Sunday, May 18, 2014

அமெரிக்க விசா மறுக்கப்பட்ட மோடி?! வரவேற்கப் படுகிறார்!

நேற்று என் பி ஆர் (நேஷனல் பப்ளிக் ரேடியோ) ல உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியுடன் புதிய பிரதமராக ஹிந்து நாஷனலிஸ்ட் பார்ட்டி (பி ஜே பி) நரேண்ட்ர மோடி, பதவி ஏற்பார் என்ற செய்தி சொல்லப்பட்டவுடன்..என்னதான் நம்ம மோடி பத்தி  சொல்றாங்கனு கவனித்துக்கேட்டேன்.

மோடியின் மிகப்பெரிய வெற்றியையும், அப்சொலூட் மெஜாரிட்டியையும் சிலாஹித்துப் பேசியவர்கள், ஒரு முறை மோடிக்கு அமெரிக்க விசா மறுப்பப்பட்டதைப் பற்றி சொல்லி அதைப்பற்றி "டிஸ்கஸ்" பண்ணினார்கள்.

அதாவது குஜராத்தில் இந்து முஸ்லிம் கலவரத்தின்போது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் கொல்லப்பட்டார்கள் என்றும் அப்போது முதல்வராக இருந்த ஹிந்து நாஷனலிஸ்ட் மோடி அதற்கான  சரியான "ஆக்சன்" எடுக்கவில்லை என்று அமெரிக்கா நம்பியதால் அவருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டதாக "நியாயப் படுத்தப் பட்டது".

எனிவே, மோடியை ஒரு ஹிந்து நாஷனலிஸ்ட் பார்ட்டியை சேர்ந்தவர் என்று ஹிந்து ஹிந்து என்று அழுத்தமாக சொல்வதுபோல் இருக்கிறது.

அவருடைய மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அவரை அமெரிக்கா வரவேற்கிறது என்றுதான் வெள்ளை மாளிகை சொல்கிறது. இருந்தாலும், மோடியின் "மதச்சார்பற்ற நேர்மையை" அமெரிக்கா, மற்றும் பல மேற்கத்திய சூப்பர் பவர்கள் கவனமாக கண்காணிப்பார்கள் என்று தோன்றுகிறது.

Previously denied a visa, new Indian PM 'will be welcomed' to U.S.

India's next prime minister, Narendra Modi, greets supporters at his mother's home in Gandhinagar on Friday, May 16. Modi is the leader of the Hindu nationalist Bharatiya Janata Party, or BJP. After a five-week-long election, the BJP swept the ruling Indian National Congress from power. Official results were expected later Friday.
நரேண்டிர மோடி

(CNN) -- Indian Prime Minister-elect Narendra Modi "will be welcomed" to the United States, the White House said on Friday. Spokesman Jay Carney said President Barack Obama "does plan to reach out" to him soon.

In a statement, State Department spokeswoman Jen Psaki said Modi would get a visa to the United States once he takes office and forms a government. Modi was denied one several years ago.

 Now, however, Modi would be eligible for an A1 visa, said Psaki. Heads of government use such visas to travel to the United States.

"We congratulate Narendra Modi and the BJP on its victory in winning a majority of seats in India's historic national election, which saw more voters cast their ballots freely and fairly than in any election in human history," Psaki's statement said. "Secretary Kerry has also offered his congratulations, and looks forward to working with the BJP on expanding our shared prosperity and security."

Modi's Hindu nationalist Bharatiya Janata Party appears to have captured a landslide victory and he will likely become prime minister.

"Once a new Government is formed, we look forward to working closely with the Prime Minister and the Cabinet to advance our strong bilateral partnership," the State Department statement said.

In 2005, the United States denied Modi a visa because of his alleged role in anti-Muslim violence three years earlier in Gujarat state, where he was chief minister.

More than 1,000 people were killed, mostly Muslims. A Supreme Court-ordered investigation in India absolved him of blame last year.

CNN's Kevin Liptak contributed to this story.

