Monday, May 31, 2010

வினவு (முகமூடி)யின் பதிவரசியல் சாக்கடை அலசல்!

எனக்கு வினவு குழுவிலிருந்து வரும் பதிவுகள் பொதுவாப் பிடிக்கும்! யாரை வேணா விமர்சிப்பார்கள்- நல்லாவே! பதிவுலகில் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய இடம் உண்டு எனபதை மறுக்க முடியாதுதான். ஒருமுறை ஜெயராமுக்கு வக்காலத்து வாங்கியபோது எரிச்சலாகி இவர்களை விமர்சித்தேன்.

மற்றபடி பொதுவா நல்லாத்தான் எழுதுவார்கள்- வினவு என்கிற முகமூடி போட்டு அதில் மறைந்து எழுதும் பல மேதாவிகள். நான் போட்டிபோட்டுக்கொண்டு வினவுக்குப்போயி பின்னூட்டமெல்லாம் இடுவதில்லை. ஏன் னா இவங்க ரொம்ப ப்ரஃபெஷனல் மாதிரி இருக்கும். வளர்ந்துகொண்டிருக்கவங்களைத்தான் நாம படிச்சு பாராட்டி, திட்டி முன்னேத்தனும். பெரிய மேதாவிகளை அல்ல என்பது என்னுடைய மேதாவித்தனமான ஐடியா!

பதிவர் நரசிம்மை பிரபலமாக்கும் எண்ணத்துடன், தாமிரா-ஆதி பேட்டி என ஆரம்பிக்க, அதைத் தொடர்ந்து மயில் என்பவர் அதை விமர்சித்து ஒரு பதிவுபோட (இத நான் படிக்கலை), அதில் பதிவர் சந்தனமுல்லை ஒரு எரிச்சலைக்கிளப்பும் பின்னூட்டமிட (இதையும் நான் பார்க்கலை), இதைபடிச்சு நர்சிம் கடுப்பாகி அள்ளிக்கொட்ட! (வினவுக்கு நன்றி). அப்புறம் பதிவர நரசிம்மை பலர் கண்டிக்க...

ஆதி ஆரம்பிச்சது, நரசிம்மை பிரபலமாக்குவதுபோல ஒரு முயற்சி. அதுவே ஒரு அரசியல்தான். ஆனால் கடைசியில் நரசிம்மோட "பூக்காரி" (புனைவு)ப் பதிவால் ஆதி ஆரம்பிச்ச அரசியல் தடம் புரண்டு நர்சிம் தலையில் அவரே மண்ணள்ளிப்போட்டுக் கொண்டதுபோல கடைசியில் முடிஞ்சிருச்சு! இதெப்படி இருக்கு?

அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்!
அட யாருக்கடா புரியும்?

அவன் வேடிக்கையும் அதன் விளைவும்!

ங்கிற பாட்டுத்தான் ஞாபகம் வருது!

இப்போ யார் செஞ்சது தப்பு, ஆதியா? இல்லை அதை விமர்சித்த மயிலா? பின்னூட்டமிட்ட சந்தனமுல்லையா? இல்லை நரசிம்மா? னு பார்த்தால் நரசிம் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் அள்ளிக்கொட்டிவிட்டார்!

சரி அதுக்கு என்ன தண்டனை? அதெல்லாம் நம்ம யாருங்க முடிவு செய்ய? பாதிக்கப்பட்ட பதிவர் காயத்துடன் இருப்பார். தப்பு செய்தவரை ஆளாளுக்கு பதிவுபோட்டு கண்டிச்சுக்கிட்டே இருக்காங்க! Everybody gets their turn. This time it is Narasim's!

வினவு முகமூடி போட்ட ஒருவர்தான் இதை "பதிவரசியல்" என்கிற பதிவில் எல்லாவற்றையும் பி டி எஃப் ஆக்கி அழிக்க முடியாதபடி ஆக்கியிருக்காங்க! வினவு எழுதிய இந்தப்பதிவை எழுதிய மேதாவி யாருனு தெரியலை! இவருக்கு பதிவுலகில் உள்ள எல்லாவிதமான அரசியலும் தெரிஞ்சிருக்கு! அளவுக்கு அதிகமாகவே மேதாவித்தனமாத் தோண்டி எடுத்து நாறடிச்சு இருக்கார்!

