Friday, April 23, 2010

ஒரு பிறவி! மூன்று வாழ்க்கைகள்!

பாஷா படத்துல (வைரமுத்து/வாலி ?) தத்துவப்பாடல் ஒண்ணு இருக்கும், அதுல 64 வயதானதும், ஒருவருக்கு வாழ்க்கையே முடிந்துவிட்டது போலவும் அதுக்கு மேலே உயிரோட இருந்தால் நிம்மதியில்லைனு ( நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்ல) னு எழுதி இருப்பார். இது நம் வாழ்க்கைமுறையில் ஓரளவுக்கு உண்மைதான்.

அந்தக்காலத்துப்படம் வியடநாம் வீடுவில் சிவாஜி (ப்ரஸ்டிஜ் பத்மநாபன்) ரிட்டயர்ட் ஆனவுடன், ஒழுங்கா பிற்காலத்தை யோசித்து சேமித்து வைக்காததால, அவரால் அதுக்கப்புறம் வரும் வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக்க முடியாது! வயதானவுடன் பணம் இல்லை, (தன் மருத்துவச் செலவுக்குக்கூட), ஏகப்பட்ட கம்மிட்மெண்ட்ஸ் இன்னும் இருக்கு என்று வரும்போது, தான் சிறுவயதில் செய்த (தெரிந்தோ தெரியாமலோ) பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பதுபோல ஆயிடுது பலருடைய வாழ்க்கை!

வயதானதும் என்ன வேணும்? பணம்தான்! எதுக்கு? மருத்தவச் செலவுக்கு! சாப்பாட்டுக்கு! ஆனால் வருமானம் இல்லையே?


நம்மில் பலர், குழந்தைகளுக்காக எல்லாத்தையும் கொடுத்துட்டு, கடைசியிலே வள்ந்தவுடன் அவங்ககிட்ட திட்டு வாங்கிக்கிட்டு, தன் கெளரவம், மரியாதை எல்லாத்தையும் இழந்து வயதான காலத்தில் பரிதாபமாக வாழ்கிறார்கள். இது பத்தாதுனு, இவர்களுக்கு ஏதாவது பெரிய வியாதி வந்துவிட்டால், இவர்கள் வாழனும்னு ஆசைப்பட்டாலும், அதற்கான செலவை செலவுசெய்ய அவர்கள குழந்தைகளால் முடிவதில்லை! ஹெல்த் இண்சூரண்ஸ் இருப்பதில்லை.

பொதுவாக, அமெரிக்கா, அலலது எந்த மேற்கத்திய நாடுகள்னா, 65 வயதுக்குமேலே இவர்களுக்கு Medicare/Medicaidஹெல்த் இண்சூரெண்ஸ் (எல்லா குடிமகன்/ள் களுக்கும்!) அரசாங்கமே கொடுக்குது. இதனால் இவர்கள் நல்ல மருத்துவ உதவியால் 90 வ்யதுவரைக்கும்கூட உயிர் வாழ்றாங்க!

வாழ்க்கை 1 (phase 1):

பொதுவாக, சிறுவயதில் 30 வயதுவரைக்கும், பயமறியாமல் பல உறவுகள் வச்சுக்கிறாங்க, எல்லாவிதமான கெட்ட பழக்கமும்கூட செய்றாங்க! ஒரு சிலர் ட்ரக் அடிக்ட்டாகி வீணாவும் போயிடுறாங்க! (மைக்கேல் ட்க்லஸ் மகன் ட்ரக் டீலரானது போல) . ஆனால் பெரும்பாலும், பலருடனும் வாழ்ந்து 30 வ்யதில் யாரோடையாவது ஒரு நம்பிக்கையான ஆளுடன் செட்டில் ஆகிறாங்க! சீரியஸாக தன் வாழ்க்கைய ஆரம்பிக்கிறாங்க!


வாழ்க்கை 2 (phase 2) :

30-65 வயதுவரை, தனக்கு பிற்காலத்திற்கான "சேவிங்ஸ்" வெகுகவனமாக பண்ணி வச்சுக்கிறாங்க! தன் குழந்தைகள் பணத்தில் பிற்காலத்தில் வாழுவதாக இவர்கள் நினைப்பதில்லை! குழந்தைகள் பெற்றுக்கொண்டு அவர்களை 18 வய்துவரை நல்லா கவனித்து மேலே கொண்டுவந்து விட்டு விடுறாங்க. கல்லூரிப் படிப்பு ரொம்ப எக்ஸ்பெண்ஸிவ் என்பதால் பொதுவாக குழந்தைகள் அரசாங்க கடனுதவி வாங்கித்தான் படிக்கிறாங்க! பொதுவாக குழந்தைகளே 18 வயதுக்கு மேலே தன் சுதந்திரத்தைக் கருதி பெற்றோருக்கும் பாரமாக இல்லாமல் வெளியே போயிடுறாங்க.


வாழ்க்கை 3 (phase 3) :

இந்த கடைசி ஒண்ணு இவர்கள் 65-90 வயதில் வாழும் வாழ்க்கை! இது தான் நமக்கு ரொம்ப வித்தியாசமான தோன்றும் ஒண்ணு. வயதான இவர்கள் எல்லா வியாதியுடனும், தானே தன் காரை ஓட்டிக்கொண்டு, தனக்கு ஷாப்பிங் பண்ணிக்கொண்டு வாழ்கிறார்கள். கண்ணும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது, ஆனால் அனுபவத்தால் எப்படியோ கார் மட்டும் இவர்களால் இன்னும் ஓட்டமுடியுது!

