Friday, December 3, 2010

கலாச்சார சீரழிவுகள்! நட்பு?!

கலாச்சாரம் என்பது யார் ரெண்டுபேர் படுத்து எப்படி உடலுறவு கொள்ள்லாம் என்பது பற்றி மட்டும் விவாதிப்பது இல்லை. "எவன் எவளோட படுத்தால் எனக்கென்ன? அது அவங்களுக்குள்ள பிரச்சினை!" யினு கொஞ்சம் அந்த உறவை விவாதிப்பதை விட்டுவிட்டு வேற ஒரு விசயத்துக்கு வருவோம்.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு தமிழ்ப்படம், நாடோடிகள். இதிலே நண்பன் வீட்டில் படுத்திருக்கும் நண்பர்கள், நண்பனின் "காதலி"யே பார்த்து ஜொள்ளுவிடுவது போல் காட்சிகள் வருது. என்னுடைய மதிப்பீட்டில் ஒரு சில படங்கள் ஒரு சில சீன் களாலேயே பூஜியம் மதிப்பெண்கள் பெறுகின்றன .

சமீபதில் ஒரு பதிவரின் 18 + ஜோக்கில் நண்பன் மனைவியை இழிவுபடுத்துவது போல ஒரு கேவலமான ஜோக் எழுதியுள்ளார்! அதைப் படிக்கும்போது எனக்கு நல்லாத்தான் வாயில வந்தது! ஜோக் என்கிற பேரில் என்ன வேணா எழுதலாமா? இல்லைனா இதுதான் இன்றைய நட்புக் கலாச்சாரமா? என்னால் முடிந்த ஒண்ணே ஒண்ணு அந்தப் பதிவுக்கு இரக்கமே இல்லாமல் நெகட்டிவ் மதிப்பெண்ணை வழங்கியது. ஆனாலும் இதை ரசிப்பவர்கள்தான் இன்றைய கலாச்சாரத்தில் அதிகம் என்பதை அந்தப் பதிவு பெற்ற மதிப்பெண்களிலும், வாசகர் பரிந்துரையிலும் இருந்து உணர்ந்தேன். இதுதான் நம்முடைய இன்றைய கலாச்சாரமா?

எனக்குத் தெரிய நான் வளர்ந்த சூழலில் பொறுக்கித்தனம் எல்லாமே செய்வார்கள். ஆனால் தன் நண்பனின் தங்கை, மனைவி, தாய் என்று வரும்போது தன் குடும்பப்பெண்களிடம் நடப்பதைவிட ஒரு படி மேலாக இந்த உறவுகளை மதிப்பதுதான் வழக்கம். தண்ணி அடிப்பான், கஞ்சா அடிப்பான், தேவடியாளிடம் போய் படுப்பான், அடிதடியில் இறங்குவான். ஆனால் தன் நண்பன்னு வரும்போது அவனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் கொடுக்கும் மரியாதை (காசெல்லாம் செலவழிக்கிறானோ இல்லையோ) ஒரு தனி ரகம்தான்.

இதுதான் நான் வளர்ந்த மறத்தமிழர் கலாச்சாரம். அது நிச்சயம் சீரழிந்துதான் போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் நம் முன்னேற்றமா? இல்லை நாந்தான் நட்புனு எதையோ நெனச்சுக்கிட்டு கனவுலகில் வாழ்ந்துகொண்டு இருக்கேனா?

6 comments:

எஸ்.கே said...

சமூகம் ஒரு பக்கம் முன்னேறினாலும் இன்னொரு பக்கம் சீரழிந்து கொண்டுதான் இருக்கின்றது!

பழமைபேசி said...

தளபதியார் வாழ்க!

வருண் said...

***எஸ்.கே said...

சமூகம் ஒரு பக்கம் முன்னேறினாலும் இன்னொரு பக்கம் சீரழிந்து கொண்டுதான் இருக்கின்றது!

3 December 2010 2:07 PM***

ஒருவகையில் கலாச்சாரக் காவலர்கள் எல்லாம் அவசியம்தாங்க.

இன்னைக்கு நண்பன் மனைவிய வச்சு ஜோக் வரும் நாளைக்கு அம்மாவை வச்சு ஜோக் வரும். எல்லா ஜோக்குக்கும் சிரிப்பு வராது. வரம்பு மீறுவதற்கும் ஒரு லிமிட் இருக்கு!

வருண் said...

***பழமைபேசி said...

தளபதியார் வாழ்க!

3 December 2010 2:39 PM***

வாங்க மணியண்ணா!

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு அருமை.டாப் 20 பிளக்கில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

வருண் said...

**சி.பி.செந்தில்குமார் said...

பதிவு அருமை.டாப் 20 பிளக்கில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்
3 December 2010 10:08 PM ***

நன்றிங்க. உங்களுக்கும் டாப் 2 ல் இடம்பிடத்ததுக்கு வாழ்த்துக்கள், செந்தில்குமார். :)