Thursday, January 8, 2009

என் "கிட்னி"யை திருப்பிக்கொடு!!!

ரிச்சர்ட் பேட்டிஸ்டா (Richard Batista), நியுயார்க்கை சேர்ந்த ஒரு டாக்டர், தன் மனைவி, டானெல் பேட்டிஸ்டா (Dawnell Batista) வுக்கு தன்னுடைய ஒரு கிட்னியைக் கொடுத்து காப்பாற்றி உள்ளார்.

ஆனால் இப்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது.

அதனால், மனைவியை தன் கிட்னியை திருப்பிக் கொடு என்கிறார்!

இல்லையென்றால் 1.5 மில்லியன் டாலர் திருப்பிக்கொடுக்கச் சொல்லி அவரை சட்டப்பூர்வமாக அனுகுகிறார்.

இது எப்படி இருக்கு?!

4 comments:

வெண்பூ said...

நல்ல வேளை வருண்.. நாங்க ஒண்ணா இருந்தப்ப அப்படின்னு ஆரம்பிச்சு வேற எதுனா கேக்காம போனானே அந்த ஆளு.. கஷ்டம்டா சாமி..

வருண் said...

***வெண்பூ said...
நல்ல வேளை வருண்.. நாங்க ஒண்ணா இருந்தப்ப அப்படின்னு ஆரம்பிச்சு வேற எதுனா கேக்காம போனானே அந்த ஆளு.. கஷ்டம்டா சாமி..

8 January, 2009 9:43 PM***

வாங்க வெண்பூ!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

--------------

இதிலே என்ன கொடுமைனா, அவங்க ரெண்டு பேருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.:(

இந்த ஆளு ஒரு டாக்டர் வேற! :(

ஆளவந்தான் said...

//
இல்லையென்றால் 1.5 மில்லியன் டாலர் திருப்பிக்கொடுக்கச் சொல்லி அவரை சட்டப்பூர்வமாக அனுகுகிறார்.
//
கலி முத்தி போச்சு.

நம்ம ஊர்னா துணிஞ்சு வழக்க சந்திக்கலாம், தீர்ப்பு வர்றதுக்குள்ள அந்த ஆள் இறந்தாலும் ஆச்ச்ர்ய படுறதுக்கில்ல..

வருண் said...

***ஆளவந்தான் said...
//
இல்லையென்றால் 1.5 மில்லியன் டாலர் திருப்பிக்கொடுக்கச் சொல்லி அவரை சட்டப்பூர்வமாக அனுகுகிறார்.
//
கலி முத்தி போச்சு.

நம்ம ஊர்னா துணிஞ்சு வழக்க சந்திக்கலாம், தீர்ப்பு வர்றதுக்குள்ள அந்த ஆள் இறந்தாலும் ஆச்ச்ர்ய படுறதுக்கில்ல..

9 January, 2009 9:44 AM***

ஆள்: இது ஒரு புது மாதிரியான கேஸ் னு நினைக்கிறேன்.

இதுவரை யாரும் இப்படி கேட்டதில்லை.

சட்டம் என்ன செய்கிறதென்று பார்க்கலாம்!