Tuesday, June 22, 2010

மணிரத்னம்தான்!! கேவலமாயிருக்கு அமிதாப் ஜீ!

அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்த ராவன் (ஹிந்தி), குரு அளவுக்கு எடுபடாமல் பாதாளத்தில் விழுந்துடுச்சு! தமிழில் ராவணன் படம் வெற்றியா தோல்வியானு இன்னும் முடிவாத் தெரியலை, ஆனால் வட இந்தியாவைப் பொருத்தவரையில் ஹிந்தியில் ராவன் படம் தோல்வினு ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க!

யு கே பாக்ஸ் ஆஃபிஸ்லயும் ஹிந்தி வேர்ஷன் பெருசா கலக்சன் பண்ணவில்லை! தமிழ் ராவணன் ஓரளவுக்கு கலக்சன் கொடுத்திருக்குனு சொல்லலாம். இருந்தாலும் தமிழ் ராவணனும் அபப்டி ஒண்ணும் சிவாஜி, தசாவதாரம், குசேலன் அளவுக்கு கலக்சன் கொடுக்கலை!

U.K. BOX-OFFICE

* Raavan has debuted at No. 11 position. In its opening weekend, the film has collected £ 1,22,284 (approx. Rs. 83.04 lacs) on 55 screens, with the per screen average working out to £ 2,223.

* Raavanan (Tamil film) has debuted at No. 16 position. In its opening weekend, the film has collected £ 66,317 (approx. Rs. 45.03 lacs) on 14 screens, with the per screen average working out to £ 4,737. Note:- Includes Thursday previews.

சரி, மகன் நடிச்ச படம் விழுந்ததும், அமிதாப் ஒரே புலம்பல்! படத்தில் எடிட்டிங் சரியில்லை, படத்தை ஒழுங்கா எடுக்கைலை, அதனாலதான் விழுந்துவிட்டதுனு! படத்துக்கு இவரே நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுக்க ஆரம்பித்து, மணிரத்னத்தை குறைசொல்ல ஆரம்பிச்சுட்டார். படம்விழுந்தா 90% இயக்குனர் மேலே தப்புனுதான் உலகமே அறிந்ததாச்சே? இதை வெளியே சொல்லி மணிரத்னத்தை இறக்கனுமா என்ன? என்ன கொடுமை இது அமிதாப் ஜீ?

ஏன் இப்படி அமிதாப், அவர் சம்பாரிச்ச பேரை எல்லாம் இப்படி வாய் பேசி கெடுத்து குட்டிச்சுவராக்கிக்கொண்டு வருகிறார்னு தெரியலை!

While the Tamil version of Mani Ratnam’s Raavan continues to do well at the boxoffice, a mini-Mahabharat is brewing over the Hindi version. Amitabh Bachchan, irked by the poor response to the film, on Sunday blamed its bad editing for spoiling his son Abhishek Bachchan’s role.

டெய்லி ஒரு பதிவு போடலைனா இங்கே பதிவுலகில் நமக்கு தூக்கம் வராதுங்கிற மாதிரி, அமிதாப்புக்கு டெய்லி எதையாவது மீடியாவுக்கு சொல்லலைனா தூக்கம் வராது போல இருக்கு!

ஆனா, நம்ம மணி அமிதாப்புக்கு பொறுப்பா பதில் சொல்லியிருக்கார்!

The ace director reportedly told in the interview that the Big B could have telephoned him to express his thoughts before making it public. However, it is the prerogative of each and every person to comment, he said. Mani also added that his fans’ opinions matter the most to him.

ஒரு படம் விழுந்தா இப்படியா இவ்வளவு அனுபவசாலியான அமிதாப் அழுகிறது? என் மகன் எந்த தப்பும் பண்ணலை எல்லாம் மணிரத்னம் தப்புதான்! னு அழறது கேவலமா இருக்கு அமிதாப் ஜீ!

9 comments:

Unknown said...

