Tuesday, January 6, 2009

யாருக்காக எழுதுறீங்க? ஊருக்காகவா? உங்களுக்காகவா?

நமக்கு பேச்சு சுதந்திரம் கிடைத்துவிட்டது!

எழுத்துச்சுதந்திரம் கிடைத்துவிட்டது!

நாமும் ஒரு வலைபூ ஆரம்பித்து எழுதுறோம்.

தமிழ்மணத்தில் இணைந்தாகிவிட்டது!

இனிமேல் நம் இதயத்திலிருந்து வரும் உணவுப்பூர்வமான கருத்துக்களை சொல்ல ஒண்ணும் தெரியாத, அரசியல் செய்யும் மட்டறுத்துனர்களை ஜால்ரா அடிக்க வேண்டியதில்லை! நம்ம கருத்தை நாகரீகமாகச் சொல்ல இன்னொருவர் கால் பிடிக்க வேண்டியதில்லை! இதுவல்லவா எழுத்துச்சுதந்திரம்! இதுவல்லவா சுதந்திரம்!

சரி, பதிவுலகில் நம் கருத்துக்களை சொல்கிறோம், விவாதிக்கிறோம், வாதிடுகிறோம், சில சமயம் உளறுகிறோம்! நேரில்சொல்ல முடியாத, சரியாப்புரியாத விவகாரமான விசயங்களை, கற்பனை கதைகள் மூலம் பல பாத்திரங்கள் மூலமும் சொல்கிறோம். நம் உணர்வுகளை கருத்துக்களை கற்பனைபாத்திரங்களாக வந்து சொல்கிறோம் அல்லது சொல்ல முயற்சிக்கிறோம்.

பிடிக்காத கருத்தைப்பார்த்து நம் எரிச்சலை பின்னூட்டங்களில் காட்டுகிறோம், நல்லவைகளையும் ரசித்ததையும் பாராட்டுகிறோம், சண்டை போடுகிறோம், ஊருக்கு உபதேசம் செய்கிறோம்!
ஒவ்வொரு நேரம் தவறான கருத்தை சரி என்று நினைத்துக்கொண்டு சொல்கிறோம், பிறகு நம்மை சரி செய்து கொள்கிறோம். கற்றுக்கொள்கிறோம்!

வதந்திகளை பரப்புகிறோம், விஞ்ஞானத்தை ஒழுங்காக புகட்ட முயற்சிக்கிறோம், மதத்தை, கடவுளைப் பற்றி பேசுகிறோம்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை, ஒரு நடிகரை தெய்வம்போல பூஜிக்கும் ரசிகர்களை புண்படுத்துகிறோம். பொய் சொல்லுபவர்களை, ஜாதி வெறியர்களை,ஊரை ஏமாற்றும் வேஷதாரிகளை பார்த்து எரிச்சலடைந்து நம் பதிவுகளில் திட்டுகிறோம்.

ஒவ்வொரு நடிகரையும், அரசியல் வாதிகளையும் கேலி செய்வதே தொழிலாகக் கொண்ட விமர்சகர்களை விமர்சிக்கிறோம். கலாச்சாரத்தை சீரழிக்கும் சில அரைவேக்காடுகளை விமர்சிக்கிறோம்!

இதெல்லாம் செய்யும்போது பல எதிரிகளை சம்பாதிக்கிறோம், நம் எழுத்தைபார்த்தாலே -ve மார்க் கொடுக்க ஒரு சிலரை தூண்டுகிறோம். பல எழுத்துழக அரசியல்வாதிகளை பார்க்கிறோம்.

இதெல்லாம் யாருக்காக செய்கிறோம்?

உனக்காகவா இல்லை ஊருக்காகவா, வருண்? என்ற கேள்வி என்னையே நான் கேட்பதுண்டு.

அதற்கு பதில் என்னவருமென்றால், நான் எழுதுவது முதலில் எனக்காகத்தான்! என் மன ஆறுதலுக்கு! என் ஆதங்கத்தை தெரிவிக்க! என் அறியாமையைப் போக்க!

அப்புறம் ஒரு விசயம் இந்தக் "காதல் கதை" எழுதுவது, அதில் உளறுவது மட்டும் என் "அவளுக்காக" ! . நான் என்ன எழுதினாலும் நல்லா இருக்குனுதான் சொல்வாள். என்னை கதை எழுத ஊக்குவித்து என்னை எழுதவைப்பதும், என்னைக் கெடுப்பதும் அவள்தான். நாந்தான் என்னுடைய முதல் ரசிகன் என்றால், இல்லை நான்தான் உங்கள் முதல் என்பாள் "அவள்".

போட்டிக்காக எழுவதில்லை!

பரிசுக்காக எழுதுவதில்லை!