நரசிம் இன்னொரு பெண் பதிவரை அவமானப்படுத்தியது தப்புத்தான். ந்ரசிம்மின் பதிவு சாதாரணமாக கறபனையாக ஒரு பதிவரை மனதில் கொண்டு எழுதாமலிருந்தால் அது ஓ கே. ஒருவரை தாக்கவேண்டுமென்று அவரை நினைத்து எழுதியிருந்தால், அது தப்புனு சொல்லலாம். இதனால் பாதிக்கப்படும் பதிவர் எவ்வளவு பாதிக்கப்படுவார் என்பது நரசிம் சிற்றறிவுக்கு எட்டாமல் போய்விட்டதுபோல தோனுது.

இருந்தாலும் பதிவுலகில் It happens to everybody, when you try to pay off someone. I dont think narasim realized that he was crossing the line until other critics and readers pointed out that. Because that is a creator's weakness- we all should know that! When he/she gets emotional, he/she would not know the limit! இன்னைக்கு நரசிம். நாளைக்கு யாரோ?

சரி, நரசிம் செய்தது தப்பு! வினவுவுடைய பதிவரசியல் சாக்கடை அலசல்ப்படி நரசிம்மின் அந்தப் பதிவு மட்டுமா தப்பு? இல்லை!

* நரசிம் பார்ப்பனராக பிறந்தது தப்பு!

* நர்சிம் பணக்காரரா பிறந்தது தப்பு!

* " நரசிம் என்ன வேலை பார்க்கிறார். நர்சிம் அப்பா எப்படிப்பட்ட பார்ப்பனர். இப்படி போயிக்கிட்டே இருக்கு! இதெல்லாம் என்னங்க "வினவு முகமூடி"?

ஏன் நம்ம திராவிடர்கள் யாரும் இதுபோல் உணர்ச்சிவசப்படுவதில்லையா? ஆணாதிக்கவாதிகள் இல்லையா? திராவிடர்கள் எல்லாருமே பெண்ணியவாதிகளா, என்ன? நரசிம், ஒரு திராவிடரா இருந்தால் இதுபோல் உணர்ச்சிவசப்பட்டும் எழுதியிருக்கமாட்டார்னு நீங்க நெனச்சா, நீங்க ஒரு முட்டாள்!

நரசிம் செய்தது தப்புனு சொன்னதோட வினவு முகமூடி போட்டிருக்கும் அந்த மேதாவி நிறுத்தி இருக்கலாம், இல்லை நிறுத்தி இருக்கனும்.

அதுமட்டுமல்ல, * அபி அப்பா, *லதானந்த் * மங்களூர் சிவா போன்ற பதிவர்களையும் அவர்கள் பின்னூட்டமிடும் பதிவுகள் எழுதும் பெண் பதிவர்களையும் தேவையே இல்லாமல் சங்கடப்படுத்தியுள்ளார்கள். இதெல்லாம் கேவலமா இருக்கு வினவு முகமூடி போட்டிருக்கும் மேதாவி அவர்களே! குறையில்லாத பதிவர் யாருங்க? இந்த ஆரட்டிக்கிள் எழுதிய மேதாவி மட்டும் ஏதோ குறையே இல்லாத யோக்கியம் போலவும் வினவு என்கிற "முகமூடி"க்குள் மறைந்துகொண்டு அளவுக்கு அதிகமாக சின்னச் சின்ன விசயங்களையும் விமர்சித்து இந்தப் பதிவின் தரத்தை குறைந்து சாக்கடை அலசல் ஆக்கி விட்டார்கள்!

என்னவோ வினவோட இந்தப் பதிவைப்பத்தி விமர்சிக்கனும்னு தோனுச்சு! அம்புட்டுத்தான்! :)

30 comments:

கோவி.கண்ணன் said...

:)

அவரவர் அரசியலுக்கு ஆதரவாளர்கள் வேண்டுமில்லையா......அதனால் சிலரை சிலர் தாங்கி பிடிப்பதாக வலைக்குள் இழுப்பாங்க. அப்பாவிகள் எல்லா அரசியலுக்குள்ளும் சென்று தெரியாமல் சிக்கிக் கொள்கிறார்கள்.

கோவி.கண்ணன் said...

