Tuesday, February 28, 2012

பதிவர் வால் பையனுக்கு ஒரு ஆலோசனை!

அறிவுரை என்பது பெரிய வார்த்தை. எனக்குத் தெரிய யாருக்குமே பிடிக்காது. பொதுவாக அறிவுரை சொல்ல தகுதி யாருக்கும் இருக்கானு எனக்குத் தெரியலை. ஆனால் சும்மா ஒரு ஆலோசனை செய்யலாம், நலம் விரும்பியாக இருந்தால்.

இவருடைய சமீபத்து பதிவிலிருந்தும், ஏற்கனவே எழுதிய பல பதிவுகளிலிருந்தும் சாருனா வால் பையனுக்கு சுத்தமாகப் பிடிக்காதுனு தெரியுது. இதே மாதிரி ஏகப்பட்ட பேரு இருக்கோம். சமீபத்தில் இணையதள கருத்துச் சுதந்திரம் கிடைத்தவுடன் பலருடைய படைப்பையும் ஏன் அவர்களையும் பலவாறு விமர்சிக்கிறோம். பொய் சொல்றவங்களைப் பார்த்து எரிச்சலடைந்து, சமூகத்தை கெடுப்பவர்களைப் பார்த்து கோபமடைந்து, நம் உணர்வுகளை அள்ளிக்கொட்டுறோம். இது நம்முடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, எழுத்துச் சுதந்திரம்னு ஜஸ்டிஃபை பண்ணலாம். அதில் சந்தேகமே இல்லை!

ஆனால், பேச்சுரிமை, எழுத்துரிமைக்கும் ஒரு வரம்பு இருக்குனு நான் நம்புறேன். ஒருவரை பார்த்தால் அவரை கண்ட இடத்தில் அடிப்பேன் என்று சொல்வது நிச்சயம் பேச்சுச் சுதந்திரத்தில் அடங்காதுனு நான் நினைக்றேன்.

நேரில் பார்த்தால் சாரு என்னிடம் அடி வாங்குவது உறுதி என ரமேஷ்வைத்யாவிடம் சொன்னது எனது பழைய பதிவில் இருக்கும் அதை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

இப்பொழுது நான் சென்னையில் தான் இருக்கிறேன், மே மாதம் வரை சென்னையில் இருந்தே ஆகவேண்டிய காட்டாய வேலைப்பணி, அதற்குள் சாரு அடி வாங்கினால் நண்பர்களுக்கு ட்ரீட் நம்ம செலவில், பத்து வட்டிக்கு கடன் வாங்கியாவது!

நான் சட்டம் படிக்கவில்லை! அதனால் சட்டத்தை இங்கே கோடிட்டுக் காட்ட இயலாது. ஒருவரை வெறுக்க நமக்கு நிச்சயம் உரிமை இருக்கு. அவர்களை, அவங்க படைப்புகளை வெறுக்கலாம். அவங்களப் பார்த்தால் அடிக்கனும் உதைக்கனும் என்ற எண்ணங்கள் மனதில் இருக்கலாம், தன் நண்பர்களிடம் கொட்டித் தீர்த்துக்கலாம்தான். ஆனால் அதையே உங்கள் தளத்தில் உலகத்துக்குத் தெரியும்படி எழுதுவது, நீங்க வம்பை விலைக்கு வாங்குவது போல. நாளைக்கு நீங்கள் சம்மந்தமேப் படாமல ஏதாவது "மேற்படியாருக்கு" அசம்பாவாதம் நடக்கலாம், அப்படி எதுவும் நடந்துவிட்டால், நீங்கள் எழுதிய ஸ்டேட்மெண்ட் உங்க வாழ்க்கையையே சீரழிக்க வாய்ப்பிருக்கு. நீங்க உண்மையிலேயே அப்படி செய்து அதுக்காக சட்ட ரீதியாக எதிர்கொள்ளுவது என்பது வேற விசயம். ஆனால் நீங்க செய்யாமல், யாரோ செஞ்சதுக்கு பலியாவது எப்படி நியாயமாகும்? ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோங்க, நீங்க தனி ஆள் இல்லை. உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கு. அதனால் நண்பர் வால் பையனுக்கு என்னுடைய தாழ்மையான ஆலோசனை என்னனா, இப்படி எல்லாம் நீங்க எழுதக்கூடாது சார் என்பதே. முடிந்தால் அதை அகற்றிவிடுங்கள். நீங்க இதை அகற்றுவதால் உங்க ப்ரெஸ்டிஜ் நிச்சயம் இறங்கிவிடாது. நமக்குப் பிடிக்குதோ இல்லையோ சட்டம்தான் நமக்கு எல்லாம் மேல். அதை மதிப்பதில், அதன்படி நடப்பதில், சரி செய்துகொள்வதில் எந்த அவமானமும் இல்லை.

வால் பையன் இந்தப் பதிவைப் பார்த்தாலும், படிச்சுப்புட்டு, இவனுக்கு வேலை வெட்டியில்லைனு நெனச்சுக்கிட்டு, அவரு எழுதியதை எல்லாம் எடுக்கப் போவதில்லைனுதான் என் உள் மனதில் தோனுது. இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஒரு வரம்பு, எல்லை இருக்கு என்பதை வால் பையன் மூலமாக உலகுக்குச் சொல்ல அவர் பதிவு உதவியதால் அவருக்கு ஒரு பெரிய நன்றி! வணக்கம்! :)

7 comments:

குடுகுடுப்பை said...

ஆமோதிக்கிறேன்

suvanappiriyan said...

நானும் ஆமோதிக்கிறேன்

Avargal Unmaigal said...

நீங்கள் சொல்வதும் சரிதான். சில சமயங்களில் நாம் எழுதும் போது அதிக உணர்ச்சி பட்டுவிடுகிறோம். நமக்கு கட்டுபாடு அவசியம் சுயகட்டுப்பாடு

ப.கந்தசாமி said...

Avargal Unmaigal said...
//சில சமயங்களில் நாம் எழுதும் போது அதிக உணர்ச்சி பட்டுவிடுகிறோம். நமக்கு கட்டுபாடு அவசியம் சுயகட்டுப்பாடு//

ஆமோதிக்கிறேன்.

Kannan said...

ஒரு உண்மையான நண்பனின் இடத்திலிருந்து எழுதப்பட்ட அருமையான அறிவுரை. நம்மேல் அக்கறை கொண்டவர்கள் இவ்வாறே அறிவுரை கூறுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளல் நலம். - கணபதி கண்ணன், சிங்கப்பூர்

கிரி said...

அருண்... வருண் கூறியது சரி :-)

தனிமரம் said...

சுயகட்டுப்பாடு அவசியம் நானும் ஆமோதிக்கின்றேன்.நண்பா!