Wednesday, February 25, 2009

காதலுடன் -10

"தங்கைக்கு நல்ல வரன் வருதும்மா சந்தியா” என்றார் அப்பா.

“அப்படியா அப்பா? வரப்போற மாப்பிள்ளை என்ன பண்றார்? அவளுடன் வங்கியில் வேலை செய்றாரா?”

“இல்லைம்மா இவர் ஏதோ கல்லூரி பேராசிரியராம். தங்கைக்கும் ரொம்ப பிடிச்சி இருக்குனு சொல்றாள்”

”அப்போ ஏற்பாடு பண்ணி சீக்கிரம் நாள் குறிங்க அப்பா!”

“எப்படிம்மா? உனக்கு கல்யாணம் முடியாமல்?” என்று இழுத்தார்.

“அவளுக்கு முதலில் முடிந்தால் ஒண்ணும் இல்லைப்பா”

“அதெப்படிம்மா? ஊரில் உள்ளவங்க கேக்கிறதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமாம்மா?”

“என்னப்பா இது? ஊர் உலகத்துக்கெல்லாம் பயப்படாதீங்கப்பா”

“உனக்கு இதெல்லாம் புரியாதும்மா. நீ அமெரிக்காவில் இருக்க. நாங்க சொந்த பந்தம் இல்லாமல் வாழ முடியாதும்மா”

“நான் இப்போதைக்குள்ளே கல்யாணம் செய்வதா இல்லைப்பா. சரி லாவண்யா எங்கே?”

“அவ கோயிலுக்கு போயிருக்காம்மா”

“நல்ல இடம்னா உடனே பேசி முடிங்கப்பா. சரி நான் அடுத்த வாரம் பேசுறேன்” என்று ஃபோனை வைத்தாள்.

அவள் செல்ஃபோன் ரிங் பண்ணியது. அவளுக்கு அதை எடுக்க மூடு இல்லை. பேசாமல் விட்டுவிட்டாள். கொஞ்ச நேரம் அப்படியே படுத்து இருந்தாள். ஒரு மாஹ்டிர்யாக இருந்தது மனது. பிறகு போய் முகம் கழுவிட்டு ஒரு காஃபி போட்டு குடித்து வாய்ஸ் மெசேஜ் செக் பண்ணினாள்.

ரமேஷ் தான் அது! “சந்தியா! நாந்தான் சும்மாதான் கூப்பிட்டேன். போர் அடிச்சது அதான் கூப்பிட்டேன். நான் இன்னும் ஒரு 45 நிமிஷத்தில வந்துவிடுவேன். வந்து உனக்கு காஃபி போட்டு தர்ரேன். சரியா?”

காலிங் பெல் அடித்தது. வெளியே யாரு அதுனு பார்த்தாள். ரமேஷ்தான்.

கதவைத்திறந்து, “வாங்க” என்றாள்.

“என்னாச்சு?”

“சனிக்கிழமை, விட்டிற்கு கால்பண்ணி பேசினேன்” என்றாள் அலுப்பாக.

“அப்பா அம்மாலாம் நல்லா இருக்காகங்களா?”

“அதெல்லாம் நல்லாத்தான் இருக்காங்க. தங்கைக்கு ஒரு வரன் வருதாம். அதனால் என்னையும் ஒரு கல்யாணம் பண்ணிக்க சொல்கிறார் அப்பா”

“பண்ணிக்க வேண்டியதுதானே?"

“என்னை யாரு கட்டிக்குவா ரமேஷ்?”

“ஏன் அழகா இருக்கிற மனைவினா எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள்னு யோசிக்கிறாங்களா?”

“என்னைக்கேட்டா? நீங்கதான் சொல்லனும் இந்த ஆண்கள்பற்றி”

“இந்தக்காலத்து ஆண்களா? எல்லாம் போர்ன் பார்த்து பார்த்து பர்வேர்டெட் ஆகி கழண்டுபோய் அலையுறானுக. என்ன ஆகப்போறானுகள்னு யாருக்கு தெரியும்? ஆடி அடங்கி அப்புறம் ஆன்மீகம் சாமினு அலைவானுக”

“அதென்னவோ உண்மைதான். எல்லாம் செஞ்சுட்டு, அப்புறம் தத்துவம் வியாக்யானம் எல்லாம் பேசுவதுதானே ஆண்கள்?”

“பேசாமல் இன்னொரு நல்லபொண்ணா பார்த்து கட்டிக்கோவேன்?”

“செய்யலாம்தான். ஆனால், நான் லெஸ்பியன் இல்லையே” அவள் சிரித்தாள்.

“அப்போ கஷ்டம்தான்”

“என்ன கஷ்டம்?”

“உனக்கு கல்யாணம் ஆவது. ஒண்ணு செய்யலாமா, சந்தியா?’

“என்ன?”

“சும்மா விளையாட்டுக்கு என்னை கட்டிக்கிறயா?"

“விளையாட்டுக்குனா?”

