![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjjxiF38HSYheox2cPBdX39LLU43tu9fF-fApZm5LpWMv583GHwSs-RT9e8kHUwQ6ow-vYbBZH0PAPaIDUiUNc0V2OOIgPnSjGZRENOGjbn8Eym3RspKvWNCXfHo3xCYCAfbu8cHtk104/s640/deepika_padukone+%25286%2529.jpg)
ஒண்ணு அவர்களை நமக்கு ரொம்பப் பிடிக்கணும் இல்லைனா அவர்களைப் பார்த்தாலே பிடிக்காமல் இருக்கணும்.
![](http://www.peoplefam.com/images/Deepika-Padukone-02.jpg)
அழகான பெண்ணைப் பார்த்து ரசிக்கிறோம்.
![](http://www.metromatinee.com/gallery/a1807/large/Deepika%20Padukone38874.jpg)
அழகான பிடித்த நடிகையின் நளினமில்லாதா அசைவுகள்கூட நமக்கு அழகாத்தான் தோனுது.
அதே சமயத்தில் பிடிக்காத நடிகை அழகா செய்வதுகூட அசிங்கமாத் தோனுது. நம்ம எல்லாம் புத்தர் இல்லை! சாதாரண மனிதர்கள்தான். ஒரு பக்கம் பெரிய பெரிய தத்துவத்தை எல்லாம் அள்ளி விடுவோம். இன்னொரு பக்கம் அதற்கு எதிர்மாறாக வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டு இருப்போம். அதையெல்லாம் சப்பைகட்டுக் கட்ட பழமொழிகள், இதிகாசத்தில் நடந்த நிகழ்வுகளை மேற்கோல் காட்டுவது இதுபோல் பொழைப்பை ஓட்டிக்கிட்டு திரிவோம்.
ஆனால் ஒண்ணு நமக்குப் பிடிக்காதவர்களுக்கு நடந்த ஒரு நிகழ்வை, அல்லது நமக்குப் பிடிக்காதவர்களைப்பத்தி விமர்சிக்கும்போதுகூட உண்மையை என்றுமே சொல்லணும். உண்மையைப் பேசும்போது மற்றவையெல்லாம் அடிபட்டுப் போயிடும்! வாய்மையே என்றும் வெல்லும்!
உலகநாயகன் கலந்துகொண்டு கலக்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பத்தி ஏற்கனவே விமர்சிச்சாச்சு. இருந்தாலும் அதுல ஒரு முக்கியமான மேட்டரை விட்டுப் புட்டேன்.
அதென்னானா.. இந்த விஸ்வரூப பிரச்சினை தலைவிரிச்சு ஆடிய நேரம். அதாவது தமிழ்நாட்டு அரசாங்கம் இஸ்லாமியர்களை கைகாட்டி படத்தை வெளியிட முடியாமல் இடைக்காலத் தடை விதித்த நேரம் அது. நம்மாளு, லோகா அவர்கள் யு எஸ் வந்துட்டாரு! படத்தை ப்ரமோட் செய்வதற்கு. ஆனால் நம்ம ஊர்ல ஜெயா, படத்துக்கு முட்டுக்கட்டை கொடுத்துக்கொண்டு இருந்தாரு..
இந்த ஒரு சூழலில், யு எஸ்ல வந்து ப்ரிமியர் ஷோ எல்லாம் முடிஞ்சதும் நம்மாளு பிரச்சினையை சமாளிக்க இந்தியா திரும்பி வந்துவிட்டார்.
இப்போ இவரு மேற்கேயும் கிழக்கேயும் 20,000 மயில்கள் மாறி மாறி பறந்து இருக்காரு. அப்போ அவர் நிலைமை எப்படி இருக்கும்? அமெரிக்காவிலிருந்து இந்தியா பறக்கிறவனுக்குத் தெரியும்.. ஜெட் லாக்! பகலெல்லாம் எங்கடா படுத்து தூங்கலாம்னு இருக்கும். நைட் எல்லாம் தூக்கமே வராது. இந்த எழவு சரியாக ஒரு வாரம்கூட ஆகலாம்!
