Friday, June 11, 2010

நான் பதிவுலகைவிட்டுப் போகமாட்டேன்!

பதிவுலகில் ரெண்டுவகையான பதிவர்கள்! முதல் வகை! கொஞ்சம் மரியாதை கொடுத்து எதிர்பார்க்கும் பதிவர்கள். இவர்கள், அடுத்தவர் மனதை மதித்து கண்ணாடிவீட்டிலிருந்ப்பதுபோல கவனமாக எழுதிவருபவர்கள். இவர்களுக்கு அப்பப்போ வரும் சோதனைகளால், இந்தப் பதிவுலக மக்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்விகள்! என் வயசென்ன? என் தகுதி என்ன? நான் இங்கே பதிவுலகில் வந்து என்ன பண்ணிக்கொண்டு இருக்கேன்? நெஜம்மாத்தான் கேக்கிறேன், What am I doing here?


இந்தப்பக்கம் சாதிச் சண்டை! அந்தப்பக்கம் நண்பன் துரோகியாகிறான்! இந்தப்பக்கம் சாரு ஜால்ராக்கள்! இந்தப்பக்கம் ஜெயமோஹன் ஜால்ராக்கள்! எதுக்கெடுத்தாலும் பாப்பானையே திட்டுறவர்கள் ஒருபக்கம்! தாங்கவே முடியாத அளவுக்கு பார்ப்பான் பெருமை பேசிப்பேசி பார்ப்பனர்களை திட்ட வழிவகுக்கும் சாதி வெறிபிடித்தமுட்டாள்கள் இன்னொரு பக்கம்! பெண்களை கேவலப்படுத்தும் பதிவர்கள் ஒருபக்கம்! பெண்ணியவாதிகள் போல நடிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம்! இப்படி இன்னும் எத்தனை எத்தனை கோஷ்டிகள், சண்டைகள், நாடகங்கள!

இந்த ரெண்டு கோஷ்டிகளூக்கு இடையில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் பதிவர்கள் இவர்கள்!


ஆமா இந்தப் பதிவுலகில் எவன் உண்மையா நடக்கிறான்? எல்லாருமே ஹிப்போக்ரைட்ஸ்தான். எல்லாருமே வியாபாரிகள்தான். புகழுக்கு அடிமையாகிற கேவலம் சாதாரண மனுஷ ஜென்மம்தானே எல்லாரும்! தன் பேரை தேவடியாமகனேனு சொல்லித் திட்டிப் போட்டாலும் தன் பெயரை பதிவில் பார்த்து ரசிக்கும் ஈனபிறவிகள். இதுபோதாதுன்னு குஞ்சப் பிடிச்சு ஒழுங்கா ஒண்ணுக்கு இருக்கத்தெரியாதவனெல்லாம் பெரிய இவன் மாதிரி வந்து அட்வைஸ் வேற!


ஆமா, என்னை நானே எதுக்கு இப்படிக் கேவலப்படுத்துக்கனும்? நான் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கேன்? காந்தியையே கொன்னவனுக நம்ம ஆளுகள்! பெரியாரை எப்படியாவது வஞ்சம் தீர்க்கவே பிறந்த பார்ப்பான்கள் பல! சாதியைக் கட்டி அழுபவர்கள்! என் மதம், என் கடவுள்தான் உயர்ந்தவை என்று பேசிக்கொண்டு திரியும் முட்டாள்கள் பலர்.


அட போகங்ப்பா! நான் எழுதி கிழிச்சது போதும்! நான் எழுதியதை நீங்க படிச்சுக் கிழிச்சது போதும்! இந்தப் பதிவுலக சாக்கடையில் நான் செலவழிக்கும் நேரத்திற்கு வேற ஏதாவது உறுப்படியா செய்யலாமே? பேசாமல் மெடிட்டேஷன் பண்ணலாம்! சரி இன்னையோட இந்த கண்றாவி எல்லாம் விட்டுட்டு நிம்மதியா இருப்போமே?