பெருமைக்காக எழுதவில்லை!

பிரபலமாவதற்காக எழுதுவதில்லை!

மன ஆறுதலுக்காகத்தான் பொதுவாக எழுதுகிறோம்! என்று சொன்னால் யார் நம்பப்போகிறார்கள்? யார் நம்பனும்? யார் நம்பினால் என்ன? நம்பாவிட்டால் என்ன?

எதுக்கு இந்த சுயபுராணம்? சும்மாதான்! :)

29 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

மன்னிச்சுக்கோங்க அனானி! "உங்க" பொன்மொழியெல்லாம் இங்கே வேணாம்!

Anonymous said...

அச்சச்சோ என்னாசு?
"யாருக்காக எழுதுறீங்க? அவாளுக்காகவா?"

வருண் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனானி அண்ணாக்களுக்கு! :)

ஆளவந்தான் said...

படிச்ச எனக்கே கண்ண கட்டிகிட்டு வருதே.. எழுதுன உன்ன நெனச்சா.... நீ ரொம்ப்ப்ப்பபா நல்லவன் பா

வருண் said...

***ஆளவந்தான் said...
படிச்ச எனக்கே கண்ண கட்டிகிட்டு வருதே.. எழுதுன உன்ன நெனச்சா.... நீ ரொம்ப்ப்ப்பபா நல்லவன் பா

6 January, 2009 11:57 AM***

ஆள்: LOL!

உங்க நிலைமையே இப்படினா, மற்றவர்களை நெனச்சா, பயம்மா இருக்கு! ஐய்யோ பாவம் எல்லோரும்! :) :) :)

செந்தழல் ரவி said...

ஏன் திடீர்னு இந்த கொலவெறி ?

வருண் said...

***செந்தழல் ரவி said...
ஏன் திடீர்னு இந்த கொலவெறி ?

6 January, 2009 12:30 PM**

வாங்க ரவி! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அது வந்து இப்படி ஏதாவது எழுதினால்தான் உங்களை மாதிரி ஆள் இங்கே எட்டிப்பாப்பீங்கனு ஒரு சின்ன ட்ரிக்! :) :)

கயல்விழி said...

வருண்,

இன்று ரொம்ப தத்துவ மூடில் இருக்கீங்க போல. :)

வருண் said...

***கயல்விழி said...
வருண்,

இன்று ரொம்ப தத்துவ மூடில் இருக்கீங்க போல. :)

6 January, 2009 4:45 PM ***

தத்துவத்தில் நம்மலை (இந்தியர்களை) மிஞ்ச யார் இருக்கா, கயல்? :)

ராமலக்ஷ்மி said...

வருண்,
எழுத்து ஒரு வடிகால்.
வடித்த பின் கிடைப்பது ஆத்ம திருப்தி.
எழுத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது
வருவது ஆறுதல்.
சரிதானா:)?

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
வருண்,
எழுத்து ஒரு வடிகால்.
வடித்த பின் கிடைப்பது ஆத்ம திருப்தி.
எழுத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது
வருவது ஆறுதல்.
சரிதானா:)?***

வாங்க ராமலக்ஷ்மி! :) :)

நான் கரடு முரடா சொன்னவைகளிலுள்ள அதே கருத்தையே, எவ்வளவு அழகா, தன்மையா, அடக்கமா சொல்லீட்டீங்க, ராமலக்ஷ்மி!!!

A N A N T H E N said...

//போட்டிக்காக எழுவதில்லை!

பரிசுக்காக எழுதுவதில்லை!

பெருமைக்காக எழுதவில்லை!

பிரபலமாவதற்காக எழுதுவதில்லை!//

:)

வருண் said...

**** A N A N T H E N said...
//போட்டிக்காக எழுவதில்லை!

பரிசுக்காக எழுதுவதில்லை!

பெருமைக்காக எழுதவில்லை!

பிரபலமாவதற்காக எழுதுவதில்லை!//

:)

6 January, 2009 6:56 PM****

வாங்க A N A N T H E N!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :-)

A N A N T H E N said...

//வாங்க A N A N T H E N!//
-வந்துட்டேன்

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்து, வருண்

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

வருண்,

எல்லாருக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் வீட்டு நோட்டுபுத்தகத்திலோ , இல்லை கணினியின் நோட்பாடிலோ எழுதி வைத்திருப்போமே! இப்படி பதிவு போட்டு தமிழ்மணத்தில் இணைந்திருக்க மாட்டோமே!

உங்களுக்காகவும் எழுதுகிறீர்கள். ஆனால் உங்களுக்காக "மட்டுமே" எழுதுகிறீர்கள் என்று சொல்லும் பொழுது தான் கொஞ்சம் உறுத்தல்.

