Friday, January 2, 2009

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 9

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
பாகம் 8

எனக்கு வந்த பின்னூட்டங்களில் பலர் டிலோரிஸ் எப்படி இருக்கிறார் என்பதைப்பற்றியும், அப்புறம் என்னுடைய குடும்பம் என்ன ஆனது என்பதைப்பற்றியும் கவலையுடன் விசாரித்திருந்தார்கள், நன்றி :). இதென்ன தேவதைக்கதையா, "And they lived happily ever after" என்று எழுத? In real life, no body lives happily ever after! காலப்போக்கில் சில காயங்கள் ஆறின, அதுமட்டும் உண்மை.

அந்த பயங்கரச்சம்பவம் நடந்த பிறகு அப்பாவை பல நாட்கள் நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை விரைவிலேயே அவரும் புரிந்துக்க்கொண்டார், அதற்குப் பிறகு ஏதோ நடமாடும் பிணம் போல தான் அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாமே இருந்தது, அப்பா மட்டுமல்ல, அம்மாவும் அப்படித்தான் மாறிப்போனார். ஏதோ கடனே என்று இருவரும் வேலைக்கு போனார்கள், ஷாப்பிங் பண்ணினார்கள், சமைத்தார்கள், சாப்பிட்டார்கள். அப்பா வேலையில் இருந்து வந்தவுடன் பழைய மாதிரி நான் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக்கொள்வதில்லை. வீட்டுக்கு வரும்போதே இன்றாவது நானோ அல்லது அம்மாவோ பேசுவோமா? என்ற எதிர்ப்பார்ப்புடன் தான் நுழைவார். அப்படி யாரும் வரவேற்க வராத போது ஒரு நொடி நிமிடம் அவருடைய கண்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை பளிச்சிடும், அதை என்னால் மறக்கவே முடியாது.

வெளியில் வீம்புக்காக கோபமாக நடித்தேனே தவிர, மனதுக்குள் அப்பாவுடன் பேசாமல் இருப்பது எனக்கு கொடுமையாக இருந்தது. பல முறை மறந்துவிட்டு பேசிவிட நினைத்து கடைசி நிமிடத்தில் நினைவு வந்தவளாக நிறுத்தி இருக்கிறேன். இங்கே என்னுடைய பிரச்சினை அம்மா தான், அவர் போல எனக்கு அப்பாவின் தவறு மன்னிக்க முடியாததாக இருக்கவில்லை என்றாலும், அம்மா வேதனையோடு இருப்பதால் அப்பாவிடம் முன்பு போல பேச தயக்கமாக இருந்தது.அம்மாவுக்காக அப்பாவிடம் கோபமாக இருப்பதைத்தவிர, வேறு வழி இல்லாமல் போனது. எப்படியோ கஷ்டப்பட்டு என்னுடைய உறுதியை ஒரு 1 மாதக்காலம் கடைப்பிடித்துக்கொண்டு தான் இருந்தேன், ஒரு சனிக்கிழமை காலை எல்லா உறுதியும் தவிடுப்பொடியானது!

நானும், அப்பாவும் மட்டும் சனிக்கிழமைகளில் ஷாப்பிங் போவது வழக்கமாக இருந்தது. 1 வாரத்துக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்க என்னை மட்டும் தான் அழைத்துப்போவார். சனிக்கிழமை காலை என்றால் அது "அப்பா-மகள்" நேரம். அம்மாவுக்கு தெரியாமல் ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித்தருவார்(சனிக்கிழமை, அம்மா தலைக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவார், தலை குளித்துவிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்குமாம்). ஒரு நாலு வாரங்களாக அப்பா தனியாக ஷாப்பிங் போய் வந்தார், அவருக்கு முன்னால் ரெடியாகி வெளியே ஓடும் நான், அவர் கடைக்கு போகும் நேரம் வந்தால் என் ரூமுக்கு போய் கதவை சாத்திக்கொள்வேன். எனக்காக வெகு நேரம் காத்திருந்துவிட்டு, வேறு வழி இல்லாமல் போவார். ஒரு சனிக்கிழமை என் அறைக்கே வந்து கதவைத்தட்டினார்.