மாவோ இஸ்டுகளின் நிலம் சார்ந்த அரசியல் என்னவாக இருந்தாலும் அப்பாவிகள் உள்ளிடோரை ரயில் தகர்ப்பு போன்றவற்றால் கொல்லப்படுவதை இவர்கள் கண்டிப்பதில்லை. ஒன்றுமே இல்லாதா ஈகோ அரசியலை உலக தீவிரவாதம் போல் பில்டப் கொடுத்து சாதிப் பிரச்சனையாக வடிவம் கொடுத்து இருக்கிறார்கள். அந்த பிரச்சனையில் ஆணாதிக்க தொனி இருந்தாலும் இன்றைய சமூகப் பிரச்சனையில் இவை கடுகளவு தான். முகமூடி போட்டுக் கொண்டு எழுதும் ஒரு குழு பிறரை கண்டிப்பதே அடிப்படை தவறு தான். இவர்களெல்லாம் தண்டனை கொடுக்கக் கூவுகிறார்களாம். சிவப்பு தலிபானிஸ்டுகள் என்று எங்கேயோ படித்தேன். நடப்புகளைப் பார்த்தால் அதுவும் சரிதான் என்று தெரிகிறது.

பிரச்சனையை தொட்டதற்கு நன்றி. இதன் தொடர்பில் நான் யாருக்கும் ஆதரவோ எதிர்போ தெரிவிக்கவில்லை. ஆனால் இது பற்றி பேசுபவர்களின் யோக்கிதைகளும் பேசப்பட வேண்டும்.

வருண் said...

வாங்க கோவி! :)

***முகமூடி போட்டுக் கொண்டு எழுதும் ஒரு குழு பிறரை கண்டிப்பதே அடிப்படை தவறு தான். இவர்களெல்லாம் தண்டனை கொடுக்கக் கூவுகிறார்களாம். ***

இன்னைக்கு நரசிம் செய்ததுபோல எல்லாரும் தவறு செய்றவங்கதான். அதுவும் இதுபோல் உணர்ச்சிவசப்படுவது தமிழனுக்கு உள்ள ஒரு முத்திரை. அது தப்புதான். இல்லைனு யாரும் சொல்லல. ஆனால் அதுக்காக "வினவு மேதாவி" நரசிம்மை வன்மையாகத் தண்டிக்கனும்னு கூவுறது எல்லாம்...

ஒரு பதிவருக்கு கஷ்டம்னா, அவர் எதிரியாயிருந்தாலும் மனிதாபிமானத்துடன் அந்தப் பதிவருக்கு உதவனும். இல்லைனா சும்மா விட்டுறனும். அவரை தண்டிக்கனும், இதிலிருந்து நீக்கனும்னு சொன்னால், அது வினவுவுடைய "கேவலமான" ஒரு வேண்டுகோள்னுதான் எனக்குத் தோனுது!

பகிர்வுக்கு நன்றி, கோவி! :)

smart said...

//ஒரு பதிவருக்கு கஷ்டம்னா, அவர் எதிரியாயிருந்தாலும் மனிதாபிமானத்துடன் அந்தப் பதிவருக்கு உதவனும். இல்லைனா சும்மா விட்டுறனும். அவரை தண்டிக்கனும், இதிலிருந்து நீக்கனும்னு சொன்னால், அது வினவுவுடைய "கேவலமான" ஒரு வேண்டுகோள்னுதான் எனக்குத் தோனுது!//
I like this point

கோவி.கண்ணன் said...

//

I like this point//

யோக்கியன் வந்துட்டான் சொம்பெடுத்து உள்ளே வையின்னு சொல்லுவாங்க. ஸ்மார் என்பவருக்கு பொருந்தும்.

இவரோட இந்த பதிவில் என் பெயரில் வெளியான போலி பின்னூட்டங்களை இவர் நீக்காமல் அதற்கு கேவலமாக பதில் சொல்லும் பின்னூட்டங்களை அனுமதித்தும் வைத்திருக்கிறார். இதுபற்றி நான் தனியாக பதிவும் போட்டு இருக்கிறேன். அந்த பின்னூட்டங்களை இவரே போட்டிருப்பாரா என்கிற ஐயம் கூட உண்டு. இவரும் ஒரு முகமூடி பதிவர் தான். சொம்பெடுத்து உள்ள வையுங்க வருண்.

smart said...