தமிழ், ஹிந்தி இரண்டிலும் இராவணன் பார்த்துவிட்டேன்... என்னால் உணரமுடிந்த வித்தியாசம் அபிஷேக்கை விட விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார்... அதுதான் தமிழில் ஓரளவு கலெக்சன் வர காரணம்... அபிஷேக் கலரும்... உடல்கட்டும்... - ஒரு போராளியாக... அவரை பார்க்கமுடியவில்லை... இதெல்லாம் Big B க்கு தெரியாதா என்ன?

ராஜ நடராஜன் said...

//ஆனால் வட இந்தியாவைப் பொருத்தவரையில் ஹிந்தியில் ராவன் படம் தோல்வினு ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க!//

ஆளாளுக்கு ஏதாவது சுத்துங்க:) இன்னொருத்தர கேட்டா தமிழ்தான் ஊத்திகிச்சு,ஹிந்திதான் கை கொடுக்குதுன்னு.இந்த வாரம் அபிசேக்கையும் பார்த்துட வேண்டியதுதான்.

மருதநாயகம் said...

எங்க ஆபீசில் ஒரு குஜராத்தி இந்தியில் ராவண் பார்த்து இருக்கிறார் தமிழில் எப்படி இருக்கிறது என்று கேட்டார், நன்றாக இருக்கிறது என்று பதில் சொன்னதுக்கு "Is it?" என்று பதில் கேள்வி கேட்டார்

Chitra said...

இக்கரைக்கு அக்கரை பச்சை.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

வருண் said...

*** Govindarajan said...

தமிழ், ஹிந்தி இரண்டிலும் இராவணன் பார்த்துவிட்டேன்... என்னால் உணரமுடிந்த வித்தியாசம் அபிஷேக்கை விட விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார்... அதுதான் தமிழில் ஓரளவு கலெக்சன் வர காரணம்... அபிஷேக் கலரும்... உடல்கட்டும்... - ஒரு போராளியாக... அவரை பார்க்கமுடியவில்லை... இதெல்லாம் Big B க்கு தெரியாதா என்ன?

22 June 2010 1:56 PM***

நன்றிங்க, கோவிந்த ராஜன்! விக்ரம் அளவுக்கு அபிஷேக் நிச்சயம் "tough" கெடையாது. ஆனால் அமிதாப், தன் மகனுடைய குறைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால், அட் லீஸ்ட், சும்மா எதுவும் சொல்லாமல் இருக்கலாம்.

Big B has a BIG MOUTH he needs to shut up and let his son on his own and avoid commenting anything on "family related" stuff.

வருண் said...

*** ராஜ நடராஜன் said...

//ஆனால் வட இந்தியாவைப் பொருத்தவரையில் ஹிந்தியில் ராவன் படம் தோல்வினு ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க!//

ஆளாளுக்கு ஏதாவது சுத்துங்க:) இன்னொருத்தர கேட்டா தமிழ்தான் ஊத்திகிச்சு,ஹிந்திதான் கை கொடுக்குதுன்னு.இந்த வாரம் அபிசேக்கையும் பார்த்துட வேண்டியதுதான்.

22 June 2010 1:59 PM***

தல: பாக்ஸ் ஆஃபிஸ் ரிசல்டை எல்லாம் மூடிமறைக்க முடியாது. ஒருவேளை தமிழிலிம் தோல்வியா ஆகலாம். ஹிந்தியில் வெற்றியடைவதென்பது குதிரைக் கொம்புதான் :)

வருண் said...

***Blogger மருதநாயகம் said...

எங்க ஆபீசில் ஒரு குஜராத்தி இந்தியில் ராவண் பார்த்து இருக்கிறார் தமிழில் எப்படி இருக்கிறது என்று கேட்டார், நன்றாக இருக்கிறது என்று பதில் சொன்னதுக்கு "Is it?" என்று பதில் கேள்வி கேட்டார்

22 June 2010 2:13 PM***

அதுதாங்க நானும் அறிந்த உண்மை. கொஞ்சம் பொறுத்துப்பார்ப்போம்! :)

வருண் said...

***Blogger Chitra said...

இக்கரைக்கு அக்கரை பச்சை.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

22 June 2010 2:30 PM**

:-))))