ஆனா நம்மாளு இந்த ஜெட் லாக் கைக்கூட அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கிட்டாருப்பா..
கேள்வி!
* விஸ்வரூபப் பிரச்சினை முத்திப்போயி இருக்கிற இந்த சூழலில், இது சம்மந்தமான முடிவு எடுக்க சில மணி நேரங்கள் ஆகும்னு சொன்னதும்.. நீங்க எப்படி இருந்தீங்க? டென்ஷனா இருந்தீங்களா?
என்பது பிரகாஷ் ராஜின் கேள்வி!
இவரு உடனே, அம்மணிட்டக் கேளுங்கனு கவுதமியை கையைக்காட்ட, அம்மணி சொன்னாரு, "கொஞ்ச நேரம் (இடைப்பட்ட ரெண்டு மணி நேரம்?) தூங்கி எழுந்துக்கிறேன்னு படுத்துட்டாரு" னு பெருமையுடன் சொன்னாங்க கவுதமி.
அதாவது இதுக்கு என்ன அர்த்தம்னா, நம்மாளு இம்பூட்டு பிரச்சினையிலும் தூங்கும் அளவுக்கு ஒரு இரும்பு இதயம் படைத்தவர் என்பதுபோல ஒரு ஸ்டண்ட், பப்ளிசிட்டி அள்ளிக்கிட்டுப் போயிட்டாரு.
ஆனால் உண்மை என்ன? நம்மாள "ஜெட் லாக்" போட்டு கொன்னுடுச்சு! அப்போதைக்கு அவரோட பெரிய பிரச்சினை தூக்கம்தான்! எங்கேடா துண்டைப் போட்டுப் படுப்போம்னு இருந்து இருக்கும். பகுத்தறியிறேன் மண்ணாங்கட்டினு சொல்லிக்கிட்டு திரிகிற ஒலகநாயகனுக்கு ஜெட்லாக் வந்ததுகூட தெரியலையா? இல்லைனா அதைக்கூடத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு விளைந்த பார்ப்பானா இவரு னு நீங்கதான் சொல்லணும்!
17 comments:
dheivameee
கமல் பாலன்!
எந்த தெய்வம் னு சொல்லிட்டு போயிடுங்கோ! :)))
தூக்கம் ஒரு அடிப்படைத் தேவை.
தூங்கறதுக்கு கூட ஒரு பேர் வைச்சு அப்புறம்தான் தூங்கனுமா என்ன?
சுரேஷ்: நான் எல்லாம் பகல்ல தூங்கிற ஆள் இல்லங்க. ஆனால், இங்கேயிருந்து இந்தியா போனால் ஒரு ஒரு வாரத்துக்கு பகல்ல பேய்த் தூக்கம் வரும். யாராவது பார்க்க வந்திருப்பாங்க. நான் தூங்கி விழுந்துகொண்டே பேசிட்டு இருப்பேன். இதுக்கு நிச்சய்ம் ஒரு "பேர்" தேவைதான்! :)
கமல் எது செஞ்சாலும் குத்தமா பாஸ்
கமல் மீது உங்களுக்கு ஏன் இந்த கோப வெறி ?
நாடி நரம்பெல்லாம் கமலை கொலை செய்யவேண்டும் என்று நினைத்து கொண்டு அலையும் ஒருவனுக்கு மட்டுமே உங்களை போன்ற சிந்தனை வரும்.