யார் நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன என்று சொல்லிவிட்டீர்களே - எப்படி இருந்தால் என்ன, ரிலாக்ஸ் ப்ளீஸ்! :)

thevanmayam said...

நல்லா எழுதியிருக்கிங்க!
சிலரை திருத்த முடியாது!!
தேவா....

வருண் said...

***A N A N T H E N said...
//வாங்க A N A N T H E N!//
-வந்துட்டேன்

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்து, வருண்***

நன்றி, A N A N T H E N :-)

வருண் said...

***வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...
வருண்,

எல்லாருக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் வீட்டு நோட்டுபுத்தகத்திலோ , இல்லை கணினியின் நோட்பாடிலோ எழுதி வைத்திருப்போமே! இப்படி பதிவு போட்டு தமிழ்மணத்தில் இணைந்திருக்க மாட்டோமே!

உங்களுக்காகவும் எழுதுகிறீர்கள். ஆனால் உங்களுக்காக "மட்டுமே" எழுதுகிறீர்கள் என்று சொல்லும் பொழுது தான் கொஞ்சம் உறுத்தல்.

யார் நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன என்று சொல்லிவிட்டீர்களே - எப்படி இருந்தால் என்ன, ரிலாக்ஸ் ப்ளீஸ்! :)

6 January, 2009 7:39 PM***

புத்தாண்டு வாழ்த்துக்கள், வந்தியத்தேவன் (நீர்க்குமிழி) :-)

உங்கள் கருத்தை மனதில் கொள்ளுகிறேன். நன்றி :-)

வருண் said...

***thevanmayam said...
நல்லா எழுதியிருக்கிங்க!
சிலரை திருத்த முடியாது!!
தேவா....

6 January, 2009 7:46 PM***

வணக்கம் தேவா! :-)

உங்கள் கருத்துக்கு நன்றி!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், தேவா!

துளசி கோபால் said...

எதுக்காக என்பது முக்கியமில்லைப்பா. எழுதனும் எழுதனும் எழுதனும்.

எழுத்துக்கள் எழுதப்படவேண்டியவை.


புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

வருண் said...

***துளசி கோபால் said...
எதுக்காக என்பது முக்கியமில்லைப்பா. எழுதனும் எழுதனும் எழுதனும்.

எழுத்துக்கள் எழுதப்படவேண்டியவை.


புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

6 January, 2009 8:18 PM ****

நன்றிங்க, துளசி டீச்சர்! :)

திகழ்மிளிர் said...

/ராமலக்ஷ்மி said...

வருண்,
எழுத்து ஒரு வடிகால்.
வடித்த பின் கிடைப்பது ஆத்ம திருப்தி.
எழுத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது
வருவது ஆறுதல்.
சரிதானா:)?
/

அதே என்னுடைய பதிலும்

வருண் said...

****திகழ்மிளிர் said...
/ராமலக்ஷ்மி said...

வருண்,
எழுத்து ஒரு வடிகால்.
வடித்த பின் கிடைப்பது ஆத்ம திருப்தி.
எழுத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது
வருவது ஆறுதல்.
சரிதானா:)?
/

அதே என்னுடைய பதிலும்

7 January, 2009 5:34 AM***

உங்கள் கருத்துக்கு நன்றி திகழ்மிளிர்! :)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

கயல்விழி said...

//புத்தாண்டு வாழ்த்துக்கள் அனானி அண்ணாக்களுக்கு! :)//

உங்களுக்கும் அனானிகள் அண்ணாக்களா? LOL

வருண் said...

***கயல்விழி said...
//புத்தாண்டு வாழ்த்துக்கள் அனானி அண்ணாக்களுக்கு! :)//

உங்களுக்கும் அனானிகள் அண்ணாக்களா? LOL

7 January, 2009 8:30 AM***

என்ன உன்னை "காப்பி" அடிச்சதுக்காக, "ராயல்ட்டி" கட்டனும்னு இண்டிரைக்டா சொல்றியா?

இந்த "காப்பி ரைட்" விசயத்திலே நீ ரொம்ப மோசம் (ஸ்ட்ரிக்ட்) தெரியுமா? :) :)

கயல்விழி said...

//இந்த "காப்பி ரைட்" விசயத்திலே நீ ரொம்ப மோசம் (ஸ்ட்ரிக்ட்) தெரியுமா? :) :)
//

இது தான் என்று இல்லை, இப்படி எல்லாவற்றையும் காப்பி அடிப்பது நியாயமா?

JK :)

வருண் said...

எல்லாவற்றையும்???!! இதெல்லாம் உனக்கே அதிகமா தெரியலையா? :)

கயல்விழி said...

இல்லையே!