வர வர கமலஹாசன் திறமையான வியாபாரியாகிக் கொண்டு வருகிறார். தான் தயாரித்து, இயக்கி, வெளியிடும் விஸ்வரூபம் மிகப்பெரிய பட்ஜெட் படம் (100 கோடினு சொல்றாக? உண்மைதானுங்களா?) என்று உலகை நம்ப வைக்க ஓரளவுக்கு முயன்று வெற்றிடைந்தாரா என்னனு தெரியலை.
32 வருடங்கள் முன்னால் வந்த விஸ்வரூபம், சிவாஜியுடைய ஒரு குப்பைப் படம்னு சொல்லலாம். அதனால்தானோ என்னவோ ஆரம்பத்தில் பலருக்கும் கமலின் இந்த புதிய படம் விஸ்வரூபம் ஒரு நல்ல எதிர்பார்ப்பை கொடுக்கவில்லை!
அது பழைய கதை! சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் ஸ்டில்கள் மற்றும் ட்ரைலர் ஓரளவுக்கு இந்தப்படக்கதையை இல்லைனா ப்ளாட்டை சொல்லிவிட்டது போல அமைந்திருக்கு. படம் எதைப்பற்றி என்று இன்னும் தெரியாத நிலையில் இது அதுக்குள்ள இந்த ஸ்டில்கள்/ட்ரைலர் பல யூகங்களை உருவாக்கி பலவிதமான சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது!
* படத்தில் கமல் ஒரு "இரட்டை வாழ்வு" வாழும் ஒற்றராக இருக்கலாம். ஸ்பை த்ரில்லர்னா, நம்ம ஹீரோ கமல் ஒற்றர்தானே?
* குறிப்பாக வலமிருந்து இடம் எழுதுவது போல் எழுத்துக்கள் ட்ரைலரில் எழுதப்படுகின்றன. மேலும் எழுத்துக்கள் அரபு/ஹீப்ரு எழுத்துக்கள் போல ஏன் இருக்கின்றன என்கிற கேள்வி எல்லார் மனதிலும் எழுகிறது.
* ஒருவேளை உன்னைப்போல் ஒருவனில் செய்ததுபோல இஸ்லாமியர்களை கெட்டவர்களாக காட்ட முயசிக்கிறாரோ என்று அதுக்குள்ளே இஸ்லாமியர்களுக்கு எரிச்சலை கிளப்பியுள்ளார், கமல் என்கிற சாதனையாளர். இதையே வேற மாதிரிச் சொன்னால் இஸ்லாமியர்களை பிடிக்காதவர்களை சந்தோஷப் படுத்தியுள்ளார், கமல்னுகூட சொல்லலாம்!
* ரொம்ப மெனக்கெட்டு பேர்ரி ஆஸ்பார்னை அழைத்து இந்தப் படத்தை அவரை பார்க்க செய்துள்ளார்!!! ஹாலிவுட், ஆஸ்கர்னு அவங்களே அவங்களைப் பாராட்டி அவங்க படங்களுக்கே ஆஸ்கர் கொடுத்துக்கிறாங்க! ஏழு முறை என் தரமான படங்கள் அனுப்பப்பட்டும் எவனும் என்னைக் கண்டுக்கலைனு தன் மனதுக்குள்ளே திட்டிக்கொண்டு, பலவாறு ஆஸ்கர்/ஹாலிவுட் பத்தி க்ரிடிசைஸ் பண்ணிய கமல், என்னனா ஹாலிவுட் தயாரிப்பாளர் பேர்ரி ஆஸ்பானைப் போயி வலிய அழைச்சு வந்து தன் படத்தைப் போட்டுக் காட்டி இருக்காரு!!
* படத்தைப் பார்த்த ஆஸ்பார்ன் (4 தர திரும்பத் திரும்பப் பார்த்தாராம்ப்பா!!!) , நாகரிகமாக விஸ்வரரூபம் படத்தையும், கமலையும் புகழ்ந்து சொன்ன சில வரிகளை வைத்தும், ஆஸ்பார்ன் இவரை வச்சு படம் செய்யப் போவதாக சொன்னதை வைத்தும் தன்னுடைய சொந்தப் படமான விஸ்வரூபத்திற்கு ஒரு பெரிய கமர்ஷியல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒண்ணு ஆஸ்பார்ன் இவரை நம்பி, இவரை வச்சு படம் எடுக்கிறாரோ இல்லையோ, இந்த ஆஸ்பார்ன் - கமல் கூட்டு முயற்சியை வைத்து இன்னைக்கு விஸ்வரூபத்திற்கு ஒரு பெரிய கமர்ஸியலைக் கொடுத்துளளார் கமல் என்பதே உண்மை.
* இதைப்பற்றி பத்திரிக்கைகள் பல எழுதி எழுதி, கமல் திரும்பத் திரும்பப் பேசிப் பேசி, தன் தயாரிப்பில் உருவான விஸ்வரூபம் படத்திற்கு ஒரு நல்ல ஓப்பனிங் பெற முயல்கிறார் கமலஹாசன் என்கிற வியாபாரி என்பதே இன்றைய நிதர்சனம்.