சரி இதுதான் என் கடைசிப்பதிவு! நான் யார் சொன்னாலும் கேக்கப்போவதில்லை! ஆனால் எப்படி சொல்லாமல் கொள்ளாமல் போறது? சரி சொல்லிப்புட்டே போயிடுவோம் னு ஒரு பெரிய முடிவெடுத்து. நான் பதிவுலகில் இனிமேல் எழுதப்போவதில்லை னு உண்மையான உணர்வுகளை அள்ளிக்கொட்டி ஒரு பதிவு போட்டால்...,


ஒரு நாளும் இல்லாத திருநாளா, பதிவுலக கண்மணிகளிடம் இருந்து ஒரே அன்பு மழையா பொழியும்! ஐயோ! தயவு செய்து உங்க முடிவ மாத்திக்கோங்க! வீணாப்போன பதிவர்லாம் என்ன எழவையோ டெய்லி எழுதிப் பொழைப்பு ஓட்டுறான், நீங்க ஏன் எழுதக்கூடாது? நாளுக்கு நாள் உங்க எழுத்து எவ்வளவு மாறிக்கொண்டு வருது தெரியுமா? நீங்க கட்டாயம் எழுதனும்! நீங்க எழுதலைனா தமிழ்த்தாயே கண்ணீர்விட்டு அழுதுடுவா! அந்தப்பாவம் உங்களை சும்மா விடாது னு ஒரே ஒப்பாரியா இருக்கும்.


உடனே நம்ம பதிவைப் படிக்காமல் நாலு பேர் தீக்குளிக்க வேணாம்னு சொல்லி மறுபடியும் எழுத ஆரம்பிக்கிற இளகிய மனமுள்ள பதிவர்கள் பலரை பார்த்து இருப்பீங்க, பார்த்துக்கொண்டு இருப்பீங்க! இன்னும் பார்ப்பீங்க!


---------------------------

அடுத்த வகை ஒண்ணு இருக்கு! ஏதோ என் பொழுதுபோக்குக்காக, எனக்குத் தெரிந்த தமிழை வச்சு எதையோ எழுதுறேன். பெரிய அவார்டு கிவார்டெல்லாம் எனக்கு வேணாம்! என் எண்ணங்களை நானே வச்சுக்கிட்டு சாகிறதுக்கு இங்கே கொண்டுவந்து கொட்டினால், ஒரு ரெண்டு பேரு என்னை மாதிரி யோசிக்கிறவன் என் எழுத்தை புரிஞ்சுக்க மாட்டானா? ஒரு நாலு பேர் என் அனுபவத்தை வச்சு பயனடைய மாட்டானா? என்கிற எண்ணத்துடன் பதிவுலகில் குப்பைகூட்டும் என்னை மாதிரி பதிவர்கள்! படிச்சாப் படி, பரிதுரைத்தால் பரிந்துரை! ஆனா கண்ட மேணிக்கு என்னை திட்டினா, என்னை வச்சு காமெடி பண்ணினால், நீ எல்லாம் எதுக்கு எழுதுற? ங்கிற மாதிரி உன் பின்னூட்டமெல்லாம் வந்துச்சுனா அதையெல்லாம் எடுத்துடுவேன். அதுக்கப்புறம் இந்தப்பக்கம் வரலைனா போ! என்னை வச்சு காமெடி பண்ணவா நான் எழுதுறேன்? இல்லண்ணே நான் அதுக்காக எழுதலை!

இதை வச்சு நான் கோடிகோடியா சம்பாரிச்சு என் குடும்பத்தை காப்பாத்துறேனாக்கும்? ஏதோ எனக்கு தோனுறதை, எனக்குத் தெரிஞ்ச அரைகுறை தமிழ்ல என் மன நிம்மதிக்காக, என் திருப்திக்காக, எனக்கு சரினு அந்த நிமிடத்தில் தோன்றியதை எழுதி என்னவோ பண்ணிக்கிட்டு இருக்கேன்! பதிவுலகை விட்டு நான் போகனுமா? போவேனா? முடியவே முடியாது!