கதவைத்திறந்த எனக்கு அப்பாவைப்பார்த்து ஒரு மாதிரியாகிப்போனது. ரொம்ப நாள் கழித்து அன்று தான் அப்பாவை ஏறெடுத்துப்பார்த்தேன். ஷேவ் செய்யப்படாத 2 நாள் தாடியுடன், மேட்ச்சாகாத சட்டை- பேண்ட்டுடனும் ஏதோ உடம்பு சரியில்லாதவர் போல இருந்தார். "இந்த வாரமும் கடைக்கு வரலையா கயல்? தனியாப்போக போர் அடிக்குது" என்று தொண்டைக்கமற அவர் என்னிடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. "2 நிமிஷம் வெயிட் பண்ணுங்க டேடி, ரெடியாகிடறேன்" என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது. அவர் 1 வாரமாக அழுது உருவாக்கிய கோபத்தை ஒரு நிமிடத்தில் உடைத்துவிட்டாரே, என்ற கோபம் அம்மாவுக்கு! சமையலறையில் நாலு பாத்திரத்தை கோபத்துடன் உருட்டினார். நான் அவரைத்திரும்பிக்கூடப்பார்க்காமல்(வேறென்ன, பயம் தான்) அப்பாவை பின் தொடர்ந்தேன். வெளிக்கதவை அடைக்குமுன் அம்மாவின் பார்வை என் முதுகில் சுட்டெரிப்பதை உணர்ந்தேன்.

திரும்ப வீட்டுக்கு வந்தவுடன் அம்மா முறைத்துக்கொள்ள ஆரம்பித்தார். சமாதானப்படுத்தப்போன போது "ஏமாற்றிவிட்டாயே" என்பது போல அழுதார். "உனக்கு கொஞ்சமாவது என் மேல அன்பிருக்காடி? இனிமேல் அந்த மனுஷனை நம்பினாலும் நம்புவேனே தவிர, உன்னைப்போல பச்சோந்தியை நம்பவே மாட்டேன். இந்த ஜென்மத்துக்கும் என்னுடன் பேசாதே!" என்றார். அம்மா திட்டியது வலித்தாலும், என்னை கோபிக்கவாவது 'அப்பாவை நம்புவேன்' என்று அவர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அம்மாவின் நேரத்தில் ஒரு ஜென்மம் = நம் நேரத்தில் ஒரு நாள். என்ன செய்வது, அப்பாவுக்கு கடைக்கு போகும் போது துணைக்கு போக என்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது போல தான் அம்மாவுக்கும்- அவர் கோபத்தையும், வருத்தத்தையும் காண்பிக்க என்னை விட்டால் வேறு யாரும் இருக்கவில்லை.

29 comments:

வருண் said...

அப்பா:
***ஷேவ் செய்யப்படாத 2 நாள் தாடியுடன், மேட்ச்சாகாத சட்டை- பேண்ட்டுடனும் ஏதோ உடம்பு சரியில்லாதவர் போல இருந்தார். "இந்த வாரமும் கடைக்கு வரலையா கயல்? தனியாப்போக போர் அடிக்குது" என்று தொண்டைக்கமற அவர் என்னிடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. "2 நிமிஷம் வெயிட் பண்ணுங்க டேடி, ரெடியாகிடறேன்" என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது.***

அம்மா:

***திரும்ப வீட்டுக்கு வந்தவுடன் அம்மா முறைத்துக்கொள்ள ஆரம்பித்தார். சமாதானப்படுத்தப்போன போது "ஏமாற்றிவிட்டாயே" என்பது போல அழுதார். "உனக்கு கொஞ்சமாவது என் மேல அன்பிருக்காடி?****

நீ:

***என்ன செய்வது, அப்பாவுக்கு கடைக்கு போகும் போது துணைக்கு போக என்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது போல தான் அம்மாவுக்கும்- அவர் கோபத்தையும், வருத்தத்தையும் காண்பிக்க என்னை விட்டால் வேறு யாரும் இருக்கவில்லை.***

அப்பா, அம்மா குழந்தைகள் போலவும் நீ அவர்கள் இருவருக்கும் அம்மா போலவும் இருக்கு!