எனக்கென்னவோ, கமலை நம்பி ஆஸ்பார்ன் படம் எடுத்து.. அதை வெளியிட்டு.. கமல் நடிச்ச முதல் ஹாலிவுட் படத்திற்கே அவரு ஒரு ஆஸ்கர் வாங்கி.. இதெல்லாம் எதுவும் நடக்கிற விசயம் போல தோனலை. உண்மையிலேயே கமலை நம்பிப் பணம்போட்டு அவரை கட்டி அழறது ரொம்ப கஷ்டம்னு பல தயாரிப்பாளர்களுக்குத் தெரியும்! ஆனால் ஒரு வேளை ஆஸ்பார்ன் ஒரு வெள்ளைக்காரன் என்பதால் வேறமாதிரி ஆகி இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி வொர்க்-அவ்ட் ஆகி நல்லாவும் முடியாலாம்தான். அப்படியே கமல்- ஆஸ்பார்ன் ஹாலிவுட்ப் படம் நடந்தாலும், இந்தப் பதிவு இங்கேயேதான் இருக்கும், வந்து "நீ சொன்னது தப்பு! ஆஸ்பார்ன் கமலை வச்சு படம் எடுக்கிறார்"னு என் தளத்திற்கு வந்து என்னை நீங்க அறையலாம்!
ஆஸ்பார்ன் கமலை வச்சு படம் எடுத்து அது வெளிவந்து கமல் உலகப்புகழ் அடைந்தால், ஒரு தமிழன் வென்றுவிட்டான் என்று நானும் மகிழ்ச்சியையப்போவதென்னவோ மறுக்கமுடியாத உண்மைதான்! :-)
9 comments:
\\ பலவாறு ஆஸ்கர்/ஹாலிவுட் பத்தி க்ரிடிசைஸ் பண்ணிய கமல்\\ கதையை அங்கேயிருந்து திருடி திரும்பவும் அங்கேயே திருப்பி அனுப்பினா அவார்டா கிடைக்கும்...? ஹெ....ஹெ....ஹெ.... செருப்படி தான் கிடைக்கும். அதை மறைக்க இவன் இப்படி புருடா விட்டுகிட்டு திரியறான். மணிரத்னத்தை நாயகன் படத்தைப் பார்த்துட்டு கார் மூஞ்சி பம்ஸ்ல பூட்டால உதைச்சு துரத்தி விட்டானுங்க. மானங் கெட்ட பசங்க.
\\ஆஸ்பார்ன் கமலை வச்சு படம் எடுத்து அது வெளிவந்து கமல் உலகப்புகழ் அடைந்தால், ஒரு தமிழன் வென்றுவிட்டான் என்று நானும் மகிழ்ச்சியையப்போவதென்னவோ மறுக்கமுடியாத உண்மைதான்! :-)\\ வருண், இந்தாள் ஒரு வேலை ஆஸ்கார் வாங்கிடுவானொன்னு நீங்க கவலைப் படுராமாதிரி இருக்கே!! ரஹ்மானை மனதார பாராட்டத ஒரே தமிழ் சினிமாக்காரன் இந்தாள் மட்டும்தான். மேலும் அதுக்கப்புறம் சில மாதங்களில் தமிழில் சிறந்த இசையமைப்பாளர் என்று எவனோ ஒன்னுத்துக்குமில்லாதவனை இந்தாள் சொல்லியிருக்கான். அதாவது தான் செய்யமுடியாது என்று தெரிந்தும் செய்யப் போவதாக மக்களை ஏமாற்றி வந்த ஒன்றை நேத்திக்கு வந்த ஒருத்தன் செய்து விட்டானே என்ற ஆத்திரம் இந்தாள் மனதில் எக்கச் சக்கமாக உள்ளது, அந்த துவே ஷத்தை வெவ்வேறு வழிகளில் வெளிப் படுத்தி வருகிறான். இந்த புத்தியாலே இவன் ஒரு போதும் மேலே வர விட மாட்டான். இவனைப் போன்றவர்கள் இந்தியாவிலுள்ளவர்களை ஏமாற்றி வாழலாம், வெளிநாட்டுக் காரனை ஏமாற்ற முடியாது.
***ரஹ்மானை மனதார பாராட்டத ஒரே தமிழ் சினிமாக்காரன் இந்தாள் மட்டும்தான். ***
இவரோட கெட்ட நேரம்தான் ரகுமானுக்கு ஆஸ்கர் கொடுத்துட்டாங்க!
இவரு யாரையுமே மனதாறப் பாராட்டி நான் பார்த்ததில்லலைங்க- நடிப்பில் சிவாஜியைக்கூட!!! இயக்குனரில் பாலசந்தரைக்கூட!!!