இந்த வயதில் இவர்கள் தன்னுடைய வீட்டு மார்ட்கேஜ் செலுத்தி முடிச்சுறாங்க. அந்த சொந்த வீட்டை விற்றுவிட்டு ஒரு சின்ன அப்பார்ட்மெண்ட்க்கு போய் வாழ்றாங்க.

இந்த வயதான சமயத்தில், இவர்கள் டைவோர்ஸி அலலது இயற்கையாகவே தன் துணையை இழந்துட்டாங்கன்னா, வெட்கமே படாமல் இன்னொரு துணையை தேடிக்கிறாங்க! தன் கணவன்/மனைவியுடன் வாழ்ந்த காலம் பழைய காலமாகப் போயிடுது இவங்களுக்கு. இன்றைய வாழ்வில் உள்ள துணையுடன் தன் இன்பதுன்பங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்து முடிக்கிறாங்க.

இவர்கள் வாழும் இந்த மூன்றாவது வாழ்க்கை இன்னும் நம் கலாச்சாரத்தில் சரியான புரிதல் இல்லை! நம்ம ஊர்ல வயசான பிறகு துணை வேணும்னா, அவங்க தேவைகளை புரிஞ்சிக்காம. நம்ம ஆட்கள் ஒரு மாதிரியா பார்ப்பதுடன், பலவிதத்தில் துன்புறுத்த ஆரம்பிச்சுடுவாங்க! இதனால் இதுபோல பலவகையில் குழம்பி, யாருக்கும் தெரியாமல் தவறு செய்றாங்க.

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தன் 65 வயதில் ஒரு குறைந்த வயது அம்மாவை மணந்து குழந்தையும் பெற்றுக்கொண்டார். இதையெல்லாம் யாரும் பெருசா எடுத்திக்கிறதில்லை.

பொதுவா மேலை நாடுகளில் இதுபோல் இன்னொரு துணை தேடும் இவர்களுடைய குழந்தைகள் இந்த சமயத்தில் இரண்டாவது வாழ்க்கையில் இருக்காங்க (30-65 வயதில்). அவர்களும் வயதான தன் பெற்றோர்கள் இன்னொரு துணையைத தேடிக்கொள்வதைப்புரிஞ்சுக்கிறாங்க. ஒரு சில பெற்றோர்கள் இன்னொருவரை திரும்ணம்கூட செஞ்சிக்கிறாங்க. இல்லைனா கேர்ள் ஃப்ரெண்டு/பாய் ஃப்ரெண்டாக இருந்துக்கிறாங்க). இதுபோல வயதான காலத்தில் இவர்கள் செய்வதை இவர்களுடைய மகன்/மகள்கள் சின்ன மனக்கசப்புடன் மன்னித்து புரிஞ்சிக்கொண்டு, ஏற்றுக்கிறாங்க!


நம்ம ஞாநி, மு க ஓய்வெடுக்கனும், ஓய்வெடுக்கனும்னு எழவைக்கூட்டி ஒரு ஆயிரம் கட்டுரை எழுதி இருப்பார். இதுபோல் வயதானவர்களை வயதை ஒரு காரணமாகச் சொல்லி "டிஸ்க்ரிமினேஷன்" செய்வதெல்லாம் மேலை நாடுகளில் வரவேற்கப் படாது!

4 comments:

Chitra said...

இவர்கள் வாழும் இந்த மூன்றாவது வாழ்க்கை இன்னும் நம் கலாச்சாரத்தில் சரியான புரிதல் இல்லை! நம்ம ஊர்ல வயசான பிறகு துணை வேணும்னா, அவங்க தேவைகளை புரிஞ்சிக்காம. நம்ம ஆட்கள் ஒரு மாதிரியா பார்ப்பதுடன், பலவிதத்தில் துன்புறுத்த ஆரம்பிச்சுடுவாங்க! இதனால் இதுபோல பலவகையில் குழம்பி, யாருக்கும் தெரியாமல் தவறு செய்றாங்க.


..... true. Many people do not understand the benefits of good companionship. அருமையான கருத்துக்கள்.

Unknown said...

many people think relationship = sex.. what to say?

வருண் said...

***Chitra said...
இவர்கள் வாழும் இந்த மூன்றாவது வாழ்க்கை இன்னும் நம் கலாச்சாரத்தில் சரியான புரிதல் இல்லை! நம்ம ஊர்ல வயசான பிறகு துணை வேணும்னா, அவங்க தேவைகளை புரிஞ்சிக்காம. நம்ம ஆட்கள் ஒரு மாதிரியா பார்ப்பதுடன், பலவிதத்தில் துன்புறுத்த ஆரம்பிச்சுடுவாங்க! இதனால் இதுபோல பலவகையில் குழம்பி, யாருக்கும் தெரியாமல் தவறு செய்றாங்க.


..... true. Many people do not understand the benefits of good companionship. அருமையான கருத்துக்கள்.

24 April 2010 6:53 AM***

தங்கள் கருத்துக்க்கு நன்றி, சித்ரா!

வருண் said...

****முகிலன் said...
many people think relationship = sex.. what to say?

24 April 2010 8:06 PM***

Only couple who are involved would know what it really is. Others would not know that!