எதுக்காக நான் போகனும்? எனக்கு இப்போ எதுக்கு ரெண்டு சுழி "ன"போடனும், எதுக்கு மூனு சுழி "ண"போடனும்னு தெரிஞ்சிருக்கு! எதுக்கு எந்த "ல" "ள" "ழ" போடனும்னு ஓரளவுக்கு கத்துருக்கேன்! எந்த "ர" "ற" எங்கே போடனும்னுகூட ஓரளவுக்கு கத்து இருக்கேன். இதெல்லாம் நான் பதிவுலகில் எழுதலைனா எப்படி கத்துக்க முடியும்? எழுதினால்த்தானே தப்பா எழுதமுடியும்? எழுதினால்த்தானே இதுபோல எது சரினு சந்தேகம் வரும்? எழுதினால்த்தானே என் தமிழைக் கொஞ்சம் பெட்டராக்க சாண்ஸ் கெடைக்கும்?

நான் கோவிச்சுக்கிட்டு எழுத மாட்டேன்னு சொன்னா? யாருக்கு நஷ்டம்? எனக்குத்தானே முதல் நஷ்டம்? நான் போறதுனாலே பதிவுலகம் நல்லாயிடுமா என்ன? நான் இருக்கிறதாலே பதிவுலகம் பெட்டராகுதுனு சொல்ல வரலை! நான் கொஞ்சம் தமிழாவது கத்துக்கிறேன் இல்லையா? எனக்காக்கதான் நான் எழுதுறேன்! சாகிறவரைக்கும் எழுதுவேன்! என் ப்ளாக் இருக்கிற வரை எழுதுவேன்! எழுதிக்கிட்டே இருப்பேன்! நான் இந்தப்பதிவுலகிவிட்டு கோவிச்சுக்கிட்டுப் போகமாட்டேன் மாட்டேன்! மாட்டேன்! எதுக்குப் போகனும்?

நான் பதிவுலகைவிட்டுப் போறேன்னு சொன்னா "நல்ல முடிவு! போயிட்டு வாங்க!"னு சொல்ல காத்து இருக்கீங்களா? பாவம் சார் நீங்க! எலவு காத்த கிளி நீங்கள்! உங்களுக்கு வடை கெடைக்காது சார்! :))

34 comments:

பழமைபேசி said...

//இந்தப்பதிவுலகிவிட்டு கோவிச்சுக்கிட்டுப் போகமாட்டேன் மாட்டேன்! மாட்டேன்! எதுக்குப் போகனும்?
//


புங்கமரம் புளிய மரம் சோலை சோலை....

வருண் said...

*** பழமைபேசி said...

//இந்தப்பதிவுலகிவிட்டு கோவிச்சுக்கிட்டுப் போகமாட்டேன் மாட்டேன்! மாட்டேன்! எதுக்குப் போகனும்?
//


புங்கமரம் புளிய மரம் சோலை சோலை....

11 June 2010 7:43 AM***

ஆமா! :)

அப்புறம் சோலையில் வெளையாண்டுக்கிட்டு இருக்கிற பழமை பேசி! :)

ILA (a) இளா said...

//வடை கெடைக்காது //
இது எங்கூரு பக்கம் டபுள் மீனிங் தெரியுமா?

குடுகுடுப்பை said...

ரொம்ப நன்றி வருண் சார்.

வருண் said...

***ILA(@)இளா said...

//வடை கெடைக்காது //
இது எங்கூரு பக்கம் டபுள் மீனிங் தெரியுமா?
11 June 2010 8:18 AM ***

உங்கூர்ல மட்டும்தான் டபுளு மீனிங்கா? எங்கூர்லயும்தான்! :)))

வருண் said...