//இவரும் ஒரு முகமூடி பதிவர் தான். சொம்பெடுத்து உள்ள வையுங்க வருண்///
தலைவா என்ன சொல்றீங்க எந்த கமெண்டுன்னு பார்கிறேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் நான் முகமூடியில்லை. ஏன் பேரே எல்.ஸ்மார்ட் தான்

எம்.எம்.அப்துல்லா said...

//மாவோ இஸ்டுகளின் நிலம் சார்ந்த அரசியல் என்னவாக இருந்தாலும் அப்பாவிகள் உள்ளிடோரை ரயில் தகர்ப்பு போன்றவற்றால் கொல்லப்படுவதை இவர்கள் கண்டிப்பதில்லை //

கோவியண்ணே,

அந்த ரயில் தகர்ப்பு நிச்சயம் மாவோக்களின் வேலை அல்ல. காரணம் கடைநிலை மக்களுக்காக போராடும் அவர்கள் எந்த நிலையிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக தங்கள் பலத்தை பிரயோகிப்பது இல்லை.

மத்திய இந்தியப் பகுதியில் அவர்களுக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்கும் முகமாக அரசின் உளவு அமைப்புகளோ அல்லது மாவோக்களுக்கு எதிரான அமைப்புகளோ அதைச் செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

VIKNESHWARAN ADAKKALAM said...

தொப்பி... தொப்பி....

கோவி.கண்ணன் said...

//
கோவியண்ணே,

அந்த ரயில் தகர்ப்பு நிச்சயம் மாவோக்களின் வேலை அல்ல. காரணம் கடைநிலை மக்களுக்காக போராடும் அவர்கள் எந்த நிலையிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக தங்கள் பலத்தை பிரயோகிப்பது இல்லை.

மத்திய இந்தியப் பகுதியில் அவர்களுக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்கும் முகமாக அரசின் உளவு அமைப்புகளோ அல்லது மாவோக்களுக்கு எதிரான அமைப்புகளோ அதைச் செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை//

ரொம்ப தெளிவாக பதில் சொல்கிறீர்கள். இராணுவவீரர்களை கவர்மெண்ட் கைகூலிகளாக பார்த்து 100க் கணக்கில் கொல்லுவதை தாங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள், கூலிக்கு மாரடிப்பவர்களிடம் வீரம் காட்டும் மாவோ இஸ்டுகளிடம் எனக்கு நம்பிக்கை இல்லை.

நீங்கள் சந்தேகம் இல்லை என்று கூறுவதை உறுதியாகத் தெரியும் என்று கொள்ள வேண்டுமா ? :) அப்படி என்றால் அரசுக்கு விசாரணையில் உதவலாமே.

வருண் said...

***smart said...
//ஒரு பதிவருக்கு கஷ்டம்னா, அவர் எதிரியாயிருந்தாலும் மனிதாபிமானத்துடன் அந்தப் பதிவருக்கு உதவனும். இல்லைனா சும்மா விட்டுறனும். அவரை தண்டிக்கனும், இதிலிருந்து நீக்கனும்னு சொன்னால், அது வினவுவுடைய "கேவலமான" ஒரு வேண்டுகோள்னுதான் எனக்குத் தோனுது!//
I like this point

31 May 2010 6:50 PM***

Finally!!!! Good! :)

வருண் said...

***கோவி.கண்ணன் said...
//

smart said...

//ஒரு பதிவருக்கு கஷ்டம்னா, அவர் எதிரியாயிருந்தாலும் மனிதாபிமானத்துடன் அந்தப் பதிவருக்கு உதவனும். இல்லைனா சும்மா விட்டுறனும். அவரை தண்டிக்கனும், இதிலிருந்து நீக்கனும்னு சொன்னால், அது வினவுவுடைய "கேவலமான" ஒரு வேண்டுகோள்னுதான் எனக்குத் தோனுது!//
I like this point//

யோக்கியன் வந்துட்டான் சொம்பெடுத்து உள்ளே வையின்னு சொல்லுவாங்க. ஸ்மார் என்பவருக்கு பொருந்தும்.

