Saturday, January 31, 2009

மறைந்த பின்னும் வாழும் நாகேஷ்!

நடிகர் நாகேஷ், நம்மைவிட்டு பிரிந்து வேறொரு உலகத்திற்கு போனதாக திரு ராஜ நடராசன் பதிவிலிருந்து அறிந்தேன் :(

http://parvaiyil.blogspot.com/2009/01/blog-post_31.html

--------------------------------------------------------

நாகேஷ் பற்றி கொஞ்சம் எழுதலாம்னு தோன்றியது. அதனால் விளைந்தது இந்தப்பதிவு!

நாகேஷ், நம்மைவிட்டு பிரியும்போது இவருக்கு வயது 77. இந்த நகைச்சுவை மன்னன் மறைந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறார்.

இவர் செய்த நகைச்சுவையில் என்னை மிகவும் கவர்ந்தவை!

* திருவிளையாடல் "தருமி"

* காதலிக்க நேரமில்லை "செல்லப்பா"

* ஆயிரத்தில் ஒருவன் "அழகன்"


இவர் படங்களில், சமீபத்தில் டி வி டி இல் பார்த்த படங்களில் நான் ரசித்த சிலவற்றை சொல்கிறேன்.

* வசந்த மாளிகையில் இவர் பேசுற ஒரு வசனம், "பெரிய துரை" பாலாஜியிடம் சொல்லுவார்,

"ஒத்துக்கிறேன், ஊர் குடியை எல்லாம் கெடுத்தது நான் தான். ஆனா, நீ என் குடியையே கெடுக்கப் பார்க்கிறயே? "

ஊரையெல்லாம் கெடுத்தாலும் தான் மட்டும் நல்லா வாழனும்னு நெனைக்கிற "கீழ்வர்க்கம்" தான் மனிதன் என்பவன் என்ற உண்மைதான் எனக்கு ஞாபகம் வரும்!

* எதிர் நீச்சலில், "மாது" பாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒண்ணு. மனிதன் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பவன் அல்ல! சிலர் உணர்வுகளை மதிக்காத முட்டாளகத்தான் வாழ்கிறான் என்பதை "மாது" என்கிற நாகேஷ் பாத்திரம் மூலம் பாலசந்தர் அழகா சொல்லி இருப்பார்.

* "தில்லானா மோகனம்பாள்" படத்திலே "வைத்தி" என்கிற மட்டமான "ப்ரோக்கரா" வந்து கிளப்புவார் நாகேஷ். வைத்தி இல்லைனா அந்த படத்தில் பல திருப்பங்களை எ பி நாகராஜன் கொண்டு வந்திருக்க முடியாது. வில்லன் இல்லாத அந்தப்படத்தில் எல்லோரும் வெறுக்கும் ஒரே பாத்திரம் இச்த "வைத்தி" தான்.

* அதே போல் கெளரவத்தில், "கண்ணன்" (சின்ன சிவாஜி) னை தூண்டிவிட்டு "பாரிஸ்டர் ரஜினிகாந்து"க்கு (பெரிய சிவாஜி)எதிராக இயங்க வைப்பதுபோல் ஒரு மட்டமான வக்கீலாக நடித்து இருப்பார், நாகேஷ்.

* தில்லுமுல்லுப் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேஷத்திற்கு உதவி செய்வதுபோல் உண்மையான நடிகர் நாகேஷாகவே கேசுவலாக வந்து நடித்து இருப்பார். ரஜினியின் இரட்டை வேட நாடகத்தையும், நாகேஷின் சினிமாவில் அவர் நடிக்கும் இரட்டை வேடத்தையும் அழகாக இணைத்து இருப்பார் இயக்குனர் கே பாலசந்தர்.

* அபூர்வ சகோதரர்களில் வில்லன்னாகவும் நடித்து ஜொளித்தவர் நாகேஷ்.

இவர் மறைந்தாலும் நம்மைவிட்டு பிரியப்போவதில்லை. நம் நினைவில் மற்றும் இவர் நடித்த படங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், இருப்பார்!

இவர் குடுப்பத்தினருக்கு என்னுடைய வருத்தங்கள்! :(

6 comments:

ராமலக்ஷ்மி said...

//இந்த நகைச்சுவை மன்னன் மறைந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறார்.//

உண்மைதான். எதிர்நீச்சல் ஒன்று போதும் அவரது நவரச நடிப்பைச் சொல்ல. காலத்தை வென்று கண்டிப்பாக நிற்கும் அவரது படங்களும் நடிப்பும்.

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
//இந்த நகைச்சுவை மன்னன் மறைந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறார்.//

உண்மைதான். எதிர்நீச்சல் ஒன்று போதும் அவரது நவரச நடிப்பைச் சொல்ல. காலத்தை வென்று கண்டிப்பாக நிற்கும் அவரது படங்களும் நடிப்பும்.***

வாங்க ராமலக்ஷ்மி! :-)

இயக்குனர் பாலசந்தரையும் பாராட்டனும்ங்க, இவருடைய நவரச நடிப்பு திறமையை உலகுக்கு வெளிக்காட்ட ஒரு "மாது" வின் எதிர் நீச்சலை உருவாக்கியதற்கு!

அவரின் மறைவுக்கு உங்கள் இரங்கலை தெரிவிக்க இங்கு வந்தமைக்கு நன்றிங்க!

முரளிகண்ணன் said...

இந்த நகைச்சுவை மன்னன் மறைந்தாலும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறார்

அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார்க்கு இரங்கல்கள்

வருண் said...

உங்கள் இரங்கல்களை தெரிவிக்க இங்கே வந்தமைக்கு நன்றிங்க, முரளிகண்ணன்!

shabi said...

sarvar sundaram,magalir mattum padangalai vittu vitterhal

வருண் said...

ஆமாங்க ஷபி, நிறையப் படங்கள் "கவர்" பண்ணமுடியலை!

உங்கள் வருகைக்கு நன்றி.