***குடுகுடுப்பை said...

ரொம்ப நன்றி வருண் சார்.

11 June 2010 8:28 AM***

வாங்க குடுகுடுப்பை! தங்கள் நன்றிக்கு< நன்றிங்க! :)

இனியா said...

:)

Unknown said...

Good post.For the present let me watch.

கிரி said...

வருண் பதிவு நல்லா இருக்கு! நீங்க சொல்கிற பிரச்சனை ரொம்ப காலமா நடக்குது.. ம்ம்ம் என்னமோ போங்க!

Robin said...

உங்களைப் போன்ற அஞ்சா நெஞ்சர்கள் மட்டுமே பதிவுலகில் நீடித்திருக்க முடியும் :)

நிகழ்காலத்தில்... said...

உள்ளதை உள்ளபடியே எழுதி இருக்கிறீங்க..

வாழ்த்துகள் ஓட்டும் போட்டாச்சு

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///வருண் said...

***ILA(@)இளா said...

//வடை கெடைக்காது //
இது எங்கூரு பக்கம் டபுள் மீனிங் தெரியுமா?
11 June 2010 8:18 AM ***

உங்கூர்ல மட்டும்தான் டபுளு மீனிங்கா? எங்கூர்லயும்தான்! :)))///


எங்க ஊர்ல வடைக்கு ஒரே ஒரு மீனிங் தான்.

ILA (a) இளா said...

அம்பி 0- உங்க ஊருக்கும் எங்க ஊருக்கும் ஒரு 30 கிமி இருக்குமா?

ILA (a) இளா said...

வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)

நசரேயன் said...

//ILA(@)இளா said...
வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)
11 June 2010 9:53 AM//

படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறேன்

குடுகுடுப்பை said...

நசரேயன் said...
//ILA(@)இளா said...
வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)
11 June 2010 9:53 AM//

படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை //

பின்னூட்டம் மட்டும் படிக்கும் நசரேயனை வாழ்த்துகிறேன்

வருண் said...

*** 11 June 2010 8:39 AM
Blogger இனியா said...

:)

11 June 2010 8:39 AM***

வாங்க, இனியா! :)

வருண் said...

**maruthu said...

Good post.For the present let me watch.

11 June 2010 8:57 AM
Delete***

Very good idea, indeed :)

வருண் said...

***கிரி said...

வருண் பதிவு நல்லா இருக்கு! நீங்க சொல்கிற பிரச்சனை ரொம்ப காலமா நடக்குது.. ம்ம்ம் என்னமோ போங்க!

11 June 2010 9:06 AM**

வாங்க, கிரி!

இந்த ஷங்கரைத்தான் உதைக்கனும். எந்திரனை சீக்கிரம் வெளியிட்டுயிருந்தா இந்தப் பிரச்சினையெல்லாம் ஜுஜுபியாயிடும்! இல்லையா?:)))

வருண் said...

*** Robin said...

உங்களைப் போன்ற அஞ்சா நெஞ்சர்கள் மட்டுமே பதிவுலகில் நீடித்திருக்க முடியும் :)

11 June 2010 9:10 AM***

தெரியலைங்க, பார்க்கலாம்! அமெரிக்கா வந்தபோது, இங்கேயிருந்து நானாத்தான் போவேன்! இவங்களா என்னை அனுப்பமுடியாதுனு ஒரு வீராப்போட போராடி இந்த நாட்டைக் கட்டி பிடிச்சுக்கிடோம்!

ஆனா ஒரு சிலர் நாங்க திரும்பி போறோம் திரும்பிப்போறோம்னு சொல்லிக்கிட்டே ஒரு 50 வருசம் குப்பைகூட்டவும் செய்றாங்க!