இவரோட இந்த பதிவில் என் பெயரில் வெளியான போலி பின்னூட்டங்களை இவர் நீக்காமல் அதற்கு கேவலமாக பதில் சொல்லும் பின்னூட்டங்களை அனுமதித்தும் வைத்திருக்கிறார். இதுபற்றி நான் தனியாக பதிவும் போட்டு இருக்கிறேன். அந்த பின்னூட்டங்களை இவரே போட்டிருப்பாரா என்கிற ஐயம் கூட உண்டு. இவரும் ஒரு முகமூடி பதிவர் தான். சொம்பெடுத்து உள்ள வையுங்க வருண்.

31 May 2010 7:00 PM***

கோவி, "காலத்தில்" உங்க பதிவைப்பார்த்தேன். இந்த போலிகள் அக்கப்போர் தாங்கமுடியாலைங்க :(

வருண் said...

வாங்க, எம்.எம்.அப்துல்லா, மற்றும் VIKNESHWARAN :)

வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி :)

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்கள் சந்தேகம் இல்லை என்று கூறுவதை உறுதியாகத் தெரியும் என்று கொள்ள வேண்டுமா ? :) அப்படி என்றால் அரசுக்கு விசாரணையில் உதவலாமே. //

உதவலாம்.ஆனா எனக்கு ஹிந்தி தெரியாதே :)))))

மதி.இண்டியா said...

//எம்.எம்.அப்துல்லா said...

//மாவோ இஸ்டுகளின் நிலம் சார்ந்த அரசியல் என்னவாக இருந்தாலும் அப்பாவிகள் உள்ளிடோரை ரயில் தகர்ப்பு போன்றவற்றால் கொல்லப்படுவதை இவர்கள் கண்டிப்பதில்லை //

கோவியண்ணே,

அந்த ரயில் தகர்ப்பு நிச்சயம் மாவோக்களின் வேலை அல்ல. காரணம் கடைநிலை மக்களுக்காக போராடும் அவர்கள் எந்த நிலையிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக தங்கள் பலத்தை பிரயோகிப்பது இல்லை.

மத்திய இந்தியப் பகுதியில் அவர்களுக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்கும் முகமாக அரசின் உளவு அமைப்புகளோ அல்லது மாவோக்களுக்கு எதிரான அமைப்புகளோ அதைச் செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
//

மேற்கு வங்கத்தில் ரயிலைக் கவிழ்த்தது 'மாணிக்கபுரா லோதாசுளி என்ற நக்ஸலைட் அமைப்பு என்று தெரிய வந்துள்ளது..

அப்துல்லா , இப்படியே போய் கசாப்க்கு எதுவும் தெரியாது , இந்திய உளவு துறையின் சதி என்றும் நிரூப்பித்து விடுங்களேன்.

மாவோயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வந்த்தால் முதல் அடி உங்களை போன்றவர்களுக்குதான் .

Robin said...

வினவு கூட்டத்தினர், கம்யூனிச நாடுகளில் அமலில் இருக்கும் சர்வாதிகாரத்தை பதிவுலகிலும் காண்பிக்கிறார்கள்.

நல்லதந்தி said...

//அந்த ரயில் தகர்ப்பு நிச்சயம் மாவோக்களின் வேலை அல்ல. காரணம் கடைநிலை மக்களுக்காக போராடும் அவர்கள் எந்த நிலையிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக தங்கள் பலத்தை பிரயோகிப்பது இல்லை.//

எப்படிங்க இப்படி கலைஞர், மன்மோகன்சிங், ப.சிதம்பரம் அளவுக்கு சிந்திக்கிறீங்க!

எல் கே said...

excellent post varun

ரவி said...

இப்பவாவது உங்க பதிவை நாலு பேர் படிக்கிறமாதிரி செஞ்சுட்டீங்கண்ணே...

பாருங்க இருக்கற அவசரத்துல ஓட்டு கூட போட்டுட்டாங்க.

ரவி said...

///நரசிம் செய்தது தப்புனு சொன்னதோட வினவு முகமூடி போட்டிருக்கும் அந்த மேதாவி நிறுத்தி இருக்கலாம், இல்லை நிறுத்தி இருக்கனும்.
///

ஓ அப்படியாண்ணே ? நர்சிம் உங்க வீட்டு பெண்களை எழுதினாலும் உங்களுக்கு அப்படி மட்டும் தான் தோணுமானே ?

கலகலப்ரியா said...

vaazhththugal..

சீனு said...

