Friday, December 21, 2012

ஏன்ப்பா நீங்கள்லாம் நெஜம்மாவே ரூம் போட்டு யோசிப்பேளா?!

தெரியாமல்த்தான் கேக்கிறேன்..நீங்கள்லாம் நெசம்மாவே ரூம் போட்டு யோசிப்பீங்களா, சார்? இல்லை ஊருப்பயலுக சொல்றான்னு நீங்களும் சொல்லிண்டு திரியுறேளா? காற்றாட மரத்தடியில் உக்காந்து யோசிக்கலாம்.. தனிமையில் கடற்கரையில் உக்காந்து யோசிக்கலாம். ஏன் உங்க வீட்டுக் கொள்ளைப்புறத்தில் உக்காந்துகூட யோசிக்கலாம். உங்க வீட்டு பாத்ரூம்லகூட குளிக்கும்போது யோசிக்கலாம்! அதென்ன எவன் காசுலயோ ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு அடச்சுசுண்டு யோசிக்கிறது? அல்கஹால் தான் சிந்தனைகளை தூண்டிவிடுமா? அப்படி எதுவும் ஆராய்ச்சிக்குறிப்பு இல்லையே!

அர்த்தமில்லாத புதுமொழிகள் என்று சொல்லலாம். நான் எல்லாம் என் முன்னால ஆயிரம் பேர் இருந்தாலும் என் உலகில் வாழமுடியிற கேஸ்! பஸ்ல ட்ரயின்ல, ஏன் நடக்கும்போது, ஏன் ஓடும்போதுகூட யோசிக்க முடியும். சிந்தனைகளை ஒன்றுகூட்ட முடியும்.  பொதுவாக நம் மனநிலை பொறுத்து அதற்கான சிந்தனைகள் ஓடும். மனநிலைதான் இதில் ரொம்ப முக்கியம்! சந்தோஷமாக இருக்கிறேனா?  கவலையாக இருக்கிறேனா?  கோபமாக இருக்கிறேனா? இல்லை ரொமாண்டிக்கா இருக்கிறேனா? என்பதைப் பொறுத்து அதற்கேற்ப என் சிந்தனைகள் ஓடும்! ஆனால் ஒரு $150க்கு ரூம் போட்டு ஒரு ஹோட்டல் உக்காந்து யோசிக்கச் சொன்னால் யோசனையும் வராது ஒரு மண்ணாங்கட்டியும் வராது. ரூமை காலி பண்ணியதும் வேணா ஏதாவது  நல்ல சிந்தனைகள் வரலாம்!

ஊர் விட்டு ஊர் போகும்போது நண்பர்கள் உயிரை வாங்காமல் ரூம் போட்டு தங்குவதெல்லாம் உண்டுதான். ஆனால், ஏதோ ஒரு கதை எழுதணும், கட்டுரை எழுதணும், கவிதை எழுதணும்னு ரூம் போட்டு உக்காந்துக்கிட்டு தண்ணியப் போட்டுட்டு மூளையைக் கசக்கி யோசிப்பார்களாம் ஒரு சிலர். ஆமா, யோசிக்கிறேன்னு சொல்லிட்டு ஏதாவது ஹாலிவுட் படத்துல உள்ள ஐடியாவை கொண்டுவந்து இறக்குவாணுக. இல்லைனா ஏதாவது ஒரு நாட்டில் எவனோ எழுதிய கதை தமிழ்ப்படுத்தி புதுச்சரக்கா விப்பாணுக. இதுமாரி சிந்தனைகள்தான் வரும் ரூம் போட்டு யோசித்தால்! ஒரு சில சில ப்ரஃபெஷனல் திருடர்கள்  இதுமாரி எதையாவது சொல்லிட்டுப் போகட்டும். அதென்ன ஆளாளுக்கு இதை ஒரு பெரிய வசனம் மாரி, பழமொழி சொறமாரி சொல்லிண்டு திரிகிறானு எனக்கு விளங்கவில்லை! யாராவது ரூம் போட்டு யோசிக்கிறவங்க அப்படி யோசிச்சு வந்த சிறப்பான ஒரு க்ரியேஷனைச் சொல்லி எனக்கு விளக்கினால் நல்லாயிருக்கும்! சும்மா சொல்லுங்க! நான் நம்ப முயல்கிறேன்!

இது ஒருபுறம் இப்படி ரூம்போட்டு யோசிக்காதவன் ரூம்போட்டு யோக்கிறதைப் பத்தி சொல்லிண்டு திரிகிறது. இன்னொரு பக்கம் பழமொழிகளை இஷ்டத்துக்கு அவன் அவன் தோதுக்கு பயன்படுத்திக்கிறதுனு ஒரு சில இழிபிறவிகள் திரியுதுக. ஏதாவது பச்சை அயோக்கிய்த்தனம் பண்ணிப்புட்டு, அதற்கு ஏதாவது ஒரு தோதா பழமொழியைச் சொல்லுறது. எவனையாவது வேணும்னே ஜோடிச்சுக் கோர்த்து விட்டுப்புட்டு "நெருப்பில்லாமல் பொகையுமா?" னு சொல்றது!