கயல்விழி said...

Sometimes they could be very childish Varun, as you already know

வருண் said...

சிறுபிள்ளைத்தனம் னு சொல்ல முடியுமா என்னனு தெரியலை. அவங்க ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் கஷப்படுத்திட்டாங்க. தண்டனையும் கொடுத்துக்கொண்டார்கள். இதற்காக நீ அப்பாட்ட இருந்து ஒதுங்கனும்னு அம்மா நினைப்பது சரினு தோணலை. He has always been a wonderful dad to you. How can you punish him? இதை அவங்களால ஏன் புரிந்து கொள்ள முடியல? :(

அது சரி(18185106603874041862) said...

அந்த பயங்கர சம்பவம்....அப்பா....

நான் முந்திய பாகத்தையெல்லாம் படிக்கல...அதனால திடீர்னு ஆரம்பிச்சதுனால ஒண்ணும் புரியலை....

இப்ப தான் பழைய கதையெல்லாம் படிச்சேன்....Bloody Hell...

அது சரி(18185106603874041862) said...

//
And they lived happily ever after" என்று எழுத? In real life, no body lives happily ever after! காலப்போக்கில் சில காயங்கள் ஆறின, அதுமட்டும் உண்மை.
//

இது உண்மை....மறதி மட்டும் இல்லாவிட்டால் மனிதன் பைத்தியம் ஆகிவிடுவான்....அந்த வகையில் எனக்கு அதிர்ஷ்டம் அதிகம்....மறதியும் அதிகம் :))

In real life nobody lives happily ever after??? Very true....Infact, in real life nobody lives happily for ever...

அது சரி(18185106603874041862) said...

உங்கள் அப்பா செய்தது பற்றி நான் சொல்வது அதிகப் பிரசங்கி தனமாக இருக்கும்....ஆனால் அது என் பழக்கம் என்பதால்.....

அந்த பிரச்சினையில், கற்பு என்பதை விட, அதிக வலி தருவது துரோகம்...தவறுகளை மன்னிக்க முடியும்...ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது.... கற்பு சம்பந்தமான எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை அது துரோகம் என்று நினைக்கப்படுவதால்...

ஒரு வேளை, ஜஸ்ட் ஒரு வேளை....அது துரோகம் என்பதை விட....சலனங்களால் ஏற்படும் தவறு என்று நினைத்தால்....ஒரு வேளை மன்னிக்க முடியுமோ?? தெரியவில்லை....

ஆனால், கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே என்பது கலாச்சார மோசடி...ஆண்கள் ஊர் பொறுக்கலாம், பெண்கள் படி தாண்டா பத்தினியாக இருக்க வேண்டும் என்பது மிக மோசமான ஆதிக்க மன நோய்...அதற்கு எந்த மன்னிப்பும் இல்லை!

அது சரி(18185106603874041862) said...

//
அப்படி யாரும் வரவேற்க வராத போது ஒரு நொடி நிமிடம் அவருடைய கண்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனை பளிச்சிடும், அதை என்னால் மறக்கவே முடியாது.
//


உங்கள் அப்பா தவறு செய்ததாகவே தெரிகிறது...துரோகம் என்பதை விட, தவறு என்று யோசித்து இருக்கிறீர்களா?? இல்லை, நான் ஆண்களுக்கு சப்போர்ட் செய்யவில்லை....ஆனால், உளவியல் ரீதியாக, ஒரு ஆணோ பெண்ணோ தவறு செய்ய காரணம் என்ன? அழகான மனைவி இருக்கும் போது, இன்னொரு பெண் மீது ஆர்வம் கொள்ள என்ன காரணம்?