//நீங்கள் சந்தேகம் இல்லை என்று கூறுவதை உறுதியாகத் தெரியும் என்று கொள்ள வேண்டுமா ? :) அப்படி என்றால் அரசுக்கு விசாரணையில் உதவலாமே.//

:))

ஒரு வேளை நர்சிம்-ம் ச.மு. இவர்கள் இருவரின் சாதியும் உல்டாவாக இருந்தால், இந்த விஷயம் எப்படி போயிருக்கும்? தெரியல.

வருண் said...

***மதி.இண்டியா said...

//எம்.எம்.அப்துல்லா said...

//மாவோ இஸ்டுகளின் நிலம் சார்ந்த அரசியல் என்னவாக இருந்தாலும் அப்பாவிகள் உள்ளிடோரை ரயில் தகர்ப்பு போன்றவற்றால் கொல்லப்படுவதை இவர்கள் கண்டிப்பதில்லை //

கோவியண்ணே,

அந்த ரயில் தகர்ப்பு நிச்சயம் மாவோக்களின் வேலை அல்ல. காரணம் கடைநிலை மக்களுக்காக போராடும் அவர்கள் எந்த நிலையிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக தங்கள் பலத்தை பிரயோகிப்பது இல்லை.

மத்திய இந்தியப் பகுதியில் அவர்களுக்கு பெருகிவரும் ஆதரவை தடுக்கும் முகமாக அரசின் உளவு அமைப்புகளோ அல்லது மாவோக்களுக்கு எதிரான அமைப்புகளோ அதைச் செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
//

மேற்கு வங்கத்தில் ரயிலைக் கவிழ்த்தது 'மாணிக்கபுரா லோதாசுளி என்ற நக்ஸலைட் அமைப்பு என்று தெரிய வந்துள்ளது..

அப்துல்லா , இப்படியே போய் கசாப்க்கு எதுவும் தெரியாது , இந்திய உளவு துறையின் சதி என்றும் நிரூப்பித்து விடுங்களேன்.

மாவோயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வந்த்தால் முதல் அடி உங்களை போன்றவர்களுக்குதான் .

31 May 2010 10:23 PM***

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க, மதி. இந்தியா! :)

வருண் said...

**Blogger Robin said...

வினவு கூட்டத்தினர், கம்யூனிச நாடுகளில் அமலில் இருக்கும் சர்வாதிகாரத்தை பதிவுலகிலும் காண்பிக்கிறார்கள்.

31 May 2010 10:24 PM***

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ராபின் அவர்களே! :)

வருண் said...

***நல்லதந்தி said...

//அந்த ரயில் தகர்ப்பு நிச்சயம் மாவோக்களின் வேலை அல்ல. காரணம் கடைநிலை மக்களுக்காக போராடும் அவர்கள் எந்த நிலையிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக தங்கள் பலத்தை பிரயோகிப்பது இல்லை.//

எப்படிங்க இப்படி கலைஞர், மன்மோகன்சிங், ப.சிதம்பரம் அளவுக்கு சிந்திக்கிறீங்க!

31 May 2010 11:10 PM***

வாங்க நல்லதந்தி! :)

வருண் said...

***செந்தழல் ரவி said...

இப்பவாவது உங்க பதிவை நாலு பேர் படிக்கிறமாதிரி செஞ்சுட்டீங்கண்ணே...

பாருங்க இருக்கற அவசரத்துல ஓட்டு கூட போட்டுட்டாங்க.

1 June 2010 1:06 AM***

ஏதோ தப்புப் ப்ண்ணீட்ட்டேன் போல இருக்கு. அதான் ஓட்டெல்லாம் விழுது.

இனிமேல் இதுபோல் எதுவும் தப்பு செய்ய மாட்டேன்னு உங்ககிட்ட சத்தியம் பண்ணுறேன்.

என்னமாரி ஆளையெல்லாம் கண்டுக்காம நீங்க நிம்மதியா இருங்க, சார்! உங்க லெவெல் என்ன? தரம் என்ன? இந்ததளத்தில் உங்க காலடி படுறதே தப்பு சார்! ஏன் உங்களை நீங்க குறைச்சுக்கிறீங்க?

வருண் said...

***Blogger LK said...

excellent post varun

1 June 2010 1:03 AM ***

Thanks, LK! :) Glad you liked it :)

வருண் said...

