Wednesday, December 5, 2012

இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்! (21+ மட்டும்)

"சொல்லுங்க திவ்யா! உங்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் என்ன பிரச்சினை?"

"என் கணவரோட உறவு வச்சுக்கவே ரொம்ப அருவருப்பா இருக்கு, டாக்டர்..."

"ஏன் திவ்யா? உங்க கணவர்  குடிச்சுட்டுவந்து உறவு வச்சுக்கிறாரா?'

"இல்லை, டாக்டர்"

"ஒரு வேளை அவரு.. எஸ் டி டி அல்லது எச் ஐ வி பாஸிடிவா  கண்டா இருப்பாரோனு உங்களுக்கு எதுவும் பயம்மா இருக்கா?"

"சேச் சே, அதெல்லாம் இல்லை"

"தப்பா நெனசுக்காதீங்க. இல்ல உங்க கணவர் பல பெண்களுடன் உறவு எதுவும் வச்சுக்கிறாரா? அப்படி ஏதாவது.." 

"நோ நோ! இல்ல டாக்டர். ஐ ஆம் பாஸிட்டிவ். என் கணவர் என்னைத்தவிர யாருடனும் உடலுறவு கொண்டதில்லை!"

"தட்ஸ் க்ரேட், திவ்யா! எனக்கு விளங்கவில்லை! அப்போ என்ன உங்க பிரச்சினை? அவர் ஒருவேளை ஹாண்ட்சம்மா ஆள் பார்க்க நல்லா கவர்ச்சியா  இல்லையா?"

"ஐயோ, அவர்தான் "ஹாண்ட்சமெஸ்ட் மேன்"  இண் த எர்த், டாக்டர். இங்க பாருங்க அவர் ஃபோட்டோவை!"

"சந்தோஷம்."

"சரி, நானே சொல்றேன் டாக்டர்..படுக்கையில் அந்த நேரத்தில் நிர்வாணமா படுத்து இருக்க என்னை ரசிக்காமல் யாரையோ மனசுல நெனச்சுண்டு என்னோட உறவு கொள்றார்"

"அதெப்படி உங்களுக்குத் தெரியும்?"

"என்னால அதை நல்லா உணர முடியுது, டாக்டர்!'

"அவரிடம் இதைப் பத்தி பேசினீங்களா?"

"இல்லை டாக்டர்! ஆனால்"

"நான் ஒண்ணு சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க, திவ்யா..."

"சொல்லுங்க டாகடர்"

" இல்லை..பொதுவாக இந்த ஆம்பளைங்களே கொஞ்சம் இப்படித்தான். ஆனால் நீங்க என்ன செய்யலாம்னா.."

"ஓ மை காட்!"

"என்ன திவ்யா!'

 "ஓ மை காட்!"

"என்னாச்சு திவ்யா? என்ன?!"

"You are also another sick bastard just like my husband, right?"

"இல்ல திவ்யா.."

"Dont lie! YOU ARE just like my husband, right?"

"ஐ ஆம் சாரி"னு டாக்டர் தலை குனிந்தார்

"So am I." னு அறையைவிட்டு வெளியே போனாள், திவ்யா.

-முற்றும்


6 comments:

சேக்காளி said...

//"ஐ ஆம் சாரி"னு டாக்டர் தலை குனிந்தார்//
எல்லாருமே இப்படி இருந்தால் வாழ்க்கை இன்னும் லேசாக இருக்குமல்லவா!

வருண் said...

சேக்காளி அண்ணா!

இது ரொம்ப "காம்ப்ளெக்ஸ்" பிரச்சினைங்க. பெண்கள் எதிர்பார்ப்பும் பெண்கள் எதிர்பார்ப்பை கொடுக்கமுடியாத ஆண்கள் இயலாமையும் இருந்துகொண்டேதான் இருக்கும். எல்லாரும் எல்லாரையும் புரிந்து கொண்டு, மதித்து மன்னித்து வாழ்வதென்பது அவ்வளவு எளிதல்ல!

Unknown said...

//
"You are also another sick bastard just like my husband, right?"
//

என்னால இந்த கிளைமாக்ஸ் புரிஞ்சுக்க முடியல. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். அந்த பொண்ணு ஏன் கோபப்பட்டுச்சு? டாக்டர் ஏன் மன்னிப்பு கேட்டார்?

வருண் said...

தளபதி!

என்ன புரியலை உங்களுக்கு?

டாக்டர் ஒரு மாதிரியா அவளோட கணவருக்கு வக்காலத்து வாங்குகிறார்... டாகடர் அப்படி செய்வதற்கு காரணம், நம்ம டாக்டரும், அவருடைய மனைவியிடம் உடலுறவு கொள்ளும்போது, வேற எவளைவாவது மனசுல நெனச்சுண்டு பண்ணுற டைப்னு திவ்யா புரிந்து கொள்கிறாள்!

இவனும் (இந்த டாக்டரும்) தன் கணவனைப் போலவே இன்னொரு பொறுக்கினு புரிந்துகொண்ட திவ்யா, இவனிடம் போய் ட்ரீட்மெண்ட்க்கு வந்தோமேனு இடத்தை காலி பண்ணுறா!

இப்போ புரியுதா? :)

வருண் said...

***டாக்டர் ஏன் மன்னிப்பு கேட்டார்?***

நானுன் உன் கணவன் போலதான் னு ஏற்றுக்கொண்டு, ஒரு கில்ட்டி ஃபீலிங்ல அவளிடம் மன்னிப்புக் கேட்கிறார். He is a psychiatrist, so he admits what he is! :)

Unknown said...

இப்போ புரிஞ்சுது. நன்றி.