ஒன்று கமல் உங்கள் குடும்பத்துக்கு கெடுதல் செய்திருக்க வேண்டும்
அல்லது உங்களுக்கு மனநோய்
****சக்கர கட்டி said...
கமல் எது செஞ்சாலும் குத்தமா பாஸ்
13 May 2013 8:40 pm***
நீங்க எப்படி வேணா எடுத்துக்கோங்க. போலியோ வைரஸ் தாக்கி கால் நடக்க முடியாமல் போனவங்கள "இருளடிச்சுருச்சு"னு சொல்லி வாழ்ந்த மக்கள் நாம். உண்மையைச் சொல்ல என்னைக்குமே நான் தயங்கியதில்லை- அது கமலைப் பத்தியானாலும் சரி, கடவுளைப் பத்தியானாலும் சரி! :)
***kumudini said...
கமல் மீது உங்களுக்கு ஏன் இந்த கோப வெறி ?
நாடி நரம்பெல்லாம் கமலை கொலை செய்யவேண்டும் என்று நினைத்து கொண்டு அலையும் ஒருவனுக்கு மட்டுமே உங்களை போன்ற சிந்தனை வரும்.
ஒன்று கமல் உங்கள் குடும்பத்துக்கு கெடுதல் செய்திருக்க வேண்டும்
அல்லது உங்களுக்கு மனநோய்
13 May 2013 10:15 pm****
சொல்லியிருக்கிற உண்மையை மறுக்க வழியில்லாமல் இப்படி எதையாவது ஒளறினால் நான் எதுவும் செய்ய முடியாது! மத்தபடி உங்க மனச நல்லாப் பார்த்துக்கோங்க!
//எந்த தெய்வம் னு சொல்லிட்டு போயிடுங்கோ! :)))//
antha theivamee neenka thaan Varun
இதெல்லாம் ஓரு பதிவு இதுக்கு விமர்சனம் வேற நல்லதா எதாவது பதிவு பண்ணுங்க சார்....
Valid point.
***Kamal balan said...
//எந்த தெய்வம் னு சொல்லிட்டு போயிடுங்கோ! :)))//
antha theivamee neenka thaan Varun***
ஏன் ஏற்கனவே இருக்க தெய்வங்கள் எல்லாம் பத்தலையா? (நம்ம ஆழ்வார்பேட்டை ஆண்டவனையும் சேர்த்துத்தான்? :))) )
என்னவோ போங்க!
***Kamal balan said...
//எந்த தெய்வம் னு சொல்லிட்டு போயிடுங்கோ! :)))//
antha theivamee neenka thaan Varun***
ஏன் ஏற்கனவே இருக்க தெய்வங்கள் எல்லாம் பத்தலையா? (நம்ம ஆழ்வார்பேட்டை ஆண்டவனையும் சேர்த்துத்தான்? :))) )
என்னவோ போங்க!
***indrayavanam.blogspot.com said...
இதெல்லாம் ஓரு பதிவு இதுக்கு விமர்சனம் வேற நல்லதா எதாவது பதிவு பண்ணுங்க சார்....***
இந்தப் பதிவில் எந்தக்குறையும் இல்லை சார். உங்க தகுதி மற்ரும் தராதரம் கொஞ்சம் உயர் தரம் போல இருக்கு. உங்க தகுதிக்கேற்ற இடத்திற்கு சென்றால் நீங்க எதிர்பார்ப்பது கிடைக்கும். இங்க வந்தால் இதுதான் கிடைக்கும்!
புளியமரத்திலே புளியங்காய்தான் காய்க்கும். ஆப்பிள் காய்க்கணும்னு நீங்க எதிரபார்த்து வந்துட்டு, ஆப்பிள்தான் இனிமேல் காயக்கணும்னு புளியமரத்திடம் அடம்பிடிச்சா அது உங்க தப்புத்தான். புரிஞ்சுக்கோங்க! :)
***vasan said...
Valid point.***
உங்க ஒருத்தருக்குத்தான் நீங்க எந்தப் பாயிண்ட் வேலிட்னு சொல்றேள்ணு தெரியும். மத்தவா எல்லாம் எதையாவது யூகிச்சுண்டு போக வேண்டியதுதான்! தெளிவா சொன்னால்த்தானே தெரியும், எது வேலிட், எது இன்வேலிட் ணு!
Post a Comment