Tuesday, December 11, 2012

கருந்தேளால் கடிபட்ட உ சி ர ஒப்பாரி மேல் ஒப்பாரி!

என்னப்பா இவங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை?  அதான் இந்த கருந்தேளுக்கும், உ சி ரசிகருக்கும்?? கமலஹாசன் ஒரு உலக மகா கலைஞன்னு கமலு என்ன செய்தாலும் அது ஒலக சாதனைனு கூசாமல் பொய் சொல்லிக்கிட்டு இருக்காரு/இருப்பாரு இந்த உலக சினிமா ரசிகன். இவரு யாருனு தெரியலை. இதுக்கு முன்னால் வேற வடிவுல இருந்தாரா என்னனு தெரியலை.

கொஞ்ச நாளாதான் தமிழ் சினிமா பத்தி எழுதிக்கிட்டு இருக்காரு. சினிமாவா? பொதுவாக முழுக்க முழுக்க கமல் பத்தியும் அவர் படங்கள் பத்தியும் ஏதாவது ஆராய்ச்சி குறிப்பு எழுதுவாரு.  இவர் தளத்துக்குப் போயி, கமல் செய்வதை ஏதாவது விமர்சிச்சு நம்ம பின்னூட்டம்  போட்டா, உடனே  "அம்மா! அப்பா!" னு அழ ஆரம்பிப்பதுடன் இவரோட ஒரு நாலு பேரு சேர்ந்து இவர் தளத்தில்கூடி  ஒப்பாரி வைப்பார்கள்.

வருண பகவான் வந்தாரு, பின்னூட்டமிட்டாரு, நாங்க வெளியிட மாட்டோம்னு கூடிக் கூடி இவுகளா என்னவோ செய்வாக, பேசுவாக. இவுக என்ன சொன்னாலும் "ஆமா ஆமா"னு ஆமாஞ்சாமி போட ஒரு  கமல் ஜால்ராக் கூட்டம் ஒண்ணு அங்கேயே இருக்கும். காமெண்ட் மாடெரேசன்னு கேணத்தனமா எதையோ வச்சுக்கிட்டு இருப்பாக. அங்க போயி  "நம்மளப் பத்தி பேசாதே" னு கூட சொல்ல முடியாத மாரி ஒரு நிலையில் நாம் தள்ளப்படுவோம். சரி என்னனு தொலையிறான் இந்தாளு, நல்லா யிருக்கட்டும்னு விட்டாச்சு.

இப்போ என்னனு தெரியலை திடீர்னு இவர் வழக்கமா செய்வதுபோல் கமல் படங்கள் பத்தி ரிசேர்ச் பண்ணுவதை விட்டுப்புட்டு கருந்தேள் கடிச்சுப் புடுச்சுனு என்னமோ ஒரே தொடர்  ஒப்பாரிப் பதிவா வருது இவர்ட்ட இருந்து.

ஒப்பாரி ஒண்ணு:  ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் ரத்த வாந்தி.

ஒப்பாரி ரெண்டு: ‘காப்பித்திலகம்’ கருந்தேள் அடித்த காப்பி. 


நமக்கு இவரு ஆராய்ச்சி செஞ்சு எழுதுற சினிமாப் பதிவே புரியாது. இப்போ இவர் வைக்கிற ஒப்பாரிப்பதிவு  ஒரு மண்ணும் புரியமாட்டேன்கிது. நான் புரிஞ்சுக்கிட்டது..இவர் பிரச்சினை, கருந்தேள் கண்ணாயிரம்னு ஒரு பதிவர் போல.. அதாங்க, பதிவர் கருந்தேள் கண்ணாயிரம்னு (ராஜேஷ்?) ஒருத்தர் கமல் படங்களை எல்லாம் எடுத்து வச்சு, அதனுடைய ஒரிஜினல் சோர்ஸ் என்னனு ஆராஞ்சி, இது இந்த ஹாலிவுட் படம், இது இந்த ஹாலிவுட் படம்னு ஓரளவுக்கு உண்மையுடன் கமலைப் போட்டு கவுத்து கவுத்து கவுத்துவாரு இல்ல? அவர்தான்.

கமலை கவுத்துவதுதான் கருந்தேளுக்கு  பிடித்தமான வேலை! கமலைப் பிடிச்ச சனியனான இவர்தான் இப்போ நம்ம உ சி ரக்கும் இப்போ பெரிய பிரச்சினை போல இருக்கு.

ஒருத்தருக்கு கமல் சாமி!

இன்னொருத்தருக்கு கமல்னா பச்சனாவி!

இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி ஒத்துப் போகும்?

