Wednesday, January 18, 2012

தலைப்பில் பதினெட்டு பிளஸை தவிர்க்கும் யோக்கியர்கள்!

பதிவுலகுல பலவிதமான யோக்கியர்களை பார்க்கலாம்! ஒரு சிலர் எவ்வளவுதான் பிரபலமானாலும் அவங்க சின்னப்புத்தி போறதில்லை! பேசுறதெல்லாம் பெரிய யோக்கியன் ஜெண்டில்மேன் மாதிரிப் பேசுவானுக! ஆனால் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தால் இவனுக வண்டாளம் தண்டவாளத்தில் ஏறிடும்.

அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர் வருகிற பதிவின் தலைப்பில் 18+ போடுவது நாகரிகம்! இதை ஒழுங்கா போட்டுக்கிட்டுத்தான் இருந்தார்கள்.

தமிழ்மணம் ஒரு மாற்றம் கொண்டு வந்தது! அதாவது 18+ பதிவை சூடாக்கி முகப்பில் தெரிய வைப்பதில்லை என்பது அது.

18 அல்லது 18+ தலைப்பில் இருந்தால் அது முகப்பில் சூடாக ஆகி நிற்காது! சூடான இடுகைகளில் மறைந்து நிற்கும்! இதை உணர்ந்த சில நரிகள், தங்கள் பேராசையால் நியாயமாக 18+ போடவேண்டிய பதிவுக்கும் போடுவதில்லை.

இதிலே வேடிக்கை என்னனா 18 நம்பர் போட்டாலே அந்தப் பதிவு முகப்பில் தெரியும் 10 சூடான இடுகையில் வராது! இன்னைக்கு இந்த மேதாவியின் அடல்ட்ஸ் ஒன்லி பதிவில் வருகிற தேதி 18 ஆகிப்போனதால அது முகப்பில் வரலை!!!

அடுத்த முறை தேதியை மாத்தி 19 னு போடுங்கப்பூ! உங்க பச்சைப் பதிவு முகப்பில் வந்து அம்மனமாக ஆடும்!

8 comments:

சார்வாகன் said...

Everybody knows that they do it intentionally .

வருண் said...

இந்த மாற்றம் கொண்டு வந்ததே இவனுக "போர்ன் ஜோக்" அக்கப்போரு தாங்கமுடியாமல்தான். இவனுகளே இப்படி "பைப்பாஸ்" பண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?? இந்த மாதிரி சின்னப்புத்தி என்னைக்கு இவனுகட்ட இருந்து போகும்? எனிவே, இந்தப் பதிவுல இருந்து இவனுக செய்ற கில்லாடித்தனம் எல்லாம் நமக்கும் தெரியும்னு தெரிஞ்சுக்கட்டும்!

துளசி கோபால் said...

???????????????????????????

வருண் said...

விடுங்க டீச்சர், இதெல்லாம் கொஞ்சம் சில்லி மேட்டர். புரியவேண்டியவர்களுக்கு மட்டும் நறுக்குனு குத்தும்! புரிந்தாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்து மறுபடியும் ஏமாத்துவானுக!

ILA (a) இளா said...

போட்டாத்தான் படிக்க வருவாங்க. ஆனா போட்டா வராது. எப்படித்தான்யா ஆள் சேத்துறது?

வருண் said...

iLa: நீங்களாவது எப்படி ஆள் தேத்துறதுனு யோசிக்கிறீங்க!

ஆளெல்லாம் தேத்தி 1000 + ஃபாளோவர்ஸ் வந்ததுக்கப்புறமும் திருப்தி அடையாமல் "எல்லாம் தெரிந்துகொண்டு" இது மாதிரி வேலை செய்றாங்க ஒரு சிலர்! இவங்களுக்கு என்னதான் வேணும்? நான் ஏதாவது இது மாதிரி கேள்வி கேட்டால் "உனக்கு பொறாமை" னு ஒரு எதிர் வாதம்! இவங்களைப் பாத்து பொறாமைப் பட்டுட்டாலும்! :-))))

ILA (a) இளா said...

Its called Ethics. People are ready to violate it for their own benefits

வருண் said...

***ILA(@)இளா said...

Its called Ethics. People are ready to violate it for their own benefits

19 January 2012 12:58 PM***

Well, I felt like sharing this issue to the bloggers because I want them to know we know what their ethics and morals really are. This post will be here forever so that they can not plead "innocent" later!