எது எப்படியோ மோடியின் "உண்மை முகம்" விரைவில் உலகிற்கும் பிறமதத்தவருக்கும் தெரியப்போகிறது. ஹிந்து வெறியர்கள் அவர் பெயரைக் கெடுக்க முயல்வது ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். அதுபோக, மோடியின் பெயரை பலவாறு கெடுக்க "மற்றவர்கள்" பல "ப்ளாட்கள்" வுடன் செயல்படவும் வாய்ப்பிருக்கிறது.

மோடி, தன்னை மதச்சார்பற்றவர் என்று உலகுக்குக் காட்டுவது ஒரு மிகப்பெரிய "சேலெஞ்" தான்.

4 comments:

Angel said...

//மோடி, தன்னை மதச்சார்பற்றவர் என்று உலகுக்குக் காட்டுவது ஒரு மிகப்பெரிய "சேலெஞ்" தான்.//

சரியா சொன்னீங்க வருண் .
............
இங்கிலாந்திலும் election ரிசல்ட் வெளியான இரண்டு மூன்று நாளா நான் சந்திக்கும் வெளிநாட்டவர் அனைவரின் கேள்வி இதுதான் . //இஸ் ஹி ரிலையபிள் ?//
காங்கிரஸ் என்ற கட்சியை பற்றி இவர்களுக்கு தெரிந்ததை விட இவர் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கின்றார்கள் ...

ராவணன் said...

////மோடி, தன்னை மதச்சார்பற்றவர் என்று உலகுக்குக் காட்டுவது ஒரு மிகப்பெரிய "சேலெஞ்" தான்.////

எதற்கு தன்னை மதச்சார்பற்றவர் என்று காட்டவேண்டும்.

…மதச்சார்பு இல்லாமல் எந்த நாட்டின் தலைவர் இருக்கின்றார்.

…சவுதி ஷேக்குகளுடன் கொஞ்சி குலவும் அமெரிக்கா எந்த மதசார்மின்மையைக் கண்டது.

…மோடி எந்தக்காலத்திலும் தன் மதத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கவேண்டும். அதற்குத்தான் இத்தனைகோடி மக்கள் வாக்களித்தனர்.

…இந்தியா இனிமேலாவது இந்தியாவாக இருக்கவேண்டும். மீண்டும் இத்தாலி வேண்டாம்.

வருண் said...

***Angelin said...

//மோடி, தன்னை மதச்சார்பற்றவர் என்று உலகுக்குக் காட்டுவது ஒரு மிகப்பெரிய "சேலெஞ்" தான்.//

சரியா சொன்னீங்க வருண் .
............
இங்கிலாந்திலும் election ரிசல்ட் வெளியான இரண்டு மூன்று நாளா நான் சந்திக்கும் வெளிநாட்டவர் அனைவரின் கேள்வி இதுதான் . //இஸ் ஹி ரிலையபிள் ?//
காங்கிரஸ் என்ற கட்சியை பற்றி இவர்களுக்கு தெரிந்ததை விட இவர் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கின்றார்கள் ...
May 19, 2014 at 6:06 AM ***

வாங்க ஏஞ்சலின்! :)

மோடி பற்றி யு கே மக்களின் மனநிலையை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிங்க! :)

வருண் said...

**** ராவணன் said...

////மோடி, தன்னை மதச்சார்பற்றவர் என்று உலகுக்குக் காட்டுவது ஒரு மிகப்பெரிய "சேலெஞ்" தான்.////

எதற்கு தன்னை மதச்சார்பற்றவர் என்று காட்டவேண்டும்.

…மதச்சார்பு இல்லாமல் எந்த நாட்டின் தலைவர் இருக்கின்றார்.

…சவுதி ஷேக்குகளுடன் கொஞ்சி குலவும் அமெரிக்கா எந்த மதசார்மின்மையைக் கண்டது.

…மோடி எந்தக்காலத்திலும் தன் மதத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கவேண்டும். அதற்குத்தான் இத்தனைகோடி மக்கள் வாக்களித்தனர்.

…இந்தியா இனிமேலாவது இந்தியாவாக இருக்கவேண்டும். மீண்டும் இத்தாலி வேண்டாம். ***

உங்க ஆசை நிறைவேற (மோடி அதை நிறைவேற்ற) வாழ்த்துக்கள், ராவணன்! :)