இவர் ஏதோ தேள் கொட்டிருச்சு, அது கருந்தேள்..அப்படி இப்படினு பொலம்பப் பொலம்ப..அட என்ன எழவுடா இதுனு மொதல்ல ஒண்ணுமே எனக்குப் புரியலை. அவந்தான் காப்பி யடிக்கிறான், நான் ஒரிஜினல் ரைட்டரு அது இது னு வேற என்னத்தையோ சொல்லிச் சொல்லி ஏங்கி ஏங்கி அழுதுக்கிட்டு இருந்தாரு மனுஷன் பதிவுமேலே பதிவைப் போட்டு.

ஏற்கனவே ஹே ராம் பத்தி நாலஞ்சி ரிசேர்ச் பேப்பர் விட்டு இருக்காரு போல. அதான் நம்ம உலக சினிமா ரசிகர்தான். அடுத்து ஏதோ "ஒரிஜினல்"  ஹேராம் ரிசேர்ச் பதிவு ஒண்ணு எழுதினார்போல!  ஆனால் அது ஏதோ ஆங்கில விமர்சன தழுவல்னு என்று கருந்தேள் சொல்றாரு போல. சரி, இதுபத்தி  நம்ம ஏதாவது சொல்லலாம்னு  இவர் தளத்துக்கு போனா, அப்போத்தான் ஞாபகம் வந்துச்சு அங்கே பின்னூட்டத்தில் இவருக்கு ஜால்ரா மட்டும்தான அடிக்க முடியும்? உண்மை எது , நியாயம் எதுனு எல்லாம் அங்கே, இவர் தளத்துல, நம்ம பேசமுடியாது! அதான் நம்ம சொல்ல வர்றதை இங்கேயே சொல்லிப்புடுவோம்னு..

எனக்கு என்ன புரியலைனா, இவர் (உ சி ர) ஏன் இப்படி அலட்டிக்கிறாரு??  If you are not doing anything like that (copying someone's write-up) WHY DO YOU CARE?

"நான் அப்படி செய்யலை" "நான் ரொம்ப நல்லவன்" "அவந்தான் காப்பி யடிச்சான்" னு இந்த தொடர் ஒப்பாரியை நீங்கள் வைப்பதால் உமக்குத்தான்யா வினையா முடியும்.  "ஒரு வேளை நீர் அப்படி எதுவும் செஞ்சுபுட்டீரோ? அதான் புலம்புறீரோ?" னு தான் நம்மாளு நெனைப்பான். அதனால் நீங்க உடனே உங்க தொடர் ஒப்பாரியை நிறுத்தினால்தான் உங்களுக்கு நல்லது.

ஆமா இதுக்கு எதுக்கு ஒரு பதிவு???

அதை ஏன் கேக்குறீங்க? பதிவுலகில் மாடெரேசன்னு வச்சுக்கிட்டு என்னென்ன அயோக்கியத்தனம்லாம் பண்ணுறானுக! நம்ம நேரத்தை செலவழிச்சு பின்னூட்டம்போடுவதற்கு இவனுக அப்ரூவலுக்காக  காத்திருக்கணும். இவனுக செய்ற நாட்டாமைக்கெல்லாம் "ஆமா ஆமா"னு சொல்றாப்பிலே பின்னூட்டம் டிசைன் பண்ணணும். சொன்னா நம்ப மாட்டீங்க! நம்ம ஏதாவது கேள்வி கேட்டால், பதில் தெரிந்தால்தான் பின்னூட்டத்தையே வெளியே விடுறாக!!!  தெரியலைனா மாடெரேசன் என்கிற பேரில் பின்னூட்டத்தை சாப்பிட்டுறானுகப்பா!  நல்லவேளை நமக்குனு ஒரு தளம் இருக்கு! :)

11 comments:

SathyaPriyan said...

நான் ஒரு அக்மார்க் கமல் ரசிகன் வருண். ஆனால் என்னாலேயே இவர்கள் செய்யும் கோமாளிக் கூத்துகளை காண சகிக்கவில்லை. :-)

Anonymous said...

என்னவோ போங்க, இது நம்ம ஏரியா இல்லை என்பதால் பார்வையாளனாகவே தொடர்கின்றேன். கமல் பல பிற தேச படங்களை காப்பியடித்துள்ளார் என்று மட்டும் வாசித்துள்ளேன், அவரின் சில பழைய படங்களை ரசித்துள்ளேன். அவ்வளவு தான் நம்ம சினிமா ஞானம்.

வருண் said...

***SathyaPriyan said...

நான் ஒரு அக்மார்க் கமல் ரசிகன் வருண். ஆனால் என்னாலேயே இவர்கள் செய்யும் கோமாளிக் கூத்துகளை காண சகிக்கவில்லை. :-)***

நீங்கதான் முக்தா ஸ்ரீநிவாசன் எதிர்வினைக்கு முன்பே, கமல் தேவையில்லாமல் முக்தாவை அவமானப் படுத்துறாரு என்பதுபோல் பதிவிட்டதாக ஞாபகம். ஒரு கமல் ரசிகர் அதுபோல் நியாயத்தை சொல்லி எழுதுவது ரொம்ப அரிதுங்க, சத்யப் பிரியன்!