இப்ப லண்டன்ல இருக்கேன்...ஆனா நியூ யார்க் எப்படி இருக்கும்....ஸிட்னி எப்படி இருக்கும்....போயி பார்த்தா என்னா? ச்சும்மா ட்ரை பண்ணேன்...இதுக்கு முன்னாடி யாரும் பண்ணலையா.....இப்படி ஒரு மன நிலையா???

கற்பு என்பதை விட, கற்பு மீறல் என்பதன் உளவியல் கூறுகள் எனக்கு அதிக கேள்வியை ஏற்படுத்துகிறது....ஒரு வேளை அது என் தொழிலின் காரணமாகவும் இருக்கலாம்....

அது சரி(18185106603874041862) said...

//
அவர் போல எனக்கு அப்பாவின் தவறு மன்னிக்க முடியாததாக இருக்கவில்லை என்றாலும், அம்மா வேதனையோடு இருப்பதால் அப்பாவிடம் முன்பு போல பேச தயக்கமாக இருந்தது.அம்மாவுக்காக அப்பாவிடம் கோபமாக இருப்பதைத்தவிர, வேறு வழி இல்லாமல் போனது.
//

உங்களுக்கு உங்கள் அப்பா மேல் அந்த அளவு கோபமில்லை....ஆனால் உங்கள் அம்மாவுக்காக அப்பாவை புறக்கணிக்க வேண்டிய நிலை...

உங்கள் நிலை மிகவும் சிக்கலானது...பல குடும்பங்களில் நடக்கும் பிரச்சினை இது....நீ அம்மா புள்ளையா...அப்பா புள்ளையா....இரண்டு பேரும் சேர்ந்து தான் பிள்ளை....இதில் யார் பக்கம் சேர்வது...

இதை பெரும்பாலும் பெற்றவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை....

அது சரி(18185106603874041862) said...

//
திரும்ப வீட்டுக்கு வந்தவுடன் அம்மா முறைத்துக்கொள்ள ஆரம்பித்தார். சமாதானப்படுத்தப்போன போது "ஏமாற்றிவிட்டாயே" என்பது போல அழுதார். "உனக்கு கொஞ்சமாவது என் மேல அன்பிருக்காடி? இனிமேல் அந்த மனுஷனை நம்பினாலும் நம்புவேனே தவிர, உன்னைப்போல பச்சோந்தியை நம்பவே மாட்டேன். இந்த ஜென்மத்துக்கும் என்னுடன் பேசாதே!" என்றார்.
//

ஆண்களின் ஆயுதம் பொருளாதாரம் என்றால் பெண்களின் ஆயுதம் குழந்தைகள்.... ஒரு வேளை இருவரும் பொருளாதாரத்தில் சமம் என்றால்...குழந்தைகளின் நிலைமை இன்னும் கஷ்டம்...ஏனெனில் இருவருக்கும் இருக்கும் ஒரே ஆயுதம் குழந்தைகள்....

குடும்பம், திருமணம், கலாச்சாரம், ஆண்/பெண் உறவு, கற்பு....எல்லா சதுரங்கத்திலும் தூக்கி எறியப்படும் சிப்பாய்கள் குழந்தைகளே...

அது சரி(18185106603874041862) said...

கடைசியா ஒண்ணு...

