Wednesday, May 22, 2013

நம்பள்கி ப்ரிடிக்ட்ஸ்!! குச்சி முட்டாய் குட்டன் கிழிச்சிஃபைய்ஸ்!

ஒரு க்ரிக்கட் மேட்ச் நடந்தால் அதில் யாரு வெற்றியடைவாங்க, அல்லது அடையணும்னு ப்ரிடிக்ட் பண்ணுவதில் ஒண்ணும் பெரிய தப்பில்லை. ஆமா, நம்ம சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி என்ன தமிழனுகளுடைய தொப்புள் கொடி உறவுல உள்ளவனா? சென்னை சூப்பர் கிங்ஸ் ஓன் பண்ணுவது யாரு? யாரோ இண்டியா சிமெண்ட் வச்சிருக்க பரம்பரை பணக்காரன் சீனிவாசனா? அவன்  தமிழனா?  இல்லைனா பார்ப்பானா? வைஸ் ப்ரெஸிடெண்ட் நம்ம மறத்தமிழன் தோனினு சொல்றாங்க! இப்போ யாரு அதில் ஷேர் அதிகமா வச்சிருக்கா? தமிழ்நாட்டில் உள்ள ஏழை பாழையா?

சரி, அந்த சூப்பர் கிங்க்ஸ் டீமில் வெளையாடுறவன் எல்லாரும் தமிழனா? காசு கொடுத்தால் எல்லா இவனும்தான் பந்தையும் மட்டையையும் வச்சுண்டு அடிச்சுண்டு திரியப்போறான். இதுதான் ஐ பி எல் என்னும் வியாபாரம்! இதுல மேட்ச் ஃபிக்ஸிங் மண்ணாங்கட்டினு வேற பலவிதமான குற்றச்சாட்டுகள் வேற!

இதில் நம்மாளு நம்பள்கி சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கும்னு தைரியமாக ப்ரிடிக்ட் பண்ணி அதை தைரியமாக சொல்லிப்புட்டாரு! எவனுக்கு தில்லு இருக்கும், யாரு ஜெயிப்பார்னு ப்ரிடிக்ட்ப் பண்ணி சொல்ல? இப்போ தனது தோல்வியை வீரனாக ஏற்றுக்கொண்டார்.

சரி இப்போ நம்பள்கியை சேட்டுனு (இவனுகளுக்கு எப்படி எவன் சேட்டு எவன் முஸ்லிம்னு தெரியும்னு தெரியலை) சொல்லி பெரிய பெரிய மேதாவி எல்லாம் பட்டம் கொடுக்கிறாணுக. சரி இருந்துட்டுப் போகட்டும். நம்பள்கி சேட்டாகவே இருக்கட்டும்! ஒரு சேட்டு, தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் வலைபதிவில் வந்து தமிழ்ல்ல எழுதுவது தமிழுக்கே பெருமைதான். அப்புறம் குட்டன்னு எனக்குத் தெரிய எந்தத்தமிழனும் பேரு வச்சிட்டு திரிஞ்சதில்லை! அதுவும் ஒரு ஃபோட்டோ ஒண்ணு ஐ டி ல போட்டு இருக்கானே? சுத்தமான மரைகழண்ட ஒருத்தந்தான் அது மாதிரி ஒரு புகைப்படத்தை வச்சுட்டு திரிய முடியும்!

 இந்த குட்டன்னு பேர வச்சுட்டு குஞ்சுக்குட்டன்னு ஓட்டுப் போட்டு திரிகிற ஓட்டுப்பொறுக்கி என்னதான் சொல்றான்னு பார்ப்போம்..

நம்பள்கி சொல்றான் நிம்பள்கி கேக்குறான்!



