Wednesday, January 7, 2009

இஸ்ரேல் vs காஸா ஸ்ட்ரிப் & இந்தியா vs பாக்கிஸ்தான்

இன்று மட்டுமல்ல, என்றுமே இஸ்ரேல் போரில் இல்லாமல் இருக்கிற நாட்கள் மிகவும் குறைவு. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சண்டை நடந்து கொண்டேதான் இருக்கிறது. இவர்கள் சண்டைபோடும்போது, இஸ்ரேலின் வீரபிரதாபங்களைத்தான் அமெரிக்க ஊடகங்கள் பேசுவதுண்டு. அதாவது இந்த சண்டை நியாயமானது என்பதுதான் அமெரிக்காவின் வாதம்.

அதே நேரத்தில், இந்தியா-பாக்கிஸ்தான் சண்டை என்று வந்துவிட்டால், அமெரிக்கா அதில் உள்ள நியாயத்தைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. ஏதோ தேவையே இல்லாமல் இரண்டு நாடுகளும் மோதிக்கொள்வது போலவும், இரண்டு நாடுகள் மேலேயும் தவறுபோலவும், இரண்டு நாடுகளும் அணுகுண்டுகளை வீசி ஒருவரை ஒருவர் அழிக்கப்போவது போலவும் அமெரிக்கா ஊடகங்களும், அரசாங்கமும் மக்களும் பேசுகிறார்கள்.

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை! அமெரிக்கர்கள் பேசும் நியாயமும் வியாக்யாணங்களும். இவர்கள் கவலை நியாயமானதா? அப்படியென்றால் இஸ்ரேலால் அணுகுண்டு, இந்தியாவைப்போல் உருவாக்க முடியாதா? இல்லை இஸ்ரேல் எது செய்தாலும் சரியா? இதுதான் அமெரிக்காவின் (அ)நியாயமா?

Israel's Nuclear Weapon Capability: An Overview
The Risk Report
Volume 2 Number 4 (July-August 1996).

http://www.wisconsinproject.org/countries/israel/nuke.html

7 comments:

யூர்கன் க்ருகியர் said...

"you got the wrong code.try entering it"


சரியாக வெரிபிகேசன் கோட் போட்டாலும் இந்த மாதிரி மெசேஜ் வருகிறது. உதவவும்

Anonymous said...

//
அதாவது இந்த சண்டை நியாயமானது என்பதுதான் அமெரிக்காவின் வாதம்.

அதே நேரத்தில், இந்தியா-பாக்கிஸ்தான் சண்டை என்று வந்துவிட்டால், அமெரிக்கா அதில் உள்ள நியாயத்தைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. ஏதோ தேவையே இல்லாமல் இரண்டு நாடுகளும் மோதிக்கொள்வது போலவும், இரண்டு நாடுகள் மேலேயும் தவறுபோலவும், இரண்டு நாடுகளும் அணுகுண்டுகளை வீசி ஒருவரை ஒருவர் அழிக்கப்போவது போலவும் அமெரிக்கா ஊடகங்களும், அரசாங்கமும் மக்களும் பேசுகிறார்கள்.
//

உங்கள் ஒரு கருத்து முற்றிலும் உண்மையானது. அதாவது. இஸ்ரேல் அடித்தால் அது ஞாயமான அடி, பாகிஸ்தானை இந்தியா அடித்தால் அது தவறு என்று சொல்கிறது அமேரிக்கா என்கிறீர்கள்.

நாம் தான் வாய்ச்சொல் வீரன் போல் இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். அடிப்பதே இல்லை. அடித்துப்பார்ப்போமே. அமேரிக்கா நம்பக்கம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும்.

இஸ்ரேல் பிரச்சனைக்குவருவோம்.

இஸ்ரேல் ஏன் அவ்வாறு போர் நிலையிலேயே இருக்கிறது தெரியுமா ?

அப்படி இல்லையென்றால், இஸ்ரேல் இருக்காது போய்விடும் என்பதால்...அது தெரியுமா ?

வருண் said...

***ஜுர்கேன் க்ருகேர் said...
"you got the wrong code.try entering it"


சரியாக வெரிபிகேசன் கோட் போட்டாலும் இந்த மாதிரி மெசேஜ் வருகிறது. உதவவும்

10 January, 2009 9:30 AM****

எனக்கு உங்க கேள்வியே புரியலை :( மன்னிக்கவும் :(

வருண் said...

***இஸ்ரேல் ஏன் அவ்வாறு போர் நிலையிலேயே இருக்கிறது தெரியுமா ?

அப்படி இல்லையென்றால், இஸ்ரேல் இருக்காது போய்விடும் என்பதால்...அது தெரியுமா ?***

இஸ்ரேல் இருந்தது. அப்புறம் இல்லாமல் போனது. மறுபடியும் உருவாக்கப்பட்டது. இப்போ இஸ்ரேல் சைஸ் பெருசாகிக்கொண்டே போகுது. இல்லையா?

Anonymous said...

பாகிஸ்தான் சைஸ் கூடத்தான் பெரிசாகிக்கிட்டே போகுது

யூர்கன் க்ருகியர் said...

எனக்கு உங்க கேள்வியே புரியலை :( மன்னிக்கவும் :(////


மன்னிக்கவும் ! பின்னூட்டத்திற்கான தளம் மாறிவிட்டது . வருந்துகிறேன்

வருண் said...

பரவாயில்லை ஜூர்கேன் க்ருக்கேர் :)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜூர்கேன் க்ருகேர், மற்றும் க கா அ சங்கம்! :-)