சமீபத்தில் நம்ம "படிக்காத மேதை" கமலஹாசன் செய்ற மேதாவித்தனம்.. இவரு படத்தை, ரிலீஸோட சேர்த்து டி டி எச் ல ரிலீஸ் பண்ணுவேன்னு ஒரு உலகமகா யோசனையோட வந்துபுட்டாறாம்.

இந்த முயற்சி வந்து வடிகட்டின சுயநலம்! ஏன் என்றால் தியேட்டருக்கு போறவனுக காசை டைரக்டா இவரு முழுங்கிடுவாரு. தியேட்டரை வச்சு பொழைப்பு நடத்துறவன் என்ன பண்ணுவான்?

தியேட்டர் வச்சு நடத்துவறன் எல்லாம் கொள்ளையடிக்கிறான்னு சொல்ல முடியாது. சிவாஜி, எந்திரன் போன்ற படங்களுக்கு பெரிய தொகையைக் கொடுத்து எடுத்துப்புட்டு, நஷ்டமடஞ்சவன் எல்லாம் உண்டு! உடனே சமூசா, பாப்கார்ன் வித்து சம்பாரிச்சிருப்பான்னு விடாதீங்கப்பா! ப்ரமீட் சாய்மீரா குசேலன் படத்தை 60 கோடி கொடுத்து எடுத்து நாசமாக் போகலையா என்ன?

டி ட்டி எச் ரிலீஸால பாதிக்கப்படப்போற தியேட்டர் ஓனர்..என் காசை அள்ளி உன் பாக்கட்டுல போடாத! போட்டால் உன் படத்தை எங்கேயாவது "ஆண்லைன் தியேட்டர்ல" ரிலீஸ் பண்ணிடுனு சொல்லத்தான் செய்வான்..

டி டி எச் ல ரிலீஸ் பண்ணுவது கமலஹாசனுடைய சுயநலம்! அப்படி செய்தால் தியேட்டரில் ரிலீஸ் பண்ணமாட்டோம்னு சொல்றது தியேட்டர்காரன் சுயநலம்..

எல்லாம் சரி, இந்த உலகமகா ஐடியாவை வச்சுக்கிட்டு இவரு பேசுற வியாக்யாணம்தான் வேடிக்கையா இருக்கு. அதாவது உலகம் உருண்டை! னு சொன்னப்போ எல்லாரும் எதிர்த்தாங்களாம். ஆனால் கடைசியில் அது உருண்டையாப் போயிடுச்சாம். அதேபோல் இந்த மேதாவி டி டி எச் ல ரிலீஸ் செய்ற ஐடியா "உலகம் உருண்டை"னு சொன்ன உண்மைக்கு சமமானதாம்!  அதுபோல இந்த கதையைச் சொல்லிக்கிட்டு திரிகிறார். ஆனால் இந்த டி ட்டி எச் ரிலீஸ் ஐடியாவுக்கும் உலகம் உருண்டை யானதுக்கும் எந்தவிதமான  சம்மந்தமும் இல்லை!  

உண்மை என்ன? டி ட்டி எச் ரிலீஸ் விளைவுகள் என்ன ஆகும்னு எவனுக்கும் தெரியாது. கமலஹாசன் மண்ணைக்கவ்வுவாரா இல்லைனா தன் பாக்கட்டை நிரப்புவாரானு தெரியலை. விளைவுகள் எப்படி வேணா இருக்கலாம். இது ஒரு எக்ஸ்பெரிமெண்ட்! விளைவுகள் நன்மை பயக்குமா இல்லை உபத்திரவமா முடியுமா? என்பது யாருக்கும் தெரியாது!

 சப்போஸ், இந்தக் குப்பையை எவன்  1000 ரு கொடுத்துப் பார்ப்பான்னு  ரொம்பப்பேரு பார்க்கவில்லைனா, அதே சமயத்தில் திருட்டு வி சி டி அதிகமானால் இந்தாளு ஐடியா மட்டமானதுனு ஆயிடும்! அப்போ என்ன சொல்லுவாரு? "உலகம் உருண்டை"னு நம்ப மாட்டிங்கிறான் நம்மாளுனா? இந்த டி ட்டி எச் ரிலீஸ் ஐடியா மண்ணை கவ்வினால், உலகம் மறுபடியும் தட்டையாகிவிடும்!

இப்போ இவர் ரசிகாமணிகள் தியேட்டர் ஓனர்கள் சங்க தலைவரை கூப்பிட்டு மிரடினார்களாம். கமலஹாசன் ரசிகர்கள்  எல்லாம் மேதாவிகள்னு சொல்லிண்டு திரிவா. அது  ஏன் இப்படி சில்லறைத்தனம் செய்றானு தெரியலை இந்த மேதையை வணங்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் !

3 Kamal fans held for threatening producer

Dec 21, 2012, 05.00AM IST TNN

CHENNAI: Three fans of actor Kamal Hassan were arrested by the Central Crime Branch on Thursday for threatening producer K Rajan who had opposed the telecast of Kamal-starrer "Viswaroopam" through DTH ahead of the scheduled release of the movie in January. The arrested were members of Kamal Haasan fan club in Hosur.