கல் மேட்ச் சென்னை ஜெயிச்சிருச்சி.
நம்பள்கி நெனச்சான் மும்பாய் ஜெயிக்கும்னு.
மகர் யார் ஜெயிச்சா நம்பள்கி என்ன?
நம்ம பொளப்புதான் முக்கியம்.
சென்னையிலே மேட்ச் நடந்தாலாவது டிக்கட் வாங்கக் காசுக்காக நம்ம கிட்ட ஏதாவது அடகு வப்பாங்க!
அது இல்லாமப் போச்சுப்பா!
நான் இந்த மேட்செல்லாம் பாக்கறதில்ல.
ஆனா பஞ்சாப் ஆடற மேட்ச் மட்டும் கண்டிப்பா பாத்துருவேன்
நம்பள்கி பஞ்சாப் ஊர் இல்லீங்கோ.
பின்னே ஏன் பாக்குறேன்னு நிம்பள் கேக்குதா?
அந்த டீம் ஓனர் அங்க உங்காத்துக்கிட்டு அளகா சிரிச்சு,கையாட்டி,குதிக்கிறது நம்பள்கி ரொம்பப் பிடிக்கும்!
அவங்க நடிக்கறதே இல்லேன்னு நெனெச்சேன் .
லேகின் இன்னிக்குப் பேப்பர்ல ஒரு விளம்பரத்திலெ சிரிச்சுக்கிட்டே நிக்கிறாங்கோ!
’இஷ்க் இன் பாரிஸ்’ னு ஒரு படம் ரிலீஸ் ஆகப் போகுதாம்.
அவங்க சொந்தப்படம்தான் !வேறே என்ன?
கிரிக்கெட்லே சூதாட்டம்னு சொல்றாங்க!
பாலிவுட்ல கனெக்சன் இருக்குதுன்னெல்லாம் சொல்றாங்க.
நம்பல்கி சொல்றான் ஜிந்தகியே ஒரு சூதாட்டம் மாதிரிதான்!
ஊர் மேல போன ஒரு லட்கா நேத்து திரும்பி வந்தான்.
அவனுக்கு ஊர் போபால் பக்கம்.
அவங்க ஊர்ல அரசாங்கம் நடத்துற கூட்டு  ஷாதில கலந்துக்கணுனா,வீட்டுல டாய்லெட் இருக்கணுமாம்.
கல்யாணம் கட்டற லட்கா,அந்த டாய்லெட்ல நின்னு ஃபோட்டொ பிடிச்சு அனுப்ப ணுமாம்!
தமாஷா இருக்குதா?!
ஏன்னா அந்த ஊர்லே டாய்லட் அதிகமில்லயாம்!
அங்க போய் ஒரு டாய்லட் கட்டி அதை ஃபோட்ட எடுக்க வாடகைக்கு விட்டா 
நல்லாருக்காது?!
எங்கன்னாலும் நம்பள்கி பொளப்புக்கு ஏதும் வளி இருந்தாச் சரி!

 மேலே இருக்கு அவன் குச்சுமிட்டாயி திண்ணுட்டு  எடுத்த வாந்தி! இவன் எடுத்த  இந்த வாந்திக்கு 9 பாஸிடிவ் ஓட்டு வேற!!

குச்சி மிட்டாயிக்காரன்  has comment moderation enabled so that we can not express our freedom of speech in his HIGH QUALITY BLOG. Now he can come over here and explain what the heck he is doing in his blog!

இவரு என்னத்தை வேணுமானாலும் எழுதிப்புட்டு, என்ன எழவை எழுதினாலும் ருட்டீனா தவறாமல் ஓட்டுப்போடுற ஒரு எட்டுப் பேரிடம் ஓட்டை வாங்கிக்கிட்டு இஷ்டத்துக்கு பேசினால் இவன் எல்லாம் மறத்தமிழனாயிடுவானா என்ன? எல்லாம் நேரம்தான் போங்கோ!


8 comments:

Jayadev Das said...

IPL பத்தி சொன்ன அத்தனையும் நியாயமான கேள்விகள்.............

குட்டன்ஜி said...