அதேமாதிரித்தான் இங்கே பதிவுலகிலும் நடக்குது. நான் ஏற்கனவே எழுதியிருக்கேன், முதல்ல நமக்காகத்தான் நம்ம எழுதுறோம்! மற்றவருக்கெல்லாம் ரெண்டாவதுதான் :)

வருண் said...

***நிகழ்காலத்தில்... said...

உள்ளதை உள்ளபடியே எழுதி இருக்கிறீங்க..

வாழ்த்துகள் ஓட்டும் போட்டாச்சு

11 June 2010 9:18 AM***

வாங்க நிகழ்காலத்தில்! நன்றி :)

வருண் said...

**Blogger ஆட்டையாம்பட்டி அம்பி said...

///வருண் said...

***ILA(@)இளா said...

//வடை கெடைக்காது //
இது எங்கூரு பக்கம் டபுள் மீனிங் தெரியுமா?
11 June 2010 8:18 AM ***

உங்கூர்ல மட்டும்தான் டபுளு மீனிங்கா? எங்கூர்லயும்தான்! :)))///


எங்க ஊர்ல வடைக்கு ஒரே ஒரு மீனிங் தான்.

11 June 2010 9:22 AM**

அப்படியா? நல்லா விசாரிச்சுப் பாருங்க சார்! :)

வருண் said...

*** ILA(@)இளா said...

வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)

11 June 2010 9:53 AM***

பாவம் கஷ்டப்பட்டு படிச்சிருக்கீங்க! :)))

வருண் said...

*** நசரேயன் said...

//ILA(@)இளா said...
வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)
11 June 2010 9:53 AM//

படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறேன்

11 June 2010 9:58 AM***

அவருக்கு பேப்பர் வொர்க்லாம் பிடிக்காதுபோல! லீஸ் சைன் பண்ணும்போதுகூட எதையும் வாசிக்காம "அக்ரீட்" னு "சைன்" பண்ணிடுவாராம்! :))

வருண் said...

*** குடுகுடுப்பை said...

நசரேயன் said...
//ILA(@)இளா said...
வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)
11 June 2010 9:53 AM//

படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை //

பின்னூட்டம் மட்டும் படிக்கும் நசரேயனை வாழ்த்துகிறேன்

11 June 2010 10:06 AM***

பதிவைவிட பின்னூட்டம்தான் அவருக்குப் பிடிக்கும்போல- இந்தத் தளத்தில்!!! :)

பரவாயில்லை விடுங்க! என்னத்தை புதுசா எழுதி கிழிச்சிடப்போறாங்கனு ஒரு நம்பிக்கைதான் போல :)))

ILA (a) இளா said...

//படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறேன்//
இப்படித்தான் பின்னூட்டம் போடுறேன்னு ஊருக்கேத் தெரியுமே.. :) பல பதிவுகள் படிக்காமையே 50 பின்னூட்டம் போட்ட வரலாறு எல்லாம் உண்டு, என்பது இங்கு தேவைஇல்லாத சரத்து

வருண் said...

*** *** குடுகுடுப்பை said...

நசரேயன் said...
//ILA(@)இளா said...
வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)
11 June 2010 9:53 AM//

படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை //

பின்னூட்டம் மட்டும் படிக்கும் நசரேயனை வாழ்த்துகிறேன்

11 June 2010 10:06 AM***

பதிவைவிட பின்னூட்டம்தான் அவருக்குப் பிடிக்கும்போல- இந்தத் தளத்தில்!!! :)

பரவாயில்லை விடுங்க! என்னத்தை புதுசா எழுதி கிழிச்சிடப்போறாங்கனு ஒரு நம்பிக்கைதான் போல :)))

11 June 2010 10:35 AM
Blogger ILA(@)இளா said...

//படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறேன்//
இப்படித்தான் பின்னூட்டம் போடுறேன்னு ஊருக்கேத் தெரியுமே.. :) பல பதிவுகள் படிக்காமையே 50 பின்னூட்டம் போட்ட வரலாறு எல்லாம் உண்டு, என்பது இங்கு தேவைஇல்லாத சரத்து

11 June 2010 10:51 AM***

பொன்னான நேரத்த செலவழிச்சு பின்னூட்டமிடுவதே பெரிய விசயம். இதில், படிச்சுத்தான் பின்னூட்டமிடனும்னு சொல்றதெல்லாம் ரொம்ப அதிகம் னு நான் நெனைக்கிறேன் :)))

கயல்விழி said...