உங்க அம்மா பரவாயில்லைங்க.....எங்க அம்மா எங்க அப்பாவோட சண்டை போட்டா என்கிட்ட சொல்ல மாட்டாங்க....கும்மிருவாங்க....எங்க அப்பா மேல இருக்க கடுப்பெல்லாம் என் மேல தான்.... ஒரு வேளை வடிவேலு சொன்ன மாதிரி...எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்....இவன் ரொம்ப நல்லவன்டான்னு நெனைச்சிட்டாங்களோ என்னவோ :0))

ஆனா, புருஷன் மேல இருக்க கோபத்தை ஒன்பது வயசு மகன் மேல காமிக்கலாம்னு அவங்களுக்கு யார் சொல்லி கொடுத்தாங்கன்னு எனக்கு இன்னமும் ஒரு டவுட்டு......அந்த ஆள் மட்டும் கெடச்சா....நான் கும்மிருவேன்!!!

M.Rishan Shareef said...

அன்பின் கயல்விழி,

நீங்கள், துளசி டீச்சர்... கடந்துவந்த துயர்பொழுதுகளை எண்ணிப்பார்த்தாலே மலைப்பாக இருக்கிறது.

http://blogintamil.blogspot.com/2009/01/blog-post.html

இதைப் பாருங்கள்..தொடருங்கள்..பாடமாக இருக்கட்டும் பலருக்கு !

கயல்விழி said...

வருண்,

சிறுபிள்ளைத்தனம் என்பதை விட வேறென்ன சொல்வது என்று புரியவில்லை.

கயல்விழி said...

வருண்,

சிறுபிள்ளைத்தனம் என்பதை விட வேறென்ன சொல்வது என்று புரியவில்லை.

கயல்விழி said...

வாங்க அதுசரி

இப்போது தான் படிச்சீங்களா? ப்ளட்டி ஹெல்லுக்கு தமிழில் என்ன? :) :)

கயல்விழி said...

//உங்கள் அப்பா செய்தது பற்றி நான் சொல்வது அதிகப் பிரசங்கி தனமாக இருக்கும்....ஆனால் அது என் பழக்கம் என்பதால்.....

அந்த பிரச்சினையில், கற்பு என்பதை விட, அதிக வலி தருவது துரோகம்...தவறுகளை மன்னிக்க முடியும்...ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது.... கற்பு சம்பந்தமான எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை அது துரோகம் என்று நினைக்கப்படுவதால்...

ஒரு வேளை, ஜஸ்ட் ஒரு வேளை....அது துரோகம் என்பதை விட....சலனங்களால் ஏற்படும் தவறு என்று நினைத்தால்....ஒரு வேளை மன்னிக்க முடியுமோ?? தெரியவில்லை....

ஆனால், கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே என்பது கலாச்சார மோசடி...ஆண்கள் ஊர் பொறுக்கலாம், பெண்கள் படி தாண்டா பத்தினியாக இருக்க வேண்டும் என்பது மிக மோசமான ஆதிக்க மன நோய்...அதற்கு எந்த மன்னிப்பும் இல்லை!

//

அதுசரி
இதில் முதலில் தவறு செய்தது அப்பா என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தவறு எத்தனை பெரியது, அதற்கு என்ன தண்டனை என்பதில் தான் எனக்கும் அம்மாவுக்கும் இருக்கும் மிகப்பெரிய கருத்து வேறுபாடு.

அவருடைய கோபம் ரொம்ப அதிகம் என்பது என்னுடைய எண்ணம். ஒரு வேளை அம்மா இடத்தில் நான் இருந்திருந்தாலும் இதே கருத்தை தான் சொல்லுவேன்.

கயல்விழி said...

//

உங்கள் அப்பா தவறு செய்ததாகவே தெரிகிறது...துரோகம் என்பதை விட, தவறு என்று யோசித்து இருக்கிறீர்களா?? இல்லை, நான் ஆண்களுக்கு சப்போர்ட் செய்யவில்லை....ஆனால், உளவியல் ரீதியாக, ஒரு ஆணோ பெண்ணோ தவறு செய்ய காரணம் என்ன? அழகான மனைவி இருக்கும் போது//

இதை புரிந்துக்கொள்ளத்தான் நானும் பல வருடங்களாக முயன்று வருகிறேன்.