சம்பந்தமில்லாத பல செய்திகளைக் கொண்டு உங்கள் இடுகையைத் தொடங்கியிருக்கிறீர்கள். சீனிவாசன் தமிழரா,தோனி தமிழரா ,ஆடுபவர்கள் ஏழையா,பணக்காரரா என்பதெல்லாம் தேவையற்ற கேள்விகள்.நம்பள்கி சி.எஸ்.கே. தோற்குமென்றார்,அவர்பதிவின் பின்னூட் டத்திலேயே நான் வெல்லும் என்று சொன்னேன். ஆட்டம் முடிந்த பின் இதையே ஒரு நகைச் சுவைப் பதிவாக ஆக்கலாம் என்ற எண்ணம் பிறந்தது.அநேக தமிழ்ப்படங்களில் சேட் என்றால் ஒரு விசித்திரத் தமிழில் பேசுவதாகக் காண்பிப்பார்கள்(சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த தூக்குத்தூக்கி படத்திலும்).இது மிகைப்படுத்தப்பட்ட, உண்மைக்குப் புறம்பான ஒன்று என்பதை நண்பர் நடனசபாபதி சுட்டிக்காட்டியது போல் நானும் அறிவேன்.அந்த வழக்கத்தைக் கிண்டல் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதே அப்பதிவு.நம்பள்கி அவர்களையோ அவர் புனை பெயரையோ கிண்டல் செய்வதல்ல என் நோக்கம். அதை அவரும் அறிவார் என நம்புகிறேன்.
நம்பள்கி எந்த அளவுக்கு சேட் இல்லையோ அந்த அளவுக்கு நானும் மலையாளி இல்லை.நான் மறத்தமிழனா மறமில்லாத தமிழனா என்பது வேறு.என் ப்ரொஃபைல் படம் பற்றிச் சொல்லி யிருக்கிறீர்கள்.வருண் என்ற உங்கள் ப்ரொஃபைலில் ஏதோ மிருகப் பொம்மைப் படம் போட்டிருக் கிறீர்களே,அது ஏன்.குழந்தைத்தனமாக எழுதுபவரா? உங்கள் படத்தைப் போட வேண்டிய துதானே?.உங்களைப் பற்றிய முழு விபரம் ஏன் வெளியிடவில்லை? உங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா? ஏன் இந்த இரட்டை வேடம்?புனைபெயரில் எழுதுவதோ, விவரங்கள் தராததோ அவரவர் சௌகர்யம்.இதற்காகக் கேவலமான தனி மனிதத் தாக்குதலை நட்த்துவது என்ன நாகரிகம்?

புனைபெயரில் எழுதுவதென்பது ஒன்றும் குற்ற நடவடிக்கை அல்ல என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இது எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டு நடந்து வருவதுதான். தமிழில் பிரபலமாக இருந்த/இருக்கின்ற,அகிலன்,கல்கி, தேவன், ,லக்ஷ்மி,சுஜாதா, புஷ்பாதங்கதுரை, சாண்டில்யன், கடுகு, , போன்ற அனேக எழுத்தாளர்கள் புனைப்பெயரில் எழுதியது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். ஏன் இன்று பதிவுலகத்தில் எழுதிக்கொண்டிருக்கிற பலரும் புனைப்பெயரில் தான் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? வீணாக 'அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்காதீர்கள்' என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன் .


பின்னூட்ட மட்டிறுத்தல் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.அது அவசியம் என்பதால்தான்,ப்ளாக்கர் அந்த வசதியை அளித்திருக்கிறார்கள்.பதிவில் சொன்ன கருத்துக்கு மாற்றுக் கருத்து வந்தால் யாரும் அதை நிறுத்துவதில்லை.ஆனால்,தேவையற்ற தனிமனிதத் தாக்குதல்களும், தரக் குறைவான, நாகரிகமற்ற சொற் பிரயோகங்களும் வரும்போது அவை ஒதுக்கப் பட வேண்டி யவையே!
என் வாந்தியில் தாங்கள் சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் காலையிலேயே வெளியிட்டு விட்டேன். அதன் பின்னரே நண்பர் ஒருவர் மூலம் இந்தப் பதிவு பற்றித் தெரிய வந்தது.அங்கு சொல்ல நினைத்தவற்றை இங்கு சொல்லியிருக்கிறேன்.
என் வலைப்பூவுக்குக் கொடுத்திருக்கும் விளம்பரத்துக்கு நன்றி.


கும்மாச்சி said...

பதிவர்களுக்குள் சண்டை சச்சரவு தேவைதான் அதை வரம்புமீராமல் பார்த்துக்கொள்ளுங்கள். குட்டன் கூற்று நியாயமானதே.

நம்பள்கி என்ற புனைபெயரில் எழுதுபவர் தமிழரே. அவர் ஏன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டார் என்பதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். அவருடைய பதிவுகளை நான் தவறாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். சம்பந்தமில்லாமல் சச்சரவுகளை தொடங்காதீர்கள். நன்றி.

வருண் said...

****Jayadev Das said...

IPL பத்தி சொன்ன அத்தனையும் நியாயமான கேள்விகள்..***

அஸாருதீன், அஜய் ஜடேஜாவை எல்லாம் மேட்ச் ஃபிக்ஸிங்ல குற்றக்கூண்டில் நிறுத்தும்போது, அவனுக அடிப்பானுகனு ஏங்கி, அழுதவன் எல்லாம் "நம்ம எல்லாம் எவ்வளவு கூறுகெட்டவனா இருந்து இருக்கோம்னு தன் செருப்பாலேயே தானே அடிச்சுக்கொண்டவன்" எவனும் கெடையாது. அதையும் உதிர்த்துவிட்டுதான் திரிகிறார்கள்!