SathyaPriyan said...

கமலின் நடிப்பை, அவரது படங்களை பாராட்டி பல பதிவுகளை எழுதி இருக்கிறேன்.

ஆனால் ஒருவன் கமலின் ரசிகன் என்பதற்காக அவரை கண்மூடித்தனமாக பாராட்டுகிறான்/துதி பாடுகிறான் அல்லது ரஜினியை தொடர்ந்து திட்டுகிறான் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.

1. அவன் உண்மையிலேயே வெகுளி. மன முதிர்ச்சி இல்லாதவன்.
2. கமலை பாராட்டினாலோ அல்லது ரஜினியை திட்டினாலோ அவனுக்கு பிழைப்பு நடக்கிறது.

நமக்கு இது இரண்டுமே இல்லாததினால் கவலை இல்லை :-)

தம்பி said...

ஒரு பயலும் பொரணி பேசுறதுல உம்மை மிஞ்ச முடியாது.

Jayadev Das said...

\\ஓரளவுக்கு உண்மையுடன் கமலைப் போட்டு கவுத்து கவுத்து கவுத்துவாரு இல்ல?\\ அது என்னது ஓரளவுக்கு, முழுசா இல்லியா?

சார்வாகன் said...

வணக்கம் மச்சான்,

கமல் படம்,இரஜினி படம் என்ன?? நல்ல படம் யார் நடித்தாலும் இரசிக்க்லாம்.
கமல் படங்களில் நம்க்கு பிடித்த படம் குருதிப் புனல். சினிமாவில்,அரசியலில் யாருக்கும் புகழ்பாடியாக இருப்பது தேவையற்றது.

விமர்சனங்களை ஆக்கபூர்வமாக எதிர் கொள்ளல் நன்று.

நன்றி!!

வருண் said...

***தம்பி said...

ஒரு பயலும் பொரணி பேசுறதுல உம்மை மிஞ்ச முடியாது.

11 December 2012 8:52 PM****

நான் அறிந்த வரைக்கும் பொரணி என்பது ஊறிய மைக் போட்டு பேசுவதல்ல! புரிந்து கொள்ளவும்!

"தம்பி" தவிர நீர் வேறென்னன்ன ரூபத்தில் இருக்கிறீரோ, யாருக்குத் தெரியும்? :-)

வருண் said...

***Jayadev Das said...

\\ஓரளவுக்கு உண்மையுடன் கமலைப் போட்டு கவுத்து கவுத்து கவுத்துவாரு இல்ல?\\ அது என்னது ஓரளவுக்கு, முழுசா இல்லியா?***

நீங்கதான் அவர் விசிறி! :-) அவர் பதிவுகளை நான் கவனமா வாசிச்சது இல்லை! அவர் என்ன தன்னை சாரு நிவேதிதா நண்பர்னு வேற சொல்லிக்கிட்டு இருக்காரு. எனக்கு அவர் பற்றி சரியாப் புரியலை. :-)

வருண் said...

****சார்வாகன் said...

வணக்கம் மச்சான்,

கமல் படம்,இரஜினி படம் என்ன?? நல்ல படம் யார் நடித்தாலும் இரசிக்க்லாம்.
கமல் படங்களில் நம்க்கு பிடித்த படம் குருதிப் புனல். சினிமாவில்,அரசியலில் யாருக்கும் புகழ்பாடியாக இருப்பது தேவையற்றது.

விமர்சனங்களை ஆக்கபூர்வமாக எதிர் கொள்ளல் நன்று.

நன்றி!!***

உலக சின்மா ரசிகர் ஒரு செண்சிட்டிவ் பர்சனாலிட்டி. கமல் செய்வது 100% சரி என்று பேசுவார். அது தியரிட்டிகல்லாவே பாஸிபிள் இல்லைனு சொன்னால், பின்னூட்டத்தை குப்பையில் போட்டுவிட்டு நம்மைப்பத்தி கமல் ஜால்ராக்களொட சேர்ந்து வருண பகவான் மண்ணாங்கட்டினு கும்மியடிப்பார். நம்ம கருத்தை வடிகட்டி அகற்றிவிடுவார். அது அவர் தளம். அவர் என்னவேணா செய்யலாம்தான்..இதுதான் பதிவுலகம்!

வருண் said...

***இக்பால் செல்வன் said...

என்னவோ போங்க, இது நம்ம ஏரியா இல்லை என்பதால் பார்வையாளனாகவே தொடர்கின்றேன். கமல் பல பிற தேச படங்களை காப்பியடித்துள்ளார் என்று மட்டும் வாசித்துள்ளேன், அவரின் சில பழைய படங்களை ரசித்துள்ளேன். அவ்வளவு தான் நம்ம சினிமா ஞானம்.***

வாங்க இக்பால் செல்வன். :-)