Friday, December 9, 2011

தன் தவறை ஒத்துக்கொள்வாரா இந்த ஞாநி?


ஒரு படத்தை பலகோடிக்கணக்கில் செலவு செய்து, மீடியா மற்றும் கமர்ஷியலால் வெற்றி பெறவைப்பது எளிது, ரஜினியின் எந்திரனுடைய வெற்றிக்கு மீடியா ப்ரமோஷந்தான் முழுமையான காரணம் என ஞாநி எந்திரன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்போது விவாதித்தார். எதிர்வாதம் செய்த ஸ்ரீதர் பிள்ளை மற்றும் சின்மாயி, "அதெல்லாம் இல்லை" என்று பலவிதமாக வாதாடி வெற்றியும் பெற்றனர். வாதத்தில் என்ன வெற்றி தோல்வி? வாதத்தில் வெற்றியடைந்ததும் வெற்றியடைந்த வாதிகள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிடுவதில்லை!

கால்ப்போக்கில் உண்மை வெளிவந்துவிடும்! இன்று, ஞாநியின் வாதம், அதாவது எந்திரன் வெற்றிக்கு முழுக்க முழுக்க மீடியாதான் காரணம் என்கிற வாதம்- வெறும் விதண்டாவாதம் என்பதை அடித்துச்சொல்வது போல ஆகிவிட்டது? எப்படினா அந்த விவாததிற்குப் பிறகு சில ஆண்டுகளில் வெளிவந்து "வெற்றிகரமாக" ஓடிய எஸ் ஆர் கே யின் ரா ஒன் படத்தின் தலை எழுத்தை கவனிச்சுப் பாருங்க!

ஷங்கர் எந்திரனுக்காக எஸ் ஆர் கே யை அனுகியபோது அவரையும், அவருடைய கதையையும் பெருசாக எடுத்துக்காமல், "டேர்ன் டவ்ன்" செய்துவிட்டார் எஸ் ஆர் கே. அவர் கழித்த படத்தை ரஜினி நடிச்சு, சன் நெட் வொர்க் தயாரிச்சு வெளிவந்த எந்திரன் மிகப்பெரிய வெற்றிப் படமாகிவிட்டது. நிற்க! ஒரு சில தியேட்டர்கள் போட்ட காசை எடுக்கவில்லை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், மொத்தத்தில் எந்திரன் வெற்றிப்படமே!

எந்திரன் வெற்றியால் மனம்தளராமல் எஸ் ஆர் கே தன் ரா ஒன் படத்தை எந்திரனைவிட அதிகம் செலவழிச்சு எடுத்தது மட்டுமல்லாமல், எந்திரனுக்கு செய்ததைவிட பலமடங்கு கமர்ஷியல் மற்றும், மீடியா மூலம் பலவிதமாக ப்ரமோட் செய்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஞாநிக்கும் இதெல்லாம் நிச்சயம் தெரியும்தான்.

ஆனால் ரா ஒன் ஒரு கமர்ஷியல் ஃப்ளாப் படமாகிவிட்டது!

இவ்வளவு பப்ளிசிட்டி செய்தும் ரா ஒன் படம் வெற்றியடையவில்லை என்று இன்று உலகமே ஒத்துக்கொள்கிறது (எஸ் ஆர் கே ஜால்ராக்களையும் சேர்த்துத்தான்). இதே உலகத்தில் வாழும் ஞாநியும் ஒத்துக்கொள்வார், அவருக்கு இதில் எதுவும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பே இல்லை என நம்புவோம்.

அதேபோல் ஒரு படத்தை கமர்ஷியல், மீடியா ப்ரமோஷன் வைத்து வெற்றிபெற வைக்க முடியாது என்பதை ஞாநி உணரும் வண்ணம் இந்த ரா ஒன் தோல்வி அமைந்துவிட்டது.

மனசாட்சியுள்ள ஞாநி, தான் வாதிட்டது விதண்டாவாதம்போல இருக்கே என்று தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும், தன் மனதளவில் ஒத்துக்கொள்வார் என நம்புவோம்!

இது சம்மந்தடப்பட்ட பழைய பதிவு ஒண்ணு இங்கே இருக்கு!

எந்திரன் விவாதம்: ஞாநி நெறைய பொய் சொல்லுகிறார்.

4 comments:

கிரி said...

சரியா சொன்னீங்க! ஞானி எப்பவும் ஒத்துக்க மாட்டார். கமல் கூட எந்திரன் படம் ஓட விளம்பரமே காரணம் என்று கூறினார். விளம்பரத்தால் மட்டுமே எந்த படமும் ஓட முடியாது அதுவும் இதைப்போல மாபெரும் பட்ஜெட் படங்கள்.

ராவணன் said...

இந்த சாணி...சாரி...ஞானி யாரு?

நல்லூர் அய்யரா?

துஷ்யந்தன் said...

வருண்... உண்மைதான் இந்திரன் வெற்றிப்படம் என்பதில் கொஞ்சமும் பொய் இல்லை.... ரா ஒன்- எந்திரன் ஒப்பிடுவதே எரிச்சலப்பா.... ரான் ஒன் பாக்கும் போது எனக்கு காட்டுன் படம் பார்த்த பிரமைதான்..... ரான் ஒன் குழந்தைகளுக்கான படம் என்று சாருக்கான் அறிவித்து இருக்கலாம்....

சாருக்கான் எந்திரனை மிஸ் பண்ணியதை இப்பவும் நினைத்து புலம்புவார் என்று நினைக்கிறேன்... ஹா ஹா

துஷ்யந்தன் said...

விளம்பரத்தால்தான் படம் ஓடுது என்பதை ஏற்க்க முடியாது..... நல்ல படங்கள் எப்படியும் ஓடும்.... மொக்கை படங்கள் எந்த விளம்பரத்தாலும் ஓடாது... இதுக்கு சமிபத்திய உதாரணம்... ரான் ஒன்.