உங்களுக்கு ஜோக் எல்லாம் அடிக்க வருமா? படிக்கறவங்க அலறிடப்போறாங்க!:) :)

வருண் said...

எனக்கு ஜோக் அடிக்க வரும்னு நான் எங்கே சொன்னேன்? என்னிடம் இல்லாததை/முடியாததை எதிர்பார்த்தால் திருடியா கொடுக்க முடியும்? இல்லைனுதான் சொல்ல முடியும்? அவங்கதான் நல்ல ஜோக் கெடைக்கிற இடமாப் பார்த்துப் போகனும்! பதிவர்களும், கயல் மாதிரி வாசகர்களும் என்னைவிட அறிவில் சிறந்தவர்கள்னு எனக்கு எப்போவுமே தெரியும்! :)

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துக்கள்.

bandhu said...

நீங்கள் எழுதியதில் நல்ல உருப்படியான ஒரு இடுகை. (ஒரேயா என்று தெரியவில்லை :-) )

வருண் said...

***Dr.P.Kandaswamy said...
நல்ல கருத்துக்கள்.

11 June 2010 3:36 PM

-------------


Ravi said...
நீங்கள் எழுதியதில் நல்ல உருப்படியான ஒரு இடுகை. (ஒரேயா என்று தெரியவில்லை :-) )

11 June 2010 4:44 PM***

நன்றி, திரு. கந்தஸ்வாமி. நன்றி, திரு. ரவி :)

a said...

வருண்,

நீங்க நல்லவரா கேட்டவரா? ( தெரியலியே பா... ன்னு பதில் சொல்லாம உண்மைய சொல்லுங்க...

வருண் said...

*** வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...
வருண்,

நீங்க நல்லவரா கேட்டவரா? ( தெரியலியே பா... ன்னு பதில் சொல்லாம உண்மைய சொல்லுங்க...

12 June 2010 9:44 PM***

என்னை நான் ஜட்ஜ் பண்ணினால் மிஸ்ஜட்ஜ் பண்ணிடுவேன்னு இன்னொரு நல்லவர் என்னை ஜட்ஜ் பண்ணி சொல்லட்டும்னு அவரை நம்பினேன்.

அவரு, நேத்து உன்னைப்போல நல்லவன் உலகத்திலேயே இல்லைனாரு. இன்னைக்கு உன்னைவிட கேவலமான விலங்கு உலகத்தில் இல்லைனு சொல்றாரு!

என்னங்க நேத்து இப்படி சொன்னீங்களே? இன்னைக்கு அப்படியே மாத்தி சொல்றீங்கனு கேட்டால், அவரு சொல்றாரு, உன்னுடைய அசிங்கமான பார்ட் நேத்து எனக்குத் தெரியலை. அதை மறைச்சுட்ட னு. அது அவருடைய அறியாமையாம்! இப்போ அவருக்கு என்னுடைய கேவலமானபார்ட் மட்டும்தான் தெரியுது!

அவருடைய ஜட்ஜ்மெண்ட் சரியானு கேட்டீங்கனா எனக்குத் தெரியாது. கடவுளே சுயநலம்னு நம்புறவன் நான். அவர் மனுஷன்ந்தான். ஆனா அவர் அறியாமையால் நஷ்டப்பட்டது யாருனு சொல்லுங்க?

நானா? இல்லை அவரா? இல்லை நீங்களா? :)))