Tuesday, December 7, 2010

ராம்கோபால் வர்மாவின் ரத்தசரித்திரம்-2 படுதோல்வி!


தமிழைப் பொறுத்தவரையில் இது ஒரு "டப்" படம்தான். நம்ம சூர்யா அபாரமாக நடித்துள்ளதால் "டப்" ரைட்ஸ்க்கு போட்ட காசை எடுத்துடுவாங்க. ஹிந்தியிலும், தெலுகு சினிமாவிலும்தான் இந்தப்படம் முக்கியமாக எடுக்கப்பட்டது. ராம்கோபால் வர்மா பத்தி பேச எல்லாம் எனக்குத் தகுதி இருக்கானு தெரியலை. ஏன்னா இவர் படத்தில் உள்ள வயலண்ஸ் கொஞ்சம் என்னை பயமுறுத்துவது மட்டுமல்லாமல், இந்த ஆளு குப்பைய படமா எடுத்தாலும், அதையும் கோபுர உயர லெவெலுக்கு எடுத்துக்கொண்டுபோகும் அளவுக்கு பதிவுலகில் சிலர் இருக்காங்க.

பாக்ஸ் ஆஃபிஸில் இந்தப் படத்தின் நிலவரம் என்னனு பார்த்தால்,

* ஹிந்தியில் பயங்கர ஃப்ளாப்! முதல் வீக் எண்ட்லயே தியேட்டரில் ஈ ஓட்டுறாங்களாம்.

* தெலுகுல எப்படினா? அங்கேயும் ரிலீஸ் செய்து ஐந்து நாட்களில் தியேட்டரில் கூட்டம் கொறைந்து விட்டதாம்.

ஆக, ரத்தசரித்திரம் 1 & 2 ராம் கோபால் வர்மாவின் ஃப்ளாப் படங்களில் இடம் பிடிக்கின்றன!

சூர்யாவின் நடிப்பு, தெலுங்கு மக்களிடமும் மற்றும் விமர்சகர்களிடமும் பெரிய அளவில் பாராட்டப் பட்டிருக்கு! அது ஒண்ணுதான் நல்ல விசயம்.

மற்றபடி ராம் கோபால் வர்மாவின் ஃப்ளாப் படம்தான் இந்த ரத்தச்சரித்திரம் 1 மற்றும் 2. அந்த உண்மையை தெரிந்து கொள்ளுங்க!

6 comments:

Chitra said...

எந்த நினைப்பில், இவ்வளவு வன்முறை காட்சிகள் வைத்தார்களோ? flop ஆனது நல்லதுதான். இல்லை, இது ஒரு trend ஆக வந்து இருக்குமே....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விமர்சனம் அருமை......

வருண் said...

***Chitra said...

எந்த நினைப்பில், இவ்வளவு வன்முறை காட்சிகள் வைத்தார்களோ? flop ஆனது நல்லதுதான். இல்லை, இது ஒரு trend ஆக வந்து இருக்குமே....

7 December 2010 10:31 AM***

ஒரு சில மேதாவிகளுக்கு வயலண்ஸ்னா ரொம்பப் பிடிக்கும்ங்க.

இந்தப்படம் தேறாது என்பதென்னவோ உண்மைதாங்க!

வருண் said...

***உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விமர்சனம் அருமை......

7 December 2010 10:39 AM**

நன்றி, உலவு.காம்! :)

bandhu said...

Quentin Tarantino வின் கில் பில் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மேலும், இந்த படத்தின் பின் புல கதையை பற்றி உண்மை தமிழன் எழுதியதை படித்தீர்களா? இந்த கதை உண்மைக்கு வெகு அருகில் என்று அதில் தெரியும் என நினைக்கிறேன்

வருண் said...

***bandhu said...

Quentin Tarantino வின் கில் பில் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மேலும், இந்த படத்தின் பின் புல கதையை பற்றி உண்மை தமிழன் எழுதியதை படித்தீர்களா? இந்த கதை உண்மைக்கு வெகு அருகில் என்று அதில் தெரியும் என நினைக்கிறேன்

9 December 2010 12:26 PM***

உங்க கேள்விகளுக்கு பதி தேடி வாசித்து தெரிந்து தருகிறேன்.

நான் இங்கே சொல்ல வந்த ஒரே மேட்டர் இந்தப்படம் கமர்சியல் ஃப்ளாப் என்படு மட்டுமே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, bandhu! :)