துாக்கியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சனையில் நான் வினவுடன் உடன் படுகிறேன். வினவு கேட்டது என்ன... அவர் கருத்த தடித்த தமிழச்சி என்றார் அதே அவர் கருத்த தடிச்ச வேலைக்காரி என்று வார்த்தைகள் மாறி சொல்லியிருந்தால் எவரும் இப்போது குதிப்பதைப் போல குதிக்க மாட்டார்கள் ஏனென்றால் வேலைக்காரிக்காக கண்ணீர் சிந்த இந்த உலகில் எவரும் இல்லை என்ற வாதம் உண்மைதானே மனசாட்சியுடன் பதில் கூறுங்கள். மேலும் செயராம் என்பவன் ஒரு தத்துவ ஆசிரியனோ அல்லது ஒரு அரசியல் கட்சி நடத்துபவனோ கிடையாது.. சாதாரண சினிமா நடிகன். அவனைத் திட்டினால் பாப்புலாரிட்டி வரும் என்பது உண்மைதான் என்பதற்காக எதிர்க்கக் கூடாது. மேலும் அவன் செய்தியை முதலில் போட்டது குமுதம் இதழ். குமுதம் இதழ் என்ன நாம் தமிழர் கண்ணோட்டம் கொண்ட பத்திரிகையா என்பதை மனசாட்சி உள்ளவர்கள் பதில் கூறட்டும். இறுதியாக.. நான் கொச்சின் முதல் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் பல முறை பயணம் செய்திருக்கிறேன். ஆட்டோவில் சென்றிருக்கிறேன். அங்கே ஆட்டோ ஓட்டுனர்கள் தமிழில் சர்வசகஜமாக பேசுகிறார்கள்.. இத்தனைக்கும் அவர்களை மலையாளிகள்.. ஆனால் நமது தஞ்சாவூரிலோ மதுரையிலோ அத்தனை சுலபமாக தமிழைத் தவிர ஆங்கிலம் தெரிந்தால்தான் பிற மொழிக்காரர்கள் பயணிக்க முடியும்.. இதற்குக் காரணம் தமிழ் தன்னிகரான மொழி. அதனால் தமிழர்களான நமக்கு வேறு மொழியின் தேவையில்லை, (self sufficient language)தமிழும் தமிழர்களையும் பல அண்டை மாநிலங்கள் சிங்கப்பூர் மலேசியா இலங்கை போன்ற நாடுகள் தவிர்க்க முடியாததாக கையாண்டு வருகிறது.. நாம் நிச்சயமாக பிற அண்டை மாநிலங்களுக்கு பெரிய அண்ணன்தான்.. அது பெருமைதானே.. நாம் எங்கே குறைந்து போய்விட்டோம்...?
***நம் தமிழ்ப்
படங்கள் கேரளச்சேச்சிகளை பருத்த முலை உடையவர்களாகவும் காமப்பேய்களாகவும்தான் காட்டிக்கொண்டிருக்கிறது,,இது நிச்சயமாய்
பேரிய கேவலமே!!!!***
சரி, இத்தனை நாட்கள் வினவு இதைச் சொல்லிப்புடுங்காமல் இன்னைக்கு வந்து ஏன் புடுங்குறாங்கனு சொல்லுங்க!
தனிப்பட்ட கருத்தாக இதை சொல்வது வேறு! ஜெயராமுக்கு வக்காலத்து வாங்க சொல்வது வேறு!
vinavu is mixing up movies and reality!
Some of the comments as tamilians' opinion on keralits are THE FILTHY THOUGHTS of perverts like VINAVU himself and co! Not Tamils!
***அவர் கருத்த தடித்த தமிழச்சி என்றார் அதே அவர் கருத்த தடிச்ச வேலைக்காரி என்று வார்த்தைகள் மாறி சொல்லியிருந்தால் எவரும் இப்போது குதிப்பதைப் போல குதிக்க மாட்டார்கள் ஏனென்றால் வேலைக்காரிக்காக கண்ணீர் சிந்த இந்த உலகில் எவரும் இல்லை என்ற வாதம் உண்மைதானே மனசாட்சியுடன் பதில் கூறுங்கள்.****
NOT TRUE!
e.g. This issue has been addressed by me before vinavu!
check this out!
http://timeforsomelove.blogspot.com/2010/02/blog-post_07.html
///இதில் தமிழ் தெலுகு மலையாள பெண்களைப் பத்தி பேசுறார் என்பது பிரச்சினையில்லை. எந்த ஒரு வேலைக்கு வரும் ஏழைப்பெண்ணையும் இதுபோல் சொல்வது மிகவும் அநாகரீகச்செயல்.
அந்த வேலைக்கார அம்மா இதை கேள்விப்படும்போது அவங்களுக்கு எப்படி இருக்கும், moron Jeyaram? THINK!////
என்னாது எல்லோரும் மொத்தமாய் சேர்ந்து வினவை கும்முறீங்க:)வினவு தமிழனுக்கு புத்தி சொல்லும் அதே நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரனும் புத்திமதி கேட்டு நடப்பவனா அல்லது சொல்லித்தர ஆட்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி தொக்கி நிற்பதோடு வினவின் இடுகையிலும் சில விவாத நியாயம் இருக்கவே செய்கிறது.மொழியை இருவரும் ஓரளவுக்காவது புரிந்து கொள்ளுதல்,சினிமா மாமன்,மச்சினிகளாகிப் போனது,ஐயப்பன் படையெடுப்பு போன்றவை இரு மாநில உறவை பலப்படுத்தும் ஆக்க கருவிகளாக மாற்ற முயற்சி செய்யலாம்.
***ராஜ நடராஜன் said...
என்னாது எல்லோரும் மொத்தமாய் சேர்ந்து வினவை கும்முறீங்க:)வினவு தமிழனுக்கு புத்தி சொல்லும் அதே நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரனும் புத்திமதி கேட்டு நடப்பவனா அல்லது சொல்லித்தர ஆட்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி தொக்கி நிற்பதோடு வினவின் இடுகையிலும் சில விவாத நியாயம் இருக்கவே செய்கிறது.மொழியை இருவரும் ஓரளவுக்காவது புரிந்து கொள்ளுதல்,சினிமா மாமன்,மச்சினிகளாகிப் போனது,ஐயப்பன் படையெடுப்பு போன்றவை இரு மாநில உறவை பலப்படுத்தும் ஆக்க கருவிகளாக மாற்ற முயற்சி செய்யலாம்.***
மலையாளிகளை உலக்த்திலேயே அறிவாளிகள்னு தமிழ் எழுத்தாளர்கள் பாராட்டுவதை நீங்க வினவெல்லாம் பார்த்ததில்லையா?
தமிழன் பாராட்டவும் செய்வான் திட்டவும் செய்வான்.
இரண்டும், ரெண்டு வேறுபட்ட மைனாரிட்டிகளுடை கருத்துக்கள். அதுக்காக வினவுவினுடைய பர்வேர்ட்டெட் சிந்தனைகளுக்கெல்லாம் எல்லாத் தமிழனும் பொறுப்பா?
ஏதோ ஜெயராம் திட்டயது கொஞ்சம்னு சொல்வதுபோல பேசுறானுக வினவு என்கிற தமிழின துரோகிகள்!
இதையெல்லாம் பார்த்துக்கிட்டு தலையை ஆட்டிட்டுப்போகனுமா என்ன?
Vinavu's statements are CROSSED the LINE/LIMIT in criticising Tamils as a whole!
Post a Comment