***செந்தழல் ரவி said...

///நரசிம் செய்தது தப்புனு சொன்னதோட வினவு முகமூடி போட்டிருக்கும் அந்த மேதாவி நிறுத்தி இருக்கலாம், இல்லை நிறுத்தி இருக்கனும்.
///

ஓ அப்படியாண்ணே ? நர்சிம் உங்க வீட்டு பெண்களை எழுதினாலும் உங்களுக்கு அப்படி மட்டும் தான் தோணுமானே ?

1 June 2010 1:07 AM***

அதுக்காக? பதிவுலகில் கண்டநாயும்தான் வந்து இஷ்டத்துக்கு ஏதாவது சொல்லும், அதுக்கெல்லாம் பயந்தா?

வினவு சொல்றதுக்கெல்லாம் நீங்க ஜால்ரா அடிங்க! அதுக்காக நானும் அடிக்கனும்னு நீங்க நெனைக்கிறதெல்லாம் தப்பு, சார்!

வருண் said...

***கலகலப்ரியா said...

vaazhththugal..

1 June 2010 4:21 AM
Delete***

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க, கலகல்ப்ரியா! :)

வருண் said...

*** சீனு said...

//நீங்கள் சந்தேகம் இல்லை என்று கூறுவதை உறுதியாகத் தெரியும் என்று கொள்ள வேண்டுமா ? :) அப்படி என்றால் அரசுக்கு விசாரணையில் உதவலாமே.//

:))

ஒரு வேளை நர்சிம்-ம் ச.மு. இவர்கள் இருவரின் சாதியும் உல்டாவாக இருந்தால், இந்த விஷயம் எப்படி போயிருக்கும்? தெரியல.

1 June 2010 4:39 AM***

எனக்கு, அவங்க ரெண்டுபேரையுமே சரியாக்கூடத்தெரியாது எனக்கு! ஆனால் "வினவு முகமூடி"யின் பதிவு வரம்பு மீறிவிட்டது என்பது என் எண்ணம்!

பதிவரசியல் என்கிர பேரில் பெரிய மேதாவிமாதிரி கண்ட பதிவர்களையும் விமர்சிக்க அவசியமே இல்லை!

A professional blogger would never do such cheap thing, imho.

தங்கள் கருத்துக்கு நன்றி, சீனு! :)

எம்.எம்.அப்துல்லா said...

// நல்லதந்தி said...
//அந்த ரயில் தகர்ப்பு நிச்சயம் மாவோக்களின் வேலை அல்ல. காரணம் கடைநிலை மக்களுக்காக போராடும் அவர்கள் எந்த நிலையிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக தங்கள் பலத்தை பிரயோகிப்பது இல்லை.//

எப்படிங்க இப்படி கலைஞர், மன்மோகன்சிங், ப.சிதம்பரம் அளவுக்கு சிந்திக்கிறீங்க!

//

அப்துல்லா , இப்படியே போய் கசாப்க்கு எதுவும் தெரியாது , இந்திய உளவு துறையின் சதி என்றும் நிரூப்பித்து விடுங்களேன்.

// மதி.இண்டியா said...

மாவோயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வந்த்தால் முதல் அடி உங்களை போன்றவர்களுக்குதான் .

//

அடக்கொடுமையே! நான் அப்படி போட்ட கமெண்ட் கோவியாரை நக்கலடித்துப் போட்டது. நான் உள்குத்து வைத்து நக்கலடிக்கிறேன் என்பது நன்றாகப் புரிந்ததால்தான் பதிலுக்கு கோவியும் நீ போய் ஆதாரம் குடுக்குறியான்னு நக்கல் உள்குத்தாய் நக்கல் அடித்தார்.

எனக்கு வன்முறை எவர் செய்தாலும் உடன்பாடு இல்லை.அவர்களை என்னால் கனவில்கூட ஆதரிக்க முடியாது.அது மாவோவாக இருந்தாலும் சரி, அல்-கொய்தாவாக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தாலும் சரி.

நான் போட்ட கமெண்ட் இந்த மாதிரியெல்லாம் செய்தி வெளியிட்டு அந்த இரயில் தகர்ப்பின் உண்மை நிலையை திசை திருப்புவார்கள் என்ற உள்குத்திற்காகத்தான்.