எனக்கு இந்திய திருமண முறைகளின் மீது தவறு இருப்பதாக படுகிறது.

பெரும்பாலும் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம், ஒரு வேளை காதல் மணம் என்றாலும் கூட திருமணத்துக்கு முன் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொள்ளுவது ரொம்ப கடினம்.
அடிப்படையில் இருவருக்கும் பொருத்தமே இல்லை என்றாலும் கூட உறவினர்கள், குழந்தைகள் - இவர்களுக்காக பல வருடங்கள் சேர்ந்தே வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

வருடக்கணக்கில் ஒருவருடன் மட்டும், அதுவும் என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் நிலை தவறாமல் வாழுவது என்பது ரொம்ப கடினம் என்று நினைக்கிறேன், முக்கியமாக ஆண்களுக்கு.

அதற்காக பெண்கள் ரொம்ப நல்லவர்கள் என்று சொல்ல வரவில்லை, பிரசவம், குழந்தை பராமரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றை பெண்கள் சந்திப்பதால் மற்ற விஷயங்களுக்கு நேரமும், எனர்ஜியும் இல்லாமல் போகிறது.

வயதாவதை தவிர, எந்த பெரிய ஹார்மோன் மாற்றங்களையும் ஆண்கள் சந்திப்பதில்லை.

கயல்விழி said...

//கடைசியா ஒண்ணு...

உங்க அம்மா பரவாயில்லைங்க.....எங்க அம்மா எங்க அப்பாவோட சண்டை போட்டா என்கிட்ட சொல்ல மாட்டாங்க....கும்மிருவாங்க....எங்க அப்பா மேல இருக்க கடுப்பெல்லாம் என் மேல தான்.... ஒரு வேளை வடிவேலு சொன்ன மாதிரி...எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்....இவன் ரொம்ப நல்லவன்டான்னு நெனைச்சிட்டாங்களோ என்னவோ :0))

ஆனா, புருஷன் மேல இருக்க கோபத்தை ஒன்பது வயசு மகன் மேல காமிக்கலாம்னு அவங்களுக்கு யார் சொல்லி கொடுத்தாங்கன்னு எனக்கு இன்னமும் ஒரு டவுட்டு......அந்த ஆள் மட்டும் கெடச்சா....நான் கும்மிருவேன்!!!

//

It looks like you had it really bad, even worse than my situation.
I am reallysorry about your unpleasent memories :(

கயல்விழி said...

அதுசரி,

வருகைக்கும், விளக்கமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி :)

கயல்விழி said...

ரிஷான்

சும்மா தெரப்பிக்காக நான் ஏதோ எழுதுவதை தொடர்ந்து படிப்பதற்கு மிக்க நன்றி :)

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...

இதை புரிந்துக்கொள்ளத்தான் நானும் பல வருடங்களாக முயன்று வருகிறேன்.

எனக்கு இந்திய திருமண முறைகளின் மீது தவறு இருப்பதாக படுகிறது.

பெரும்பாலும் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம், ஒரு வேளை காதல் மணம் என்றாலும் கூட திருமணத்துக்கு முன் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொள்ளுவது ரொம்ப கடினம்.
அடிப்படையில் இருவருக்கும் பொருத்தமே இல்லை என்றாலும் கூட உறவினர்கள், குழந்தைகள் - இவர்களுக்காக பல வருடங்கள் சேர்ந்தே வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

வருடக்கணக்கில் ஒருவருடன் மட்டும், அதுவும் என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் நிலை தவறாமல் வாழுவது என்பது ரொம்ப கடினம் என்று நினைக்கிறேன், முக்கியமாக ஆண்களுக்கு.
//

இந்திய திருமணங்கள், காதல் திருமணங்கள் என்று அல்ல....எந்த திருமணத்திலும்....