இவரை, உலகமஹா கவிஞர்னுகூட பாராட்ட ஒரு வெட்டிக்கூட்டம் இருக்கு! அதையெல்லாம் பெருமையா வாங்கி வச்சுக்குவாரு!
தமிழனுக்கு மிக பலம் தன்னை உணர இன்னும் எத்தனை காலம்தான் ஆகுமோ ?
ஒரு ஆள் ஆஸ்கர் கதவை தட்டுவதாக ஏன் நினைக்க வேண்டும் .அவன் கதவை ஆஸ்கர் தட்டும் என நினைக்க இது ஒரு முயற்சியாக இருக்கட்டுமே !
//அவன் கதவை ஆஸ்கர் தட்டும் என நினைக்க இது ஒரு முயற்சியாக இருக்கட்டுமே !//
எவன் கதவையும் ஆஸ்கார் தட்டாது. ஒவ்வொரு வருடமும் எவ்வளவு லாபியிங் லொசேஞ்சலிஸ் நகரத்தில் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ளவும். அதற்கே ஒரு மீடியம் தமிழ்பட பட்ஜெட் அளவுக்கு செலவளிக்கவேண்டும்.
வருண், you are spon on!. This Hollywood crap is nothing but a marketing gimmick for Viswaroopam.
\\ஒவ்வொரு வருடமும் எவ்வளவு லாபியிங் லொசேஞ்சலிஸ் நகரத்தில் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ளவும். அதற்கே ஒரு மீடியம் தமிழ்பட பட்ஜெட் அளவுக்கு செலவளிக்கவேண்டும்.\\ இது அபாண்டமான குற்றச் சாட்டு. ரஹ்மான் ஆஸ்கார் விருதுகளை ஏலத்தில் எடுத்து வந்தார் என்பது போல இருக்கிறது. ஆஸ்காருக்கு முன்னர் கோல்டன் குலோப் போன்ற பல விருதுகளையும், ஆஸ்காருக்குப் பின்னர் கிராமி விருதையும் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் பட இசைக்காக பெற்றிருக்கிறார். இத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல காசு வாங்கிக் கொண்டு விருது கொடுத்தார்களா என்ன? ரஹ்மான் மீது பொறாமை கொண்ட இந்தி இசையமைப்பாளார் இவ்வாறு கூறினார். நீங்கள் ஏன் இவ்வாறு கூற வேண்டும்? விருதுக்கான லாபியிங் இருக்கும், ஆனாலும் அதீத திறமையில்லாமல் ஆஸ்கார்களை தட்ட முடியாது.
ஒரு திறமைசாலிக்கு எபடி எல்லாம் திடடு? ஏன்?
நாங்கள் ஒரு முறை திருப்பதிக்குச் சென்றிருந்தோம். அங்கே ஒரு பாட்டி ஒரு போலிஸ் காரரிடம் தனது சுருக்குப் பையைக் காட்டி அழுது கொண்டிருந்தார். அந்தப் பைக்குள் பல அறைகள் இருந்தன, அவற்றில் ஏதோ ஒன்றில் பணம் வைத்திருந்திருக்கிறாள். அதை திருடன் அடித்து விட்டிருக்கிறான். அந்த பையைப் பார்த்தால் நம்முடைய விரல் ஒன்று மட்டுமே நுழையக் கூடிய ஒரு மெல்லிய கோடு போல பிளேடால் அறுக்கப் பட்ட கட் மட்டும் தெரிந்தது. இதைப் பார்த்த போது எனக்கு ஒரு சங்கதி வியப்பாக இருந்தது. முதலில் அந்தப் பாட்டியிடம் பணம் இருக்கிறது என்று தெரிய வேண்டும், அப்புறம் அந்தப் பைக்குள் எங்கே இருக்கிறது என்று தெரிய வேண்டும், அப்புறமா அந்தபாட்டி இடுப்பில் பையைச் செருகியிருக்கிறாள், அந்த இடத்தை கூட்டமில்லாத இடித்ததில் அடைய முடியாது, கூட்டம் நிறைய இருக்கும் இடத்தில் அவளை கவனத்தைத் திசை திருப்பி பிளேடால் கட் செய்ய வேண்டும், அதுவும் ஒரு விரல் மட்டுமே நுழையும்படி மட்டும் இருக்க வேண்டும், அதனுள் விரலாலேயே உள்ளே பணத்தைத் தேடி எடுக்க வேண்டும், அப்புறம் யாருக்கும் தெரியாமல் ஜூட் விட வேண்டும். இத்தனையும் செய்தானே அடேங்கப்பா அவன் எவ்வளவு பெரிய சாமர்த்திய சாலிடா என்று வியப்படைய வைத்தது. நிச்சயம் அவன் சாமர்த்திய சாலிதான், ஆனாலும் அவனது செயல் பாராட்டத் தக்கது அல்ல.
மறுபடியும் இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக காட்டி பணம் பண்ண புதிய உத்தியை கையாண்டிருக்கிறார் கமல் என்கிற பாப்பனன்.
Post a Comment