“எந்த கமிட்மெண்ட்ஸ்ம் கிடையாது. எந்த நேரத்திலும் ஒன் ஆஃப் அஸ் கேன் வால்க் ஆஃப். செக்ஸ்லாம் வேணாம்! சரியா?”

“அது ஏன் செக்ஸ் வேணாம்?”

“உனக்கு அதெல்லாம் பிடிக்காதுதானே?"

“உங்களுக்கும் பிடிக்காதா?”

“பின்னால பார்த்துக்குவோம்”

”பின்னாலேனா எப்போ ?”

“நமக்குள்ளே ஒரு நெருக்கம் வந்ததும்!”

“சரி, டீல்!”

“என் பேரெண்ட்ஸை இப்போவே கூப்பிட்டுச் சொல்லவா? எனக்கு ஒரு மாப்பிள்ளை ரெடினு?”

“இப்போ என்ன அவசரம்?"

“என் தங்கச்சி பாவம் இல்லையா? அதான்”

“பக்கத்து இலைக்கு பாயசம் போட சொல்றியா? ஆமா உனக்கு அந்த டெஸ்ட் ரிசல்ட்ஸ்லாம் வேணாமா?"

“அதெல்லாம் வேணாம். நம்மதான் செக்ஸ் வச்சுக்கப்போறதில்லையே?”

“ஆமா அதையே மறந்துட்டேன் பாரு”

“அதுக்காக கண்டவள்ட்ட போய் படுத்துட்டு வரக்கூடாது”

“உன்னோட ஒரே கட்டிலில்லயா படுக்கசொல்ற? எனக்கு உன் மேல் நம்பிக்கை இல்லையே”

“ஐயோ, ரொம்பத்தான்! சரி என்னோடவும் படுக்க வேணாம். தனி ருமில் படுங்க"

”நல்ல ஐடியா”

“நான் உங்களுக்கு குக் பண்ணனுமா?”

“எனக்கு குக் பண்ணத்தெரியும்”

“நீங்க எனக்கு குக் பண்ணப்போறீங்களா?"

“உனக்கு ரொம்ப தைரியம்தான். என் சமயலை சாப்பிட ரெடினா?”

”ஒரே நேரத்தில் குக் பண்ணினால் அப்படி இப்படி பார்க்கிறது, உரசறது, அதெல்லாம் கூடாது”

“இதெப்படி இருக்கு தெரியுமா?"

“எப்படி?"

“நான் கிச்சனில் இருக்கையிலே என்னை அங்கே இங்கே பார்த்து என் அழகை அப்ரிசியேட் பண்ணுங்க. முடிஞ்சா தெரியாமல் உரசுற மாதிரி அங்கே இங்கே உரசுங்கனு சொல்றமாதிரி இருக்கு”

“இருக்கும் இருக்கும்”

“என்னடா வேணும் உனக்கு?"

“இப்படியெல்லாம் கொஞ்சாதீங்க ப்ளீஸ்! கொஞ்சினால் எனக்கு அழுகை வந்திடும்"

“சரிடி சந்தியா, இனிமேல் ரூடாவே பேசுறேன்"

“டீ போட்டு பேசினால் ரொம்ப செக்ஸியா இருக்கு”

“அப்படியா?”

“ஏய் பேச்சு மாறக்கூடாது. என்னை கட்டிக்கனும்”

“எங்கே ப்ராமிஸ் பண்ண?"

“தலையிலே"

“தலையில் புரையேறும்போதுதான் அடிக்கனும், அங்கே வேணாம். ஹவ் அபவ்ட் இங்கே?”

“அதெல்லாம் வேணாம்”

“ஏன்?"

“இதென்ன புது மாதிரியா?"

“என்ன தப்பு? தலையைவிட இதுதான் ப்ரஸியஸ் உனக்கு!"

“அதெல்லாம் எனக்கு சென்ஸிடிவ் ஏரியா”

“அப்படியா?”

“என்ன அபப்டியா? உங்களை என்ன செய்யலாம்?”

“சரி என்ன ஆச்சு, காவ்யா மேட்டர்?”

“அவ இன்னும் புலம்பத்தான் செய்றா?”

“குழந்தை பிறந்ததும் “அம்மா” நு அவளை தெய்வீகமா பார்க்கிறார் போல கார்த்திக்”

“நல்ல தெய்வீகம் போங்க!”

“சரி, நீ ஒரு மாதிரியா இருக்க, நான் சூடா காஃபி போட்டுத் தரவா?”

“போடுங்க"

“இண்ஸ்டண்ட் காஃபி ஏதாவது இருக்கா?"

“ப்ரூ இருக்கு”

“சரி நீ இங்கேயே இரு நானே காஃபி போட்டு கொண்டு வரேன்”

-தொடரும்

2 comments:

நித்தி .. said...

marubadiyum iyalbana oru episode>>>>
too good varun...

வருண் said...

நன்றி, நித்தி :-)