எனக்கு பெரிய கேள்விகள் இருக்கின்றன...கற்பு என்பதன் வரையறை என்ன?? மனதா உடலா இல்லை இரண்டுமா? திருமணத்திற்கு முன்னா பின்பா??

ஒருவனுக்கு ஒருத்தி/ ஒருத்திக்கு ஒருவன் என்பது இயற்கையானாதா இல்லை சமூக கட்டமைப்பின் பேரில் எழுப்பப்பட்ட சுவரா??

விலங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றால், கற்பு, அஹிம்சை என்ற எல்லாம் செயற்கையான சுவர்களே...உண்மை... எது சரி, எது தவறு என்று தெரிந்து செயல்படத்தான் நாகரீகம்....ஆனால் எல்லா நேரங்களிலும் செயற்கையான ஒரு சுவருக்கு பின் இருக்க எல்லாராலும் முடிகிறதா??

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நான் சொல்ல வரவில்லை...ஆனால் தொக்கி நிற்கும் கேள்விகள்...


//
அதற்காக பெண்கள் ரொம்ப நல்லவர்கள் என்று சொல்ல வரவில்லை, பிரசவம், குழந்தை பராமரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றை பெண்கள் சந்திப்பதால் மற்ற விஷயங்களுக்கு நேரமும், எனர்ஜியும் இல்லாமல் போகிறது.

வயதாவதை தவிர, எந்த பெரிய ஹார்மோன் மாற்றங்களையும் ஆண்கள் சந்திப்பதில்லை.
//

ஹார்மோன் மாற்றங்கள் என்பது ஓரளவு உண்மை...ஆனால் அதற்கு சமூக பொருளாதார, உளவியல் காரணங்களும் இருக்கின்றன...

எந்த சமூகத்திலும் ஆண் கற்பு என்பது பெரிதாக எதிர்பார்க்கப்படவில்லை...உ.ம். பில் கிளின்டன்...இதுவே பில்லுக்கு பதிலாக அவர் மனைவியாக இருந்திருந்தால்??? எத்தகைய எதிர்விளைவுகள் ஏற்பட்டிருக்கும்??? ஆக, சமூக ரீதியாக ஆண்களுக்கு அந்த விஷயத்தில் அதிக பயமில்லை....என்னா ஆகும், சமாளிச்சுடலாம்....என்றே பலர் நினைக்கிறார்கள்...

அதே போல பொருளாதார காரணங்கள்...இன்றைக்கும் ஒரே வேலைக்கு பெண்களை விட ஆண்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறது...அதே போல் பெரும்பாலான ஆண்களுக்கு தனித்து நிற்க தேவையான பொருளாதார பலமும் அதிகம்...

உளவியல் ரீதியாக...சிறு வயதிலிருந்தே Win என்பதே ஆண்களுக்கு சொல்லித்தரப்படும் மந்திரம்.....விளையாட்டு, படிப்பு, கவன ஈர்ப்பு....எல்லா விஷயத்திலும்....Its a trained mind....Always looking to win a trophy...Always looking for a chance to prove himself....Whatever it may be.....Its a fight to prove himself to himself...Money, Wealth, Women, Career....everything comes out of this insecurity deep inside the mind....A man worries more about his Winner image than anything else....What about love and life??? errr.....may be last in the list!

Please don't get me wrong...I am not trying to defent anyone at all...I am just thinking loud.

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...

It looks like you had it really bad, even worse than my situation.
I am reallysorry about your unpleasent memories :(
//


அடடா....நான் சொன்னது தப்பா மீனிங் ஆயிருச்சின்னு நெனைக்கிறேன்.. அது unpleasant memories எல்லாம் இல்லீங்க.... அம்மா அடிச்சதுக்கெல்லாம் போயி யார்னா வருத்தப்படுவாங்களா? அதுவும் இத்தனை வருஷம் கழிச்சி?? அதுவுமில்லாம நான் பண்ண தொந்தவுக்கெல்லாம் அவங்க மீதி நேரத்தில எப்படி அடிக்காம இருந்தாங்கங்கிறது தான் பெரிய கேள்வி :0))

நாங்கெல்லாம் கைப்புள்ள மாதிரி....எவ்வளவு அடி வாங்கினாலும் அந்த எடத்தை விட்டு ஓட மாட்டோம்...அழ மாட்டோம்... நீ அடிச்சது போன மாசம்....நான் சொல்றது இந்த மாசம்கிற கேஸ் நானு :0)))

அது சரி(18185106603874041862) said...

