கடந்த பதிவிலேயே துப்பாக்கி வெற்றிப்படம் என்று நாம் தெளிவாக சொல்லியாச்சு. இப்போ அது எம்பூட்டுப் பெரிய வெற்றினு பார்ப்போம்!
* முதலில் சென்னையில்..
கடந்த 3 வாரங்களில் சுமார் 11 + கோடிகள் வசூல் என்று சொல்லப் படுகிறது. இது நண்பன், வேலாயுதம், காவலன், மங்காத்தா எல்லாம் கடந்து தசாவதாரத்தையும் வீழ்த்திய வெற்றி! சிவாஜியின் வசூலை அடுத்த வாரத்தில் வீழ்த்தும்! ஆக சென்னையில் இது மிகப்பெரிய வெற்றி! ஒரு கல் ஒரு கண்ணாடி வசூல் 16+ கோடியோ என்னவோனு சொன்னார்கள். அது உண்மையா என்ன எழவோனு தெரியலை. மற்றபடி எந்திரனை துப்பாக்கி முறியடிக்குமானு தெரியலை. இப்போ சென்னையைப் பத்தி மட்டும்தான் பேசுறோம்.
* மற்றபடி தமிழ் நாட்டில் பி அண்ட் சி செண்டர்களில்
இதுபோல் துப்பாக்கி பெரிய வெற்றியடைந்ததாக சொல்ல முடியாது. பி, சி செண்டர்களில் வாழும் "சாதாரண விஜய் ரசிகர்களை" துப்பாக்கி அவ்வளவாக கவரவில்லை என்பதே உண்மை நிலவரம். இந்தப் படத்திற்கு பி அண்ட் சி செண்டர்களில் ரிப்பீட் ஆடியண்ஸும் கெடையாது!
* ஓவெர்சீஸ்ல படம் சிறப்பாக வசூல் செய்துள்ளது..
* வட அமெரிக்கா
வசூல் எந்த தமிழ்ப் படத்திற்கும் சரியான வசூல் வெளிவருவதில்லை. துப்பாக்கி பெரிய வெற்றி என்றுதான் சொல்கிறார்கள்.
* யு கே யில்
ரெண்டு வார கலக்ஷன் சுமார் $304,596 அமெரிக்க டாலர்கள் வசூலாகியுள்ளது. இது நண்பனை ஒத்த வசூல்னு சொல்லலாம். சிவாஜியின் வசூலை முறியடிக்க வாய்ப்பில்லை.
17 | 10 | Thuppakki | n/a | $42,153 | -80.2% | 10 | -10 | $4,215 | $304,596 | 2 |
* மலேசியாவில்
மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. நண்பனைவிட மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. நண்பன் ஒரு ரீமேக் படம் என்பதால் மலேசியாவில் அவ்வளவு எடுபடவில்லை! துப்பாக்கி ஒரிஜினல் ஸ்க்ரிப்ட் என்பதால் பெரிய வெற்றி எனலாம்.
4 | 1 | Thuppakki | FiveStar | $139,655 | -83.4% | 80 | - | $1,746 | $1,614,439 | 2 |
* ஆந்திராவில் முக்கியமாக ஹைதராபாத்ல துப்பாக்கி எடுபடவில்லை என்பது முக்கியமான விசயம். பொதுவாக முருகதாஸ் படங்கள் ஆந்திராவில் நல்லாப் போகும். அதென்னனு தெரியலை நம்ம விஜயை ஆந்திராக்காரனு களுக்கு பிடிக்கவில்லைனு தோணுது.
இன்னைக்கு நிலமைக்கு துப்பாக்கி ரெண்டு தியேட்டர்லதான் ஓடுது
Showing in 2 theatres, on the 22nd day (4th week)
- Sudarshan 35mm (RTC X Roads) - 3.3 km
- Vishwanath 70mm (KPHB) - 13.4 km
ஆக ஆந்திராவில் துப்பாக்கிப் படம் பெரிய வெற்றி இல்லை என்பதே நிதர்சனம்.
* கேரளா மற்றும் கர்நாடகாவில் பெரிய வெற்றி என்றுதான் சொல்றாங்க. இருந்தாலும் இது எம்பூட்டுப் பெரிய வெற்றினு சரிவர தெரியவில்லை!
No comments:
Post a Comment