வருண் said...


****புனைபெயரில் எழுதுவதென்பது ஒன்றும் குற்ற நடவடிக்கை அல்ல என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இது எல்லா மொழிகளிலும் தொன்றுதொட்டு நடந்து வருவதுதான். தமிழில் பிரபலமாக இருந்த/இருக்கின்ற,அகிலன்,கல்கி, தேவன், ,லக்ஷ்மி,சுஜாதா, புஷ்பாதங்கதுரை, சாண்டில்யன், கடுகு, , போன்ற அனேக எழுத்தாளர்கள் புனைப்பெயரில் எழுதியது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். ஏன் இன்று பதிவுலகத்தில் எழுதிக்கொண்டிருக்கிற பலரும் புனைப்பெயரில் தான் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? வீணாக 'அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்காதீர்கள்' என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன் .***

அது சரி, நம்பள்கி என்ன இயற்பெயரா? அதை வச்சு ஏன் காமடி பண்ணுறேள் அப்போ?

You dont follow what you preach?

வருண் said...

***கும்மாச்சி said...

பதிவர்களுக்குள் சண்டை சச்சரவு தேவைதான் அதை வரம்புமீராமல் பார்த்துக்கொள்ளுங்கள். குட்டன் கூற்று நியாயமானதே.

நம்பள்கி என்ற புனைபெயரில் எழுதுபவர் தமிழரே. அவர் ஏன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டார் என்பதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். அவருடைய பதிவுகளை நான் தவறாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். சம்பந்தமில்லாமல் சச்சரவுகளை தொடங்காதீர்கள். நன்றி.***

பெரியவா சொல்றா கேட்டுக்கோங்கப்பா! நம்பள்கி டாய்லெட், சேட்டு மண்ணாங்கட்டின்னு கேவலப்படுத்துவதெல்லாம் நாகரிகப் பதிவாம்! அதுக்கு ஓட்டு ஒண்ணையும் போட்டுண்டு இருக்கார் இந்த பெரிய மனுஷன்.

இங்கே வந்து சண்டை சச்சரவு வேணாம்னு வியாக்யாணம் வேற.

ஆமா, அறிவுரை வழ்ங்க என்ன தகுதி வேணும்? யாரு வேணா வழங்கலாம்.

தகுதியில்லாத தரமில்லதவா அறிவுரைகளைத் தூக்கி எறியவும் அதே அளவுக்கு அறிவுரை வழங்கப்பட்டவாளுக்கு உண்டு னு தெரிஞ்சுக்கிறது நல்லது!

ராஜ நடராஜன் said...

வருண்! சேட்டு பேரைக்கேட்டவுடன் எனக்குத்தான் குத்து விழுதோன்னு நினைச்சேன்:) ந்ம்பள்கி புரபைல் தெரிஞ்சிருந்தும் நானும் நம்பள்கியை நட்பாக சேட்டு என்றே கூப்பிடுகிறேன்.

நட்பாகவோ அல்லது கிண்டலுக்காகவோ சேட்டு என்பதை லூஸ்ல விடலாமே!

வருண் said...

ராஜ நடராஜன்: நம்பள்கி யாரு என்னனு எனனைவிட உங்களுக்கு அதிகம் தெரியலாம். எனக்கு அவரை உங்க அளவுக்குக் கூடத் தெரியாது. நீங்க சேட்டுனு செல்லாம விளிச்சுக்கோங்க! அவருக்கும் உங்களுக்கு இடையில் நான் வரலை!

ஆனால் அவரு உண்மையிலேயே சேட்டாக இருந்தால்? :)))


எனக்குத் தெரிய குட்டனை நான் மலையாளினு எங்கேயுமே சொல்லவில்லை! அவரே நான் அவரை அப்படி விளித்ததாக சொல்கிறார். மலையாளிகள் தமிழ் கற்றுக்கொண்டால் அது தமிழுக்குத்தான் பெருமை சேர்க்கும். மேலும் தமிழைக் கற்று, தமிழில் உறவாடும் மலையாளிகளை தமிழன் மதிக்கணும்னு கூட சொல்லலாம்.

என்னவோ போங்கப்பா!