அப்படியே நேரம் கிடைச்சா நம்ம கடையாண்ட வந்துட்டு போங்க...நானும் புதுசா ஒரு பதிவு எழுதிட்டேன்....

இப்ப நீங்க எழுதியிருக்கிற மேட்டரால எனக்கு ஒரு பழைய கதை ஞாபகம் வருது...அத‌ வச்சி அடுத்த வாரம் ஒண்ணு எழுதலாம்னு ஒரு ஐடியா...டைம் கிடைக்குதான்னு பார்க்கலாம்..

கயல்விழி said...

வாங்க விக்னேஷ் :)

கயல்விழி said...

வாங்க அதுசரி.
//எனக்கு பெரிய கேள்விகள் இருக்கின்றன...கற்பு என்பதன் வரையறை என்ன?? மனதா உடலா இல்லை இரண்டுமா? திருமணத்திற்கு முன்னா பின்பா??
//

தியரிட்டிகலாக கற்பு என்றால் மனமும், உடலும் என்று சொல்லப்பட்டாலும், ப்ராக்டிகலாக அனைவரும் கடைப்பிடிக்க விரும்புவது/எதிர்பார்ப்பது உடல் சம்மந்தமான ஒழுக்கம் என்று நினைக்கிறேன்.

கயல்விழி said...

//கற்பு என்பதை விட, கற்பு மீறல் என்பதன் உளவியல் கூறுகள் எனக்கு அதிக கேள்வியை ஏற்படுத்துகிறது.//

உங்களுக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்கு ரொம்ப குழப்பமான கான்செப்ட் இது .

கயல்விழி said...

//Please don't get me wrong...I am not trying to defent anyone at all...I am just thinking loud.//

I understand and really appreciate your detailed responses. :)

கயல்விழி said...

//அடடா....நான் சொன்னது தப்பா மீனிங் ஆயிருச்சின்னு நெனைக்கிறேன்.. அது unpleasant memories எல்லாம் இல்லீங்க.... அம்மா அடிச்சதுக்கெல்லாம் போயி யார்னா வருத்தப்படுவாங்களா? அதுவும் இத்தனை வருஷம் கழிச்சி?? அதுவுமில்லாம நான் பண்ண தொந்தவுக்கெல்லாம் அவங்க மீதி நேரத்தில எப்படி அடிக்காம இருந்தாங்கங்கிறது தான் பெரிய கேள்வி :0))

நாங்கெல்லாம் கைப்புள்ள மாதிரி....எவ்வளவு அடி வாங்கினாலும் அந்த எடத்தை விட்டு ஓட மாட்டோம்...அழ மாட்டோம்... நீ அடிச்சது போன மாசம்....நான் சொல்றது இந்த மாசம்கிற கேஸ் நானு :0)))//

அப்படியா? மன்னிக்கவும், நீங்க சொன்னதைப்பார்த்து நீங்கள் வருத்தமாக எழுதி இருந்தீர்கள் என்று நினைத்தேன்.

Anonymous said...

மறுபடியும் நினைவலைகள் தொடர்வதில் மகிழ்ச்சி :-)

nagai said...

மன்னிக்க தோழி, இது பெரும்பான்மையான குடும்பங்களில் நடப்பதுதான்...எனது தொழில்முறையாக அறிவேன்....பிரச்சனைகள் மாற்ற அல்லது குறைக்க கூடியதே வழி தெரியும் பட்சத்தில்.....