Police said Rajan, who has been opposing the actor's bid to telecast the film ahead of its theatrical release, lodged a complaint saying he received threat calls from three people who claimed they were fans of Kamal Hassan. "They reportedly demanded that he stop from expressing any views against the actor," police said. They also said that he would face dire consequences if he didn't listen to them. Rajan provided police the number from which the call was received.

Last week, the Cyber Crime Cell of city police traced the call to Hosur. Subsequent investigations identified the callers as Murugan, Moorthy, and Surya Prakash. A case was registered and the three nabbed. They were later remanded in judicial custody.
இதுக்கும் ஏதாவது நல்ல பழமொழி சொல்லுங்கப்பா!

10 comments:

Santhose said...

Varun,

You are in U.S and you know that business rule.

Kamal is the producer and he spent money for the movie. He has the right to do what ever he wants. No body has the right to comment on this.

Do you think these Distributors and Theator owners have any ethics?

வருண் said...

S: So, KH has acted in how many movies? Was he unhappy with theater owners and distributors all these years?

When Dhanu invested his money in Alavandhaan why did Kamal get involved in the business then??
As soon as his business (acting is done) he should have got out of it.
He was poking his nose in Dhanu's business and screwed up everything.

Now that he is doing something to screw up his business associates.
All he cares is about himself.

Jayadev Das said...

ரூம்போட்டு யோசிப்பதை கமலஹாசன் DTH யில் ரிலீஸ் பண்ணுவதோடு கோர்த்து விட்டிருக்கீங்களே, இதுக்கு நீங்க ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்களோ!! இந்த மாதிரி பரிசோதனை பண்ணும் எலியா எங்களை மாத்திடாதீங்கன்னு தியேட்டர் காரன் எஸ்கேப் ஆயிட்டான். அதை சுயநலம்னு சொல்ல முடியாது. வேணுமின்னா இவரு சொந்தமா ரிலீஸ் பண்ணட்டும், லாபமோ நஷ்டமோ இவரே பார்த்துகிட்டும்.

andygarcia said...

"Kalaipuli Danu understands Kamal's vision and express Interest to Re-release Aalavandhaan!"
(november 2012 jeya tv)

இன்னமும் தாணு தாணு இன்னு blade போடாதீங்க

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=o492rKDIAyo

andygarcia said...

"Kalaipuli Danu understands Kamal's vision and express Interest to Re-release Aalavandhaan!"
(november 2012 jeya tv)

இன்னமும் தாணு தாணு இன்னு blade போடாதீங்க

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=o492rKDIAyo

வருண் said...

அது சரி, தாணு, "அழிக்கவந்தான்" னு சொல்லி வச்ச ஒப்பாரியை எல்லாம் நாங்க எப்படி மறக்கிறது???

வருண் said...

வாங்க ஜெயவேல்!

***இந்த மாதிரி பரிசோதனை பண்ணும் எலியா எங்களை மாத்திடாதீங்கன்னு தியேட்டர் காரன் எஸ்கேப் ஆயிட்டான். அதை சுயநலம்னு சொல்ல முடியாது. வேணுமின்னா இவரு சொந்தமா ரிலீஸ் பண்ணட்டும், லாபமோ நஷ்டமோ இவரே பார்த்துகிட்டும்.***

என்ன ஆகுதுனு பொறுத்திருந்து பார்ப்போம். :-)

Kamal balan said...

//இந்த முயற்சி வந்து வடிகட்டின சுயநலம்! ஏன் என்றால் தியேட்டருக்கு போறவனுக காசை டைரக்டா இவரு முழுங்கிடுவாரு. தியேட்டரை வச்சு பொழைப்பு நடத்துறவன் என்ன பண்ணுவான்?//
விஸ்வரூபம் என்று ஒரு படமே ரிலீஸ் ஆகலை எண்டு நெனைக்க வேண்டியது தானே .. தியேட்டர் ஓனர்களுக்கு படத்தை வித்துட்டு அவர் DTH ரிலீஸ் பண்ணலையே?

வருண் said...

கமலபாலன்:

விஸ்வரூபம் ஒரு ஆரம்பம்தான். இந்த முயற்சி வெற்றியடைந்தால், இனிமேல் வருகிற எல்லாப் படங்களும் இந்த முயற்சியை மேற்கொள்வார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளால் சினிமா தியேட்டர்கள் சாகும். தியேட்டர் ஓனர்கள் எல்லாம் பிச்சைக்காரனுகளாகிவிடுவார்கள்! :)

Kamal balan said...

ஆகவே மக்களுக்கு பிடித்த, உகந்த ஒரு முறையாக இது இருக்கும் என சொல்ல வருகிறீர்கள்? பிறகு எதற்காக இடைத்தரகர்களை பத்தி கவலைப்படணும் ?
சினிமா வந்ததால் நாடகம் நடிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சினிமாவை தடை செய்யவும் ஆதரவு அளிப்பீர்களா ?